தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, January 25, 2007

புதிய ப்ளாகருக்கு மாறலாம் வாங்க!!!

புதிய ப்ளாகருக்கு மாற ஆசையிருந்தும் அதிக பதிவுகள் இருப்பதால் மாற முடியாமல் வருத்தப்படுபவர்களுக்கு...

இது எங்க சங்க தளபதி எனக்கு சொல்லி கொடுத்த விஷயம். சரினு உங்க கூட பகிர்ந்துக்கலாம்னு தான் இந்த பதிவு.

சரி, முதல்ல விஷயத்துக்கு வரேன். இப்ப நீங்க லாகின் செய்வது உங்களுடைய ப்ளாகர் அக்கவுண்ட் பயன்படுத்தி
உதாரணம்
User ID : userid_1

ஆனால் புதிய ப்ளாகருக்கு Google Account பயன்படுத்த வேண்டும். அதாவது உங்கள் Gmail ID
உதாரணம்
EMail ID : emailid_1@gmail.com

தற்போது தாங்கள் செய்ய வேண்டியது இதுதான். உங்களுக்கு மற்றொரு gmail id உருவாக்கி கொள்ளவும்.
உதாரணம்
EMail ID : emailid_2@gmail.com

உங்களுடைய userid_1ல் உள்ளே சென்று emailid_2@gmail.com விற்கு அழைப்பு விடுக்கவும். உங்களுடைய அனைத்து பதிவுகளுக்கும் அழைப்பு விடுத்து கொள்ளலாம். பிறகு emailid_2வில் சென்று அழைப்பை ஏற்று கொள்ளவும். தற்போது அதில் ஒரு புது லாகின் ஐடி உருவாக்கி கொள்ளவும்.
உதாரணம்
User ID : userid_2

இன்னும் நீங்கள் பழைய ப்ளாகரிலே இருக்கிறீர்கள். தற்போது தங்கள் பழைய ஐடியை பயன்படுத்தி உள்ளே செல்லவும் (userid_1)
தங்களுடைய புது ஐடிக்கு அட்மின் உரிமையை கொடுக்கவும். (Admin Permissions)

தற்போது உங்கள் புது ஐடியை பயன்படுத்தி உள்ளே சென்று பழைய ஐடிக்கு இருக்கும் உரிமையை நீக்கவும். (Go to Permissions and remove the old blogger)

மீண்டும் உங்களுடைய பழைய ஐடியை பயன்படுத்தி உள்ளே சென்று புதிதாக ஒரு வலைப்பூ தொடங்கவும். தற்போது உங்கள் புதிய ஐடியில் இந்த ஒரு புதிய வலைப்பூ மட்டுமே இருக்கும். அதை புதிய ப்ளாகருக்கு மாற்றவும். அது எளிதாக மாறிவிடும். அதற்கு தங்களுடைய emailid_1@gmail.com பயன்படுத்தி கொள்ளவும்.

பின்பு மீண்டும் userid_2 பயன்படுத்தி உள்ளே செல்லவும். அது உங்களுடைய பழைய ப்ளாகரை புதிய ப்ளாகருக்கு மாற சொல்லி கேட்கும். அதை மாற்ற சம்மதித்து அதில் மீண்டும் உங்கள் emailid_1@gmail.com கொடுக்கவும். உங்களுடைய ப்ளாக் தற்போது புது ப்ளாகருக்கு மாறியிருக்கும். தற்போது புதிய ப்ளாகரில் emailid_1@gmail.com கொடுத்து உள்ளே செல்லவும். அங்கே தங்களுடைய வலைப்பூ புதிய ப்ளாகருக்கு மாறியிருப்பதை பார்க்கலாம்...

சீக்கிரம் மாறிடுங்க...

27 comments:

✪சிந்தாநதி said...

நல்ல யோசனை. எல்லோருக்கும் பயன்படும்.

பாவம் கஷடப் பட்டு மாறிய, மாற்றியவர்கள்:))

துளசி கோபால் said...

படிக்கச் சுலபமா இருந்தாலும் செஞ்சுபார்க்க பயமா இருக்குதேய்யா.

உள்ளதும் போச்சுன்னா...........?

...... ஙே..

✪சிந்தாநதி said...

//பிறகு emailid_2வில் சென்று அழைப்பை ஏற்று கொள்ளவும். தற்போது அதில் ஒரு புது லாகின் ஐடி உருவாக்கி கொள்ளவும்.//

இதில் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. gmailidயில் உள்ளே செல்லும்போது அதுதானே லாகின் ஐடி. அதில் எப்படி (வேறு) புது லாகின் ஐடி?

Sivabalan said...

Thanks Balaji!

ஜி said...

//உங்களுடைய userid_1ல் உள்ளே சென்று emailid_2@gmail.com விற்கு அழைப்பு விடுக்கவும்.//

இங்க எப்படி அழைப்பு கொடுக்குறதுன்னு சொன்னா இன்னும் நல்லா இருக்கும்...

வெட்டிப்பயல் said...

//சிந்தாநதி said...

//பிறகு emailid_2வில் சென்று அழைப்பை ஏற்று கொள்ளவும். தற்போது அதில் ஒரு புது லாகின் ஐடி உருவாக்கி கொள்ளவும்.//

இதில் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. gmailidயில் உள்ளே செல்லும்போது அதுதானே லாகின் ஐடி. அதில் எப்படி (வேறு) புது லாகின் ஐடி?//
GMail ல் லாகின் செய்யவும்... ப்ளாகரில் இல்லை...

Udhayakumar said...

good idea !!!. I had enough when I switched to new blogger:(

நாமக்கல் சிபி said...

பாலாஜி,

டெம்பிரவரியாக பிளாக்கின் பொறுப்பை ஒப்படைக்க ஜிமெயில் ஐடி தேவை இல்லை. பழைய வேறொரு பிளாக்கர் ஐடி இருந்தால் நலம்.

இல்லையெனில் அந்த emailid_2@gmail.com தான் அந்த பிளாக்கிற்கு ஓனராகும் வாய்ப்பு உள்ளது.

நாமக்கல் சிபி said...

//படிக்கச் சுலபமா இருந்தாலும் செஞ்சுபார்க்க பயமா இருக்குதேய்யா.

உள்ளதும் போச்சுன்னா...........?

...... ஙே..
//

துளசியக்கா,

நானும் இப்படித்தான் பயந்தேன். பிதற்றல்கள் காலின்னு!
அப்புறம் நம்ம வசம் வந்ததும்தான் அப்பாடான்னு ஆச்சு!

வெட்டிப்பயல் said...

//சிந்தாநதி said...

நல்ல யோசனை. எல்லோருக்கும் பயன்படும்.

பாவம் கஷடப் பட்டு மாறிய, மாற்றியவர்கள்:))//

அதுக்காத்தான் போட்டுட்டேன்

வெட்டிப்பயல் said...

//துளசி கோபால் said...

படிக்கச் சுலபமா இருந்தாலும் செஞ்சுபார்க்க பயமா இருக்குதேய்யா.

உள்ளதும் போச்சுன்னா...........?

...... ஙே..//

டீச்சர் பயப்படவே தேவையில்லை!!!
சுலபமா மாத்திடலாம்... கண்டிப்பா போகாது!!!

வெட்டிப்பயல் said...

//Sivabalan said...

Thanks Balaji!//

u r welcome :-)

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...

பாலாஜி,

டெம்பிரவரியாக பிளாக்கின் பொறுப்பை ஒப்படைக்க ஜிமெயில் ஐடி தேவை இல்லை. பழைய வேறொரு பிளாக்கர் ஐடி இருந்தால் நலம்.

இல்லையெனில் அந்த emailid_2@gmail.com தான் அந்த பிளாக்கிற்கு ஓனராகும் வாய்ப்பு உள்ளது.//

தள அப்படியில்லை...
திரும்ப மாறும் போது நாம் emailid_1@gmail.comதான் கொடுக்கிறோம். அதனால் பயப்படத்தேவையில்லை :-)

Arunkumar said...

balaji,
can you tell me whats the advantage with this new blogger?

வெட்டிப்பயல் said...

// Arunkumar said...

balaji,
can you tell me whats the advantage with this new blogger? //

Please go through this

article

Boston Bala said...

Now, no need for a circuitous route. Any blog could be easily upgraded

Dreamzz said...

super idea! thanksnga!

நெல்லை சிவா said...

நன்றி தலைவரே!

gurusri said...

katayam use panuvaen..thanks for the info vetti.

G.Ragavan said...

மாறீட்டோம் வெட்டி. ஒரு வழியா மாறியாச்சு. சனிக்கிழமை ஒருவழியா புது பிளாகருக்கு மாறீருச்சு. நேத்துதான் டெம்பிளேட் மாத்தி...பட்டை தீட்டி...எல்லாம் செஞ்சாச்சு. பின்னூட்ட ஜாங்கிரி நீக்கலும் செஞ்சாச்சு. ஆனா புது பிளாகர்ல இருந்து முன்னாடி போட்ட கமெண்ட் எல்லாம் அனானியா தெரியுட்து. புதுசா போடுற கமெண்ட் எல்லாம் ஒழுங்காத் தெரியுது. என்னன்னு பாக்கனும்.

dministrator said...

You have great sense of humor.

I subscribe to your blog via Google Reader. However, I'm not able to read all of your posts. I want to mark some of your posts as my favorites but they are not available within Google Reader. Please fix your blog or tell me why Google Reader is not displaying all your posts. Thank you.

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

Now, no need for a circuitous route. Any blog could be easily upgraded //

I think they were waiting for the moment for me to find some other way to convert :-)))

வெட்டிப்பயல் said...

// Dreamzz said...

super idea! thanksnga! //

இப்ப இந்த ஐடியாவே தேவையில்லை ட்ரீம்ஸ் :-)

வெட்டிப்பயல் said...

//நெல்லை சிவா said...

நன்றி தலைவரே! //

நம்ம போஸ்ட்டுக்கு விளம்பரம் எல்லாம் கொடுத்துருக்கீங்க...

மிக்க நன்றி!!!

வெட்டிப்பயல் said...

//gurusri said...

katayam use panuvaen..thanks for the info vetti. //

சீக்கிரம் மாறி எல்லாத்தையும் பயன்படுத்திக்கோங்க :-)

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

மாறீட்டோம் வெட்டி. ஒரு வழியா மாறியாச்சு. சனிக்கிழமை ஒருவழியா புது பிளாகருக்கு மாறீருச்சு. நேத்துதான் டெம்பிளேட் மாத்தி...பட்டை தீட்டி...எல்லாம் செஞ்சாச்சு. பின்னூட்ட ஜாங்கிரி நீக்கலும் செஞ்சாச்சு. ஆனா புது பிளாகர்ல இருந்து முன்னாடி போட்ட கமெண்ட் எல்லாம் அனானியா தெரியுட்து. புதுசா போடுற கமெண்ட் எல்லாம் ஒழுங்காத் தெரியுது. என்னன்னு பாக்கனும்.

12:24 AM //

தலிவா,
நீங்களும் ஜோதில ஐக்கியமாயிட்டீங்களா??? சூப்பர் :-)

வெட்டிப்பயல் said...

// dministrator said...

You have great sense of humor.

I subscribe to your blog via Google Reader. However, I'm not able to read all of your posts. I want to mark some of your posts as my favorites but they are not available within Google Reader. Please fix your blog or tell me why Google Reader is not displaying all your posts. Thank you. //

Dear Dministrator,
Thx for ur comment.

I dont use google reader. I will ask my friends who are using it and will try to fix it if there are any issues with my blog.

U can visit my blog twice in a week or once in a week...