முன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே!!!
எல்லா விசேஷத்துக்கும் டீ.வி பேட்டிக்கு முதல் ஆளா வந்து நிக்கறது நம்ம இளைய தளபதி தான். அவரையே இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கும் புத்தாண்டு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டுருக்கோம். அவரும் வழக்கம் போல வர ஒத்துக்கிட்டாரு. சரி இனி நிகழ்ச்சிக்கு போவோம்.
க: வாப்பா விஜய். ஆரம்பத்துல நீ நடிச்ச கேவலமான படத்தை பார்த்துட்டு நீ இவ்வளவு பெரிய ஆளா வருவனு நான் நினைக்கவேயில்லப்பா...
வி: அண்ணா. என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க? நான் நடிச்ச எல்லா படமுமே சூப்பர் ஹிட் தானுங்கணா.
க: ஏனுங்க தம்பி இந்த நாளைய தீர்ப்பு, செல்வா, தேவா, விஷ்ணு, சந்திரலேகா, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல், ராஜாவின் பார்வையிலே இந்த படத்தையெல்லாம் நீங்க தியேட்டர்ல போய் பார்த்துருக்கீங்களா தம்பி?
வி: அண்ணா. நானும் என் ஃபிரெண்ட்ஸும் இந்த படத்தை எல்லாம் தியேட்டர்ல போய் பாத்தோங்கணா.
க: தெரியும். எவனும் வர மாட்டாங்கர தைரியத்துல போய் பார்த்துருப்பீங்க. உங்க கெட்ட நேரம் எவனாவது தப்பி தவறி தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருந்தானா உங்களுக்கெல்லாம் அப்படியே பொதுமாத்துதான்டீ...
வி: என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க. ராஜாவின் பார்வையிலே நானும் அஜித்தும் சேர்ந்து நடிச்சத பார்த்து எங்க ரெண்டு பேர் ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டிக்கிட்டு இருக்காங்க.
க: ஓ! அந்த படத்துல அந்த கொடுமையெல்லாம் வேற இருக்கா? நல்ல வேளை நான் பார்க்கல.அது சரி அந்த ரசிகன் படத்துல ஹீரோயினோட அம்மாவுக்கு சோப்பு போடற சீன் யாரோட சிந்தனைல வந்துச்சுப்பா?
வி: அது எங்க அப்பாவோட சிந்தனைதானுங்கணா. அந்த படம் ஹிட்டானது அதுவும் ஒரு முக்கிய காரணம்.
க: டேய்! கேவலமா இப்படி ஒரு சீன் வெச்சிட்டு இதுல உங்களுக்கு பெருமை வேற. உன் வாழ்க்கையிலே நீ பண்ண ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா?
வி: என்னங்கணா?
க: உங்க அப்பா டைரக்ஷன்ல நடிக்கறத நிறுத்தனதுதான்...
வி: இதையே தானுங்கணா எங்க அம்மாவும் சொன்னாங்க.
க: உங்க அம்மா பேச்ச கேளு. அப்பறம் கேப்டன் கூட ஒரு படம் நடிச்சையே அது என்ன படம்பா?
வி: அப்படிங்களா? நியாபகம் இல்லையே! (விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)
க: அதாம்பா அந்த யுவராணியோட கபடி ஆடுனியே!
வி: ஓ! நம்ம செந்தூரப்பாண்டி
க: அடப்பாவி. கேப்டனோட நடிச்ச படம்னா நியாபகம் இல்லை யுவராணியோட நடிச்ச படம்னா அடுத்த நிமிஷமே அடிக்கறியே...
வி: அதெல்லாம் மறக்கமுடியுமாங்கணா... அதெல்லாம் ஒரு பொற்காலம்னா. இன்னும் கண்ணுலயே இருக்கு. அப்பறம் இந்த பூவே உனக்காக வந்ததுக்கப்பறம் வாழ்க்கையே மாறிடுச்சிங்கணா.
க: நீ ஒழுங்கா நடிச்ச முதல் படமே அதுதான்.
வி: ஆமாங்கணா. அதுக்கப்பறம் வந்த எல்லா படமும் பயங்கர ஹிட்...
க: டேய்! சும்மா அடிச்சு விடாதடா. எல்லாமே லிஸ்ட்ல இருக்கு. இங்க அவனவனுக்கு தூக்கமே வர மாட்டீங்குது உனக்கு மட்டும் எப்படிடா கனவுல கண்ட இடத்துல எல்லாம் மச்சம் இருக்குற மாதிரி பொண்ணு வருது?
வி: ஏனுங்கணா, உங்க வயசுக்கு எப்படினா அதெல்லாம் வரும்? எங்கள மாதிரி யூத்துக்கு தானுங்க அதெல்லாம் வரும்... (சொல்லிவிட்டு நக்கலாக சிரிக்கிறார்)
இதை கேட்டு கவுண்டர் ஜெர்க்காகிறார்... (மனதிற்குள் நினைத்து கொள்கிறார் : உனக்கு இருக்குடி)
க: அது சரி... இந்த ஷாஜஹானு ஒரு படம் நடிச்சியே. அதுல எதுக்குடா வேற படத்து ஃப்ளாஷ் பேக்கை எடுத்து வைச்ச?
வி: இல்லைங்களே! அது அந்த படத்து ஃப்ளேஷ் பேக் தானே?
ஆனா படத்த பார்த்த எல்லாருக்குமே இப்படி ஒரு டவுட் இருந்துச்சாம். எனக்கு என்னனே இன்னைக்கு வரைக்கும் புரியல
க: அது சரி... அது என்னடா புறாவுக்கு பெல்லடிக்கிறது?
வி: அதுங்களாணா? நம்ம படையப்பால வர பாம்பு புத்துல கை விடற டயலாக்கு இக்வளா இருக்கனும்னு யோசிச்சி வெச்சதுங்கணா.
க: ஏன்டா அடுத்தவனை பார்த்து காப்பி அடிக்கறீங்க? உங்களுக்குனு ஒரு ஸ்டைல வெச்சிக்கோங்கடா. அப்ப தான் வாழ்க்கையில பெரிய ஆளாக முடியும். அப்பறம் அந்த பகவதினு ஒரு படம் நடிச்சியே. அத கதை கேட்டு தான் நடிச்சியா?
வி: அது பாட்ஷா மாதிரி இருக்கும்னு எங்க அப்பா சொன்னாரு. அதனாலதான் கதை கேக்காமலே நடிச்சேங்கணா.
க: இனிமே நான் சொல்றேன். உங்க அப்பா பேச்சை கேக்காத. அப்பறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது...
(தொடரும்...)
(இன்னும் பல படங்கள் இருப்பதால் ஒரே பகுதியில் முடிக்க இயலவில்லை... அடுத்து பல சூப்பர் ஹிட் படங்கள் காத்திருக்கின்றன)
69 comments:
எவன் டா அது எங்க தலய சீண்டுறது.. அடுடா அந்த வீச்சருவாள...
[வெட்டி... இன்னும் கொஞ்சம் சீந்திருக்கலாமோ?]
//ஜி said...
எவன் டா அது எங்க தலய சீண்டுறது.. அடுடா அந்த வீச்சருவாள...
//
தலய சீண்டலயே!!! தளய தானே ;)
//
[வெட்டி... இன்னும் கொஞ்சம் சீந்திருக்கலாமோ?]//
அடுத்த பகுதி எதுக்கு இருக்கு...
அதுல சூப்பர் ஹிட் படங்கள் நிறைய வரும்... கவலை வேண்டாம் ;)
வெட்டி... நீங்க 'தல' தீபாவளிக் கொண்டாடுற பார்ட்டீயா? தளபதி போக்கிரி பொங்கல் வைக்கப் போறார் பாருங்க.. அப்போ இருக்கு உங்க் இடுப்பு எலும்பை உடைச்சு அடுப்பு எரிப்பார்.. அது தான் போக்கிரி பொங்கல்
ada neenga last week vikatan la vijay oda raja get up partheengala..padu kavalama irundhadhu...nall karpanai...rasichu padichane
//தேவ் | Dev said...
வெட்டி... நீங்க 'தல' தீபாவளிக் கொண்டாடுற பார்ட்டீயா? தளபதி போக்கிரி பொங்கல் வைக்கப் போறார் பாருங்க.. அப்போ இருக்கு உங்க் இடுப்பு எலும்பை உடைச்சு அடுப்பு எரிப்பார்.. அது தான் போக்கிரி பொங்கல்//
தல தீபாவளியா???
தலைக்கும் இருக்கு ஒரு ஷோ ;)
நமக்கு இன்னைக்கு நடிக்கற எல்லா நடிகரும் ஒண்ணு தான் :-)
இதுலயே நான் காதலுக்கு மரியாதை, லவ் டுடே,, துள்ளாத மனமும் துள்ளும் பத்தி எல்லாம் எதுவும் சொல்லலையே!!!
போக்கிரி நல்லா இருந்தா நானும் சந்தோஷமா கை தட்டி பார்க்கத்தான் போறேன் ;)
//கார்த்திக் பிரபு said...
ada neenga last week vikatan la vijay oda raja get up partheengala..padu kavalama irundhadhu...nall karpanai...rasichu padichane//
மிக்க நன்றி கார்த்திக்....
அடுத்த பகுதில இருக்கு :-)
ஹாய் வெட்டி!!!
சூப்பரப்பு!!! எப்படி இப்படி எல்லாம் யோசிச்சி எழுதரீங்க!!!
கலக்குங்க!!! அடுத்த பாகத்தை எதிர்ப்பார்க்கிறேன் விரைவில்!!!
அம்மாடி கடேசியா தமிழ்ல அடிக்க ஆரம்பிச்சிட்டேன்யா...ஆரம்பிசிட்டேன்ய்ய்ய்யா....வெட்டி தம்பி என் வாழ்த்துக்கள்...இப்படிக்கு குமார் தொல்காப்பியன்(அபி அப்பா)
//க: நீ ஒழுங்கா நடிச்ச முதல் படமே அதுதான்.
//
அதே அதே..
வெட்டி,
பூவே உனக்காக பார்த்துட்டு, தீவிர விஜய் ரசிகையான நான் சிவகாசி பார்த்துட்டு சொன்னது இது:
"ரஜினி மாதிரி வருவார்னு நினைச்ச எங்க தலை கொஞ்சம் கொஞ்சமா விஜயகாந்தா மாறிகிட்டிருக்காரு ;)"
இன்னும் நல்ல்ல்ல்லா வாருங்க.. சிவகாசி, தமிழன், ஆதி மாதிரி "சுலப தற்கொலை முயற்சிகளையும்" பிரிச்சு மேய வேண்டுகிறேன் ;)
பாலாஜி, அது ங்கணா இல்லை.ங்ணா.
இல்லீங்ணா.
ஆமாங்க்ணா.:-)
சிரிச்சு சிரிச்சு முகமே வலிக்கிறது.
அது என்ன இப்ப மட்டும் முன் குறிப்பு? அப்போ முதலில் வந்த மூணு நடிகர்களின் ரசிகர்கள் எல்லாம் இ.வா. வா?
அப்புறம் எங்க வீடியோக் கடையில் இவரு நடிச்ச ஒரு படத்தின் டி.வி.டி. இருக்கு. பேரு - "என்னைத் தனியாக அழ விட்டு நீ எங்கே சென்றாய்". (அதாம்பா அந்த படத்தின் பேரு)
நான் எடுக்கணமுன்னு நினைச்சா தங்கமணி தடா உத்தரவு போட்டுடறாங்க. இதைப் பத்தியும் கொஞ்சம் சொல்லுங்கண்ணா.
//dubukudisciple said...
ஹாய் வெட்டி!!!
சூப்பரப்பு!!! எப்படி இப்படி எல்லாம் யோசிச்சி எழுதரீங்க!!!
கலக்குங்க!!! அடுத்த பாகத்தை எதிர்ப்பார்க்கிறேன் விரைவில்!!! //
மிக்க நன்றி சுதா!!!
விஜய்க்கு இதுவே கம்மி தான்...
அடுத்த பாகத்துல தான் நல்லா கவனிக்கனும் ;)
//Abi Appa said...
அம்மாடி கடேசியா தமிழ்ல அடிக்க ஆரம்பிச்சிட்டேன்யா...ஆரம்பிசிட்டேன்ய்ய்ய்யா....
//
வாழ்த்துக்கள்!!! நிறைய எழுதி எங்களை எல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தவும் :-)
//
வெட்டி தம்பி என் வாழ்த்துக்கள்...இப்படிக்கு குமார் தொல்காப்பியன்(அபி அப்பா) //
மிக்க நன்றி அபி அப்பா...
//பொன்ஸ் said...
//க: நீ ஒழுங்கா நடிச்ச முதல் படமே அதுதான்.
//
அதே அதே..
வெட்டி,
பூவே உனக்காக பார்த்துட்டு, தீவிர விஜய் ரசிகையான நான் சிவகாசி பார்த்துட்டு சொன்னது இது:
"ரஜினி மாதிரி வருவார்னு நினைச்ச எங்க தலை கொஞ்சம் கொஞ்சமா விஜயகாந்தா மாறிகிட்டிருக்காரு ;)"
//
கரெக்டா சொன்னீங்கக்கா...
முதல்ல விஜய தெலுகு படம் பார்க்க கூடாதுனு ஒரு சட்டம் போடனும். அப்பறம் பேரரசு கூட சேர கூடாதுனு அடுத்த சட்டம் போடனும்...
//
இன்னும் நல்ல்ல்ல்லா வாருங்க.. சிவகாசி, தமிழன், ஆதி மாதிரி "சுலப தற்கொலை முயற்சிகளையும்" பிரிச்சு மேய வேண்டுகிறேன் ;) //
அதுக்கு தான் தனி பகுதியே!!!
பிரிச்சி மேயலாம் :-)
//வல்லிசிம்ஹன் said...
பாலாஜி, அது ங்கணா இல்லை.ங்ணா.
இல்லீங்ணா.
ஆமாங்க்ணா.:-)
சிரிச்சு சிரிச்சு முகமே வலிக்கிறது. //
நல்லா சந்தோஷமா சிரிங்க. அதுதான் நமக்கு வேண்டும் :-)
அந்த punch dialogs எல்லாம் கொஞ்சம் நிறுத்தச்சொல்லுங்கப்பா!
http://internetbazaar.blogspot.com
:))
//இலவசக்கொத்தனார் said...
அது என்ன இப்ப மட்டும் முன் குறிப்பு? அப்போ முதலில் வந்த மூணு நடிகர்களின் ரசிகர்கள் எல்லாம் இ.வா. வா? //
கொத்ஸ்,
ஒரு சில நல்ல படத்தை கொடுத்ததால கொஞ்சம் மரியாதை அவ்வளவுதான் :-)
உண்மைய சொன்னா விஜய் படம் எனக்கே பிடிக்கும் :-)... இருந்தாலும் டெவில் ஷோனு யாரு வந்தாலும் பிரிச்சி மேயனும். அதுதான் தொழில் தர்மம் :-)
//இலவசக்கொத்தனார் said...
அப்புறம் எங்க வீடியோக் கடையில் இவரு நடிச்ச ஒரு படத்தின் டி.வி.டி. இருக்கு. பேரு - "என்னைத் தனியாக அழ விட்டு நீ எங்கே சென்றாய்". (அதாம்பா அந்த படத்தின் பேரு)
நான் எடுக்கணமுன்னு நினைச்சா தங்கமணி தடா உத்தரவு போட்டுடறாங்க. இதைப் பத்தியும் கொஞ்சம் சொல்லுங்கண்ணா. //
அப்படி எதுவும் படம் இல்லையே கொத்ஸ் :-/
//LFC fan! said...
அந்த punch dialogs எல்லாம் கொஞ்சம் நிறுத்தச்சொல்லுங்கப்பா!
http://internetbazaar.blogspot.com //
கண்டிப்பா...
அடுத்த பதிவுல தான் புது படமெல்லாம் வருது.. அதுல கண்டிப்பா பஞ்ச் டயலாக் எல்லாம் இருக்கு :-)
அதெப்டிங்ணா எனக்கே மறந்த படத்தோட பேரையெல்லாம் நெனைவுல வச்சுக்கிட்டு பதிவெல்லாம் போட்றீங்க?
-விஜய்.
அடுத்து திருப்பச்சி பேரரசுவையும் scene-க்கு கொண்டுவாங்க...
அடுத்து திருப்பாச்சி பேரரசுவையும் scene-க்கு கொண்டுவாங்க...
//முன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்...//
திஸ்கிக்கு அவசியமே இல்லப்பா, எந்த ரசிகனுமே மொக்க படத்துக்கு வாதிட மாட்டானுங்க!
அந்த ரசிகன், ஷாஜகான் படத்தையெல்லாம் இன்னும் கொஞ்சம் அடிச்சி ஆடியிருக்கணும்.
//நானும் என் ஃபிரெண்ட்ஸும் இந்த படத்தை எல்லாம் தியேட்டர்ல போய் பாத்தோங்கணா.//
நல்ல வேளை நான் எங்க அப்பா அம்மாவோட இந்த படத்துக்கு போவேன் என்று சொல்லலை.
//இனிமே நான் சொல்றேன். உங்க அப்பா பேச்சை கேக்காத. அப்பறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது...//
இவரு இப்படி மாறிட்டா அப்புறம் தமிழகத்தை யாருங்கண்ணா காப்பாற்றுவது?
வெட்டி அடுத்த பாகத்தை சீக்கிரமா போடுப்பா
வெட்டி
நல்ல கலக்கிறிங்க...
விஜய்க்கு சனி அவங்க அப்பா உருவத்துல வந்துருக்கு. அவரு இயக்கிய படம் மாட்டும் இல்ல தயாரிச்சதும் ஏல்லர தான்.
nakkalo nakkal...kavundar interview super!seekiram meerthi interviewum podungoooooooo!
Vetti,
Kallakittinga, eppadi then vijay-kku ivvalavu fans irukkangannu theriyala. intha pathivai vijay padicharunna nalla irukkum.
\\இன்னும் நல்ல்ல்ல்லா வாருங்க.. சிவகாசி, தமிழன், ஆதி மாதிரி "சுலப தற்கொலை முயற்சிகளையும்" பிரிச்சு மேய வேண்டுகிறேன் ;)//
பொன்ஷ்கா, இதில தமிழ்ன் கொஞ்ஜம் பரவால்ல.... மத்தபடி இது சுலப தற்கொலை முயற்சி இல்லை...ஒரு அப்பா மகன் மேல் வைத்த கொலை வெறி.....
\\அந்த ரசிகன், ஷாஜகான் படத்தையெல்லாம் இன்னும் கொஞ்சம் அடிச்சி ஆடியிருக்கணும். // ஆமா தம்பி.. ஒரு கதானாயகன் மாமா கேரக்டர் பன்னது இதுலதான்..
\\வாழ்த்துக்கள்!!! நிறைய எழுதி எங்களை எல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தவும் :-)//
னன்றி... வெட்டி தம்பி(sorry "Na" varamattanguthu)னன்றி சொல்ல வார்தை வரலைன்னா பரவால்ல...லெட்டரும் வரலைன்னா எப்டி???
வெட்டி கலக்குறீங்க,
எப்படி சோப்பு, கபடி சீன்லாம் ஞாபகத்துல வச்சு இருக்கீங்க?. சந்திரசேகரே மறந்திருப்பாரு.
உங்க ஞாபக சக்தி சூப்பர்.
//கப்பி பய said...
:)) //
:-))
(ஸ்மைலிக்கு ஸ்மைலி...
உன் பாலிஸி தான்பா)
//குமரன் (Kumaran) said...
அதெப்டிங்ணா எனக்கே மறந்த படத்தோட பேரையெல்லாம் நெனைவுல வச்சுக்கிட்டு பதிவெல்லாம் போட்றீங்க?
-விஜய். //
என்னங்கணா பன்றது? அப்பப்ப அந்த கொடுமையெல்லாம் ஏதாவது ஒரு டீ.வில போடறாங்களே ;)
//k@rthik said...
அடுத்து திருப்பச்சி பேரரசுவையும் scene-க்கு கொண்டுவாங்க... //
கார்த்திக்,
பேரரசு பேட்டியெல்லாம் முடிஞ்சிடுச்சி...
இதோ லிங்
//தம்பி said...
//முன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்...//
திஸ்கிக்கு அவசியமே இல்லப்பா, எந்த ரசிகனுமே மொக்க படத்துக்கு வாதிட மாட்டானுங்க!
//
அது ஓரளவு புத்தி உள்ள ரசிகனுங்கப்பா!!! பாபா சூப்பர்னு சொல்றவங்களும் நம்ம ஊர்ல இருக்காங்க இல்லை :-)
// அந்த ரசிகன், ஷாஜகான் படத்தையெல்லாம் இன்னும் கொஞ்சம் அடிச்சி ஆடியிருக்கணும். //
இன்னும் நிறைய இருக்குப்பா...
ஷாஜகான் மாதிரி ஒரு மொக்கை படம் பார்க்கவே முடியாது :-)
//சந்தோஷ் said...
//நானும் என் ஃபிரெண்ட்ஸும் இந்த படத்தை எல்லாம் தியேட்டர்ல போய் பாத்தோங்கணா.//
நல்ல வேளை நான் எங்க அப்பா அம்மாவோட இந்த படத்துக்கு போவேன் என்று சொல்லலை.
//
அந்த மாதிரி சொன்னா டோட்டல் ஃபேமிலி டேமேஜாயிருக்கும் :-)
// //இனிமே நான் சொல்றேன். உங்க அப்பா பேச்சை கேக்காத. அப்பறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது...//
இவரு இப்படி மாறிட்டா அப்புறம் தமிழகத்தை யாருங்கண்ணா காப்பாற்றுவது?
//
அதுக்கு தான் தனுஷ், சிம்பு எல்லாம் ரெடியா இருக்காங்களே ;)
//
வெட்டி அடுத்த பாகத்தை சீக்கிரமா போடுப்பா //
இன்னைக்கு போட்டுடறேன் :-)
//கோபிநாத் said...
வெட்டி
நல்ல கலக்கிறிங்க...
//
மிக்க நன்றி கோபி
// விஜய்க்கு சனி அவங்க அப்பா உருவத்துல வந்துருக்கு. அவரு இயக்கிய படம் மாட்டும் இல்ல தயாரிச்சதும் ஏல்லர தான். //
ஆமாம்.. கடைசி ஆதி கூட அவுங்க அப்பா தயாரிச்சதுதான் :-)
//Dreamzz said...
nakkalo nakkal...kavundar interview super!seekiram meerthi interviewum podungoooooooo! //
மிக்க நன்றி ட்ரீம்ஸ்...
இன்னைக்கு போட்டுடறேன் :-)
//Simply Senthil said...
Vetti,
Kallakittinga, eppadi then vijay-kku ivvalavu fans irukkangannu theriyala. intha pathivai vijay padicharunna nalla irukkum. //
மிக்க நன்றி செந்தில்...
விஜய் படிச்சா நான் நல்லா இருப்பனானு தெரியல ;)
//Abi Appa said...
\\அந்த ரசிகன், ஷாஜகான் படத்தையெல்லாம் இன்னும் கொஞ்சம் அடிச்சி ஆடியிருக்கணும். // ஆமா தம்பி.. ஒரு கதானாயகன் மாமா கேரக்டர் பன்னது இதுலதான்.. //
நச்...
//Abi Appa said...
\\வாழ்த்துக்கள்!!! நிறைய எழுதி எங்களை எல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தவும் :-)//
னன்றி... வெட்டி தம்பி(sorry "Na" varamattanguthu)னன்றி சொல்ல வார்தை வரலைன்னா பரவால்ல...லெட்டரும் வரலைன்னா எப்டி??? //
wa - ந
wa போட்டு டைப் பண்ணுங்க :-)
//ஸயீத் said...
வெட்டி கலக்குறீங்க,
எப்படி சோப்பு, கபடி சீன்லாம் ஞாபகத்துல வச்சு இருக்கீங்க?. சந்திரசேகரே மறந்திருப்பாரு.
உங்க ஞாபக சக்தி சூப்பர். //
:-))
எல்லா கேவலமான சீனையும் ஞாபகம் வச்சு கலக்குறியேப்பா..
சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குதுங்க வெட்டி..
ஹிஹிஹி..என் 'தல'யை மட்டும் கொஞ்சம் வாராம இருங்களேன்.. :-)
//மு.கார்த்திகேயன் said...
எல்லா கேவலமான சீனையும் ஞாபகம் வச்சு கலக்குறியேப்பா..
//
மிக்க நன்றி கார்த்தி...
//
சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குதுங்க வெட்டி..
//
அது தான் நமக்கு வேணும் ;)
//
ஹிஹிஹி..என் 'தல'யை மட்டும் கொஞ்சம் வாராம இருங்களேன்.. :-) //
தலைவா,
இதுக்கு என்னால உத்திரவாதம் தர முடியாது... எனக்கு விஜயோட படமும் படிக்கும், அஜித்தும் பிடிக்கும்.
தல பல கேவலமான படங்களில் நடித்திருக்கிறார். தேவையில்லாத இடத்தில் பல பஞ்ச் டயலாக் பேசியிருக்கிறார். ஆனால் அவருடைய தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும்.
எதுக்குடா இவ்வளவு பில்ட் அப் கொடுக்கறானேனு பாக்கறீங்களா? அடுத்த தல தான் ;)
வாய்க்கையின்றது ஒரு வட்டம். இன்னிக்கு மேல கீறவன் கீழ வருவான். கீழ கீறவன் மேல வருவான். ஆனா வந்த வேகத்துல கீழ பூடுவான்.
ஆனா எங்க தலை என்னிக்கும் மேலதான்.
நல்லா வரி இருக்கிங்க. ROFTL :)
அப்புறம், நெல்லிக்காய நல்லா, வித்தியாசமா முடிச்சிருக்கிங்க.
அம்பது போடணும்னு ரொம்ப நாளா ஆசை!
போட்டுக்கறேன் வெட்டி :)))
50
//அது ஓரளவு புத்தி உள்ள ரசிகனுங்கப்பா!!! பாபா சூப்பர்னு சொல்றவங்களும் நம்ம ஊர்ல இருக்காங்க இல்லை :-)//
ஆஸ்கருக்கு சென்றிருந்தால், கேள்வியே இல்லாமல் முதல் பரிசைத் தட்டியிருக்கும் பாபா.
எங்கள் சிறுதலையை வாரியப் பிறகும், பெருந்தலையை சீண்டும் வெட்டிக்கு எனது கண்டனம்.
கவுண்டர் கவுண்டர் தான், என்னமா பிரிச்சி மேயரார்.
அப்புறம் சாலினியும் விஜயும் நடித்த ஒரு தண்ட படம் இருக்கு படம் பேரு மறந்து போச்சு முடிஞ்சா அதை பத்தியும் கொஞ்சம் பிரிச்சி மேயுங்கண்ணா.
wa போட்டு டைப் பண்ணுங்க :-)
ந
கலக்கல் வெட்டி.
என்னங்க ரெண்டே பதிவுல எல்லாத்தையும் சொல்லிட முடியுமா???
இருக்கற பட லிஸ்ட்டுக்கு ஏகப்பட்ட பதிவு போடனும் போல இருக்கே....
ஹ்ம்ம்ம்....
பாலாஜி,
சூப்பரா பின்னி பெடல் எடுத்து இருக்கே...
அடுத்த பேட்டியிலே கவுண்டர்'கிட்டே விஜய்'கிட்டே அவர் நடிச்ச படத்தே அவரே பார்ப்பாரா'னு கேட்க சொல்லு???
புதியகீதை பார்த்திட்டு அந்த தீயேட்டர் பக்கமே போககூடாதின்னு இருந்துட்டேன், ஆனா என்னோட விதி யூத்'ன்னு ஒரு உலகத்தரமான படத்துக்கு இழுத்துட்டு போச்சு.
ஐயோ சாமி அதே இன்னும் நினைச்சேனா சோறுதண்ணி இறங்காது, ராத்தியிலே தூக்கம் வராது.
அதே விதி திரும்பவும் விளையாடி பஸ்ஸிலே ஊருக்கு போறோப்போ மதுர,சிவகாசி,திருப்பாச்சி இப்பிடி வரிசையா பார்க்க வைச்சிருப்பா....
:-(((((
//அரை பிளேடு said...
வாய்க்கையின்றது ஒரு வட்டம். இன்னிக்கு மேல கீறவன் கீழ வருவான். கீழ கீறவன் மேல வருவான். ஆனா வந்த வேகத்துல கீழ பூடுவான்.
ஆனா எங்க தலை என்னிக்கும் மேலதான். //
பிளேடு எந்த தலைய சொல்ற???
ஊர்ல இப்படி சொல்லிட்டு நிறைய தரு'தலை'ங்க சுத்துதுங்க ;)
//Priya said...
நல்லா வாரி இருக்கிங்க. ROFTL :)
//
மிக்க நன்றி ப்ரியா...
இன்னைக்கு அடுத்த பார்ட் வரும் :-)
// அப்புறம், நெல்லிக்காய நல்லா, வித்தியாசமா முடிச்சிருக்கிங்க. //
அதுக்கும் ஒரு நன்றி!!!
நிறைய பேர் இன்னும் நல்லா முடிச்சிருக்கலாம்னு ஃபீல் பண்ணாங்க...
//தம்பி said...
அம்பது போடணும்னு ரொம்ப நாளா ஆசை!
போட்டுக்கறேன் வெட்டி :))) //
இதுக்கெல்லாம் பர்மிஷன் கேக்கனுமா...
பூந்து விளையாடு :-)
//தம்பி said...
50 //
நன்றி!!!
//ஜி said...
//அது ஓரளவு புத்தி உள்ள ரசிகனுங்கப்பா!!! பாபா சூப்பர்னு சொல்றவங்களும் நம்ம ஊர்ல இருக்காங்க இல்லை :-)//
ஆஸ்கருக்கு சென்றிருந்தால், கேள்வியே இல்லாமல் முதல் பரிசைத் தட்டியிருக்கும் பாபா.
எங்கள் சிறுதலையை வாரியப் பிறகும், பெருந்தலையை சீண்டும் வெட்டிக்கு எனது கண்டனம். //
கவுண்டர் ஷோவுக்கு வந்தால் யாருக்கா இருந்தாலும் ஆப்பு தான்...
ரஜினி பிடிக்கும்னாலும் கேவலமான படத்தை எல்லாம் ஆதரிக்க முடியாது. நாலு வருஷம் கழிச்சி வருதேனு கஷ்டப்பட்டு பார்த்தவனுக்கு தான் வலி தெரியும்...
சிறுதலை, பெருதலைனு சொன்னா நம்மல தரு'தலை'னு தான் சொல்லுவாங்க ;)
//குறும்பன் said...
கவுண்டர் கவுண்டர் தான், என்னமா பிரிச்சி மேயரார்.//
கவுண்டர் ரேஞ்சுக்கு இதெல்லாம் ரொம்ப கம்மி :-)
// அப்புறம் சாலினியும் விஜயும் நடித்த ஒரு தண்ட படம் இருக்கு படம் பேரு மறந்து போச்சு முடிஞ்சா அதை பத்தியும் கொஞ்சம் பிரிச்சி மேயுங்கண்ணா. //
சொல்லிட்டீங்க இல்லை.. இன்னைக்கு போடற பதிவுல பிரிச்சி மேயலாம் :-)
//Abi Appa said...
wa போட்டு டைப் பண்ணுங்க :-)
ந //
இப்ப கத்துக்கிட்டீங்களா ;)
// இம்சை அரசி said...
கலக்கல் வெட்டி.
//
நன்றி இ.அரசி ;)
// என்னங்க ரெண்டே பதிவுல எல்லாத்தையும் சொல்லிட முடியுமா???
இருக்கற பட லிஸ்ட்டுக்கு ஏகப்பட்ட பதிவு போடனும் போல இருக்கே....
ஹ்ம்ம்ம்.... //
அதுக்கு தான் யோசிச்சிட்டு இருக்கேன்..
பெரிய ஆளுங்களுக்கு எல்லாம் பதிவு அதிகமா தேவைப்படும் போல :-)
//இராம் said...
பாலாஜி,
சூப்பரா பின்னி பெடல் எடுத்து இருக்கே...
//
மிக்க நன்றி ராயலு (ராமண்ணானு சொன்னா உங்களுக்கு தான் இமேஜ் ப்ராப்ளம் ஆகுதே ;))
// அடுத்த பேட்டியிலே கவுண்டர்'கிட்டே விஜய்'கிட்டே அவர் நடிச்ச படத்தே அவரே பார்ப்பாரா'னு கேட்க சொல்லு???
//
அதுதான் இதுலயே சொல்லிட்டாரே :-)
//
புதியகீதை பார்த்திட்டு அந்த தீயேட்டர் பக்கமே போககூடாதின்னு இருந்துட்டேன், ஆனா என்னோட விதி யூத்'ன்னு ஒரு உலகத்தரமான படத்துக்கு இழுத்துட்டு போச்சு.
//
நானும் இந்த இரண்டு படமும் தியேட்டர்ல தான் பார்த்தேன் :-(
//
ஐயோ சாமி அதே இன்னும் நினைச்சேனா சோறுதண்ணி இறங்காது, ராத்தியிலே தூக்கம் வராது.
அதே விதி திரும்பவும் விளையாடி பஸ்ஸிலே ஊருக்கு போறோப்போ மதுர,சிவகாசி,திருப்பாச்சி இப்பிடி வரிசையா பார்க்க வைச்சிருப்பா....
:-((((( //
அந்த கொடுமைல இருந்து நான் கொஞ்ச நாள் தப்பிச்சி இருக்கேன்...
இன்னும் எத்தனை நாள் முடியும்னு தெரியல :-)
பாலாஜி,
நல்லாயிருக்குங்க..
நாங்க நண்பர்கள் பேசிக்குவோம். விஜய் சங்கவிக்கும், யுவராணிக்கும் கோயில் கெட்டிக் கும்பிடனும்னு. பின்னே...இவங்கதான விஜய்க்கு வாழ்வே குடுத்தது. இல்லைன்னா....சரி...அத விடுப்பா. டப்பிங் படத்துல நடிக்கிறத மொதல்ல நிறுத்தச் சொல்லுங்க. மசாலுக்குள்ளயே இப்பிடி முங்கியிருந்தா சீக்கிரமே சிக்கம்65 போட்டுருவாங்கன்னும் சொல்லுங்க.
//Sivabalan said...
பாலாஜி,
நல்லாயிருக்குங்க.. //
மிக்க நன்றி சிபா...
//G.Ragavan said...
நாங்க நண்பர்கள் பேசிக்குவோம். விஜய் சங்கவிக்கும், யுவராணிக்கும் கோயில் கெட்டிக் கும்பிடனும்னு. பின்னே...இவங்கதான விஜய்க்கு வாழ்வே குடுத்தது. //
சரியா சொன்னீங்க..
அதுவும் சங்கவிதான் ரொம்ப உதவியிருக்காங்க :-)
//
இல்லைன்னா....சரி...அத விடுப்பா. டப்பிங் படத்துல நடிக்கிறத மொதல்ல நிறுத்தச் சொல்லுங்க. மசாலுக்குள்ளயே இப்பிடி முங்கியிருந்தா சீக்கிரமே சிக்கம்65 போட்டுருவாங்கன்னும் சொல்லுங்க. //
என் நிலமையை நினைச்சு பாருங்க. தெலுகுலையும் பார்த்துட்டு தமிழ்லயும் பார்க்கனும்னா எவ்வளவு கொடுமை :-(
///துள்ளாத மனமும் துள்ளும் ////
Trainla unreserved compartment la Name list பார்த்து 'ஹலோ குட்டி'னு கூப்டுவாங்க !!
அப்புறம் climaxla 7வருசம் கழிச்சும் அப்படியே இருப்பார் நம்ம இ.த !!
Post a Comment