தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, January 31, 2007

கோழியின் அட்டகாசங்கள் - 7

மக்கா, கோழி பதிவு போட்டு ரொம்ப நாளாச்சி!!! சரி வழக்கம் போல என்ஜாய்!!!

பெங்களூர் வந்து சேர்ந்த கோழி முதன் முதலாக ஒரு MNC கம்பெனியில் இண்டர்வியூவிற்கு சென்றான். அந்த கம்பெனியிலே எங்கள் கல்லூரியிலிருந்து ஒரு நண்பன் வேலை செய்து கொண்டிருந்தான்.

இண்டர்வியூ முடிந்து வந்த கோழி மிகவும் சந்தோஷமாக இருந்தான்.

"என்னடா கோழி இண்டர்வியூ என்னாச்சி??"

"மூணு ரவுண்ட் முடிஞ்சிதுடா... பொறுமையா ரிசல்ட் சொல்றோம்னு சொல்லிருக்காங்க" சந்தோஷமாக சொன்னான்.

"என்ன என்ன ரவுண்டா இருந்துது கோழி?" ஆர்மாக கேட்டான் OP.

"சாப்ட்வேர் இஞ்சினியர் ரவுண்ட், மேனேஜர் ரவுண்ட், HR Manager ரவுண்ட்"

மேனஜர் ரவுண்ட், HR Manager ரவுண்ட் தெரியும். அது என்ன சாப்ட்வேர் இஞ்சினியர் ரவுண்டுனு எனக்கு எதுவும் புரியல.

சரி இது தெரியலைனு சொன்னா நம்மல ஓட்டுவானுங்கனு நான் அந்த கம்பெனில வேலை செய்யற அந்த ஃபிரெண்டுக்கு போனை போட்டேன்...

"டேய் பாலாஜி பேசறேன்... இன்னைக்கு கோழிக்கு இண்டர்வியூல என்ன நடந்துச்சு?"

"ஏன்டா இண்டர்வியூக்கு வரும் போது ரெஸ்யுமே கொண்டு வரணும்னு தெரியாதா?"

"என்ன அவன் ரெசுமே கொண்டு வரலையா? அப்பறம் என்னட மூணு ரவுண்டுனு உளறிக்கிட்டு இருக்கான்"

"ஆமாம்.. சொன்னா ஃபீல் பண்ணுவான்னு தெரிஞ்சி நான் தான் விசிட்டர் பாஸ் வாங்கிட்டு போயி என் க்யூபிகல், என் PM கியூபிக்கல். அப்பறம் HR கியுபிகல் மூணுத்தையும் ஒரு ஒரு சுத்து கூப்பிட்டு போயி மூணு ரவுண்ட் முடிஞ்சிடுச்சினு சொல்லி அனுப்பிட்டேன்"

"அடப்பாவி உன் வேலை தானா அது? சாப்ட்வேர் இஞ்சினியர் ரவுண்டுனு அவன் சொல்லும் போதே எனக்கு கொஞ்சம் டவுட் வந்துச்சி"

"சரிடா அவன்கிட்ட எதுவும் சொல்லாத... அடுத்த முறை வேற எங்கயாவது இண்டர்வியூக்கு போன காலேஜிக்கு போற மாதிரி கை வீசிட்டு போகாம ரெசுமே எடுத்துட்டு போக சொல்லு" சொல்லிவிட்டு போன் இணைப்பை துண்டித்தான்...

அங்கே கோழி எல்லாரிடமும் விளக்கி கொண்டு இருந்தான்...

"இவ்வளவு ஈஸியா மூணு ரவுண்ட் முடியும்னு நான் நினைக்கவேயில்லை... HR Manager ரவுண்ட்க்கு தான் ஒரு 5 நிமிஷம் அதிகமா ஆச்சி"

HR Manager க்யூபிக்கல் கொஞ்ச தூரத்துல இருந்திருக்கும்னு நினைக்கிறேன்...

53 comments:

SP.VR. SUBBIAH said...

யார் ஸ்வாமி, அந்த பாவப்பட்ட கோழி?

வெட்டிப்பயல் said...

ஐயா,
கோழி நம்ம நண்பன் தான்...
ஆனா இதெல்லாம் சும்மா அவன் பேர்ல போட்ட பிட்டு :-)

இப்ப ரொம்ப பெரிய கம்பெனில பெரிய லெவல்ல இருக்காரு :-)

கோவைக்காரர்தான்... (காரமடை)

கப்பி | Kappi said...

ரவுண்டு கட்டி ரவுசு பண்றீங்களே தல..கோழி ரெண்டு 'ரவுண்டு' அடிச்சிருக்கும்போது உங்களைப் போட்டுக் கொடுத்து புலம்ப வைக்கனும் :)))

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

ரவுண்டு கட்டி ரவுசு பண்றீங்களே தல..கோழி ரெண்டு 'ரவுண்டு' அடிச்சிருக்கும்போது உங்களைப் போட்டுக் கொடுத்து புலம்ப வைக்கனும் :))) //

நம்ம ரெண்டு ரவுண்ட் அடிக்கறதுக்குள்ள கோழி ஃப்ளாட் ஆயிருப்பான் :-)

Arunkumar said...

கோழி அட்டகாசங்கள் சூப்பர். வி.வி.சி :)

ஜி said...

வெட்டி... சூப்பர்...

ஆனா பழைய காரம் கொறயுதே...

ஜி said...

ஒரு வேளை கோழி உசாராயிட்டாரோ?

படியாதவன் said...

நல்லா எழுதுறீங்கள் வெட்டி..
பழசுகளையும் வாசிச்சன், எல்லாம் அந்தமாதிரி இருக்கண்ணை.
இயல்பாகவே நகைச்சுவை வருகிறது உங்களுக்கு.

ராசுக்குட்டி said...

ஹா ஹா நல்லா சிரிச்சேன்... அவர் உண்மைலயே இவ்வளவு அப்பாவியா இல்ல அப்பாவி மாதிரி நடிச்சி உங்களுக்கு ஃகோலி குடுக்கறாரா?

வெட்டிப்பயல் said...

//Arunkumar said..

கோழி அட்டகாசங்கள் சூப்பர். வி.வி.சி :)//

மிக்க நன்றி அருண்...
இன்னும் நிறைய இருக்கு... மக்களிடம் கேட்டு எழுத வேண்டும் :-)

வடுவூர் குமார் said...

திரும்ப வந்துட்டாரா? கோழி
இனி சிரிப்பு தான்.

வெட்டிப்பயல் said...

//ஜி said...

வெட்டி... சூப்பர்...
//

மிக்க நன்றி!!!

//
ஆனா பழைய காரம் கொறயுதே...//
அடுத்தவனை கொழம்பு வெக்கறதுல அப்படி ஒரு ஆனந்தம் :-)

அடுத்த பகுதில கூட்டிடலாம் :-)

வெட்டிப்பயல் said...

//ஜி said...

ஒரு வேளை கோழி உசாராயிட்டாரோ?//

கோழிக்கு தெரியும்...
நண்பனுக்காக பெரிய மனசு பண்ணி ஒத்துக்கிட்டான் :-)

வெட்டிப்பயல் said...

//படியாதவன் said...

நல்லா எழுதுறீங்கள் வெட்டி..
பழசுகளையும் வாசிச்சன், எல்லாம் அந்தமாதிரி இருக்கண்ணை.
இயல்பாகவே நகைச்சுவை வருகிறது உங்களுக்கு.//

மிக்க நன்றி படியாதவன்...
தங்களை போன்றோர் கொடுக்கும் உற்சாகம் தான் என்னை தொடர்ந்து எழுத வைக்கிறது...

வெட்டிப்பயல் said...

//ராசுக்குட்டி said...

ஹா ஹா நல்லா சிரிச்சேன்... அவர் உண்மைலயே இவ்வளவு அப்பாவியா இல்ல அப்பாவி மாதிரி நடிச்சி உங்களுக்கு ஃகோலி குடுக்கறாரா?//

வாங்க வாங்க!!!
பார்த்து ரொம்ப நாளாச்சி...

கோழி அப்பாவியெல்லாம் இல்லை...
அவன் நிஜமாலுமே 3 ரவுண்ட் க்ளியர் பண்ணிட்டு வந்தான்... எங்க பசங்க தான் இப்படி ஓட்டினாங்க :-)

ஆனா அவன் அதையெல்லாம் கண்டுக்காம முன்னேறினான்...
இது சும்மா நம்ம சிரிக்கறதுக்கு. அவனும் பெருசா எடுத்துக்க மாட்டான்...

கொங்கு நாட்டு தங்கம் :-) (உண்மையாலுமே)

G.Ragavan said...

திரும்பவும் கோழி வந்துருச்சா? அப்ப பிரியாணி போட்டுற வேண்டியதுதான்.

கோழி என்ன பிள்ளையாரா? வெறும் க்யூப்பிக்கிளை மட்டும் சுத்தி வந்து ஞானப்பழம் மாதிரி வேலைய வாங்குறதுக்கு?

Syam said...

ROTFL :-)...ரொம்ப நாள் ஆச்சுங்க கோழி மேட்டர் படிச்சு....அநியாயத்துகு அவர ஓட்டுறீங்களே...சரி சரி நடக்கட்டும் நமக்கும் சிரிக்க சான்ஸ் வேணும் இல்ல :-)

Unknown said...

ஆனாலும் வெட்டி இது டூ மச்.. ஐ வான்ட் டீ மீட் தட் கோழி....அவர் கையாக் காலா நினைச்சுத் தொட்டு கும்பிடணும் போலிருக்கு.

வெட்டிப்பயல் said...

//வடுவூர் குமார் said...

திரும்ப வந்துட்டாரா? கோழி
இனி சிரிப்பு தான்.//

வாங்க வாங்க...
மக்களை சிரிக்க வைக்க மீண்டும் கோழி வந்து விட்டார் :-)

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

திரும்பவும் கோழி வந்துருச்சா? அப்ப பிரியாணி போட்டுற வேண்டியதுதான்.
//
சைவமா இருந்துட்டு நீங்க இப்படி பேசலாமா???

நான் பேசலாம்... இல்லை சாப்பிடலாம் :-)


//
கோழி என்ன பிள்ளையாரா? வெறும் க்யூப்பிக்கிளை மட்டும் சுத்தி வந்து ஞானப்பழம் மாதிரி வேலைய வாங்குறதுக்கு? //
அது அவனுக்கு தெரியலையே :-)

வெட்டிப்பயல் said...

//Syam said...

ROTFL :-)...ரொம்ப நாள் ஆச்சுங்க கோழி மேட்டர் படிச்சு....அநியாயத்துகு அவர ஓட்டுறீங்களே...சரி சரி நடக்கட்டும் நமக்கும் சிரிக்க சான்ஸ் வேணும் இல்ல :-)
//

நம்ம சிரிக்கத்தானே இத்தனை மேட்டரையும் கோழி பண்ணறான் :-)

இது சும்மா பசங்க போட்ட பிட்டு :-)

வெட்டிப்பயல் said...

//தேவ் | Dev said...

ஆனாலும் வெட்டி இது டூ மச்.. ஐ வான்ட் டீ மீட் தட் கோழி....அவர் கையாக் காலா நினைச்சுத் தொட்டு கும்பிடணும் போலிருக்கு.//

நான் வரும் போது உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன் :-)

சென்ஷி said...

//HR Manager க்யூபிக்கல் கொஞ்ச தூரத்துல இருந்திருக்கும்னு நினைக்கிறேன்... //

அருமையான ரசனையய்யா உங்களுக்கு.. கோழிதான் பாவம்.. இன்னும் எத்தனை நாளைக்கு உங்ககிட்ட ஆப்பு வாங்கி சூப்பு ஆவாரோ தெரியல. ஆனாலும் நல்லா இருந்துச்சு.

சென்ஷி

Raji said...

Vetti Nalla comedy-ah irundhuchunga
..

//காலேஜிக்கு போற மாதிரி கை வீசிட்டு போகாம //
Oh yella colle-layum ipdi thaana?
//இவ்வளவு ஈஸியா மூணு ரவுண்ட் முடியும்னு நான் நினைக்கவேயில்லை... HR Manager ரவுண்ட்க்கு தான் ஒரு 5 நிமிஷம் அதிகமா ஆச்சி//
Rasikkum padiya irundhunchu-nga Vetti sir
//HR Manager க்யூபிக்கல் கொஞ்ச தூரத்துல இருந்திருக்கும்னு நினைக்கிறேன்...

Idhuvum ..idhuvum...Rasikkum padiya irundhuchu vetti sir

Sumathi. said...

ஹாய் வெட்டி,

சூப்பர்.... கோழி போன இண்டர்வியுவும்...... நீங்க அவர ஓட்டினதும்.....நல்லாயிருக்கு.

dubukudisciple said...

hi vetti!!
Kozhi Chancea illa!!!
super post!!!
romba naal ana mathiri iruku neenga comedya oru post potu!!!
keep it up!!
appadiye namma padivu pakkamum vaanga ungalukaga nalla nalla ponnunga ellam kathukitu irukanga

வெட்டிப்பயல் said...

// சென்ஷி said...

//HR Manager க்யூபிக்கல் கொஞ்ச தூரத்துல இருந்திருக்கும்னு நினைக்கிறேன்... //

அருமையான ரசனையய்யா உங்களுக்கு.. கோழிதான் பாவம்.. இன்னும் எத்தனை நாளைக்கு உங்ககிட்ட ஆப்பு வாங்கி சூப்பு ஆவாரோ தெரியல. ஆனாலும் நல்லா இருந்துச்சு.

சென்ஷி //

சென்ஷி,
கோழி நம்ம ஆளு...
எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டான்...

நம்ம எல்லாரையும் சிரிக்க வைக்க தானே இப்படி கஷ்டப்படறான் :-)

வெட்டிப்பயல் said...

ராஜி said...

Vetti Nalla comedy-ah irundhuchunga
..
//
மிக்க நன்றி ராஜி...

//
//காலேஜிக்கு போற மாதிரி கை வீசிட்டு போகாம //
Oh yella colle-layum ipdi thaana?
//
நான் பள்ளிக்கூடத்துக்கே அப்படித்தான் போவேன் :-)

//
//இவ்வளவு ஈஸியா மூணு ரவுண்ட் முடியும்னு நான் நினைக்கவேயில்லை... HR Manager ரவுண்ட்க்கு தான் ஒரு 5 நிமிஷம் அதிகமா ஆச்சி//
Rasikkum padiya irundhunchu-nga Vetti sir
//HR Manager க்யூபிக்கல் கொஞ்ச தூரத்துல இருந்திருக்கும்னு நினைக்கிறேன்...

Idhuvum ..idhuvum...Rasikkum padiya irundhuchu vetti sir //

மிக்க நன்றி...
ஆனா வெட்டி சார் எல்லாம் இல்லை...

வெட்டிப்பயல் said...

// Sumathi said...

ஹாய் வெட்டி,

சூப்பர்.... கோழி போன இண்டர்வியுவும்...... நீங்க அவர ஓட்டினதும்.....நல்லாயிருக்கு. //

மிக்க நன்றி சுமதி...
தொடர்ந்து வரவும்...

வெட்டிப்பயல் said...

//dubukudisciple said...

hi vetti!!
Kozhi Chancea illa!!!
super post!!! //
மிக்க நன்றி சுதா...

//
romba naal ana mathiri iruku neenga comedya oru post potu!!!
keep it up!!
//
ஆமாங்க... அதனால தான் திரும்பவும் நம்ம ஏரியாவுக்கே வரேன் :-)

//
appadiye namma padivu pakkamum vaanga ungalukaga nalla nalla ponnunga ellam kathukitu irukanga //
நமக்கு ஊர்ல நல்ல பேர் இருக்கறதே பிடிக்காது போல... :-)

கவிதை மட்டும் இல்லைனா போதும்... நான் தானா வந்து கமெண்ட் போடுவேன் ;)

இராம்/Raam said...

வெட்டி,

உனக்கு மட்டும்தாப்பா ஒரு திறமை இருக்கு,


அது என்னான்னா நீ செஞ்சதே பூராவும் அடுத்தவன் செஞ்சமாதிரி சொல்லி சிரிக்கவைச்சிறே. :)

Syam said...

//இது சும்மா பசங்க போட்ட பிட்டு//

இருந்தாலும் கோழி பேர வெச்சு போட்டாதான் அதுக்கு ஒரு எபக்டு :-)

வெட்டிப்பயல் said...

//இராம் said...

வெட்டி,

உனக்கு மட்டும்தாப்பா ஒரு திறமை இருக்கு,


அது என்னான்னா நீ செஞ்சதே பூராவும் அடுத்தவன் செஞ்சமாதிரி சொல்லி சிரிக்கவைச்சிறே. :) //

ராயல் அண்ணே,
கோழி கேரக்டர் உண்மை...
வேணும்னா சொல்லுங்க இண்ட்ரோ பண்ணி வைக்கிறேன்... அங்க வரும்போது. ஆனா அவன் புத்திசாலி... ஜாலி டைப்

அதனால எவ்வளவு பிட்ட போட்டாலும் நம்ம தல மாதிரியே பெருந்தன்மையா தாங்கிக்குவான்...

என் ப்ளாக படிக்கறவங்களுக்கு என்னைய விட கோழிய தான் பிடிச்சிருக்கு... :-))))

வெட்டிப்பயல் said...

// Syam said...

//இது சும்மா பசங்க போட்ட பிட்டு//

இருந்தாலும் கோழி பேர வெச்சு போட்டாதான் அதுக்கு ஒரு எபக்டு :-) //

கரெக்ட்டா புரிஞ்சிக்கிட்டீங்க நாட்டாமை...

எதுவா இருந்தாலும் நம்ம கோழி செஞ்ச மாதிரி இருந்தாதான் ஒரு எஃபக்ட் :-)

ரவி said...

:))))))))))))))))))))
:)))))))))))))))))))))

Srinan said...

Very funny. Oorukku poi palaya friendsa marupadiyum otina mathiri oru feeling. Expecting more kozhi!

Unknown said...

Ha..Ha.Good rounds by kozhi.Good post.Thanks balaji

வெட்டிப்பயல் said...

//செந்தழல் ரவி said...

:))))))))))))))))))))
:))))))))))))))))))))) //

மிக்க நன்றி!!!

வெட்டிப்பயல் said...

// Srinan said...

Very funny. Oorukku poi palaya friendsa marupadiyum otina mathiri oru feeling. Expecting more kozhi! //

மிக்க நன்றி ஷினன்...
கோழி கதை இன்னும் வரும்...

வெட்டிப்பயல் said...

//செல்வன் said...

Ha..Ha.Good rounds by kozhi.Good post.Thanks balaji //

மிக்க நன்றி செல்வன்...

MyFriend said...

கொஞ்ச நாள் கோழியை காணொம்ன்னு பார்த்தேன்.. ;-)

உங்க நண்பர் கோழிக்கு நல்ல காமெடி சென்ஸ் (அவர் அறியாமல் செய்தாலும்).. :-P

ரெசுமே எடுத்து போகாமல் எத்தனை இன்டர்வியூவுக்கு போனாரோ??

k4karthik said...

செம comdeyங்க.. ரொம்ப ரசிச்ச பதிவு.. இப்படியும் இருப்பாங்களா?... விழுந்து விழுந்து சிரிக்க வச்சிட்டீங்க..

கைப்புள்ள said...

//HR Manager க்யூபிக்கல் கொஞ்ச தூரத்துல இருந்திருக்கும்னு நினைக்கிறேன்...//

ஹி...ஹி...நல்ல சிரிப்பப்பா. 'கோழி ரிட்டர்ன்ஸ்'னு கூட பதிவுக்குப் பேரு வச்சிருக்கலாம் போலிருக்கு...அந்தளவுக்குக் கோழி ரசிகர்கள் இருக்காங்க.
:)

அனுசுயா said...

கோழி பிரியாணி சாரி கோழி பதிவு ரொம்ப நல்லா இருக்குதுங்க வெட்டி. நல்லா நக்கலுங்கோ :)

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. @ .:: My Friend ::. said...

கொஞ்ச நாள் கோழியை காணொம்ன்னு பார்த்தேன்.. ;-)

உங்க நண்பர் கோழிக்கு நல்ல காமெடி சென்ஸ் (அவர் அறியாமல் செய்தாலும்).. :-P

ரெசுமே எடுத்து போகாமல் எத்தனை இன்டர்வியூவுக்கு போனாரோ??//

My Friend,
அவர் ரெசுமே எல்லாம் எடுத்துட்டு தாங்க போனாரு... நிஜமாலும் 3 ரவுண்ட் முடிச்சிட்டு வந்தாரு...

நாங்க தான் அப்படி ஓட்டினோம் :-)

வெட்டிப்பயல் said...

//k4karthik said...

செம comdeyங்க.. ரொம்ப ரசிச்ச பதிவு.. இப்படியும் இருப்பாங்களா?... விழுந்து விழுந்து சிரிக்க வச்சிட்டீங்க..//

ரொம்ப நன்றி கார்த்திக்...
அதுதான் நமக்கு வேணும் :-)

வெட்டிப்பயல் said...

//கைப்புள்ள said...

//HR Manager க்யூபிக்கல் கொஞ்ச தூரத்துல இருந்திருக்கும்னு நினைக்கிறேன்...//

ஹி...ஹி...நல்ல சிரிப்பப்பா. 'கோழி ரிட்டர்ன்ஸ்'னு கூட பதிவுக்குப் பேரு வச்சிருக்கலாம் போலிருக்கு...அந்தளவுக்குக் கோழி ரசிகர்கள் இருக்காங்க.
:) //

வாங்க தல,
ரொம்ப நாளா ஆளையே காணோம் :-)

வேலண்டைன்ஸ் டேக்கு பிஸியோனு நினைச்சேன்!!!

கோழிக்குத்தான் நம்மல விட ரசிகர்கள் அதிகம் :-)

வெட்டிப்பயல் said...

//anu said...

கோழி பிரியாணி சாரி கோழி பதிவு ரொம்ப நல்லா இருக்குதுங்க வெட்டி. நல்லா நக்கலுங்கோ :)//

கோழி பிரியாணி சாப்பிட்டே கொஞ்ச நாளாச்சுனு தான் இந்த பதிவு :-)

ரொம்ப டாங்கிஸ் அனு...

k4karthik said...

49..

k4karthik said...

50..

அரை சதம் போட்டாச்சு....

சுந்தர் / Sundar said...

ஆரம்பிச்சிட்டாங்கயா ... இப்பவே கண்ண கட்டுதே ..
இது இனிமே பொட்டுவ் வச்சு, பூ வக்காமா போகாதே !

கோழியின் நட்பு வலையம்

parameswary namebley said...

ஹா ஹா... நல்லதொரு படிப்பினை...அது எப்படி, நேர்முக பேட்டிக்கு ரெஸ்யுமே எடுத்துக்கிட்டு போகனும்னு கூட அவருக்கு தெரியல?

cheena (சீனா) said...

52 மறுமொழிகள் ஏற்கனவே - எத்தனை எத்தனை விசிறிகள் கோழிக்கு - ம்ம் - 3 ரவுண்டு சூப்பர் - 3 ரவுண்டு தாங்குறாருன்னா கோழி கோழிதான்