தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, December 22, 2006

சூரியனுக்கு டார்ச் லைட்டு

எனக்கு பிடித்த வலைப்பதிவர்களையும் அவர்களது ஒரு சில பதிவுகளையும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்...

கார்த்திக் பிரபு -
கவிதை எல்லாம் அருமையா எழுதுவாரு. வெகுளித்தனமா பெசுவாரு. (கல்யாணமாயிடுச்சில்ல அதுதான் கொஞ்சம் மரியாதை). இப்ப அவருடைய கல்யாண வைபவத்தை நம் கண் முன் கொண்டு வருகிறார் இந்த தொடர் மூலம்
நான் கணவனான போது

இவருடைய இந்த கவிதைகளை படித்த பிறகு பலர் அவர்களுடைய தாத்தா, பாட்டிகளை திட்டியதாக எனக்கு தகவல் வந்தது (அத்தை இல்லாத காரணத்திற்காக)
அத்தை பெண்கள் என்னும் ராகஷசிகள்

என்னுடைய லொள்ளு சீரிஸை போலவே இவருடைய இந்த லொள்ளும் எனக்கு பிடித்திருந்தது.
லொள்ளு

ராகவன்
இவருடைய இந்த பயணக்கட்டுரையில் பல சமூக கருத்துக்களையும் அள்ளி தெளித்திருப்பார் - கோவை குற்றாலமும் ஜான் ஆப்ரகாமும்

என்னுடைய பல நாள் வருத்தத்திற்கு பதில் சொன்ன பதிவு - என் கொங்கை நின் அன்பர்

கைப்புள்ள
இவருடைய சித்தூர்கட் செலவு சீரிஸ் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று
சித்தூர்கட் செலவு

இவருடைய ஆறு விளையாட்டு பதிவும் அருமையான ஒன்று - ஆறு

மேலும் இவருடைய பஸ் பயணங்களில், தடிப்பசங்கள் சீரிஸும் அருமையாக இருக்கும். ஒரு சின்ன ஆலோசனை, இந்த சீரிஸிற்கெல்லாம் ஒன்றிலிருந்து மற்றொன்று போக ஹைப்பர் லிங் இருந்தால் இன்னும் பலனளிக்கும். மேலும் முகப்பில் இதையெல்லாம் தனியாக எடுத்து போட்டால் இன்னும் நலம்.

நாகை சிவா
இவருடைய பின் தங்கிய மாவட்டம் இவரின் மாவட்டம் பற்றிய இவரின் தெளிந்த பார்வையை காட்டும் - பின் தங்கிய மாவட்டம்

இவரின் "எப்படி கிடைத்தது" இவரின் தேச பக்தியை வெளிப்படுத்தும் ஒரு சிறந்தபதிவு - "எப்படி கிடைத்தது?"

ராம்
இவருடைய கைப்புள்ள காவியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று - "கைப்புள்ள காவியம்"

இவர் போட்டோவை ப்ரோபைலிலிருந்து தூக்கிய இந்த கதை சூப்பர் (கண்டிப்பா படிங்க) - "நான் ஏன் மாத்தினேன்"

CVR- தமிழ்மணத்திலிருப்பவர்களுக்கு இவரை தெரியாது. என்னுடைய கதைகள் பிடித்தவர்களுக்கு கண்டிப்பாக இவரின் கதைகள் நிச்சயம் பிடிக்கும்.

சவுண்ட் பார்ட்டி
இவருடைய கிரிக்கெட் அனுபவம் பற்றிய இந்த பதிவை படித்தால் சிரிக்காமலிருக்க முடியாது - நானாத்தான் நாறிட்டனா?

பொண்ணுங்க இந்த மாதிரி கூட ஓட்டுவாங்களானு இதை படிச்சதுக்கப்பறம்தான் தெரிஞ்சது - மூக்கறுந்த கண்ணகிகளும் மூக்கில்லாத நானும்

Syam
இவருடைய மேட்ரிமோனியல் விளம்பரங்கள் என்னுடைய ஆர்க்குட் அலும்பல்களை நினைவு படுத்தும் - மேட்ரிமோனியல் அட்வர்டைஸ்மெண்ட்

முதல் பதிவிலே கலக்க முடியுமா என்று நான் அசந்தேன். அதுவும் அமெரிக்கா வந்த புதிதில் நானும் இதையே அனுபவித்தேன் - ரிப்பீட்டு

இவருடைய காலேஜ் அனுபவமும் என்னை ரீல் சுத்த வைத்தது - தமிழ் மணமும் நானும்

தேவ்
இவருடைய கதைகளை போலவே எழுத வேண்டுமென்று நான் மிகவும் ஆசைப்படுகிறேன். ஆனால் முடியவில்லை :-(

நீங்களும் படித்து பாருங்கள்

கதிரேசன் கதை

இதை படித்து இவருக்கும் எனக்கும் பெரிய விவாதமே நடந்தது (ஆன்லைனில்) - ஆஷிரா

சந்தோஷ்
எந்த ஒரு நியூஸையும் அருமையான தலைப்பில் அவருக்கே உரிய பாணியில் கொடுப்பார் - திருந்தவே மாட்டீங்களாடா நீங்க

இவருடைய முதல் வீடியோ பதிவு - தேசிய கீதம்

தம்பி
இப்படி ஒரு கேள்வி கேட்டுத்தான் தம்பி நமக்கு பழக்கமானார் ;) -
தண்டவாலத்துல ஒண்ணுக்கு போனா தப்பா?

ரீல் சுத்த வைத்த பதிவு, என்னுடைய நகைச்சுவை பதிவுகள் பிடித்தவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் - வாலிப வயசு
(ஒரு பதிவிலிருந்து மற்றொன்றிற்கு லிங் கொடுத்தால் நன்றாக இருக்கும்

தம்பியின் மற்றொரு பரிமானம். வெளிநாட்டிலிருப்பவர்கள் இதை படித்தால் மனம் கனக்கும் - என் நண்பனுடன் ஒரு நாள்

திவ்யா
நம்மல மாதிரி பசங்களுக்கு பயனுள்ள பதிவு (ஓரளவுக்கு உண்மையாக இருப்பதாகவே நினைக்கிறேன்) - பெண்களை கவர்வது எப்படி?

ஓசியிலே யூத் ஃபுல்லான படம் பார்க்க - கல்லூரி கலாட்டா
(என்னுடைய நெல்லிக்காய் படித்தவர்களுக்கு இந்த கதை மிகவும் பிடிக்கும்)

ஜி
இந்த வாரத்தில் நான் மிகவும் ரசித்த நகைச்சுவை பதிவு. என்னுடைய கவுண்டரின் காமெடியை விட நன்றாக வந்திருந்தது - லொள்ளு சபா பல்லவன்

வசனமே இல்லாத அருமையான கதை - குறும்பன்

கப்பி (நான் பொறாமைப்படும் ஒரே பதிவர். வெரைட்டியிலும் அசத்துபவர்)

என்னுடைய கொல்ட்டி கதையின் கருப்பொருள் இந்த கதையிலிருந்தே காப்பி அடித்தேன் - இன்றும்

இப்படியெல்லாம் எழுத முடியுமானு நான் ஆச்சரியப்பட்ட பதிவு - பின்நவினத்துவ கனவு

இது கற்பனை என்று நான் சத்தியமாக நம்பவில்லை - அந்த இரவு

38 comments:

இலவசக்கொத்தனார் said...

அனேகம் பேர் நானும் தொடர்ந்து படிக்கிறவங்கதான். நல்ல சாய்ஸ்தான் போங்க.

கதிர் said...

டாங்கீஸ் வெட்டி!

நமக்கொரு தட்டி வெச்சதுக்கு!

கைப்புள்ள said...

ரொம்ப டேங்க்ஸ்பா. சந்தோஷமா இருக்கு. நீங்க சொன்ன ஆலோசனைகளையும் வருங்காலத்துல பின்பற்றுகிறேன். நீங்க குறிப்பிட்டுள்ள மற்ற பதிவர்களோட பதிவுகளும் நல்ல தேர்வு.

Boston Bala said...

படிக்க விடுபட்ட சிலதை நினைவூட்டும் விதமாக அமைந்திருக்கிறது. ரசனைக்கு நன்றி.

Anonymous said...

வெட்டி நம்ம பக்கத்துக்கு ஒரு தட்டி வெச்சதுக்கு..

//எந்த ஒரு நியூஸையும் அருமையான தலைப்பில் அவருக்கே உரிய பாணியில் கொடுப்பார//

என்னைய வெச்சி காமெடிகீமெடி ஏதும் பண்ணலையே :))..

சேதுக்கரசி said...

சூப்பர் லிங்க்ஸ்க்கு நன்றி வெட்டி (இப்படி கூப்பிடலாம் தானே? :) நம்ம தமிழ்ப்பிரியனோட நண்பர்னு ஒரு உரிமைல தான்.. ஹிஹி)

சேதுக்கரசி said...

//இவர் போட்டோவை ப்ரோபைலிலிருந்து தூக்கிய இந்த கதை சூப்பர் (கண்டிப்பா படிங்க) - "நான் ஏன் மாத்தினேன்"//

இப்ப புரியுது வெட்டி, உங்க profile-ல நீங்க ஏன் Popeye போட்டோ போட்டிருக்கீங்கன்னு :-D

G.Ragavan said...

நன்றி வெட்டி. என்னுடைய பதிவுகளைப் படித்து ரசித்தமைக்கு. வாழ்க வளமுடன்.

என் கொங்கை நின் அன்பர் கதை எனக்கும் மிகவும் பிடித்த கதை. காளமேகத்தின் கதையைச் சற்று வித்தியாசமாகச் சொன்னது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நல்ல ரசனை உள்ள தொகுப்பு பாலாஜி!

//என்னுடைய கொல்ட்டி கதையின் கருப்பொருள் இந்த கதையிலிருந்தே காப்பி அடித்தேன்//

என்ன? "கப்பி" கிட்டயே "காப்பி"யா? :-)
ரொம்பத் தான் துணிவு ஐயா உமக்கு!!

Anonymous said...

ada vetti enna ithu.. namma peraiyum pottirukeenga...

romba thankies...

இராம்/Raam said...

//இவர் போட்டோவை ப்ரோபைலிலிருந்து தூக்கிய இந்த கதை சூப்பர் (கண்டிப்பா படிங்க) - "நான் ஏன் மாத்தினேன்"//

இப்ப புரியுது வெட்டி, உங்க profile-ல நீங்க ஏன் Popeye போட்டோ போட்டிருக்கீங்கன்னு :-D //

:-))))))))))))))))))))))))))))))))

குமரன் (Kumaran) said...

சூப்பர் சுட்டிகள் வெட்டி. சுட்டி தந்து அசத்தும் வெட்டி வாழ்க வாழ்க. :-)

வெட்டிப்பயலுடன் சேர்ந்த இந்த எல்லா பயலுவளும் வெட்டிப்பயலுவ தானா? (உங்களை மாதிரியே பல்கலை வித்தகர்கள்ன்னு சொல்லவர்றேன்).

பலவற்றை எற்கனவே படித்திருந்தாலும் பொறுமையா இன்னொரு தடவை படிச்சுப் பாக்குறேன். என்னோட பின்னூட்டங்களும் சிலதுல இருக்கு. அப்ப எப்படி பின்னூட்டம் போட்டிருக்கேன்னு பாக்குறதும் நல்லா இருக்கு. :-)

Syam said...

ennaiyum mathichu thatti vechathuku romba thanksnga vetti...:-)
(sorry for thanglish am on travel)

Syam said...

ragavan,CSR,savundu party,santhosh,kappi ivanga blog ku poi visit adichitu varanum...meethi ellar blog kum padichu iruken...neenga sonna maathiri onnu onnum oru maathiri interesting :-)

Syam said...

Wish you a Happy New Year!!!

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...

அனேகம் பேர் நானும் தொடர்ந்து படிக்கிறவங்கதான். நல்ல சாய்ஸ்தான் போங்க.//
கொத்ஸ்,
இதுல ஒண்ணு ரெண்டு பேர் தவிர மீதி எல்லாம் நீங்களும் படிக்கறவங்கதான் :-)

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

டாங்கீஸ் வெட்டி!

நமக்கொரு தட்டி வெச்சதுக்கு!//

என்னப்ப நமக்குள்ள டாங்கீஸ், மங்கீஸெல்லாம் ;)

நாம என்ன அப்படியா பழகறோம் ;)

நாமக்கல் சிபி said...

//கைப்புள்ள said...

ரொம்ப டேங்க்ஸ்பா. சந்தோஷமா இருக்கு. //

தல,
நமக்குள்ள என்ன டேங்ஸெல்லாம் ;)

//
நீங்க சொன்ன ஆலோசனைகளையும் வருங்காலத்துல பின்பற்றுகிறேன். நீங்க குறிப்பிட்டுள்ள மற்ற பதிவர்களோட பதிவுகளும் நல்ல தேர்வு.//
கண்டிப்பா... உங்க முகப்புலயே தடிப்பசங்க சீரிஸ் லிங் மற்றும் உங்க பயணக்கட்டுரை லிங் கொடுத்து பாருங்க.....

நாமக்கல் சிபி said...

//Boston Bala said...

படிக்க விடுபட்ட சிலதை நினைவூட்டும் விதமாக அமைந்திருக்கிறது. ரசனைக்கு நன்றி.//

மிக்க நன்றி பாபா...
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் :-)

நாமக்கல் சிபி said...

//Santhosh Kumar said...

வெட்டி நம்ம பக்கத்துக்கு ஒரு தட்டி வெச்சதுக்கு..

//எந்த ஒரு நியூஸையும் அருமையான தலைப்பில் அவருக்கே உரிய பாணியில் கொடுப்பார//

என்னைய வெச்சி காமெடிகீமெடி ஏதும் பண்ணலையே :))..//

அதெல்லாம் இல்லைங்க சந்தோஷ்...
மனசுல தோனுனத சொன்னேன்... அவ்ளோதான் :-)

நாமக்கல் சிபி said...

//சேதுக்கரசி said...

சூப்பர் லிங்க்ஸ்க்கு நன்றி வெட்டி (இப்படி கூப்பிடலாம் தானே? :) நம்ம தமிழ்ப்பிரியனோட நண்பர்னு ஒரு உரிமைல தான்.. ஹிஹி)//

ஓ!!! சங்கர் தோஸ்தா நீங்க?

கூப்பிட தாங்க அந்த பேர் வெச்சிருக்கோம் ...
கண்டிப்பா கூப்பிடலாம் ;)

எல்லாருமே அருமையா எழுதக்கூடியவங்க :-)

நாமக்கல் சிபி said...

//சேதுக்கரசி said...

//இவர் போட்டோவை ப்ரோபைலிலிருந்து தூக்கிய இந்த கதை சூப்பர் (கண்டிப்பா படிங்க) - "நான் ஏன் மாத்தினேன்"//

இப்ப புரியுது வெட்டி, உங்க profile-ல நீங்க ஏன் Popeye போட்டோ போட்டிருக்கீங்கன்னு :-D//

நிஜமா இந்த மாதிரி பிரச்சனை வந்திடக்கூடாதுனு தான் போட்டோ போடல :-)

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...

நன்றி வெட்டி. என்னுடைய பதிவுகளைப் படித்து ரசித்தமைக்கு. வாழ்க வளமுடன்.
//
உங்க பதிவ படிச்சு ரசிக்கற அளவுக்கு நான் வளர்ந்துட்டேனு எனக்கே சந்தோஷமா இருக்கு... அதனால தான் சூரியனுக்கு டார்ச்லைட்டு :-))

//
என் கொங்கை நின் அன்பர் கதை எனக்கும் மிகவும் பிடித்த கதை. காளமேகத்தின் கதையைச் சற்று வித்தியாசமாகச் சொன்னது.//

ஆமாம்... கடைசி வரிதான் அதுல ரெண்டாவது தடவை படிக்க வெச்சுது :-)

நாமக்கல் சிபி said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நல்ல ரசனை உள்ள தொகுப்பு பாலாஜி!
//
மிக்க நன்றி KRS...
உங்க பதிவு ஒவ்வொன்னுக்கும் என் ப்ளாகையே எழுதி வைக்கணும்...

//
//என்னுடைய கொல்ட்டி கதையின் கருப்பொருள் இந்த கதையிலிருந்தே காப்பி அடித்தேன்//

என்ன? "கப்பி" கிட்டயே "காப்பி"யா? :-)
ரொம்பத் தான் துணிவு ஐயா உமக்கு!!//
என்னங்க பண்ண... முதல் கதை எப்படி ஆரம்பிக்கனு தெரியல.
காதல் தோல்வியை மையமா வெச்சி அவர் எழுதின அதே கருவை அடிச்சிட்டேன்... களம் மட்டும் வேற...

நாமக்கல் சிபி said...

//ஜி said...

ada vetti enna ithu.. namma peraiyum pottirukeenga...

romba thankies...//

ஜி,
உங்களோட அந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால தான் போட்டேன் :-)

நாமக்கல் சிபி said...

//ராம் said...

//இவர் போட்டோவை ப்ரோபைலிலிருந்து தூக்கிய இந்த கதை சூப்பர் (கண்டிப்பா படிங்க) - "நான் ஏன் மாத்தினேன்"//

இப்ப புரியுது வெட்டி, உங்க profile-ல நீங்க ஏன் Popeye போட்டோ போட்டிருக்கீங்கன்னு :-D //

:-))))))))))))))))))))))))))))))))//

ஏன் இந்த சிரிப்பு???

நாமக்கல் சிபி said...

//குமரன் (Kumaran) said...

சூப்பர் சுட்டிகள் வெட்டி. சுட்டி தந்து அசத்தும் வெட்டி வாழ்க வாழ்க. :-)
//
மிக்க நன்றி குமரன்...

// வெட்டிப்பயலுடன் சேர்ந்த இந்த எல்லா பயலுவளும் வெட்டிப்பயலுவ தானா? (உங்களை மாதிரியே பல்கலை வித்தகர்கள்ன்னு சொல்லவர்றேன்).
//
எல்லாருமே பெரிய ஆளுங்க... அதனால தான் சூரியனுக்கு டார்ச்லைட். நான் இவங்கள மாதிரி எல்லாம் திறமையா எழுதனும்னு ஆசைப்படறேன்.

//
பலவற்றை எற்கனவே படித்திருந்தாலும் பொறுமையா இன்னொரு தடவை படிச்சுப் பாக்குறேன். என்னோட பின்னூட்டங்களும் சிலதுல இருக்கு. அப்ப எப்படி பின்னூட்டம் போட்டிருக்கேன்னு பாக்குறதும் நல்லா இருக்கு. :-)//
ஆமாம்... எனக்கும் தேடும் போது அதையெல்லாம் படிக்க ஆச்சர்யமா இருந்துது...

நாமக்கல் சிபி said...

//Syam said...

ennaiyum mathichu thatti vechathuku romba thanksnga vetti...:-)
(sorry for thanglish am on travel)//

நாட்டாமை,
நோ ஃபீலிங்ஸ்...
நீங்க அருமையா எழுதறீங்க.. அந்த காரணம்தான் :-)

சேதுக்கரசி said...

//ஓ!!! சங்கர் தோஸ்தா நீங்க?//

ஆமாம். சொன்னேனே..

கப்பி | Kappi said...

டேங்கீஸ் வெட்டி :)

//இது கற்பனை என்று நான் சத்தியமாக நம்பவில்லை - அந்த இரவு //

எத்தினி தபா சொன்னாலும் நம்ப மாட்டேங்கறாப்பா :))

Anonymous said...

en pera CSR-nu pottrukkeenga thalaiva!!!!!!!! :( :(
Chance kedaicchudhunnu setthu vecchu kalaachittenga!!! :(

Anonymous said...

Good collection. Came across lot of interesting posts. Thanks for your link.

கார்த்திக் பிரபு said...

ennaiya pathi eluhi irukeenga ..oru varthai solli irukalamla..ok any way nandri thalai..

enaku enna sondhosamna innum niraya bloggers adhuvum nalla bloggers i intro apnnni vachirukeenga..kandippa ivanga ellariyum padipane...

idhu ungal padhivugalail enaku pidicha padhivu

valthukal

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

டேங்கீஸ் வெட்டி :)

//இது கற்பனை என்று நான் சத்தியமாக நம்பவில்லை - அந்த இரவு //

எத்தினி தபா சொன்னாலும் நம்ப மாட்டேங்கறாப்பா :)) //

கதைனா கதை மாதிரி எழுதனும்... அப்படியே நிஜமா நடந்த மாதிரி எழுதினா அது யார் தப்பு :-)

நாமக்கல் சிபி said...

//CVR said...

en pera CSR-nu pottrukkeenga thalaiva!!!!!!!! :( :(
Chance kedaicchudhunnu setthu vecchu kalaachittenga!!! :( //

CSR (Competition Success Review) ஒரு காலத்துல அதிகம் படிச்சதால ஒரு சின்ன டெக்னிகல் ஃபால்ட் :-)

நாமக்கல் சிபி said...

//சேதுக்கரசி said...

//ஓ!!! சங்கர் தோஸ்தா நீங்க?//

ஆமாம். சொன்னேனே.. //

ஓ!!! சரி சரி...

நாமக்கல் சிபி said...

//blog_reader said...

Good collection. Came across lot of interesting posts. Thanks for your link. //

Thx a lot, blog_reader

நாமக்கல் சிபி said...

//கார்த்திக் பிரபு said...

ennaiya pathi eluhi irukeenga ..oru varthai solli irukalamla..ok any way nandri thalai..
//
நீயா வருவனு விட்டுட்டேன் :-)

// enaku enna sondhosamna innum niraya bloggers adhuvum nalla bloggers i intro apnnni vachirukeenga..kandippa ivanga ellariyum padipane...
//
எல்லாரும் நான் தொடர்ந்து படிக்கறவங்க.. நீயும் நம்பி படிக்கலாம் :-)

//
idhu ungal padhivugalail enaku pidicha padhivu

valthukal //

அடப்பாவி!!! சொந்தமா நான் எழுதன மத்த பதிவு எதுவும் பிடிக்கலையா????