தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, December 17, 2006

நானா? நிஜமாவா???

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நம்ம புராணம் ஏற்கனவே நிறைய தடவை சொல்லியாச்சு. இருந்தாலும் புதுசா படிக்கறவங்களுக்கு உற்சாகமா இருக்கட்டுமேனு மறுபடியும் இந்த நட்சத்திர வாரத்தை அதிலே ஆரம்பிக்கிறேன்.

வலைப்பூவில் எழுதுவதற்கு முன்னால் பெரிதாக நான் எதையும் எழுதியது கிடையாது. ஒரு முறை விகடனுக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன்.
அது வெளியாகவில்லை என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. அதற்கு பிறகு எதையும் எழுத முயற்சி செய்யவில்லை. பிறகு நண்பர்களின் கூட்டத்தையும், பெற்றோர்களையும் விட்டு இங்கு வந்த பிறகு அந்த தனிமையின் விரக்தியை போக்கி கொள்ளவே வலைப்பூக்களை படிக்க ஆரம்பித்தேன்.

என்ன எழுதுவதென்றே தெரியாமல் வலைப்பூ ஆரம்பித்துவிட்டேன். எல்லோரும் எழுதுகிறார்களே என்ற ஒரு ஆசைதான் காரணம். எனக்கு தெரிந்த
வகையில் நான் அதிகம் படிக்கும் வலைப்பூக்களில் அவர்கள் அன்றாடம் பார்க்கும் நிகழ்ச்சிகள், அவர்களை அதிகம் பாதித்த நிகழ்ச்சிகளே அருமையாக எழுதப்பட்டிருந்தது. அதுவே எனக்கு நம்மாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.ஆரம்பித்த புதிதில் என்ன எழுதுவெதென்றே தெரியாமல் ஆரம்பித்தேன். எனக்கு அதிகம் தெரிந்தது சினிமா மட்டுமே. அதிலும் நுணக்கமோ, தொழில் நுட்பமோ தெரியாது. பழைய படங்களையும் விரும்பி பார்ப்பேன். MGR, சிவாஜி இருவர் படத்தையும் சமமாக ரசித்து பார்ப்பேன். இப்போதும் ரஜினி, கமல் இருவர் படங்களையும் ரசித்து பார்ப்பேன். சரி அதை பற்றி எழுதலாமென்று தோன்றியது. அதில் தான் ஆரம்பித்தேன்.

தமிழ் மணத்தை ஒரு மாதத்திற்கு மேல் படித்தாலும் அதில் அரசியல் பதிவுகளை அதிகம் படிக்க விரும்பியதில்லை. பெரும்பாலும் பெரியார் பற்றிய சர்ச்சைகளே அதிகம் இருந்தது. அதனால் எழுந்த ஒரு சில சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு போட்ட பதிவே தமிழ்மணத்தில் என் முதல் பதிவு. அதில் எழுந்த பல சர்ச்சைகளினால் இனி என்ன எழுதுவதென்றே தெரியாமல் போனது.

அந்த சமயத்தில் மூன்று வருடங்களாக நான் செய்ததையும், கண்டதையும் வைத்து சாப்ட்வேர் இஞ்சினியராகலாம் வாங்க என்ற தொடர் எழுதினேன்.
அதற்கு பெரும்பாலும் பின்னூட்டங்ளே இருக்காது. வடுவூர் குமார் மற்றும் குமரனே எனக்கு உற்சாகம் அளித்தனர். நான் ஒரு சமயம் எழுதி இரண்டு நாட்களாக யாரும் எட்டி பார்க்காத நிலையில் குமரன் அவர்களிடமிருந்து வந்த பின்னூட்டமே என்னை தொடர்ந்து எழுத வைத்தது. அன்று அவர் ஊக்கப்படுத்தவில்லை என்றால் தொடர்ந்து எழுதியிருப்பேனா என்பதே நிச்சயமில்லை. துவக்கத்திலிருந்து என்னை அதிகமாக உற்சாகப்படுத்தியவர்கள்
செல்வன் மற்றும் பாபா.

தொடர் முடித்த நிலையில் என்ன எழுதுவதென்றே தெரியாமல் இருந்த போது தான் நகைச்சுவையாக எழுத ஆரம்பித்தேன். நகைச்சுவைக்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனக்கு நகைச்சுவையாக எழுத வருமென்பதும் அப்போதுதான் தெரிந்தது. வ.வா.சவில் பரிந்துரைக்கப்பட்ட போது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதில் யாரையும் இன்றளவும் பார்த்தது கிடையாது. போனிலும் பேசியதில்லை. அவர்களின் ஊக்குவிப்பும் நமது நாட்டாமை ஸ்யாம் அவர்களின் பாராட்டுமே தொடர்ந்து நகைச்சுவையாக எழுத வைத்தது.

பிறகு கப்பியின் கயல்விழியில் கிழமத்தூர் எக்ஸ்பிரஸ் மகேந்திரனும் நானும் கும்மியடிக்கும் போது என்னையும் கதை எழுத சொல்லி அவர்கள் தூண்டிவிட்டதே நான் சிறுகதை(?) எழுத ஆரம்பிக்க காரணமாக இருந்தது. அதற்கு வலைப்பூ நண்பர்கள் கொடுத்த உற்சாகமே தொடர்ந்து கதை எழுதவும் காரணமாக இருந்தது. (படிக்க விரும்புபவர்கள் வலது பக்கமிருக்கும் சிறுகதை பகுதிகளை பார்க்கவும்)

எனக்கு வலைப்பூ எழுத ஆரம்பித்த புதிதில் நகைச்சுவை, கதை எழுத வருமா என்று சத்தியமாக தெரியாது. (இப்போழுதும் நான் எதையும் பெரிதாக
எழுதிவிடவில்லை என்பதும் உண்மையே). ஆனால் நான் எழுதுவதும் ஒரு சிலரை கவர்கிறது. வலைப்பூ எழுத ஆரம்பித்திருக்கும் நண்பர்களுக்கும், பல நாட்களாக படித்து கொண்டு மட்டுமே இருக்கும் நண்பர்களுக்கும் நான் சொல்வது இதுவே! தயங்காமல் எழுதுங்கள்! நமக்கு எது பலமென்பது நமக்கே தெரியாது. தொடர்ந்து எழுத எழுதவே நம் எழுத்தும் கூர்மையாகிறது. (எனது வலைப்பூவில் முதல் 20 பகுதிகளை படித்தால் உங்களுக்கு புரியும்.ஒரு சிலருக்கு கடைசி இருபது படித்தாலும் வித்யாசமில்லை என்பது போலவே தோன்றலாம். நானும் பழகி கொண்டு தானே இருக்கிறேன்)

வலைப்பூ (Blog) எழுத விருப்பமிருந்தால் தயங்காமல் ஆரம்பியுங்கள். உங்கள் மனதிற்கு பிடித்ததை எழுதுங்கள் (அடுத்தவரை காயப்படுத்தாமல்). உதவி தேவைப்பட்டால் தமிழ்மணத்தில் இருக்கும் பதிவர் யாரை வேண்டுமென்றாலும் அணுகவும். நிச்சயமாக சொல்கிறேன் அவர்கள் தங்களால் முடிந்த வரை உதவுவார்கள். தமிழ்மணத்தில் உள்ள அனைத்து வலைப்பதிவரிடமும் நான் கண்ட ஒற்றுமை இதுவே. சண்டை சச்சரவுகள் ஆயிரமிருந்தாலும் புதிதாக வருபவர்களுக்கு உதவ யாரும் தயங்குவதில்லை. எவ்வளவு கருத்து வேறுபாடு கொண்டவர்களாக இருந்தாலும் உங்களுக்கு சரியான வழியை காட்டுவார்கள்.

என்னடா இவன் நம்ம பேர சொல்லலையேனு யாரும் தப்பா நினைக்காதீங்க. நான் எழுதறதுக்கு நீங்க எல்லாரும் ஒரு காரணம்னு உங்களுக்கே தெரியும். எல்லார் பேரும் போட்டா பதிவு தாங்காது.

சரி புதுசா வரவங்களுக்கு சொல்லிட்ட, எங்களுக்கு இந்த வாரம் என்ன தர போறன்னு கேக்கறவங்களுக்கு...

முடிஞ்ச வரைக்கும் உங்களை ஏமாத்த மாட்டேனு மட்டும் இப்போழுதிக்கு சொல்லி ஜுட் விட்டுக்கிறேன் ;)

141 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ரெடி; ஸ்டார்ட்!!!!
வாழ்த்துக்கள் பாலாஜி!

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

கண்ணபிரான் முந்திக் கொண்டார்.

நாமக்கல் சிபி said...

புதுக் கதையை எதிர்பார்க்கலாமா நட்சத்திர வாரத்தில்?

- யெஸ்.பாலபாரதி said...

வாழ்த்துக்கள் ;-))))

Udhayakumar said...

அட்றா சக்கை... அட்றா சக்கை...

நாமக்கல் சிபி said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ரெடி; ஸ்டார்ட்!!!!
வாழ்த்துக்கள் பாலாஜி!//
மிக்க நன்றி KRS
எல்லாம் உங்க ஆசிர்வாதம்!!!

நாமக்கல் சிபி said...

//நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி தள!!!

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துக்கள் வெட்டி.

நாமக்கல் சிபி said...

//நாமக்கல் சிபி said...

கண்ணபிரான் முந்திக் கொண்டார்.//

என்னை தமிழ்மணத்தில் முதன்முதலாக வரவேற்றவரே இன்றும் வரவேற்றிருந்தால் செண்டிமெண்டலாக இருந்திருக்கும் ;)

உங்கள் பாசத்திற்கு மிக்க நன்றி தள!!!

நாமக்கல் சிபி said...

//என்னை தமிழ்மணத்தில் முதன்முதலாக வரவேற்றவரே இன்றும் வரவேற்றிருந்தால் செண்டிமெண்டலாக இருந்திருக்கும் //

அதுக்குத்தானே முயற்சி செய்தேன்.

சைக்கிள் கேப்பில் கண்ணபிரான் முந்திக் கொண்டார். மார்கழி மாதம் அல்லவா! கண்ணபிரானின் குறும்பு!

என்னை உறங்க வைத்து அவர் விழித்துக் கொண்டார்.

கோவி.கண்ணன் [GK] said...

வருத்தப்படாத வாலிபர் வெட்டிக்கு நட்சத்திர வாழ்த்துக்கள் !

Kannabiran, Ravi Shankar (KRS) said...

11:59:51
11:59:52
11:59:53
11:59:54
11:59:55
11:59:56
11:59:57
11:59:58
11:59:59
12:00:00
:-)))))
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலாஜி! அடச்சே....கவுண்ட் டெளன் சொல்லிச் சொல்லி...அதே பழக்கம் ஆகி விட்டது!:-)

இந்தக் கவுண்ட் டெளன் எதற்கு?
=ராக்கெட் விடுவதற்கு!

ராக்கெட் எந்த ஊருக்குப் போகுது?
=ஏதோ பாலாஜி நட்சத்திரமாமே; ஒரு வாரம் முழுக்க தெரியப் போகுதாமே; அதுவும் கிறிஸ்துமஸ் வரைக்கும்! டெலஸ்கோப் இல்லாமலேயே பாக்கலாமாம்!

ஓகே நாங்க ரெடி!

நாமக்கல் சிபி said...

//நாமக்கல் சிபி said...

புதுக் கதையை எதிர்பார்க்கலாமா நட்சத்திர வாரத்தில்?//

இன்னும் யோசிக்கல தள....
முயற்சி செய்யறேன் :-)

நாமக்கல் சிபி said...

//யெஸ்.பாலபாரதி said...

வாழ்த்துக்கள் ;-))))//

தலைவா,
நம்ம வலைப்பூவிற்கு முதல் தடவையா வரீங்கனு நினைக்கிறேன்...
மிக்க நன்றி!!!

அடிக்கடி நம்ம பக்கத்துக்கு வாங்க...

நாமக்கல் சிபி said...

//Udhayakumar said...

அட்றா சக்கை... அட்றா சக்கை...//

வாங்க அட்லாஸ் வாலிபரே...
உங்களை எல்லாம் நம்பி தான் களம் இறங்கியிருக்கேன் :-)

மதுமிதா said...

வாழ்த்துகள் பாலாஜி

நட்சத்திர கதையையே குடுத்திட்டீங்க
வலைமாநாடு கதை வருமா?????

///என்னடா இவன் நம்ம பேர சொல்லலையேனு யாரும் தப்பா நினைக்காதீங்க. நான் எழுதறதுக்கு நீங்க எல்லாரும் ஒரு காரணம்னு உங்களுக்கே தெரியும்///

தப்பாவே நினைக்கல.
கொல்ட்டி கதைக்கு எவ்வளவு பூஸ்ட் குடுத்தோம்:-))))))

நாமக்கல் சிபி said...

அட! பிறந்த நாள் வேறா!

பிடிங்க அதுக்கொரு வாழ்த்து!

நாமக்கல் சிபி said...

///இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துக்கள் வெட்டி.//

மிக்க நன்றி கொத்ஸ்...
வாரம் முழுக்க வரணும்... ஆமாம் சொல்லிட்டேன் ;-)

நாமக்கல் சிபி said...

//நாமக்கல் சிபி said...

//என்னை தமிழ்மணத்தில் முதன்முதலாக வரவேற்றவரே இன்றும் வரவேற்றிருந்தால் செண்டிமெண்டலாக இருந்திருக்கும் //

அதுக்குத்தானே முயற்சி செய்தேன்.

சைக்கிள் கேப்பில் கண்ணபிரான் முந்திக் கொண்டார். மார்கழி மாதம் அல்லவா! கண்ணபிரானின் குறும்பு!

என்னை உறங்க வைத்து அவர் விழித்துக் கொண்டார்.//

ஆமாம்...
அவர் ரெடியா இருந்திருப்பார் போல...
கரெக்டா சொன்னீங்க :-)

நாமக்கல் சிபி said...

//நாமக்கல் சிபி said...

அட! பிறந்த நாள் வேறா!

பிடிங்க அதுக்கொரு வாழ்த்து!//

தலைவா,
அதெல்லாம் இல்லை...
இன்னும் 5 மாசமிருக்கு :-)

நாமக்கல் சிபி said...

//கோவி.கண்ணன் [GK] said...

வருத்தப்படாத வாலிபர் வெட்டிக்கு நட்சத்திர வாழ்த்துக்கள் !//

மிக்க நன்றி கோவி...
அடிக்கடி வரவும் :-)

நாமக்கல் சிபி said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

11:59:51
11:59:52
11:59:53
11:59:54
11:59:55
11:59:56
11:59:57
11:59:58
11:59:59
12:00:00
:-)))))
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலாஜி! அடச்சே....கவுண்ட் டெளன் சொல்லிச் சொல்லி...அதே பழக்கம் ஆகி விட்டது!:-)
//

எனக்கு இன்னைக்கு பிறந்த நாளா?
உங்க குறும்புக்கு அளவே இல்லையா?

// இந்தக் கவுண்ட் டெளன் எதற்கு?
=ராக்கெட் விடுவதற்கு!

ராக்கெட் எந்த ஊருக்குப் போகுது?
=ஏதோ பாலாஜி நட்சத்திரமாமே; ஒரு வாரம் முழுக்க தெரியப் போகுதாமே; அதுவும் கிறிஸ்துமஸ் வரைக்கும்! டெலஸ்கோப் இல்லாமலேயே பாக்கலாமாம்!//
ஆஹா.. இதுக்கு தான் அந்த கவுண்ட் டவுனா?

சிபி தப்பா புரிஞ்சிக்கிட்டாரு பாருங்க :-)

முத்துகுமரன் said...

நட்சத்திர வாழ்த்துகள். இதுவரை உங்கள் பதிவுகளை அதிகம் வாசிக்கவில்லையென்றாலும் நட்சத்திரவாரத்திலிருந்த வாசிக்க தொடங்கலாம் என்று எண்ணி இருக்கிறேன். வாசித்த ஒரு சில பதிவுகளிலே மற்றவரை கவர்ந்திழுக்கும் எழுத்துவளம் உங்களுக்கு உண்டு என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.

அடிச்சு ஆடுங்க :-)

SP.VR. SUBBIAH said...

வாருங்கள் பாலாஜி மனோகரன்,

கழுத்தில் நட்சத்திர மாலையுடன்
கையில் ஒருவாரப் பதிவுகளுடன்
அசத்துங்கள், அடித்து ஆடுங்கள் !
அன்புடன் இருக்கின்றோம் கைதட்ட் நாங்கள்!

SP.VR.சுப்பையா

SP.VR. SUBBIAH said...

வாருங்கள் பாலாஜி மனோகரன்,

கழுத்தில் நட்சத்திர மாலையுடன்
கையில் ஒருவாரப் பதிவுகளுடன்
அசத்துங்கள், அடித்து ஆடுங்கள் !
அன்புடன் இருக்கின்றோம் கைதட்ட் நாங்கள்!

SP.VR.சுப்பையா

நாமக்கல் சிபி said...

//மதுமிதா said...

வாழ்த்துகள் பாலாஜி
//
மிக்க நன்றிங்கக்கா...

//
நட்சத்திர கதையையே குடுத்திட்டீங்க
வலைமாநாடு கதை வருமா?????
//
கண்டிப்பா...சீக்கிரமே வரும் :-)

///என்னடா இவன் நம்ம பேர சொல்லலையேனு யாரும் தப்பா நினைக்காதீங்க. நான் எழுதறதுக்கு நீங்க எல்லாரும் ஒரு காரணம்னு உங்களுக்கே தெரியும்///

தப்பாவே நினைக்கல.
கொல்ட்டி கதைக்கு எவ்வளவு பூஸ்ட் குடுத்தோம்:-))))))//
ஆமாம் நிஜமா கடைசி நேரத்தில நீங்க கொடுத்த பூஸ்ட்ல தான் 20 வோட்டாவது வந்துச்சு :-)

மிக்க நன்றிக்கா!!!

கோவி.கண்ணன் [GK] said...

//மிக்க நன்றி கோவி...
அடிக்கடி வரவும் :-) //

நானும் வருவேன்,
சிபியாரிடம் சொல்லுங்கள் !
அவர்தான் அடிக்கடி கடியோடு வருபவர் !
:)

ரவி said...

கலக்குங்க...:)) நிறைய எதிர்பார்ப்புகளோடு.....

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் வெட்டி.. கலக்குங்க...

நாமக்கல் சிபி said...

//முத்துகுமரன் said...

நட்சத்திர வாழ்த்துகள். இதுவரை உங்கள் பதிவுகளை அதிகம் வாசிக்கவில்லையென்றாலும் நட்சத்திரவாரத்திலிருந்த வாசிக்க தொடங்கலாம் என்று எண்ணி இருக்கிறேன். வாசித்த ஒரு சில பதிவுகளிலே மற்றவரை கவர்ந்திழுக்கும் எழுத்துவளம் உங்களுக்கு உண்டு என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.
//
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி முத்து குமரன். முடிந்த வரை நல்ல பதிவுகளையும் தர முயற்சிக்கிறேன்.

புதிய வாசகர்களையும் படிக்க வைத்த தமிழ்மணத்திற்கு நன்றி!!!

//
அடிச்சு ஆடுங்க :-)//
கண்டிப்பா... பட்டைய கிளப்பிடுவோம்!!!

Anonymous said...

வாழ்த்துக்கள் பாலாஜி

நாமக்கல் சிபி said...

//SP.VR.சுப்பையா said...

வாருங்கள் பாலாஜி மனோகரன்,

கழுத்தில் நட்சத்திர மாலையுடன்
கையில் ஒருவாரப் பதிவுகளுடன்
அசத்துங்கள், அடித்து ஆடுங்கள் !
அன்புடன் இருக்கின்றோம் கைதட்ட் நாங்கள்!

SP.VR.சுப்பையா//
ஆசிரியரே,
உங்களை நம்பிதான் இந்த மாணவன் களமிறங்கியிருக்கிறேன்...

உங்கள் ஆசி கண்டிப்பாக வேண்டும்...

நாமக்கல் சிபி said...

//கோவி.கண்ணன் [GK] said...

//மிக்க நன்றி கோவி...
அடிக்கடி வரவும் :-) //

நானும் வருவேன்,
சிபியாரிடம் சொல்லுங்கள் !
அவர்தான் அடிக்கடி கடியோடு வருபவர் !
:)//
ஆஹா... இப்ப நீங்க கடிச்சிட்டீங்களே!!!

நாமக்கல் சிபி said...

//செந்தழல் ரவி said...

கலக்குங்க...:)) நிறைய எதிர்பார்ப்புகளோடு.....//
தலைவா,
வாங்க... எல்லாம் உங்க ஆசிர்வாதம்.
உங்க ஜீனியர்னு பேரை காப்பாத்த முயற்சி செய்யறேன்...

நாமக்கல் சிபி said...

//பொன்ஸ் said...

வாழ்த்துக்கள் வெட்டி.. கலக்குங்க...//

பொன்ஸக்கா,
மிக்க நன்றி!!!

வெற்றி said...

அடடா!
வெட்டி, நீங்களா இவ்வார நட்சத்திரம்?

வாழ்த்துக்கள். நல்ல பல பதிவுகளைத் தந்தவர் நீங்கள். நட்சத்திர வாரத்தில் இன்னும் பல அருமையான பதிவுகளைத் தருவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் படிக்க மிகவும் ஆவலாகக் காத்திருக்கிறேன்.

நன்றி.

Anonymous said...

//ஆனால் நான் எழுதுவதும் ஒரு சிலரை கவர்கிறது. வலைப்பூ எழுத ஆரம்பித்திருக்கும் நண்பர்களுக்கும், பல நாட்களாக படித்து கொண்டு மட்டுமே இருக்கும் நண்பர்களுக்கும் நான் சொல்வது இதுவே! தயங்காமல் எழுதுங்கள்!//

முன்பே தமிழ்மணம் மற்றும் வலைப்பதிவுகளை வாசித்து இருந்தாலும்
அந்த உங்க கொல்ட்டி கதை படிச்சதுக்கப்புறம் தான் நான் பதிவு ஆரம்பித்தேன்.

நாமக்கல் சிபி said...

//SKumar said...

வாழ்த்துக்கள் பாலாஜி//
மிக்க நன்றி குமார்...

இராம்/Raam said...

வெட்டி,

சங்கத்து சிங்கங்களுக்கு கூட சொல்லலையேப்பா...??

எங்கள் இளையதளபதி, பாஸ்டன் புயல் பாலாஜிக்கு நட்சத்திர வாழ்த்துக்கள்.... :)

நாமக்கல் சிபி said...

//வெற்றி said...

அடடா!
வெட்டி, நீங்களா இவ்வார நட்சத்திரம்?
//
ஆமாங்க வெற்றி!!!

// வாழ்த்துக்கள். நல்ல பல பதிவுகளைத் தந்தவர் நீங்கள். நட்சத்திர வாரத்தில் இன்னும் பல அருமையான பதிவுகளைத் தருவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் படிக்க மிகவும் ஆவலாகக் காத்திருக்கிறேன்.
//
மிக்க நன்றி வெற்றி. நல்ல பதிவுகளை தர முயற்சி செய்கிறேன்...
எல்லாம் உங்க ஊக்கம் தான் வெற்றி!!!

Unknown said...

பாலாஜி

வாழ்த்துக்கள்.கலக்கி எடுக்கும் அருமையான வாரத்தை எதிர்பார்க்கிறேன்.ஒரு வாரமும் தினமும் வருவேன்.

உங்கள் பதிவுகளை பொறுத்தவரை நகைச்சுவை மிக அருமையாக வருகிறது.கோழி கதைகள் எல்லாம் விகடன், குமுதத்தில் கூட போடக்கூடிய அளவுக்கு அருமையாக இருந்தது.

சீரியசான கதைகளும் நன்றாக எழுதுகிறீர்கள்.கோல்டி கதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

Hariharan # 03985177737685368452 said...

நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள் வெட்டிப்பயல் (எ) பாலாஜி!

மணியன் said...

வாழ்த்துக்கள் !!

கார்மேகராஜா said...

மாப்ள எவ்வளோ அடிச்சாலும் தாங்குறாண்டா!

இவன் ரொம்ப நல்லவண்டா!

கார்மேகராஜா said...

வாழ்த்துக்கள் வெட்டியண்ணே!

Alien said...

வாழ்த்துக்கள்!

Divya said...

நட்சத்திரம் ஜொலிக்கட்டும்!!!

வாழ்த்துக்கள் வெட்டி!!!

நாகை சிவா said...

வெட்டி வாழ்த்துக்கள்

சொன்ன மாதிரி சரியான நேரத்துக்கு வந்து விட்டேன் பார்த்தியா?

அடிச்சு பட்டைய கிளப்பு.....

நாகை சிவா said...

வெட்டி வாழ்த்துக்கள்

சொன்ன மாதிரி சரியான நேரத்துக்கு வந்து விட்டேன் பார்த்தியா?

அடிச்சு பட்டைய கிளப்பு.....

கைப்புள்ள said...

வாழ்த்துகள் பாலாஜி,
உங்கள் நட்சத்திர வாரம் இனிதானதாக அமைய என் வாழ்த்துகள். நான் முதன்முதலில் படிச்சது கவுண்டரும் கடையெழு வள்ளல்களும் பதிவு தான். அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு உங்க கதை தூறல் படிச்சேன். அதுக்கப்புறம் கொல்ட்டி, அப்புறம் கோழியின் சாகசங்கள் இன்னும் பல பதிவுகள்னு பின்னோக்கி படிச்சேன். நெல்லிக்காக்கு அப்புறம் நீங்க ஒரு மாஸ்டர் ஸ்டோரி டெல்லர்னு புரிஞ்சிக்கிட்டேன். தொடருங்கள். நல்ல படைப்புகளைக் கொடுங்கள்.

கைப்புள்ள said...

வாழ்த்துகள் பாலாஜி,
உங்கள் நட்சத்திர வாரம் இனிதானதாக அமைய என் வாழ்த்துகள். நான் முதன்முதலில் படிச்சது கவுண்டரும் கடையெழு வள்ளல்களும் பதிவு தான். அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு உங்க கதை தூறல் படிச்சேன். அதுக்கப்புறம் கொல்ட்டி, அப்புறம் கோழியின் சாகசங்கள் இன்னும் பல பதிவுகள்னு பின்னோக்கி படிச்சேன். நெல்லிக்காக்கு அப்புறம் நீங்க ஒரு மாஸ்டர் ஸ்டோரி டெல்லர்னு புரிஞ்சிக்கிட்டேன். தொடருங்கள். நல்ல படைப்புகளைக் கொடுங்கள்.

G.Ragavan said...

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இன்று போல் என்றும் வாழ்க. மிகச் சரியானதொரு பொழுதில் நட்சத்திரமாகியிருக்கிறாய். இது உனக்கு நல்லதே. நல்ல பதிவுகளைக் கொடுத்து நல்ல பெயர் எடுக்க என்னுடைய வாழ்த்துகள்.

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

கார்த்திக் பிரபு said...

வாழ்த்துக்கள் தலை..கலக்குறீங்க உங்களிடமிருந்து நிறைய சூப்பர் மேட்டர்கள் எதிர்பார்க்கிறேன்...ஏமாத்த மாட்டீங்களே??

Anonymous said...

பாலாஜி,

வாழ்த்துக்கள்!!! நல்ல பதிவு.. வலைப்பூ உலகில் புதியவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதியுள்ளீர்கள்!!! உங்களுடைய "சாப்ட்வேர் இஞ்சினியராகலாம் வாங்க" பகுதியைப் போல் இதுவும் நன்றாக வந்துள்ளது.

//வலைப்பூ (Blog) எழுத விருப்பமிருந்தால் தயங்காமல் ஆரம்பியுங்கள். உங்கள் மனதிற்கு பிடித்ததை எழுதுங்கள் (அடுத்தவரை காயப்படுத்தாமல்).//

well said பாலாஜி..

//பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது :-)
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று//

உங்களுடைய கருத்தில் தெளிவாக இருக்கிறீர்கள் :-)

//தமிழ்மணத்தில் உள்ள அனைத்து வலைப்பதிவரிடமும் நான் கண்ட ஒற்றுமை இதுவே. சண்டை சச்சரவுகள் ஆயிரமிருந்தாலும் புதிதாக வருபவர்களுக்கு உதவ யாரும் தயங்குவதில்லை. எவ்வளவு கருத்து வேறுபாடு கொண்டவர்களாக இருந்தாலும் உங்களுக்கு சரியான வழியை காட்டுவார்கள்.//

இது 100% உண்மை.. இதற்கு காரணம் நம் மக்களிடையே உள்ள பரந்த மனப்பான்மை தான்.. தன்னால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்கிறார்கள்..

மற்றபடி, நீங்கள் நன்றாக எழுதுகிறீகள்! நான் படித்த மட்டும் உங்களுடைய சிறுகதைகள், நகைச்சுவைப் பகுதிகள் நன்றாக இருக்கிறது!! தொடர்ந்து எழுதுங்கள்...

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

வாழ்த்துக்கள் வெட்டிப்பயல் பாலாஜி கலக்குங்க இந்த வாரம்.

Sud Gopal said...

கலக்குங்க பாலாஜீ...

வாழ்த்துகள்...

Unknown said...

வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

நாம் மட்டும் என்ன தனியா சொல்லனுமா? அதான் எல்லாரும் சொல்லிட்டாங்களே.

வாழ்த்துக்கள்...

அரை பிளேடு said...

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்...
வெட்டி இப்போ தமிழ்மணம் ஸ்டார்..

கலக்குங்க தலீவா...

வெரைட்டி காட்டுங்க...

இப்பிடிக்கு
அரைபிளேடு

Anonymous said...

வாழ்த்துக்கள் கலந்த நன்றி , நீங்கள் எழுதுவதற்க்கல்ல ...
எனக்கு ப்ளாக் எழுத உதவுவதற்கு...

Anonymous said...

என்னடா புதுசா ஒரு நட்சத்திரம் பளிச் பளிச்னு மின்னி பட்டைய கெளப்பிட்டு இருக்கேன்னு எட்டி பாத்தா.... அட நம்ம வெட்டி......

ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு வெட்டி....

வாழ்த்துக்கள்.....

உங்க தூறல் கதைய எத்தனை தடவை receive பண்ணி எத்தனை தடவை forward பண்ணினேன்னு எனக்கே தெரியாது. தொடர்ந்து வெற்றி நடை போட வாழ்த்துக்கள்....

Unknown said...

வாழ்த்துக்கள் பாலாஜி

தருமி said...

முதல் தடவையா உங்கள் பதிவுக்கு வந்திருக்கேன். இதுவரை வராமல் இருந்தது எவ்வளவு தப்புன்னு நினைக்கிறபடி எழுதுங்க..எழுதுங்க.. எழுதிக்கிட்டே இருங்க..
வாழ்த்துக்கள்.
இன்னொரு விஷயம் தெரியுமா? நம்ம ரெண்டுபேருடைய முகப்புப் பக்கம் ஒரே மாதிரியா இருக்கேன்னு நினச்சு, பதிவை வாசிச்சா நான் என் கடைசி நட்சத்திரப் பதிவில் புதுசா வர்ரவங்களுக்கு என்ன எழுத்னேனோ அதையே அப்படியே நீங்களும் எழுதியிருக்கீங்க..

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் வெட்டி!! எப்பவும் போல கலக்குங்க :)

Anonymous said...

//வெட்டி:
சாதனை : அதுக்குள்ள அவசரப்படறீங்க... இன்னும் சில ஆண்டுகளில் டி.வில
எப்படியும் இந்த கேள்விய கேப்பாங்க... அப்ப பார்த்து தெரிஞ்சிக்கோங்க //

அருமை , அருமை ... இந்த தன்னம்பிக்கையை ... என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது

வாழ்த்துக்கள் .. !

வடுவூர் குமார் said...

நட்சத்திரமே!! வருக வருக..
கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது.
என்னுடைய பெயரையும் போட்டதற்கு நன்றி.
எனக்கென்னவோ உங்களுக்கு நகைச்சுவையை விட பொதுவான எழுத்துகளில் மிளிர்கிறீர்கள்.
தொடருங்கள்.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் பாலாஜி.

வஜ்ரா said...

//
"நானா? நிஜமாவா???"
//

மெய்யாலுமே நீங்களும் ஸ்டாருங்க...

வாழ்த்துக்கள் வெ. ப பாலாஜி.

ஷங்கர்.

Anonymous said...

வாழ்த்துக்கள் வெட்டி....! கலக்குங்க!!

Boston Bala said...

---ஒரு முறை விகடனுக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன்.---

என்ன கட்டுரை இது?

நட்சத்திர வாரத்தில் பகிர முடியுமா?

கதிர் said...

எலேய் வெட்டி!

வாழ்த்துக்கள்!!!

இப்பதான் பார்த்தேன் சந்தோஷமா இருக்கப்பா!

நட்சத்திரமா ஜொலிக்க வாழ்த்துக்கள்!! இந்தியா ஒளிர்கிறதா பதிவில பின்னூட்டம் போடும்போது கூட நட்சத்திரம்னு தெரியாது.

நாமக்கல் சிபி said...

//லட்சுமி said...

//ஆனால் நான் எழுதுவதும் ஒரு சிலரை கவர்கிறது. வலைப்பூ எழுத ஆரம்பித்திருக்கும் நண்பர்களுக்கும், பல நாட்களாக படித்து கொண்டு மட்டுமே இருக்கும் நண்பர்களுக்கும் நான் சொல்வது இதுவே! தயங்காமல் எழுதுங்கள்!//

முன்பே தமிழ்மணம் மற்றும் வலைப்பதிவுகளை வாசித்து இருந்தாலும்
அந்த உங்க கொல்ட்டி கதை படிச்சதுக்கப்புறம் தான் நான் பதிவு ஆரம்பித்தேன். //
லட்சுமி,
நீங்க சொல்றத கேக்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க. புதுசா முயற்சி செய்யுங்கள்.

நாங்களும் அடிக்கடி வருகிறோம்.


மிக்க நன்றி!!!

நாமக்கல் சிபி said...

//ராம் said...

வெட்டி,

சங்கத்து சிங்கங்களுக்கு கூட சொல்லலையேப்பா...??
//
எனக்கே தெளிவா தெரியலை.
ஒரு மடல் தான் வந்தது. Confirmedஆ தெரியல :-(

// எங்கள் இளையதளபதி, பாஸ்டன் புயல் பாலாஜிக்கு நட்சத்திர வாழ்த்துக்கள்.... :) //
மிக்க நன்றி ராயல்!!!
எல்லாம் உங்கள் பாசம்தான் காரணம்!!!

Anonymous said...

அடப்பாவி மக்கா சொல்லவேயில்லையே!

வாளுக! வாளுக! வாளுக!

நாமக்கல் சிபி said...

//செல்வன் said...

பாலாஜி

வாழ்த்துக்கள்.கலக்கி எடுக்கும் அருமையான வாரத்தை எதிர்பார்க்கிறேன்.ஒரு வாரமும் தினமும் வருவேன்.
//
தலைவா,
நான் தமிழ்மணம் பார்க்கும் போது முதல் நட்சத்திரம் நீங்கள் தான். இப்ப நீங்க என் பதிவுக்கு வந்து வாழ்த்துவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய பல பதிவுகளில் நீங்கள் கொடுத்த ஊக்கமே என்னை தொடர்ந்து எழுத வைத்தது.

//
உங்கள் பதிவுகளை பொறுத்தவரை நகைச்சுவை மிக அருமையாக வருகிறது.கோழி கதைகள் எல்லாம் விகடன், குமுதத்தில் கூட போடக்கூடிய அளவுக்கு அருமையாக இருந்தது.

சீரியசான கதைகளும் நன்றாக எழுதுகிறீர்கள்.கோல்டி கதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. //
மிக்க நன்றி தலைவா...
என்னுடைய கொல்ட்டி கதைல நீங்க சொன்ன இதே வார்த்தைகள் இன்னும் என் மனதிலே இருக்கிறது. அதுவே என்னை தொடர்ந்து எழுதவும் வைத்தது.

நாமக்கல் சிபி said...

//Hariharan # 26491540 said...

நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள் வெட்டிப்பயல் (எ) பாலாஜி! //

மிக்க நன்றி ஹரிஹரன் அவர்களே!!!
தொடர்ந்து வந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்...

நாமக்கல் சிபி said...

//மணியன் said...

வாழ்த்துக்கள் !! //

மிக்க நன்றி மணியன்...

நாமக்கல் சிபி said...

//கார்மேகராஜா said...

மாப்ள எவ்வளோ அடிச்சாலும் தாங்குறாண்டா!

இவன் ரொம்ப நல்லவண்டா! //

இப்படி சொல்லி சொல்லியே உடம்ப ரணகளப்படுத்தறாங்கப்பா!!!

நாமக்கல் சிபி said...

//கார்மேகராஜா said...

வாழ்த்துக்கள் வெட்டியண்ணே! //

மிக்க நன்றி கார்மேக ராஜா :-)

நாமக்கல் சிபி said...

//Divya said...

நட்சத்திரம் ஜொலிக்கட்டும்!!!

வாழ்த்துக்கள் வெட்டி!!! //

மிக்க நன்றி திவ்யா!!!

நாமக்கல் சிபி said...

//நாகை சிவா said...

வெட்டி வாழ்த்துக்கள்

சொன்ன மாதிரி சரியான நேரத்துக்கு வந்து விட்டேன் பார்த்தியா?

அடிச்சு பட்டைய கிளப்பு..... //

புலி,
இது தான்யா உன்கிட்ட புடிச்சது...
கொடுத்த வாக்க காப்பாத்திட்ட

இந்த வாரம் தூக்கிடுவோம் :-)

நாமக்கல் சிபி said...

//கைப்புள்ள said...

வாழ்த்துகள் பாலாஜி,
உங்கள் நட்சத்திர வாரம் இனிதானதாக அமைய என் வாழ்த்துகள். நான் முதன்முதலில் படிச்சது கவுண்டரும் கடையெழு வள்ளல்களும் பதிவு தான். அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு உங்க கதை தூறல் படிச்சேன். அதுக்கப்புறம் கொல்ட்டி, அப்புறம் கோழியின் சாகசங்கள் இன்னும் பல பதிவுகள்னு பின்னோக்கி படிச்சேன். நெல்லிக்காக்கு அப்புறம் நீங்க ஒரு மாஸ்டர் ஸ்டோரி டெல்லர்னு புரிஞ்சிக்கிட்டேன். தொடருங்கள். நல்ல படைப்புகளைக் கொடுங்கள். //

வா தல,
உங்கிட்ட சொல்லலனு தப்பா எடுத்துக்காத தல. நிலைமை அப்படி :-(

எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவுல வந்துருக்கீங்க (கவுண்டர் பதிவு)

மாஸ்டர் ஸ்டோரி டெல்லரெல்லாம் இல்லை தல. எல்லாம் நீங்க கொடுக்கற உற்சாகம் தான் :-)

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இன்று போல் என்றும் வாழ்க. மிகச் சரியானதொரு பொழுதில் நட்சத்திரமாகியிருக்கிறாய். இது உனக்கு நல்லதே. நல்ல பதிவுகளைக் கொடுத்து நல்ல பெயர் எடுக்க என்னுடைய வாழ்த்துகள். //

மிக்க நன்றி ஜி.ரா...
தொடர்ந்து என்னை நல்வழிப்படுத்த உதவும் உங்களுக்கு என் நன்றிகள் பல.

நாமக்கல் சிபி said...

// sinnakuddy said...

நட்சத்திர வாழ்த்துக்கள் //

மிக்க நன்றி சின்னக்குட்டி!!!
தொடர்ந்து வரவும்.

நாமக்கல் சிபி said...

//கார்த்திக் பிரபு said...

வாழ்த்துக்கள் தலை..கலக்குறீங்க உங்களிடமிருந்து நிறைய சூப்பர் மேட்டர்கள் எதிர்பார்க்கிறேன்...ஏமாத்த மாட்டீங்களே?? //

தம்பி கார்த்தி, (இனிமே அண்ணனு சொல்லனுமா???)
மிக்க நன்றி!!!

முடிந்த வரை நல்ல பதிவுகளை தர முயற்சி செய்கிறேன்!!!

நாமக்கல் சிபி said...

//கத்துக்குட்டி said...

பாலாஜி,

வாழ்த்துக்கள்!!! நல்ல பதிவு.. வலைப்பூ உலகில் புதியவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதியுள்ளீர்கள்!!! உங்களுடைய "சாப்ட்வேர் இஞ்சினியராகலாம் வாங்க" பகுதியைப் போல் இதுவும் நன்றாக வந்துள்ளது.
//

மிக்க நன்றி கத்துக்குட்டி!!!
நிறைய பேருக்கு ஆசையிருந்தாலும் தயக்கமிருக்கும். அதை உடைத்து கொண்டு அவர்கள் வரவே இந்த பதிவு.

//
//பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது :-)
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று//

உங்களுடைய கருத்தில் தெளிவாக இருக்கிறீர்கள் :-)
//
முடிந்த வரை நல்லதை சொல்வோம். நல்லதை செய்வோம்!!!

//
மற்றபடி, நீங்கள் நன்றாக எழுதுகிறீகள்! நான் படித்த மட்டும் உங்களுடைய சிறுகதைகள், நகைச்சுவைப் பகுதிகள் நன்றாக இருக்கிறது!! தொடர்ந்து எழுதுங்கள்... //
மிக்க நன்றி!!!
உங்கள் வார்த்தைகளே எனக்கு பூஸ்ட் :-)

நாமக்கல் சிபி said...

//செந்தில் குமரன் said...

வாழ்த்துக்கள் வெட்டிப்பயல் பாலாஜி கலக்குங்க இந்த வாரம். //

மிக்க நன்றி செந்தில் குமரன்...

பட்டைய கிளப்பிடுவோம்!!!

நாமக்கல் சிபி said...

//சுதர்சன்.கோபால் said...

கலக்குங்க பாலாஜீ...

வாழ்த்துகள்... //

மிக்க நன்றி ஓமப்பொடியாரே!!!

தொடர்ந்து வரவும் :-)

நாமக்கல் சிபி said...

//அருட்பெருங்கோ said...

வாழ்த்துக்கள்!!! //

காதல் கவிதைகளின் வேந்தனே,
வாழ்த்துக்களுக்கு நன்றி :-)

நாமக்கல் சிபி said...

//ஜி said...

நாம் மட்டும் என்ன தனியா சொல்லனுமா? அதான் எல்லாரும் சொல்லிட்டாங்களே.

வாழ்த்துக்கள்... //

மிக்க நன்றி ஜி...

இந்த ஜி பேருக்கு ஒரு கதை இருக்கு. படிக்க இங்கே கிளிக்கவும் கிளிக்கவும

நாமக்கல் சிபி said...

//அரை பிளேடு said...

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்...
வெட்டி இப்போ தமிழ்மணம் ஸ்டார்..

கலக்குங்க தலீவா...

வெரைட்டி காட்டுங்க...

இப்பிடிக்கு
அரைபிளேடு //

மிக்க நன்றி அரை பிளேடு...
முடிந்த வரை வெரைட்டி கொடுக்க முயற்சி செய்கிறேன்!!!

நாமக்கல் சிபி said...

//சுந்தர் said...

வாழ்த்துக்கள் கலந்த நன்றி , நீங்கள் எழுதுவதற்க்கல்ல ...
எனக்கு ப்ளாக் எழுத உதவுவதற்கு... ///
சுந்தர்,
இப்ப அலுவலகத்தில் இருக்கிறேன்...

வீட்டிற்கு வந்தவுடன் உங்கள் டெம்ப்ளேட்டை சரி செய்து அனுப்பி வைக்கிறேன்!

தாமதத்திற்கு மன்னிக்கவும்...

நாமக்கல் சிபி said...

//இம்சை அரசி said...

என்னடா புதுசா ஒரு நட்சத்திரம் பளிச் பளிச்னு மின்னி பட்டைய கெளப்பிட்டு இருக்கேன்னு எட்டி பாத்தா.... அட நம்ம வெட்டி......

ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு வெட்டி....

வாழ்த்துக்கள்.....
//

மிக்க நன்றி இம்சை அரசியாரே!!!

// உங்க தூறல் கதைய எத்தனை தடவை receive பண்ணி எத்தனை தடவை forward பண்ணினேன்னு எனக்கே தெரியாது. தொடர்ந்து வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.... //
கேட்கும் போதே சந்தோஷமாக இருக்கிறது. உங்களை போன்றவர்களின் ஊக்கமே என்னையும் தொடர்ந்து எழுத வைக்கிறது...

நாமக்கல் சிபி said...

//தேவ் | Dev said...

வாழ்த்துக்கள் பாலாஜி //

மிக்க நன்றி தேவ்...
என்னுடைய கதைகளை படித்து தாங்கள் தரும் விமர்சனமே என்னை செதுக்கி கொள்ள உதவுகிறது...

நாமக்கல் சிபி said...

//Dharumi said...

முதல் தடவையா உங்கள் பதிவுக்கு வந்திருக்கேன். இதுவரை வராமல் இருந்தது எவ்வளவு தப்புன்னு நினைக்கிறபடி எழுதுங்க..எழுதுங்க.. எழுதிக்கிட்டே இருங்க..
//
கண்டிப்பா என்னால் முடிந்த வரை நன்றாக எழுத முயற்சிக்கிறேன் ஐயா.
நானும் கத்துக்குட்டிதான். சரியா எழுதலைனா நீங்க சொன்னா நான் நல்லா எழுத கண்டிப்பா முயற்சி செய்வேன்...

// வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி!!!

//
இன்னொரு விஷயம் தெரியுமா? நம்ம ரெண்டுபேருடைய முகப்புப் பக்கம் ஒரே மாதிரியா இருக்கேன்னு நினச்சு, பதிவை வாசிச்சா நான் என் கடைசி நட்சத்திரப் பதிவில் புதுசா வர்ரவங்களுக்கு என்ன எழுத்னேனோ அதையே அப்படியே நீங்களும் எழுதியிருக்கீங்க.. //
ஆஹா... இப்படி ஒரு ஒற்றுமையா?
தங்கள் பேரை காப்பாற்ற முயற்சி செய்கிறேன் :-)

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

வாழ்த்துக்கள் வெட்டி!! எப்பவும் போல கலக்குங்க :) //

மிக்க நன்றி கப்பி...
என்னுடைய ஒவ்வொரு பதிவையும் படிச்சி முடிந்த வரை சரி செய்ய உதவும் உனக்கு என் நன்றிகள் பல... (ரொம்ப செண்டி ஆயிட்டேனு ஃபீல் பண்ணாதப்பா)

நாமக்கல் சிபி said...

//சுந்தர் said...

//வெட்டி:
சாதனை : அதுக்குள்ள அவசரப்படறீங்க... இன்னும் சில ஆண்டுகளில் டி.வில
எப்படியும் இந்த கேள்விய கேப்பாங்க... அப்ப பார்த்து தெரிஞ்சிக்கோங்க //

அருமை , அருமை ... இந்த தன்னம்பிக்கையை ... என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது

வாழ்த்துக்கள் .. ! //

எல்லாம் ஒரு நம்பிக்கைதாங்க சுந்தர்.
இது நான் என் ஃபிரெண்ட்ஸ் நிறைய பேர்ட சொல்ற ஒரு விஷயம்!!!

நாமக்கல் சிபி said...

//வடுவூர் குமார் said...

நட்சத்திரமே!! வருக வருக..
கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது.
என்னுடைய பெயரையும் போட்டதற்கு நன்றி.
//
என்னை தொடர்ந்து எழுத வைத்ததற்கு நானல்லவா நன்றி சொல்ல வேண்டும்.
இது நான் தங்களை மகிழ வைக்க நான் சொல்லவில்லை. உங்களுடைய பல பதிவுகளுக்கு நான் வந்து படித்தாலும் பின்னூட்டமிடுவதில்லை. என்னை தொடக்க காலத்தில் உற்சாகப்படுத்தியதற்காகவே சொல்கிறேன்...

//
எனக்கென்னவோ உங்களுக்கு நகைச்சுவையை விட பொதுவான எழுத்துகளில் மிளிர்கிறீர்கள்.
தொடருங்கள். //

மிக்க நன்றி குமார்...
தொடர்ந்து ஒரு மாதிரி என்னால் எழுத முடியவில்லை. அதற்காகவே வெரைட்டி!!!

நாமக்கல் சிபி said...

//குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் பாலாஜி. //

மிக்க நன்றி குமரன்...
நான் சொன்ன பதிவு
இதுதான்

நாமக்கல் சிபி said...

//Vajra said...

//
"நானா? நிஜமாவா???"
//

மெய்யாலுமே நீங்களும் ஸ்டாருங்க...

வாழ்த்துக்கள் வெ. ப பாலாஜி.

ஷங்கர். //

ஆமாம் ஷங்கர்.
எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கு...

நாமக்கல் சிபி said...

//சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள் வெட்டி....! கலக்குங்க!! //

மிக்க நன்றி சந்தனமுல்லை...
தொடர்ந்து வரவும்...

நாமக்கல் சிபி said...

//Boston Bala said...

---ஒரு முறை விகடனுக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன்.---

என்ன கட்டுரை இது?

நட்சத்திர வாரத்தில் பகிர முடியுமா? //

கண்டிப்பாக...
முடிந்தால் இன்று இரவே வரும்!!!

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

எலேய் வெட்டி!

வாழ்த்துக்கள்!!!

இப்பதான் பார்த்தேன் சந்தோஷமா இருக்கப்பா!

நட்சத்திரமா ஜொலிக்க வாழ்த்துக்கள்!! இந்தியா ஒளிர்கிறதா பதிவில பின்னூட்டம் போடும்போது கூட நட்சத்திரம்னு தெரியாது. //

மிக்க நன்றி தம்பி...
நேத்தே உன்கிட்ட சொல்லலாம்னு பார்த்தேன். இருந்தாலும் எனக்கே கொஞ்சம் சந்தேகமாத்தான் இருந்துச்சு. என் படத்தை பனிரெண்டு மணிக்கு பார்த்ததுக்கப்பறம்தான் ஒரு நம்பிக்கையே வந்துச்சு :-)

Anonymous said...

வாழ்த்துக்கள் "வெட்டிப்பயல்" (?!). நோ நோ விஷயமுள்ள பயல்.

நாமக்கல் சிபி said...

//சுந்தர் said...

அடப்பாவி மக்கா சொல்லவேயில்லையே!

வாளுக! வாளுக! வாளுக! //

தலைவர் கண்ணபிரான் எல்லாரிடமுன் சொன்னாரே :-/

சரி... எப்படியும் ஒரு நாள் தானே :-)

வாழ்த்துக்களுக்கு நன்றி!!!

ஜெயஸ்ரீ said...

வாழ்த்துக்கள் பாலாஜி !!

enRenRum-anbudan.BALA said...

வாழ்த்துக்கள் பாலாஜி!

According to me, you are already a SHINING STAR :)))

Sumathi. said...

ஹாய் வெட்டி,
ரொம்ப நாளா இத எதிர்பார்த்தேன். ஒரு வாரத்துல எவ்வளவு கலக்க முடியுமோ அவ்வளவு கலக்குங்க..... வாழ்த்துக்கள்.

Santhosh said...

வாழ்த்துக்கள் பாலாஜி, வழக்கம் போல கலக்குங்க. உங்கள மாதிரி சிலருக்கு கலக்குவது Habit ஆகி விட்டது :))

குமரன் (Kumaran) said...

பாலாஜி,

நீங்கள் இந்த வார விண்மீன் என்று தெரிந்ததும் வாழ்த்திவிட்டுப் போய்விட்டேன். இப்போது தான் பதிவைப் படித்தேன்.

நீங்கள் உள்ளே வரும் போதே சாதனை செய்து கொண்டே தானே வந்தீர்கள். முதல் பதிவில் நிறைய பின்னூட்டம் பெற்றீர்கள் அல்லவா? நன்றாக நினைவிருக்கிறது. சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க தொடரைப் பற்றி ஒரு வார இதழிலும் வந்ததே. அதனைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை?! அந்தத் தொடரை விடாமல் படித்தேன். கொல்ட்டி, கவுண்டமணியும் கடையேழு வள்ளல்களும் போன்றவற்றையும் படித்திருக்கிறேன். பல்சுவைகளிலும் நன்கு பதிவுகள் இடுகிறீர்கள். நெல்லிக்காய் தொடரைத் தான் இன்னும் படிக்கவில்லை. படிக்க வேண்டும் என்று வைத்திருக்கிறேன். விரைவில் படிப்பேன் என்று நினைக்கிறேன்.

VSK said...

சர்ரென்று ஏறி, அனைவரையும் கவர்ந்து, இன்று, விண்ணில் மின்னும் விண்மீனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

நாமக்கல் சிபி said...

//ஜெயஸ்ரீ said...

வாழ்த்துக்கள் பாலாஜி !! //

மிக்க நன்றி ஜெயஸ்ரீ

நாமக்கல் சிபி said...

//enRenRum-anbudan.BALA said...

வாழ்த்துக்கள் பாலாஜி!

According to me, you are already a SHINING STAR :))) //

Thx a lot, Bala

Really happy to see such a message from you...

நாமக்கல் சிபி said...

//ஸயீத் said...

வாழ்த்துக்கள் "வெட்டிப்பயல்" (?!). நோ நோ விஷயமுள்ள பயல். //

மிக்க நன்றி ஸயீத்...
தொடர்ந்து வரவும்.

நாமக்கல் சிபி said...

//sumathi said...

ஹாய் வெட்டி,
ரொம்ப நாளா இத எதிர்பார்த்தேன். ஒரு வாரத்துல எவ்வளவு கலக்க முடியுமோ அவ்வளவு கலக்குங்க..... வாழ்த்துக்கள். //

மிக்க நன்றி சுமதி...
கண்டிப்பா.. பட்டைய கிளப்பிடுவோம் :-)

நாமக்கல் சிபி said...

//சந்தோஷ் said...

வாழ்த்துக்கள் பாலாஜி, வழக்கம் போல கலக்குங்க.
//
மிக்க நன்றி...
எல்லாம் உங்களை நம்பி தான் களம் இறங்கியிருக்கேன் :-)

// உங்கள மாதிரி சிலருக்கு கலக்குவது Habit ஆகி விட்டது :)) //
ஆஹா... வசிஸ்டர் வாயில பிரம்மரிஷி பட்டம்...

நாமக்கல் சிபி said...

//குமரன் (Kumaran) said...

பாலாஜி,

நீங்கள் இந்த வார விண்மீன் என்று தெரிந்ததும் வாழ்த்திவிட்டுப் போய்விட்டேன். இப்போது தான் பதிவைப் படித்தேன்.
//
நினைத்தேன்... படித்திருந்தால் நிச்சயம் நாலு வார்த்தை அதிகமாக வந்திருக்குமென்று :-)

//
நீங்கள் உள்ளே வரும் போதே சாதனை செய்து கொண்டே தானே வந்தீர்கள். முதல் பதிவில் நிறைய பின்னூட்டம் பெற்றீர்கள் அல்லவா? நன்றாக நினைவிருக்கிறது.
//
மறக்க மாட்டீங்கனு தெரியும் ;)

//
சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க தொடரைப் பற்றி ஒரு வார இதழிலும் வந்ததே. அதனைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை?! அந்தத் தொடரை விடாமல் படித்தேன்.
//
எதற்கு வீண் பெருமைனு தான் :-)
எல்லாம் உங்கள் ஊக்கத்தினால் தான் தொடர்ந்து எழுதினேன்...

//
கொல்ட்டி, கவுண்டமணியும் கடையேழு வள்ளல்களும் போன்றவற்றையும் படித்திருக்கிறேன். பல்சுவைகளிலும் நன்கு பதிவுகள் இடுகிறீர்கள். நெல்லிக்காய் தொடரைத் தான் இன்னும் படிக்கவில்லை. படிக்க வேண்டும் என்று வைத்திருக்கிறேன். விரைவில் படிப்பேன் என்று நினைக்கிறேன். //
மிக்க நன்றி...
பொறுமையா படிச்சி உங்க கருத்தை சொல்லுங்க :-)

நாமக்கல் சிபி said...

//SK said...

சர்ரென்று ஏறி, அனைவரையும் கவர்ந்து, இன்று, விண்ணில் மின்னும் விண்மீனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! //

SK ஐயா,
மிக்க நன்றி...
எல்லாம் தங்களை போன்றவர்களின் ஊக்குவிப்பே!!!

Unknown said...

வாழ்த்துக்கள் பாலாஜி..ஊருக்கு போயிருந்தேன்..அதான் சீக்கிரம் வர முடியல..அதுவும் இல்லாம இன்னிக்கு வேலை கொஞ்சம் அதிகம்..ஒரு வாரம் கலக்கித் தள்ளூ..

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துக்கள் நட்சத்திரத்துக்கு.

நல்ல எழுத்துக்கள் எப்பவுமே வீண்
போகாது என்பதற்கு உங்களை மாதிரி பதிவர்களும்,
குமரன்,குமார் மாதிரி உற்சாகப் படுத்துகிறவர்களும் உதாரணம்.
அதிகம் தேவைப் படுவது உண்மையான நகைச்சுவைதான்.
வாழ்த்துக்கள் பாலாஜி.

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துக்கள் நட்சத்திரத்துக்கு.

நல்ல எழுத்துக்கள் எப்பவுமே வீண்
போகாது என்பதற்கு உங்களை மாதிரி பதிவர்களும்,
குமரன்,குமார் மாதிரி உற்சாகப் படுத்துகிறவர்களும் உதாரணம்.
அதிகம் தேவைப் படுவது உண்மையான நகைச்சுவைதான்.
வாழ்த்துக்கள் பாலாஜி.

நாமக்கல் சிபி said...

//தமிழ்ப்பிரியன் said...

வாழ்த்துக்கள் பாலாஜி..ஊருக்கு போயிருந்தேன்..அதான் சீக்கிரம் வர முடியல..அதுவும் இல்லாம இன்னிக்கு வேலை கொஞ்சம் அதிகம்..ஒரு வாரம் கலக்கித் தள்ளூ.. //

மிக்க நன்றி சங்கர்...
தொடர்ந்து ஒரு வாரம் வந்து சேரு...

நாமக்கல் சிபி said...

//வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துக்கள் நட்சத்திரத்துக்கு.

நல்ல எழுத்துக்கள் எப்பவுமே வீண்
போகாது என்பதற்கு உங்களை மாதிரி பதிவர்களும்,
குமரன்,குமார் மாதிரி உற்சாகப் படுத்துகிறவர்களும் உதாரணம்.
அதிகம் தேவைப் படுவது உண்மையான நகைச்சுவைதான்.
வாழ்த்துக்கள் பாலாஜி. //

மிக்க நன்றி வல்லிசிம்ஹன்...

நல்ல எழுத்துக்களை இனம் கண்டு ஊக்குவிப்பவற்களுக்கு நன்றி சொல்லவும், புதிதாக துவங்குபவர்களுக்கு நம்பிக்கை தரவுமே இந்த பதிவு...

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள் வெட்டி. அடடே, நீங்க நம்ம தமிழ்ப்பிரியனோட நண்பரா?

நாமக்கல் சிபி said...

//சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள் வெட்டி.
//
மிக்க நன்றி சேதுக்கரசி...

//
அடடே, நீங்க நம்ம தமிழ்ப்பிரியனோட நண்பரா? //
ஆமாங்க. நாலு வருஷம் ஒண்ணா ஒரே க்ளாஸ்ல படிச்சோம்(?) :-)

உங்கள் நண்பன்(சரா) said...

இந்த வார நட்சத்திரமாக ஜொலிக்க உள்ள அன்பு நண்பரும் வருத்தப்படாத வாலிபனுமாகிய வெட்டிப்பயலுக்கு வாழ்த்துக்கள்!!!!


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

அப்படி போடு அறுவாள :)

சர்வேசன் லிஸ்ட்ல வந்த ராசி வெட்டி.

ஜமாய்ங்க :)

தற்போதய நிலவரப்படி பிரிவு 'ஆ'ல நீங்கதான் 33% ஓட்டு வாங்கி டாப்புல இருக்கீங்க. கலக்குங்க.
இங்க பாருங்கோ

நட்சத்திர தேர்வுக்கும் வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி said...

//உங்கள் நண்பன் said...

இந்த வார நட்சத்திரமாக ஜொலிக்க உள்ள அன்பு நண்பரும் வருத்தப்படாத வாலிபனுமாகிய வெட்டிப்பயலுக்கு வாழ்த்துக்கள்!!!!


அன்புடன்...
சரவணன்.//
நண்பா சரவணா,
மிக்க நன்றி!!!
தொடர்ந்து வரவும்...

Anonymous said...

எல்லா இடத்துக்கும் தாமதமாக வர்றதே பொழப்பா போச்சி எனக்கு, எனினும்
வாழ்த்துக்கள் பாலாஜி!

நட்சத்திரமானதற்கு பாராட்டுக்கள், உங்களுடைய தொடர்கதைகள், நகைச்சுவை தொடர்கள் எல்லாமே அருமை. நட்சத்திரமாகி இன்னும் பல நல்ல உள்ளங்களின் கவனிப்பையும் பெறுங்கள், பல நட்சத்திரப் படைப்புகளையும் தாருங்கள்.

ஜொள்ளுப்பாண்டி said...

வெட்டி லேட்டா வந்துட்டேன் கோச்சுகாதப்பா !! ஏற்கனவே வேட்டுசத்தம் பட்டையக் கெளப்புதே !! வாழ்த்துக்கள் :)))

நாமக்கல் சிபி said...

//ராசுக்குட்டி said...
எல்லா இடத்துக்கும் தாமதமாக வர்றதே பொழப்பா போச்சி எனக்கு, எனினும்
வாழ்த்துக்கள் பாலாஜி!
//
மிக்க நன்றி ராசுக்குட்டி!!!
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா தான் வந்திருக்கீங்க :-)

//
நட்சத்திரமானதற்கு பாராட்டுக்கள், உங்களுடைய தொடர்கதைகள், நகைச்சுவை தொடர்கள் எல்லாமே அருமை. நட்சத்திரமாகி இன்னும் பல நல்ல உள்ளங்களின் கவனிப்பையும் பெறுங்கள், பல நட்சத்திரப் படைப்புகளையும் தாருங்கள்.
//
என்னால் முடிந்த வரை நல்ல படைப்புகளை தர முயற்சி செய்கிறேன்.

தொடர்ந்து வரவும்... ஆதரவு தரவும் ;)

நாமக்கல் சிபி said...

//ஜொள்ளுப்பாண்டி said...
வெட்டி லேட்டா வந்துட்டேன் கோச்சுகாதப்பா !! ஏற்கனவே வேட்டுசத்தம் பட்டையக் கெளப்புதே !! வாழ்த்துக்கள் :)))
//

ஆளையே காணோமேனு தேடிக்கிட்டு இருந்தேன்... இன்னும் இலியானா எஃபக்ட்லயே இருக்கியா??? சீக்கிரம் வா... இன்னும் நிறைய இருக்கு ;)

Anonymous said...

சரி சரி, லேட் தான்..என்ன பண்றது..நானெல்லாம் என்னிக்கு சீக்கிரம் வநதிருக்கேன்!

இங்கேயும் ஒரு 'உள்ளேன் அய்யா' மட்டும் போடுட்டு போறேன்... பொறுமையா அப்பால வரேன்!!

-விநய்

நாமக்கல் சிபி said...

//SurveySan said...

அப்படி போடு அறுவாள :)

சர்வேசன் லிஸ்ட்ல வந்த ராசி வெட்டி.

ஜமாய்ங்க :)
//

மிக்க நன்றி சர்வேசன்...நம்ம பேர் அந்த லிஸ்ட்ல வந்ததே சந்தோஷம்தான் :-)

// தற்போதய நிலவரப்படி பிரிவு 'ஆ'ல நீங்கதான் 33% ஓட்டு வாங்கி டாப்புல இருக்கீங்க. கலக்குங்க.
இங்க பாருங்கோ

நட்சத்திர தேர்வுக்கும் வாழ்த்துக்கள//
எல்லாம் நம் வலைப்பூ நண்பர்களின் பாசம்தான் காரணம் :-)

நாமக்கல் சிபி said...

//Anonymous said...

சரி சரி, லேட் தான்..என்ன பண்றது..நானெல்லாம் என்னிக்கு சீக்கிரம் வநதிருக்கேன்!
//
போன் பண்ணி சொல்லலாம்னு பார்த்தேன்... சரி பிஸியா இருப்பீங்கனு விட்டுட்டேன்... நானும் கொஞ்சம் பிஸிதான் :-)

//
இங்கேயும் ஒரு 'உள்ளேன் அய்யா' மட்டும் போடுட்டு போறேன்... பொறுமையா அப்பால வரேன்!!

-விநய்//
//
சரி... ஆனா கண்டிப்பா வரணும் :-)

Anonymous said...

நீங்கள் பதிவு எழுத ஆரம்ப்பிக்கும் போது என்ன நிலையில் இருந்தீங்களோ ,அதே நிலையில் தான் இப்பொழுது நானும் உள்ளேன்!! :)

Anonymous said...

// ஆமாங்க. நாலு வருஷம் ஒண்ணா ஒரே க்ளாஸ்ல படிச்சோம்(?) :-) //

நீங்கள் நன்றாகப் படிப்பவர்கள் என்று உங்கள் வீட்டில் சொன்னார்களே ? :-)

நாமக்கல் சிபி said...

//CVR said...

நீங்கள் பதிவு எழுத ஆரம்ப்பிக்கும் போது என்ன நிலையில் இருந்தீங்களோ ,அதே நிலையில் தான் இப்பொழுது நானும் உள்ளேன்!! :) //

இப்ப நான் இருக்கிற நிலைக்கு (Star) நீங்க சீக்கிரம் வந்துடுவீங்க...

உங்க கதையெல்லாம் நான் விரும்பி படிச்சிருக்கேன் :-)

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

// ஆமாங்க. நாலு வருஷம் ஒண்ணா ஒரே க்ளாஸ்ல படிச்சோம்(?) :-) //

நீங்கள் நன்றாகப் படிப்பவர்கள் என்று உங்கள் வீட்டில் சொன்னார்களே ? :-) //
ஆமாங்க...
ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் எல்லாம் நல்லா படிப்பேன் :-)