தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, January 04, 2007

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய் பகுதி 2

க: ஏன்டா தமிழன் தமிழன்னு ஒரு படம் நடிச்சியே அது கதை கேட்டு தான் நடிச்சியா?

வி: டைரக்டர் ரெண்டே வரில எனக்கு கதை சொன்னாருணா... ஒரு தறுதலை தபால் தலையில் வருகிறான். இது தான்ணா அதோட கதை.

க: டேய் ரெண்டு வரில சொல்றதுக்கு அது என்னடா திருக்குறளா? கதை கேக்கறதுக்கு ஒனக்கு ஒரு மணி நேரமாகுமாடா? காசு போடறது எவனோ, படம் பாக்கறது எவனோங்கற தைரியத்துல நீ நடிச்சிட்டு இருக்க. யூத்னு ஒரு படம் நடிச்சியே அது நியாபகம் இருக்கா?

வி: அது மறக்கக்கூடிய படமாணா? ஆல் தோட்ட பூபதி பாட்டுக்கு தமிழ் நாடே ஆடுச்சேணா...

க: அது உன் ஆட்டத்துக்கு இல்லடி. சிம்ரன் ஆடனதால தமிழ் நாடே ஆடுச்சு. அதுல எதுக்குடா உனக்கு வெக்க வேண்டிய பேரை விவேக்குக்கு வெச்சிங்க?

வி: அது என்ன பேருங்கணா? நியாபகம் இல்லையே!!!

க: கருத்து கந்தசாமி. படம் முழுக்க கருத்து சொல்லியே மக்கள கொன்னுட்டனு உன் பேருல பொது நல வழக்கு வேற இன்னும் இருக்காம்.

வி: அண்ணா என்னங்கணா இதுக்கெல்லாம் போயி டென்ஷனாகிட்டு.

க: இதெல்லாம் விட இன்னோரு கொடுமை அந்த புதிய கீதை. அதுல உனக்கு எதுக்குடா ஆறு விரல்?

வி: கமல், விக்ரம், சூர்யா மாதிரி ஏதாவது வித்யாசமான கெட்டப்ல வரணும்னு ஆசைப்பட்டேண்ணா. அதனால தான் ஆறு விரல் வெச்சிக்கிட்டேன். உங்களால என்னை அடையாளம் கண்டு பிடிச்சிருக்கவே முடியாதே!!!

க:டேய்!!! கைல ஒரு விரல் அதிகமா வெச்சிக்கிட்டா அடையாளம் தெரியாதா? உன்னைய என்ன பண்றதுன்னே தெரியலையே. அதுல க்ளைமாக்ஸ் அதுக்கு மேல கொடுமை. வண்டில சைட் ஸ்டேண்ட் தட்டிவிட்டு ஆக்ஸிடெண்ட் ஆன ஒரே ஆள் நீதான்டா.

வி: என்னங்கணா இப்படி திட்றீங்க. நீங்க ரொம்ப மோசம்.

க: டேய் விஜய் மண்டையா! உன்னைய நம்பி காசு கொடுத்து தைரியமா வந்தா நீ இப்படி புதுமை பண்றேனு டகாட்டி வேலை பண்ணா உன்னைய என்ன பண்றது? நீயே சொல்லு அந்த திருமலை படமெல்லாம் மனுசன் பார்க்க முடியுமா? அதுல கடைசி சீன்ல நீ பேசற பஞ்ச் டயலாக் கொடுமை தாங்காம வில்லனே திருந்திடறான். நாங்க பாவம் என்ன பண்ணுவோம்?

வி: !@#$%

க: சரி.. கில்லி படத்துல எப்படிடா மதுரைல செமி ஃபைனல்ல தோத்துட்டு ஃபைனல்ல சென்னைல பஞ்சாப் டீம் கூட ஆடறீங்க?

(விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)

க: சொல்லு மேன்!

வி: அது வேற மேட்சுங்கணா. அதுல லோக்கல் டீமோட கில்லி டீம் ஆடுதுண்ணா. இது தமிழ்நாடுக்காக கலந்துக்கற மேட்ச்ணா. (ஒரு வழியாக சமாளிக்கிறார் விஜய்)

க: டேய் டக்கால்டி மண்டையா. தமிழ் நாடு டீம்ல தான் ஓட்டேரி நரி, டுமீல் குப்பம் வவ்வாலு, ஆதி வாசி எல்லாம் இருக்கறாங்களாடா? சும்மா அடிச்சு விடாதடா.

வி: போங்கணா. என் படத்துல போய் லாஜிக் எல்லாம் பாக்கறீங்க.

க: அது சரி. கில்லி கூட பரவால. அந்த மதுரனு ஒரு படம் நடிச்சியே அது மனசன் பாப்பானாடா? மீசைய ட்ரிம் பண்ணி கைல டேட்டு கூத்துனா அடையாளம் தெரியாதுனு தமிழ் நாட்டுக்கு புது டெக்னிக் சொல்லி கொடுத்ததே நீ தான்டா.

வி: ஏன்ணா அவன் மட்டும் கோட்டு போட்டா அடையாளம் தெரியாதுனு நடிக்கல?

க: அவன் எவன்டா?

வி: பேரெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அந்த படத்த பேரோட க்ளூ தரேன். 'ஜ'ல ஆரம்பிச்சி 'னா'ல முடியும்.

க: ஏன்டா உங்க அக்கப்போர்ல எங்கள கொடுமைப்படுத்தறீங்க? உங்களுக்குனு இருக்கானுங்க பாரு ரசிகர்னு சொல்லிட்டு அவனுங்கள சொல்லனும்.
அது எப்படிடா தைரியமா அந்த பேரரசு படத்துல எல்லாம் நடிச்ச?

வி: அண்ணா. அவர் எவ்வளவு பெரிய டைரக்டரு. அவர மாதிரி புதுசா சிந்திக்கிற டைரக்டரே தமிழ்நாட்ல கிடையாதுங்கணா.

க: டேய் அவன் போன வாரம் தான் துவைச்சு காயப்போட்டேன். இந்த மூஞ்சில சந்தனத்த பூசினா அடையாளம் தெரியாதுனுங்கறதெல்லாம் பெரிய சிந்தனையாடா. அவனை சொல்லக்கூடாது. முதல்ல உங்கள போட்டு நாலு சாத்து சாத்தனா சரியா போயிடும். இனிமே அவன் கூட சேராத. புரியுதா?

வி: சரிங்கண்ணா.

க: அப்பறம் குஷி படத்துல எதுக்கு ரெண்டு தடவை நடிச்ச?

வி: இல்லைங்களேணா. ஒரு தடவை தானே நடிச்சேன்.

க: நான் சொல்றது சச்சின்னு ரெண்டாவது தடவை அதே கதைல நடிச்சியே அதை சொல்றேன்.

வி: ஓ! குஷி படத்துலயும் சச்சின் படத்துலயும் ஒரே கதையாணா? அது எனக்கு தெரியாதே!

க: அடங்கொக்கா மக்கா. நீ நடிக்கிற படத்து கத உனக்கே தெரியாதா? ஒழுங்கா கதைய கேட்டு நடி. உன்னைய நம்பி காசு கொடுத்து வந்து அடிக்கடி எல்லாரும் ஏமாந்து போறோம். அப்பறம் இன்னோரு விஷயம் தெலுகு படம் பாக்கறத குறைச்சிக்கோ. நம்ம ஊர்லயே நல்ல டைரக்டருங்க எல்லாம் அருமையான கதையோட இருக்காங்க. நீ ஒழுங்க கதை கேட்டு நடி. அப்பறம் பஞ்ச் டயலாக் பேசறத இன்னையோட நிறுத்திடு. ஓகேவா?

வி: சரிங்கண்ணா... இனிமே ஒழுங்கா நடிக்கிறேன்னா... அப்படியே எல்லாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனிமே உங்களை ஏமாத்தாம ஒழுங்கா கதை கேட்டு நடிக்கிறேங்க.
வாழ்க்கைங்கறது ஒரு வட்டம் அதுல கீழ இருக்கறவன் மேல வருவான் மேல இருக்கவன் கீழ போவான். ஆதி ஃப்ளாப் ஆயிடுச்சினு போக்கிரிய மிஸ் பண்ணிடாதீங்க...

க: டேய். இப்பதான சொன்னேன். இனிமே நீ மட்டும் பஞ்ச் டயலாக் பேசின உன் காத புடிச்சி கடிச்சி வெச்சிடுவேன். ஒழுங்கா ஓடி போயிடு...

(கவுண்டர் துரத்த... விஜய் எஸ்கேப் ஆகிறார்)

125 comments:

கானா பிரபா said...

க: ஏண்டா இழவெடுத்த நா... ரசிகன்னு ஒரு படம் நடிச்சியே, பொண்ணை டாவடிச்சிக்கிட்டே, தாய்க்கு சோப்பு போட்ட கருமத்த யாரு எடுத்தாங்க?

வி: எங்கப்பா தானுங்கண்ணா, புரட்சி இயக்குனரு

Anonymous said...

அட்டகாசம் போங்க...

Anonymous said...

போன பதிவ விட இந்தப் பதிவு பயங்கர சூடு....

கலைஞர் தமிழ் பெயருக்கு விலக்குனாரு வரி...

எங்க தல அடுத்து கலக்கப் போவது போக்கிரி...

Anonymous said...

ஹாய் வெட்டி!!!
Wish you and your family a Happy New Year!!!

சூப்பரப்பு!! எப்படி இப்படி எல்லாம் சிந்திக்கிரீங்களோ!!!
இன்னும் நிரைய கவுண்டர்ஸ் டெவில் ஷோ எதிர்ப்பார்க்கிரேன்

Sridhar V said...

பாலாஜி,

நன்றாக போட்டு வாங்குகிறார் கவுண்டமணி. விஜய்-உம் அடிச்சு ஆட்றார் பாருங்க. கலக்குறீங்க போங்க. உங்களுக்கு காமெடி இயல்பாக வருகிறது.

ஒரு சின்ன கருத்து -

கவுண்டர் சும்மா கேக்கற கேள்வியே நல்லா லொள்ளுத்தனமாத்தான் இருக்கு. இதுல நடுவுல இந்த 'நா...' அப்புறம் '...டா' போட்டு கேக்கறது இதெல்லாம் வேணுமா? அதை தவிர்த்தீங்கணா நிறைய பேரு படிச்சு சந்தோஷப்படுவாங்கன்னு தோனுது.

அனுசுயா said...

//க: இதெல்லாம் விட இன்னோரு கொடுமை அந்த புதிய கீதை. அதுல உனக்கு எதுக்குடா ஆறு விரல்?//

கவுண்டர் நல்லா கேக்கறாருங்க கேள்வி. வெட்டி அருமையா எழுதறீங்க. இன்னும் தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

// வி: கமல், விக்ரம், சூர்யா மாதிரி ஏதாவது வித்யாசமான கெட்டப்ல வரணும்னு ஆசைப்பட்டேண்ணா. அதனால தான் ஆறு விரல் வெச்சிக்கிட்டேன். உங்களால என்னை அடையாளம் கண்டு பிடிச்சிருக்கவே முடியாதே!!!
//

நக்கலோ நக்கல்........... :)


//வி: ஏன்ணா அவன் மட்டும் கோட்டு போட்டா அடையாளம் தெரியாதுனு நடிக்கல?
க: அவன் எவன்டா?
வி: பேரெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அந்த படத்த பேரோட க்ளூ தரேன். ஜல ஆரம்பிச்சி னால முடியும்.
க: ஏன்டா உங்க அக்கப்போர்ல எங்கள கொடுமைப்படுத்தறீங்க? உங்களுக்குனு இருக்கானுங்க பாரு ரசிகர்னு சொல்லிட்டு அவனுங்கள சொல்லனும்.
//

எப்படி உங்களால மட்டும் இப்படியெல்லாம் முடியுது??? :))

nice comedy. விழுந்து விழுந்து சிரிச்சு பயங்கரமா அடி பட்டுடுச்சு போங்க :)

Anonymous said...

இத்தனை விஜய் படமும் பார்த்திருக்கீங்களா வெட்டி?!!!

பதிவைப் படிச்ச பின்னாடி, விஜயவிட உங்களுக்குத் தான் நான் ரொம்பப் பரிதாபப் படுறேன் :)))))

வினையூக்கி said...

உதயா வை விட்டுட்டீங்களா?

நாமக்கல் சிபி said...

//கானா பிரபா said...

க: ஏண்டா இழவெடுத்த நா... ரசிகன்னு ஒரு படம் நடிச்சியே, பொண்ணை டாவடிச்சிக்கிட்டே, தாய்க்கு சோப்பு போட்ட கருமத்த யாரு எடுத்தாங்க?

வி: எங்கப்பா தானுங்கண்ணா, புரட்சி இயக்குனரு//

வருக வருக!!!

நம்ம ப்ளாகுக்கு முதல் தடவையா வந்துருக்கீங்க...

நீங்க சொல்றது பகுதி ஒன்னுலயே கேட்டுட்டேன் :-)

நாமக்கல் சிபி said...

//Baranee said...

அட்டகாசம் போங்க...//

மிக்க நன்றி பரணி!!!

நாமக்கல் சிபி said...

//ஜி said...

போன பதிவ விட இந்தப் பதிவு பயங்கர சூடு....

கலைஞர் தமிழ் பெயருக்கு விலக்குனாரு வரி...

எங்க தல அடுத்து கலக்கப் போவது போக்கிரி...//

போன பதிவுல வந்து சூடு கம்மினு சொன்னது நீங்க தானே :-)

போக்கிரி 20 தடவைக்கு மேல பார்த்தாச்சு... முதல்ல ரீ-மேக் படத்துல நடிக்கறத நிறுத்த சொல்லுங்க.

நாமக்கல் சிபி said...

//dubukudisciple said...

ஹாய் வெட்டி!!!
Wish you and your family a Happy New Year!!!
//
மிக்க நன்றி சுதா!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்கள்

//
சூப்பரப்பு!! எப்படி இப்படி எல்லாம் சிந்திக்கிரீங்களோ!!!
இன்னும் நிரைய கவுண்டர்ஸ் டெவில் ஷோ எதிர்ப்பார்க்கிரேன்//
கண்டிப்பா.. இன்னும் நிறைய பேர் இருக்காங்க...

Anonymous said...

பாலாஜி,

கலக்கிட்டாருப்பா கவுண்டரு, இனிமே அந்த இ.த. நல்ல படத்திலே நடிப்பாருன்னு நம்பிக்கை வைப்போம்.

;)

Anonymous said...

பாலாஜி,

கில்லியை கிழிச்சதது'தான் டாப்.

//இத்தனை விஜய் படமும் பார்த்திருக்கீங்களா வெட்டி?!!! //

யக்கோவ்,

நானும் அந்த கொடுமையை நிறைய அனுவிச்சிருக்கேன் .... :-((

அரை பிளேடு said...

நாம எப்பவுமே நம்ம சேஃப்டி முக்கியம்னு நினைக்குற ஆளு. விஜய் படமெல்லாம் பாக்குறதே இல்லை. கடசியா பாத்தது கில்லிதான்.

டீவில இவங்க போடுற டிரெயிலர பார்க்கறப்பவே நமக்கு ஜன்னி கண்டுடுதே. இதெல்லாம் எப்பிடித்தான் மக்களே தியேட்டர் போயி பாக்குறீங்களோ.

இதுல இளைய தளபதி பட்டம் வேற. இத யாருய்யா உனக்கு குடுத்தா. நீங்களே டைட்டில் கார்டு போட்டா தளபதி ஆயிடுவீங்களா.

எதோ ஒரு படத்துல விஜய் வெல்டிங் அடிச்சே வெளிய வருவாராமே. அதுவும் அவர மாறியே மனுச பொம்மை மாதிரியே வெல்டிங்க வெட்டிக்னு.

பாட்டாவது உருப்படியா கீதான்னு பாத்தா. பச்சை மிளகாய் பம்பரக்கண்ணு பருப்பி.. இன்னாய்யா பாட்டு இது.

என்னிக்காவது விஜய்க்கு நடிப்பு வருதுன்னு தெரிஞ்சாலொழிய நாம விஜய் படம் பார்க்க தியேட்டர் போக மாட்டோம்.

யப்பா... போக்கிரின்னு ஒரு படம் வருதாம்பா பொங்கலுக்கு.. எல்லாரும் பத்திரமா வீட்லயே இருங்க...

நாமக்கல் சிபி said...

//Sridhar Venkat said...

பாலாஜி,

நன்றாக போட்டு வாங்குகிறார் கவுண்டமணி. விஜய்-உம் அடிச்சு ஆட்றார் பாருங்க. கலக்குறீங்க போங்க. உங்களுக்கு காமெடி இயல்பாக வருகிறது.
//

மிக்க நன்றி ஸ்ரீதர்!!!

//
ஒரு சின்ன கருத்து -

கவுண்டர் சும்மா கேக்கற கேள்வியே நல்லா லொள்ளுத்தனமாத்தான் இருக்கு. இதுல நடுவுல இந்த 'நா...' அப்புறம் '...டா' போட்டு கேக்கறது இதெல்லாம் வேணுமா? அதை தவிர்த்தீங்கணா நிறைய பேரு படிச்சு சந்தோஷப்படுவாங்கன்னு தோனுது.//

வாடா போடானு பேசாம கவுண்டர் ஜோக்கா? உங்களுக்காக "நா.." தூக்கிட்டேன்!!!

நாமக்கல் சிபி said...

//அனுசுயா said...

//க: இதெல்லாம் விட இன்னோரு கொடுமை அந்த புதிய கீதை. அதுல உனக்கு எதுக்குடா ஆறு விரல்?//

கவுண்டர் நல்லா கேக்கறாருங்க கேள்வி. வெட்டி அருமையா எழுதறீங்க. இன்னும் தொடர வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி அனுசயா...
எல்லாம் நீங்க கொடுக்கற உற்சாகம் தான் :-)

நாமக்கல் சிபி said...

//இம்சை அரசி said...

// வி: கமல், விக்ரம், சூர்யா மாதிரி ஏதாவது வித்யாசமான கெட்டப்ல வரணும்னு ஆசைப்பட்டேண்ணா. அதனால தான் ஆறு விரல் வெச்சிக்கிட்டேன். உங்களால என்னை அடையாளம் கண்டு பிடிச்சிருக்கவே முடியாதே!!!
//

நக்கலோ நக்கல்........... :)
//

கவுண்டருக்கு இதெல்லாம் சாதாரணம் இ.அரசியாரே!!!

//

//வி: ஏன்ணா அவன் மட்டும் கோட்டு போட்டா அடையாளம் தெரியாதுனு நடிக்கல?
க: அவன் எவன்டா?
வி: பேரெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அந்த படத்த பேரோட க்ளூ தரேன். ஜல ஆரம்பிச்சி னால முடியும்.
க: ஏன்டா உங்க அக்கப்போர்ல எங்கள கொடுமைப்படுத்தறீங்க? உங்களுக்குனு இருக்கானுங்க பாரு ரசிகர்னு சொல்லிட்டு அவனுங்கள சொல்லனும்.
//

எப்படி உங்களால மட்டும் இப்படியெல்லாம் முடியுது??? :))
//
எல்லாம் நீங்க கொடுக்கற உற்சாகம் தான் :-)

//
nice comedy. விழுந்து விழுந்து சிரிச்சு பயங்கரமா அடி பட்டுடுச்சு போங்க :)//

அடிப்பட்டதுக்கு டாக்டர் செலவெல்லாம் கேக்கப்படாது :-)

நாமக்கல் சிபி said...

//பொன்ஸ் said...

இத்தனை விஜய் படமும் பார்த்திருக்கீங்களா வெட்டி?!!!

பதிவைப் படிச்ச பின்னாடி, விஜயவிட உங்களுக்குத் தான் நான் ரொம்பப் பரிதாபப் படுறேன் :)))))//

இதுல போட்ருக்க படமெல்லாம் பார்த்திருக்கேன்... (தியேட்டர்ல போயி)... அதனால தான் இந்த கொல வெறி!!!

நாமக்கல் சிபி said...

//வினையூக்கி said...

உதயா வை விட்டுட்டீங்களா?//

நல்ல வேளை அந்த படம் நான் பார்க்கலை :-)

Sumathi. said...

ஹாய் வெட்டி,

ஆமாம், அப்பிடி இப்பிடி ஆக எல்லா படமும் பாத்துட வேண்டியது, அப்பறமா இந்த "கவுண்டரோட டெவில் ஷோ"ல உங்க critics aa?

சரி சரி, அடுத்த "டெவில்" யாரு?

Anonymous said...

bayangara hilarious!
super ponga!

//டேய்!!! கைல ஒரு விரல் அதிகமா வெச்சிக்கிட்டா அடையாளம் தெரியாதா//

chance a illa!

//அப்பறம் குஷி படத்துல எதுக்கு ரெண்டு தடவை நடிச்ச?
//
nalla kelvi!

நாமக்கல் சிபி said...

//இராம் said...

பாலாஜி,

கலக்கிட்டாருப்பா கவுண்டரு, இனிமே அந்த இ.த. நல்ல படத்திலே நடிப்பாருன்னு நம்பிக்கை வைப்போம்.

;) //

நன்றி ராயல்...
அப்படித்தான் ஒவ்வொரு படமும் நம்பறோம்.. பாக்கலாம் :-)

நாமக்கல் சிபி said...

//இராம் said...

பாலாஜி,

கில்லியை கிழிச்சதது'தான் டாப்.
//

கில்லிதான் டாப்னு எல்லாரும் சொல்றதாலதான் அதை சேத்துக்கிட்டேன் :-)

கப்பி | Kappi said...

:))

வெட்டி,
திருப்பாச்சி படத்தை கமலா தியேட்டர்ல பார்த்தப்போது காமெடின்ற பேர்ல விஜய் தோளைக் குலுக்கி மாடுலேஷன் ட்ரை பண்ணி மொக்கை டயலாக் ஏதோ சொன்னாரு..மக்கள் அதை ரசிச்சு சிரிக்கிறாங்க..நாங்க நாலு பேர் மட்டும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துகிட்டிருக்கோம்...ஒரு வேளை நம்ம மேல தான் தப்போ?? ;))

Anonymous said...

நீங்க எழுதியிருக்கிற list-ல நான் அந்த தறுதலை தபால் தலைல வருகிர படம் மட்டும்தான் நான் பாத்தேன். அதோட விஜய் படத்துக்கு goodbye....

நல்லா ரசிக்கும்படியா எழுதி இருக்கீங்க...

http://internetbazaar.blogspot.com

கதிர் said...

ஆண் நடிகர்களையே கலாய்க்கும் போக்கை கண்டிக்கிறேன்!

அடுத்த சுற்றாக இவர்களை கலாய்க்க வேண்டுமாறு வேண்டி விரும்பி கேட்டு...

நமீதா - மூன்று பாகமாக இருந்தால் நன்று
மும்தாஜ் - உங்களோட சாய்ஸ்

கோவை சரளா! - ஒண்ணு போதும்

Anonymous said...

வெட்டிப்பய்யா... நல்லா எய்திருக்கப்பா.... அடுத்த தபா நம்ம சத்யராச இஸ்துக்குனுவாபா.. ஷொக்காகீம். கவுண்டருக்கு ஒரு ஷோட்டுபா.

நாமக்கல் சிபி said...

//அரை பிளேடு said...

நாம எப்பவுமே நம்ம சேஃப்டி முக்கியம்னு நினைக்குற ஆளு. விஜய் படமெல்லாம் பாக்குறதே இல்லை. கடசியா பாத்தது கில்லிதான்.
//
கில்ல ஓரளவுக்கு நல்ல படம்...

//
டீவில இவங்க போடுற டிரெயிலர பார்க்கறப்பவே நமக்கு ஜன்னி கண்டுடுதே. இதெல்லாம் எப்பிடித்தான் மக்களே தியேட்டர் போயி பாக்குறீங்களோ.

இதுல இளைய தளபதி பட்டம் வேற. இத யாருய்யா உனக்கு குடுத்தா. நீங்களே டைட்டில் கார்டு போட்டா தளபதி ஆயிடுவீங்களா.
//
பின்ன பட்டம் எல்லாம் யாரு கொடுப்பா? நம்மலே எடுத்துக்க வேண்டியது தான் :-)

//
எதோ ஒரு படத்துல விஜய் வெல்டிங் அடிச்சே வெளிய வருவாராமே. அதுவும் அவர மாறியே மனுச பொம்மை மாதிரியே வெல்டிங்க வெட்டிக்னு.
//
அது சிவகாசி :-)

//
பாட்டாவது உருப்படியா கீதான்னு பாத்தா. பச்சை மிளகாய் பம்பரக்கண்ணு பருப்பி.. இன்னாய்யா பாட்டு இது.
//
இத விட கேவலமான ஒரு பாட்டு இருக்கு... அப்பன் பண்ண தப்புல ஆத்த பெத்த வெத்தலனு.. .அந்த பேரரசு மட்டும் என் கைல ஒரு நாள் கிடைச்சார்னா அவ்வளவுதான்

//
என்னிக்காவது விஜய்க்கு நடிப்பு வருதுன்னு தெரிஞ்சாலொழிய நாம விஜய் படம் பார்க்க தியேட்டர் போக மாட்டோம்.
//
அப்ப கடைசி வரைக்கும் நீங்க போக மாட்டீங்க ;)

//
யப்பா... போக்கிரின்னு ஒரு படம் வருதாம்பா பொங்கலுக்கு.. எல்லாரும் பத்திரமா வீட்லயே இருங்க... //
போக்கிரி தெலுகுல நல்லா இருந்துச்சு... தமிழ்லயும் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்... பார்க்கலாம் :-)

நாமக்கல் சிபி said...

//sumathi said...

ஹாய் வெட்டி,

ஆமாம், அப்பிடி இப்பிடி ஆக எல்லா படமும் பாத்துட வேண்டியது, அப்பறமா இந்த "கவுண்டரோட டெவில் ஷோ"ல உங்க critics aa?
//

என்னங்க பண்ண? ஒரு படமாவது நல்லா வந்துடாவதானு ஒரு ஆசைதான் :-(

//
சரி சரி, அடுத்த "டெவில்" யாரு? //
நம்ம தலய கூப்பிடலாம்னு ஒரு ஐடியா இருக்கு :-)

நாமக்கல் சிபி said...

//Dreamzz said...

bayangara hilarious!
super ponga!
//
மிக்க நன்றி ட்ரீம்ஸ் :-)

//
//டேய்!!! கைல ஒரு விரல் அதிகமா வெச்சிக்கிட்டா அடையாளம் தெரியாதா//

chance a illa!
//
அந்த விரல வெச்சிக்கறதுக்கு குமுதத்துல அவர் கொடுத்த பேட்டியா பார்த்தா புரிஞ்சிருக்கும். நான் எதுக்கு இவ்வளவு டென்ஷனாகறனு :-)

//

//அப்பறம் குஷி படத்துல எதுக்கு ரெண்டு தடவை நடிச்ச?
//
nalla kelvi! //
இந்த படம் பார்த்தப்ப எனக்கு தோனின கேள்வி இதுதான் :-)

குமரன் (Kumaran) said...

கடேசில இருக்குற சிவப்பு தத்துவம் சூப்பர். :-))

Anonymous said...

// வி: கமல், விக்ரம், சூர்யா மாதிரி ஏதாவது வித்யாசமான கெட்டப்ல வரணும்னு ஆசைப்பட்டேண்ணா. அதனால தான் ஆறு விரல் வெச்சிக்கிட்டேன். உங்களால என்னை அடையாளம் கண்டு பிடிச்சிருக்கவே முடியாதே!!!
//

இதுதான் செம காமெடி.....
ரொம்ப super-a இருந்தது...

வெட்டிப்பய உள்ள இவளோ திறமையா??
கீப் இட் அப்பு...

அடுத்து யாரு? ஆவலுடன் எதிர்பாக்கிறேன்..

Syam said...

//சரி.. கில்லி படத்துல எப்படிடா மதுரைல செமி ஃபைனல்ல தோத்துட்டு ஃபைனல்ல சென்னைல பஞ்சாப் டீம் கூட ஆடறீங்க//

ROTFL...செமயா கலாசிருக்கீங்க :-)

Syam said...

//போங்கணா. என் படத்துல போய் லாஜிக் எல்லாம் பாக்கறீங்க//

ரொம்ப சரியா சொன்னீங்க :-)

Syam said...

//ஏன்டா உங்க அக்கப்போர்ல எங்கள கொடுமைப்படுத்தறீங்க? உங்களுக்குனு இருக்கானுங்க பாரு ரசிகர்னு சொல்லிட்டு அவனுங்கள சொல்லனும்//

இவனுக பேர சொல்லீட்டும் ஒரு நாலு பேரு திரியரானுகளே அவனுகள ஒரு நாலு சாத்து சாத்துனா சரியா போகும்..
:-)

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

:))

வெட்டி,
திருப்பாச்சி படத்தை கமலா தியேட்டர்ல பார்த்தப்போது காமெடின்ற பேர்ல விஜய் தோளைக் குலுக்கி மாடுலேஷன் ட்ரை பண்ணி மொக்கை டயலாக் ஏதோ சொன்னாரு..மக்கள் அதை ரசிச்சு சிரிக்கிறாங்க..நாங்க நாலு பேர் மட்டும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துகிட்டிருக்கோம்...ஒரு வேளை நம்ம மேல தான் தப்போ?? ;)) //

அதுதான் கப்பி நமக்கும் புரிய மாட்டீங்குது...

அப்பறம் சிவகாசில இவரு அசின திட்டுவாரு உடனே அவுங்களுக்கு லவ் வந்திடும்...மக்களும் கைய தட்றாங்க. என்னயா நடக்குது இங்கனு கேக்க வேண்டியதா இருக்கு...

ஒரு வேளை நம்ம தான் மாறனுமோனு யோசிக்கிறேன் :-)

Syam said...

விஜய் பகுதி 1 ம் படிச்சுட்டேன்...அங்க கமெண்ட் போட போனா..என்னமோ
java.lang.nullpointer exception னு ஒரு பக்கத்துக்கு இங்கிலீசுல திட்டுது :-)

நாமக்கல் சிபி said...

//LFC fan! said...

நீங்க எழுதியிருக்கிற list-ல நான் அந்த தறுதலை தபால் தலைல வருகிர படம் மட்டும்தான் நான் பாத்தேன். அதோட விஜய் படத்துக்கு goodbye....
//
ஒரு படத்துலயே பாடம் படிச்சிட்டீங்களா? பலே பலே!!!

பல படங்கள் பார்த்தும் புத்திவரல எங்களுக்கு :-(

//
நல்லா ரசிக்கும்படியா எழுதி இருக்கீங்க...

http://internetbazaar.blogspot.com //
மிக்க நன்றிங்க...

Priya said...

ரொம்ப காமெடி VP. செமயா கலாய்க்கறிங்க. ஆமா, விஜய் நடிச்சதுல நல்ல படத்த ஒரு கைல எண்ணிடலாம். இந்த மாதிரி காமெடி தான் அதிகம்.

நாமக்கல் சிபி said...

//Syam said...

விஜய் பகுதி 1 ம் படிச்சுட்டேன்...அங்க கமெண்ட் போட போனா..என்னமோ
java.lang.nullpointer exception னு ஒரு பக்கத்துக்கு இங்கிலீசுல திட்டுது :-) //

நாட்டாமை,
என்னால போட முடியுதே!!!
இப்ப முயற்சி செஞ்சி பாருங்க...

கோபிநாத் said...

வெட்டி..கலக்கிட்டிங்க..
நல்ல ரசித்து சிரிச்சேன்.

\\க: நான் சொல்றது சச்சின்னு ரெண்டாவது தடவை அதே கதைல நடிச்சியே அதை சொல்றேன்.\\
நல்ல R&D.......

\\அடுத்த சுற்றாக இவர்களை கலாய்க்க வேண்டுமாறு வேண்டி விரும்பி கேட்டு...

நமீதா - மூன்று பாகமாக இருந்தால் நன்று
மும்தாஜ் - உங்களோட சாய்ஸ்

கோவை சரளா! - ஒண்ணு போதும்\\\

இதனை நான் முன்மொழிகிறேன்....

Anonymous said...

பாலாஜி..
விஜய் பகுதி செம்ம கலக்கல்! 'தல'யை வம்புக்கிழுத்த இடம் சூப்பர்... சத்தமா சிரிச்சேன் :) டாங்க்ஸ்!!

அப்படியே 'நல்ல'நடிகைகளையும் 'கவுண்டர் ஷோ'ல எதிர்பார்க்கிறோம்!!

-விநய்

Anonymous said...

தூள் பறத்திறிங்க !!!

கணனி திரையை பார்த்து சிரிக்க
எல்லாரும் ஒரு மாதிரி பாக்கிறான்கள். அவனுகளுக்கு சொல்லி புரியவைக்க எனக்கு சீவன் போயுடும். எல்லாரும் சிங்களம்.
BookMarks ---> Favorites இருக்கிறிங்க

Anonymous said...

நான் விஜய் படங்களை பார்த்து என்னென்னவெல்லம் துப்பனும்னு நினைச்சேனோ.. அதையெலாம் நீங்கள் கவுண்டர் ரோல்ல அருமையாய் கேட்டீங்க..

இதையெல்லாம் படிக்கும்போது, உங்களுடைய முன்னால் பதிவுகளை பட்க்கவேண்டும் என்று என் மனதில் புஉதிதாய் பிறந்திறக்கிறது ஒரு சின்ன ஆகை.. உங்களோட ஒவ்வொரு பதிவையும் படித்து முடித்துவிட்டு, இன்னொரு பின்னூட்டம் இடுகிறேன். ;-)

இலவசக்கொத்தனார் said...

//ஆண் நடிகர்களையே கலாய்க்கும் போக்கை கண்டிக்கிறேன்!//

ஆமாம்ப்பா, அவங்களை எல்லாம் போட்டா கண்டிக்காம கண்ண்டிப்போமில்ல, ஆனா படமெல்லாம் போடணும். இல்லை உம்மை ஒரு வழி பண்ணிருவோம் ஆமா!

மு.கார்த்திகேயன் said...

சூப்பர் பாலாஜி.. நிஜ டெவில் ஷோவே தோத்துச்சு போங்க

Anonymous said...

எனக்கு கோவம் வந்துச்சின்னா நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரியாது

கதிர் said...

50

கதிர் said...

என்னோட பணிவான வேண்டுகோள் என்னய்யா ஆச்சி?

பதில சொல்லு ஆம்ம்மா!!

Santhosh said...

கலக்கல் வெட்டி.ஆனாலும் உனக்கு ரொம்ப strongஆன மனசுபா இளைய தளபதியோட இம்முட்டு படத்தை பாத்து இருக்கே. ரொம்ப நல்லவன்பா நீயீ..

Anonymous said...

வெட்டி தம்பி, நம்ப விசு அன்னாத்தய விட்டுடாதீங்க... குத்துங்க எஜமான் குத்துங்க....

Anonymous said...

வெட்டி தம்பி, ஊமைவிழிகள்னு ஒரு படம்.அதில Dsp விஜயகாந்த்"இந்த கொலைய பாத்தது யாரு?"ன்பார்.யாருமே ஒத்துக்கலை.டபார்னு இந்த ஆளு வந்து "dsp சார், டாக்டரால செக்பன்னி போடப்பட்ட இந்த வெள்ளெழத்து கண்னாடி வழியா பாத்த நா சொல்றேன் சார் சாட்சி..."ன்பார். அட பாவிகளா... வெள்ளெழத்து கண்னாடி வழியா பாத்தா தூரத்துல உள்ள ஒரு எழவும் தெரியாது...பக்கத்திலுள்ள எழுத்துதான் தெரியும்...என்ன கொடுமை வெட்டி தம்பி....இந்த கொடுமையை தட்டி கேக்க எங்களுக்கு உன்னயவிட்டா யாரு இருக்கா சொல்லு வெட்டி தம்பி...

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

ஆண் நடிகர்களையே கலாய்க்கும் போக்கை கண்டிக்கிறேன்!

அடுத்த சுற்றாக இவர்களை கலாய்க்க வேண்டுமாறு வேண்டி விரும்பி கேட்டு...

நமீதா - மூன்று பாகமாக இருந்தால் நன்று
மும்தாஜ் - உங்களோட சாய்ஸ்

கோவை சரளா! - ஒண்ணு போதும்//

தம்பி,
நம்ம கவுண்ட்ஸ் நமிதாவா ஓட்ட முடியுமா? சரி இருந்தாலும் முயற்சி செய்யறேன்... அடுத்த கவுண்டர்'ஸ் டெவிலுக்கு நமிதா தான் :-)

நாமக்கல் சிபி said...

//இளங்கோ said...

வெட்டிப்பய்யா... நல்லா எய்திருக்கப்பா.... அடுத்த தபா நம்ம சத்யராச இஸ்துக்குனுவாபா.. ஷொக்காகீம். கவுண்டருக்கு ஒரு ஷோட்டுபா.//

ரொம்ப நன்றிங்க இளங்கோ!!!
சத்யராஜை சீக்கிரம் பிடிப்போம் :-)

நாமக்கல் சிபி said...

//குமரன் (Kumaran) said...

கடேசில இருக்குற சிவப்பு தத்துவம் சூப்பர். :-))///
அதுக்கு பேரு தான் பஞ்ச் டயலாக் :-)

நாமக்கல் சிபி said...

//k@rthik said...

// வி: கமல், விக்ரம், சூர்யா மாதிரி ஏதாவது வித்யாசமான கெட்டப்ல வரணும்னு ஆசைப்பட்டேண்ணா. அதனால தான் ஆறு விரல் வெச்சிக்கிட்டேன். உங்களால என்னை அடையாளம் கண்டு பிடிச்சிருக்கவே முடியாதே!!!
//

இதுதான் செம காமெடி.....
ரொம்ப super-a இருந்தது...
//

மிக்க நன்றி

//
வெட்டிப்பய உள்ள இவளோ திறமையா??
கீப் இட் அப்பு...
//
திறமையெல்லாம் ஒன்னுமில்லைங்க...
எல்லாம் சும்மா ஒரு முயற்சிதான் :-)

// அடுத்து யாரு? ஆவலுடன் எதிர்பாக்கிறேன்..//
சீக்கிரமே வரும்!!!

நாமக்கல் சிபி said...

//Syam said...

//சரி.. கில்லி படத்துல எப்படிடா மதுரைல செமி ஃபைனல்ல தோத்துட்டு ஃபைனல்ல சென்னைல பஞ்சாப் டீம் கூட ஆடறீங்க//

ROTFL...செமயா கலாசிருக்கீங்க :-)//

நாட்டாமை,
நல்லா சிரிங்க.
அதுதான் நமக்கு வேணும் :-)

நாமக்கல் சிபி said...

//Syam said...

//போங்கணா. என் படத்துல போய் லாஜிக் எல்லாம் பாக்கறீங்க//

ரொம்ப சரியா சொன்னீங்க :-)//

இவனுங்க படத்த பார்த்து இப்பாவெல்லாம் சுமாராவ படம்கூட சூப்பரா இருக்கு.

தெலுகு பசங்க எல்லாம் எங்கள ஓட்றானுங்க :-(

நாமக்கல் சிபி said...

//Syam said...

//ஏன்டா உங்க அக்கப்போர்ல எங்கள கொடுமைப்படுத்தறீங்க? உங்களுக்குனு இருக்கானுங்க பாரு ரசிகர்னு சொல்லிட்டு அவனுங்கள சொல்லனும்//

இவனுக பேர சொல்லீட்டும் ஒரு நாலு பேரு திரியரானுகளே அவனுகள ஒரு நாலு சாத்து சாத்துனா சரியா போகும்..
:-)//

நாட்டாமை தீர்ப்பை உடனே நிறைவேற்றவும் :-)

நாமக்கல் சிபி said...

//Priya said...

ரொம்ப காமெடி VP. செமயா கலாய்க்கறிங்க. ஆமா, விஜய் நடிச்சதுல நல்ல படத்த ஒரு கைல எண்ணிடலாம். இந்த மாதிரி காமெடி தான் அதிகம்.//

ரொம்ப நன்றி ப்ரியா...
இந்த மாதிரி பல கொடுமையான படத்தை நான் தியேட்டர்ல போய் பார்த்திருக்கேன்...

நாமக்கல் சிபி said...

//கோபிநாத் said...

வெட்டி..கலக்கிட்டிங்க..
நல்ல ரசித்து சிரிச்சேன்.
//

மிக்க நன்றி கோபி

//
\\க: நான் சொல்றது சச்சின்னு ரெண்டாவது தடவை அதே கதைல நடிச்சியே அதை சொல்றேன்.\\
நல்ல R&D.......
//
ஹி ஹி ஹி...

//
\\அடுத்த சுற்றாக இவர்களை கலாய்க்க வேண்டுமாறு வேண்டி விரும்பி கேட்டு...

நமீதா - மூன்று பாகமாக இருந்தால் நன்று
மும்தாஜ் - உங்களோட சாய்ஸ்

கோவை சரளா! - ஒண்ணு போதும்\\\

இதனை நான் முன்மொழிகிறேன்....//
பரிசீலனையில் உள்ளது :-)

நாமக்கல் சிபி said...

//Anonymous said...

பாலாஜி..
விஜய் பகுதி செம்ம கலக்கல்! 'தல'யை வம்புக்கிழுத்த இடம் சூப்பர்... சத்தமா சிரிச்சேன் :) டாங்க்ஸ்!!

அப்படியே 'நல்ல'நடிகைகளையும் 'கவுண்டர் ஷோ'ல எதிர்பார்க்கிறோம்!!

-விநய்//

வாங்க விநய்!!!

நீங்க நல்லா சிரிக்கறதுதான் நமக்கு வேணும் :-)

யாருங்க அந்த 'நல்ல' நடிகை? ;)

நாமக்கல் சிபி said...

//Thillakan said...

தூள் பறத்திறிங்க !!!

கணனி திரையை பார்த்து சிரிக்க
எல்லாரும் ஒரு மாதிரி பாக்கிறான்கள். அவனுகளுக்கு சொல்லி புரியவைக்க எனக்கு சீவன் போயுடும். எல்லாரும் சிங்களம்.
BookMarks ---> Favorites இருக்கிறிங்க//

மிக்க நன்றி திலகன்...

சரி புரியாதவங்களுக்கு நம்ம விஜய் படத்த போட்டு காட்டுங்க... சீக்கிரம் புரிஞ்சிக்குவாங்க ;)

நாமக்கல் சிபி said...

//.:: MyFriend ::. said...

நான் விஜய் படங்களை பார்த்து என்னென்னவெல்லம் துப்பனும்னு நினைச்சேனோ.. அதையெலாம் நீங்கள் கவுண்டர் ரோல்ல அருமையாய் கேட்டீங்க..
//

என்னங்க செய்யறது ஆசையா தியேட்டர்ல போய் பார்த்து ஏமாந்தனே :-(

//
இதையெல்லாம் படிக்கும்போது, உங்களுடைய முன்னால் பதிவுகளை பட்க்கவேண்டும் என்று என் மனதில் புஉதிதாய் பிறந்திறக்கிறது ஒரு சின்ன ஆகை.. உங்களோட ஒவ்வொரு பதிவையும் படித்து முடித்துவிட்டு, இன்னொரு பின்னூட்டம் இடுகிறேன். ;-)//
என்னங்க படிச்சீங்களா? சொல்லிக்கிற மாதிரி ஒரு பதிவு கூட இல்லையா? :-(

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...

//ஆண் நடிகர்களையே கலாய்க்கும் போக்கை கண்டிக்கிறேன்!//

ஆமாம்ப்பா, அவங்களை எல்லாம் போட்டா கண்டிக்காம கண்ண்டிப்போமில்ல, ஆனா படமெல்லாம் போடணும். இல்லை உம்மை ஒரு வழி பண்ணிருவோம் ஆமா!//
கொத்ஸ்,
நீங்க சொல்லிட்டீங்க இல்லை... தூள் கிளப்பிடுவோம் :-)

நாமக்கல் சிபி said...

//மு.கார்த்திகேயன் said...

சூப்பர் பாலாஜி.. நிஜ டெவில் ஷோவே தோத்துச்சு போங்க//

மிக்க நன்றி கார்த்திகேயன்...

நாமக்கல் சிபி said...

//இளையதளபதி விஜய் said...

எனக்கு கோவம் வந்துச்சின்னா நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரியாது//

இவ்வளவு சொல்லியும் நீங்க திருந்த மாட்டீங்களா?

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

50//

மிக்க நன்ற்றி தம்பி...

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

என்னோட பணிவான வேண்டுகோள் என்னய்யா ஆச்சி?

பதில சொல்லு ஆம்ம்மா!!//

சொல்லியாச்சு...
மேல பார்த்துக்கோ :-)

நாமக்கல் சிபி said...

//சந்தோஷ் said...

கலக்கல் வெட்டி.ஆனாலும் உனக்கு ரொம்ப strongஆன மனசுபா இளைய தளபதியோட இம்முட்டு படத்தை பாத்து இருக்கே. ரொம்ப நல்லவன்பா நீயீ..//

என்ன பண்றது கூட சுத்தன கூட்டத்துல ஒருத்தவன் விஜய் ஃபேனு... சரினு க்ளாஸ்ல ஒக்காரதுக்கு படத்துக்கு போகலாமே அவன்கூட போயி பார்த்தது!!!

முத்துகுமரன் said...

ஒரு காலத்துல தீவிர விஜய் ரசிகரா இருந்தேன். ஒரு தடவை கடுமையான காய்ச்சல் எழுந்திருக்கவே முடியலை. மாமா பசங்க இரண்டுபக்கமும் முட்டு கொடுத்து ஷாஜகான் பார்க்க வச்சானுங்க( எத்தனை ஜென்ம பகையோ :-( ). அன்னைக்கு தலை முழுகுனுதுதான்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எப்படிடா மதுரைல செமி ஃபைனல்ல தோத்துட்டு ஃபைனல்ல சென்னைல பஞ்சாப் டீம் கூட ஆடறீங்க?//

"பதிவ படிச்சா அனுபவிக்கணும்; ஆராயக் கூடாது அப்படின்னு சொல்லி இருக்காங்கண்ணா..."
இப்படி இளைய தளபதி சொன்னாருன்னா அப்ப என்ன பண்ணுவீங்க, பாலாஜி?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அது உன் ஆட்டத்துக்கு இல்லடி. சிம்ரன் ஆடனதால தமிழ் நாடே ஆடுச்சு//

வரலாற்று உண்மைகளை ஒளிவு மறைவு இல்லாம பதியும் உண்மையான historian நீங்க தான் வெட்டிப்பையலாரே! :-)))

Anonymous said...

//
யாருங்க அந்த 'நல்ல' நடிகை? ;)
//

தம்பி தான் ரெண்டு பேர் சொன்னாரே! அவங்களோட நீயே ரெண்டு மூனு பேர் சேர்த்துக்கோ :)

-விநய்

Senthil Kumar said...

யாராவது விஜய்யை இப்படியெல்லாம் கேள்வி கேக்க மாட்டாங்களான்னு நினைச்சிருக்கேன். கவுண்டர் கேட்டுட்டாரு. நம்மளை மாதிரி நிறைய பேர் இருப்பாங்க போல. அதான் இத்தனை பின்னூட்டம்.

தொடர்ந்து கலக்குங்க வெட்டி.

Anonymous said...

வெட்டி இதைப் படிச்சிட்டு விஜய் ரசிகர்கள் யாரும் உங்களை வெட்ட வரவில்லையா?இருந்தாலும் நல்லதான் இருக்கின்றது.நல்ல கேள்விகள்!

ராம்குமார் அமுதன் said...

தல, ஆனாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர்.... ஏன் நல்ல படங்கள பத்தில்லாம் பேசாம இப்படி பண்றீங்க.... நீங்க ஏதோ காமெடினு நெனச்சு எழுதினீங்களா என்னன்னு தெரியல.... ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்ல சொல்லிட்டேன்.... இதே மாதிரி க்கும் USA ஒரு பதிவு வந்தாகனும்.... சொல்லிட்டேன்.....

நாமக்கல் சிபி said...

//Abi Appa said...

வெட்டி தம்பி, நம்ப விசு அன்னாத்தய விட்டுடாதீங்க... குத்துங்க எஜமான் குத்துங்க.... //

விசுவெல்லாம் ரொம்ப வயசானவராயிட்டாரே!!! அதுவும் இல்லாம இப்ப அரசியல்ல வேற இறங்கி காமெடி பண்றார்... என்ன செய்ய?

அடுத்து நிறைய பேர் இருக்காங்க... பார்த்துக்கலாம் :-)

நாமக்கல் சிபி said...

//Abi Appa said...

வெட்டி தம்பி, ஊமைவிழிகள்னு ஒரு படம்.அதில Dsp விஜயகாந்த்"இந்த கொலைய பாத்தது யாரு?"ன்பார்.யாருமே ஒத்துக்கலை.டபார்னு இந்த ஆளு வந்து "dsp சார், டாக்டரால செக்பன்னி போடப்பட்ட இந்த வெள்ளெழத்து கண்னாடி வழியா பாத்த நா சொல்றேன் சார் சாட்சி..."ன்பார். அட பாவிகளா... வெள்ளெழத்து கண்னாடி வழியா பாத்தா தூரத்துல உள்ள ஒரு எழவும் தெரியாது...பக்கத்திலுள்ள எழுத்துதான் தெரியும்...என்ன கொடுமை வெட்டி தம்பி....இந்த கொடுமையை தட்டி கேக்க எங்களுக்கு உன்னயவிட்டா யாரு இருக்கா சொல்லு வெட்டி தம்பி... //

அண்ணே,
கவலையே வேண்டாம்...
இந்த மாதிரி பல ஐட்டங்கள் இருக்கு...
ஒவ்வொருத்தரா பிரிச்சி மேயுவோம் ;)

நாமக்கல் சிபி said...

//முத்துகுமரன் said...

ஒரு காலத்துல தீவிர விஜய் ரசிகரா இருந்தேன். ஒரு தடவை கடுமையான காய்ச்சல் எழுந்திருக்கவே முடியலை. மாமா பசங்க இரண்டுபக்கமும் முட்டு கொடுத்து ஷாஜகான் பார்க்க வச்சானுங்க( எத்தனை ஜென்ம பகையோ :-( ). அன்னைக்கு தலை முழுகுனுதுதான். //

என்னங்க முத்துக்குமரன், ஷாஜகானுக்கே மனசு மாறிட்டா எப்படி??? இன்னும் பல படங்கள்ல அவர் பண்ண அட்டூயங்கள் சும்மாவா?

ஆனா உடம்பு சரியில்லாத அப்ப நீங்க அந்த கொடுமைய பார்த்தத நினைச்சா மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு :-(

நாமக்கல் சிபி said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//எப்படிடா மதுரைல செமி ஃபைனல்ல தோத்துட்டு ஃபைனல்ல சென்னைல பஞ்சாப் டீம் கூட ஆடறீங்க?//

"பதிவ படிச்சா அனுபவிக்கணும்; ஆராயக் கூடாது அப்படின்னு சொல்லி இருக்காங்கண்ணா..."
இப்படி இளைய தளபதி சொன்னாருன்னா அப்ப என்ன பண்ணுவீங்க, பாலாஜி? //

//க: டேய் டக்கால்டி மண்டையா. தமிழ் நாடு டீம்ல தான் ஓட்டேரி நரி, டுமீல் குப்பம் வவ்வாலு, ஆதி வாசி எல்லாம் இருக்கறாங்களாடா? சும்மா அடிச்சு விடாதடா.

வி: போங்கணா. என் படத்துல போய் லாஜிக் எல்லாம் பாக்கறீங்க.//

அதைத்தான் அவர் சொல்லிட்டாரே ;)

ஆனால் கில்லி படத்த ஓவரா பேசற விஜய் ரசிகர்களுக்குத்தான் கவுண்டர் இந்த ஆப்ப வெச்சிருக்காரு ;)

நாமக்கல் சிபி said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அது உன் ஆட்டத்துக்கு இல்லடி. சிம்ரன் ஆடனதால தமிழ் நாடே ஆடுச்சு//

வரலாற்று உண்மைகளை ஒளிவு மறைவு இல்லாம பதியும் உண்மையான historian நீங்க தான் வெட்டிப்பையலாரே! :-))) //

ஹி ஹி ஹி...
என்ன பண்றது... நமக்கு பொய் பேசவே வர மாட்டீங்குது ;)

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

//
யாருங்க அந்த 'நல்ல' நடிகை? ;)
//

தம்பி தான் ரெண்டு பேர் சொன்னாரே! அவங்களோட நீயே ரெண்டு மூனு பேர் சேர்த்துக்கோ :)

-விநய் //

ஹிம்... முயற்சி பண்ணறேன் :-)

நாமக்கல் சிபி said...

//Simply Senthil said...

யாராவது விஜய்யை இப்படியெல்லாம் கேள்வி கேக்க மாட்டாங்களான்னு நினைச்சிருக்கேன். கவுண்டர் கேட்டுட்டாரு. நம்மளை மாதிரி நிறைய பேர் இருப்பாங்க போல. அதான் இத்தனை பின்னூட்டம்.

தொடர்ந்து கலக்குங்க வெட்டி.
//

கவலைப்படாதீங்க செந்தில் கேள்வி கேக்க கவுண்டர் இருக்கிறார் ;)

இன்னும் நிறைய பேர் கவுண்டர் டெவில் ஷோக்கு வருவாங்க :-)

நாமக்கல் சிபி said...

//துர்கா said...

வெட்டி இதைப் படிச்சிட்டு விஜய் ரசிகர்கள் யாரும் உங்களை வெட்ட வரவில்லையா?இருந்தாலும் நல்லதான் இருக்கின்றது.நல்ல கேள்விகள்! //

உண்மைய சொன்னா யாருங்க வெட்ட வர போறாங்க... நல்ல படத்துல விஜய் நடிக்கனும்னு எனக்கும் ஆசைதான்... இங்க சொன்ன படத்துல 3/4 நான் முதல் நாளே பார்த்து ஏமாந்தது... விஜய் ரசிகர்களுக்கும் அவர் நல்ல படத்துல நடிக்கனும்னு ஆசைதான்...

அதனால யாரும் டென்ஷனாக மாட்டாங்க :-)

நாமக்கல் சிபி said...

//அமுதன் said...

தல, ஆனாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர்.... ஏன் நல்ல படங்கள பத்தில்லாம் பேசாம இப்படி பண்றீங்க.... நீங்க ஏதோ காமெடினு நெனச்சு எழுதினீங்களா என்னன்னு தெரியல.... ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்ல சொல்லிட்டேன்.... இதே மாதிரி க்கும் USA ஒரு பதிவு வந்தாகனும்.... சொல்லிட்டேன்..... //

அமுதா நோ டென்ஷன்...
டெவில் ஷோனா இப்படித்தான் எடக்கு முடக்கா கேள்வி கேப்பாங்க :-)

அது என்ன USA பதிவு???

Arunkumar said...

//
கில்லி படத்துல எப்படிடா மதுரைல செமி ஃபைனல்ல தோத்துட்டு ஃபைனல்ல சென்னைல பஞ்சாப் டீம் கூட ஆடறீங்க
//

டாப்புங்க.. நான் கமெண்ட் பண்ண ஞாபகம்... இங்க தெரியல.. என்னாச்சு?

சூப்பர் பதிவு வெ.ப

அப்பறம் ஒரு போஸ்ட் போட்டிருக்கேன்...

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...

//
கில்லி படத்துல எப்படிடா மதுரைல செமி ஃபைனல்ல தோத்துட்டு ஃபைனல்ல சென்னைல பஞ்சாப் டீம் கூட ஆடறீங்க
//

டாப்புங்க.. நான் கமெண்ட் பண்ண ஞாபகம்... இங்க தெரியல.. என்னாச்சு?

சூப்பர் பதிவு வெ.ப

அப்பறம் ஒரு போஸ்ட் போட்டிருக்கேன்... //

மிக்க நன்றி அருண்...

நீங்க போட்ட கமெண்ட் வரலையே... வர கமெண்டை வேண்டாம்னு சொல்லுவோமா?

இது வந்துட்டே இருக்கேன் :-)

ராம்குமார் அமுதன் said...

தல... USA na தளபதிக்கு போட்டி நடிகரோட பட்டத்தையும் பேரையும் சேத்து பாருங்க.....

இலவசக்கொத்தனார் said...

ஆஹா! 100 அடிக்காம விடறது இல்ல போல இருக்கே. (92)

இலவசக்கொத்தனார் said...

அடுத்த பதிவு இது 100 அடிச்சாதான்னு இருந்தா அதுக்கு நான் என்னால முடிஞ்சதைப் பண்ணறேன். (93)

இலவசக்கொத்தனார் said...

அதுக்காக அப்படி எல்லாம் இல்லைன்னு நீங்க பதில் சொல்ல வேண்டாம் (94)

இலவசக்கொத்தனார் said...

நீங்க 100 அடிச்சால் நானும்தானே சந்தோஷப்படுவேன்(95)

இலவசக்கொத்தனார் said...

இது வரை எத்தனை 100 அடிச்சி இருக்கப்பா? (96)

இலவசக்கொத்தனார் said...

எந்த பதிவுக்கு இருப்பதிலையே அதிகம் பின்னூட்டம்? (97)

இலவசக்கொத்தனார் said...

டெவில் ஷோவில் விரைவில் அப்படின்னு நம்ம டார்கெட் ஆளுங்க எல்லாரையும் ஒரு லிஸ்ட் போடேன். (98)

இலவசக்கொத்தனார் said...

அது என்ன வெறும் சினிமா ஆளாத்தான் போடுவீங்களா? மத்தவங்களையும் கொஞ்சம் பாருங்கப்பா (99)

இலவசக்கொத்தனார் said...

அப்பாடா அடுத்த பதிவு வர ரெடி பண்ணியாச்சு.(100!)

இலவசக்கொத்தனார் said...

சந்தேகத்துக்கு இன்னும் ஒண்ணு.(101)

இலவசக்கொத்தனார் said...

வர்ட்டா!

நாமக்கல் சிபி said...

//அமுதன் said...

தல... USA na தளபதிக்கு போட்டி நடிகரோட பட்டத்தையும் பேரையும் சேத்து பாருங்க..... //

அடப்பாவி... உங்க தளக்கு எதிரியா இருக்கறதால இப்படி அமெரிக்ககாரங்க கிட்ட மாட்டி விடறியா???

சரி... எப்படியும் தல இல்லாத கச்சேரியா??? ;)

நாமக்கல் சிபி said...

கொத்ஸ்,
லேட்டாக பதில் சொல்வதற்கு மன்னிக்கவும்... இங்க வேலை கொடுத்து கொன்னுட்டு இருக்கானுங்க...

ஏன் இந்த கொல வெறினு தெரியல :-(

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...

ஆஹா! 100 அடிக்காம விடறது இல்ல போல இருக்கே. (92) //

அப்படியெல்லாம் இல்லை கொத்ஸ்... இங்க கொஞ்சம் டார்ச்சர் அதிகமாயிடுச்சு :-(

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...

அடுத்த பதிவு இது 100 அடிச்சாதான்னு இருந்தா அதுக்கு நான் என்னால முடிஞ்சதைப் பண்ணறேன். (93) //

இன்னைக்கு போட்டுடறேன் :-)

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...

அதுக்காக அப்படி எல்லாம் இல்லைன்னு நீங்க பதில் சொல்ல வேண்டாம் (94) //

பதில மாத்தி சொல்லிட்டேன் ;)
'ஏ'மாத்தக்கூடாதுனு :-)

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...

நீங்க 100 அடிச்சால் நானும்தானே சந்தோஷப்படுவேன்(95) //

அது தெரிஞ்சது தானே :-)

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...

இது வரை எத்தனை 100 அடிச்சி இருக்கப்பா? (96) //

இதை சேர்த்து 6...
அவ்வளவு தான் ..
80க்கு மேல 20 இருக்கும்னு நினைக்கிறேன்

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...

எந்த பதிவுக்கு இருப்பதிலையே அதிகம் பின்னூட்டம்? (97) //

கொல்ட்டி
- 151

என்னுடைய முதல் கதை :-)

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...

டெவில் ஷோவில் விரைவில் அப்படின்னு நம்ம டார்கெட் ஆளுங்க எல்லாரையும் ஒரு லிஸ்ட் போடேன். (98) //

டெவில் ஷோல அடுத்து தலய தான் கூப்பிடலாம்னு இருக்கேன். பொதுவா டெவில் ஷோக்கு பிளான் எதுவும் பண்றதில்லை. இது உப்புமா மாதிரி. எதுவும் சரக்கு இல்லைனா இறல்லி விட்டுடுவேன் :-)

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...

அது என்ன வெறும் சினிமா ஆளாத்தான் போடுவீங்களா? மத்தவங்களையும் கொஞ்சம் பாருங்கப்பா (99) //

நமக்கு வேற எதுவும் தெரியாதே ;)

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...

அப்பாடா அடுத்த பதிவு வர ரெடி பண்ணியாச்சு.(100!) //

:-))

நன்றி! நன்றி!! நன்றி!!!

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...

சந்தேகத்துக்கு இன்னும் ஒண்ணு.(101) //

சந்தேகத்துக்கு ஒண்ணு போதுமா?

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...

வர்ட்டா! //

அடிக்கடி வாங்க :-)

கதிர் said...

50 போட்ட தம்பிக்கும், 100 போட்ட ப்ரீகொத்தனாருக்கும் வெட்டியின் சார்பாக ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்!!!

கெளம்புங்கப்பா!

G.Ragavan said...

எனக்குத் தெரிஞ்சி நான் தியேட்டர்ல போய் பாத்த ஒரே விஜய் படம் ...படம் பேரு மறந்து போச்சே.....ஒரு நாள் ஒரு கனவுன்னு பாட்டு கூட இருக்கும். சிவகாசின்னு ஒரு படம்...தாங்க முடியாம நான் ஓடி வந்த படம். நான் இப்பல்லாம் ரிஸ்க்கே எடுக்கிறதில்லை. விஜயப் பாத்து கேக்கனும்னு நெனச்ச கேள்விகள் அத்தனையும் கவுண்டபெல் கேட்டுட்டாரு. தேங்க்ஸ் கவுண்ட்ஸ்.

G.Ragavan said...

அப்புறம்...இந்தப் பாட்டெழுதுறவங்க கிட்டயும் கவுண்டரைப் பேசச் சொல்லுங்களேன்.

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

50 போட்ட தம்பிக்கும், 100 போட்ட ப்ரீகொத்தனாருக்கும் வெட்டியின் சார்பாக ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்!!!

கெளம்புங்கப்பா! //

தம்பி,
மிக்க நன்றி!!!
உனக்காகத்தான் அடுத்த பதிவுல 49ல ரொம்ப நேரம் காத்திருந்தேன்...

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...

எனக்குத் தெரிஞ்சி நான் தியேட்டர்ல போய் பாத்த ஒரே விஜய் படம் ...படம் பேரு மறந்து போச்சே.....ஒரு நாள் ஒரு கனவுன்னு பாட்டு கூட இருக்கும். சிவகாசின்னு ஒரு படம்...தாங்க முடியாம நான் ஓடி வந்த படம். நான் இப்பல்லாம் ரிஸ்க்கே எடுக்கிறதில்லை. விஜயப் பாத்து கேக்கனும்னு நெனச்ச கேள்விகள் அத்தனையும் கவுண்டபெல் கேட்டுட்டாரு. தேங்க்ஸ் கவுண்ட்ஸ். //

எப்படித்தான் சூஸ் பண்ணி போரீங்கனே தெரியலையே... சிவகாசி ரெண்டாவது பாதி கொஞ்சம் நல்லா இருக்கும் :-)

இன்னும் பல கேள்விகள் மறந்து போச்சி... சீக்கிரமே வரும் :-)

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...

அப்புறம்...இந்தப் பாட்டெழுதுறவங்க கிட்டயும் கவுண்டரைப் பேசச் சொல்லுங்களேன். //

கூப்பிட்டுட்டா போச்சு...
ஆனா எனக்கு யார் எந்த பாட்டு எழுதனாங்கனு தெரியாதே!!!

நான் தான் கவிதைல வீக்னு தெரியுமில்லை :-(

Anonymous said...

வெட்டி, கலக்கல் பதிவு இரண்டு பாகமும். என்னோட பொட்டியில ஏதோ பிரச்சினைங்க, அதான் பின்னூட்டம் போட முடியலை.

கம்மிங் டு பாயிண்ட்.
அதென்ன கவுண்டரை வெச்சு விஜய கமுத்தி இருக்கீங்க. ஆனா செம கமுத்துங்கோ. விஜய் ரசிகர்களுக்குதான் லைட்டா கடுப்பு ஆவும். அது சரிங்க வெட்டி, விஜய் படத்து கதை பத்தி பேசினா எப்படிங்க? வரலாற்று புகழ், கொத்து புரோட்டா மாதிரியான சாப்பாட்ட பத்தின பாட்டுதான் விஜய்க்கு ஒரு ஹைலட்டே அதை விட்டுபுட்டீங்களே. அம்மாவும், மகனும் பாடின அந்தப்பாடலை பத்தி கவுண்டர் என்ன சொல்லப்போறார்? நடனம் அப்படீங்கிற பேர்ல அவர் போடுற சண்டைய பத்தியும் கவுண்டர் கொஞம் எடுத்து சொல்லலாமே. எதிர்பார்க்கிறோம் 3 பாகத்துல.

...இளா...

Anonymous said...

//என்னங்க படிச்சீங்களா? சொல்லிக்கிற மாதிரி ஒரு பதிவு கூட இல்லையா? :-( //

வெட்டி.. இன்னும் படிக்கலைங்க.. ஆபிஸ்ல தலைக்கு மேல் வேலை. ஒன்னு முடிசு கொடுத்தா.. ரெண்டு தலைக்கு வண்து இறங்குது. இன்னைக்குதான் படிக்கலாம்ன்னு வந்தா.. உங்களுடைய பதில் கமேண்ட்ஸ் பார்த்தேன்.

நான் இன்னும் படிக்கலைங்கோ!!! (ECHO) ன்னு சொல்ல வந்தேன்கோ!இனி படிக்கிறேன். -)

நாமக்கல் சிபி said...

Anonymous said...

வெட்டி, கலக்கல் பதிவு இரண்டு பாகமும். என்னோட பொட்டியில ஏதோ பிரச்சினைங்க, அதான் பின்னூட்டம் போட முடியலை.

கம்மிங் டு பாயிண்ட்.
அதென்ன கவுண்டரை வெச்சு விஜய கமுத்தி இருக்கீங்க. ஆனா செம கமுத்துங்கோ. விஜய் ரசிகர்களுக்குதான் லைட்டா கடுப்பு ஆவும்.
//
அதுக்கு என்ன பண்ண முடியும்...
உண்மைய தானே எழுதியிருக்கேன் ;)

//
அது சரிங்க வெட்டி, விஜய் படத்து கதை பத்தி பேசினா எப்படிங்க? வரலாற்று புகழ், கொத்து புரோட்டா மாதிரியான சாப்பாட்ட பத்தின பாட்டுதான் விஜய்க்கு ஒரு ஹைலட்டே அதை விட்டுபுட்டீங்களே. அம்மாவும், மகனும் பாடின அந்தப்பாடலை பத்தி கவுண்டர் என்ன சொல்லப்போறார்?
//
அத எல்லாம் அவுங்க அப்பா பண்ண வேலை. என்ன பண்ண?

//
நடனம் அப்படீங்கிற பேர்ல அவர் போடுற சண்டைய பத்தியும் கவுண்டர் கொஞம் எடுத்து சொல்லலாமே. எதிர்பார்க்கிறோம் 3 பாகத்துல.

...இளா...
//
அதுவும் சீக்கிரம் வரும் ;)

நாமக்கல் சிபி said...

//.:: MyFriend ::. said...

//என்னங்க படிச்சீங்களா? சொல்லிக்கிற மாதிரி ஒரு பதிவு கூட இல்லையா? :-( //

வெட்டி.. இன்னும் படிக்கலைங்க.. ஆபிஸ்ல தலைக்கு மேல் வேலை. ஒன்னு முடிசு கொடுத்தா.. ரெண்டு தலைக்கு வண்து இறங்குது. இன்னைக்குதான் படிக்கலாம்ன்னு வந்தா.. உங்களுடைய பதில் கமேண்ட்ஸ் பார்த்தேன்.

நான் இன்னும் படிக்கலைங்கோ!!! (ECHO) ன்னு சொல்ல வந்தேன்கோ!இனி படிக்கிறேன். -)//

எல்லாத்தையும் பொறுமையா படிச்சி சொன்னதுக்கு மிக்க நன்றி!!!