தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, December 21, 2006

கற்றதும்... பெற்றதும்

சரி இதுவரைக்கும் கும்மியடிக்கற மாதிரி பதிவே போடலைனு ஃபீல் பண்றவங்களுக்காக இந்த பதிவு

வலைப்பதிவர் சந்திப்புக்கு போனியே அங்க எதாவது பயனுள்ளதா தெரிஞ்சிக்கிட்டியானு நிறைய நண்பர்கள் கேட்டாங்க. சரி அவுங்களுக்கு மட்டும் எதுக்கு, உங்க எல்லாருக்கும் சொல்லிடலாமேனு பதிவா போடறேன்... சில பல இடங்கள்ல எனக்கும் இதுல இவ்வளவு மேட்டர் இருக்கானு தோணுச்சு... ஒண்ணு ஒண்ணா சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க

எனக்கும் அங்க இருந்த மூத்த பதிவர்களுக்கும் நடந்த உரையாடல் மாதிரி போட்டிருக்கேன்... இதுல மூத்த பதிவரென்பது ஒரு ஆள் இல்லை. என்னை தவிர எல்லாருமே மூத்த பதிவர்ங்க தான்... (ஜி, கண்டுக்காதீங்க)

எந்த நேரத்துல பதிவு போடலாம்?

மூ.ப: வெட்டி, பொதுவா நீ எந்த நேரத்துல பதிவ போடுவ?

வெ: எந்த நேரத்துலயா? டைப் பண்ணி முடிச்சவுடனே போட்டுடுவேன்.

மூ.ப: அதான் எந்த நேரத்துல டைப் பண்ணுவ?

வெ: எந்த நேரத்தில பண்ணுவோம்... ஆபிஸ்ல மதியம் ஒரு 3லருந்து 4 மணிக்குள்ளதான்...

மூ.ப: உடனே பின்னூட்டம் வருமா?

வெ: உடனே வராது. கொஞ்ச நேரம் கழிச்சுதான் வரும்.

மூ.ப: அப்படியெல்லாம் பண்ணாத வெட்டி. நான் சொல்ற மாதிரி பண்ணு

வெ: சொல்லுங்க... நோட் பண்ணிக்கிறேன்

மூ.ப: அதிகமா வலைப்பதிவ படிக்கறவங்க இருக்கறது இந்தியாவிலயும், அமெரிக்காவிலயும் தான்... அதனால முடிஞ்ச அளவு இந்தியால பகல் பொழுதுல இல்லை அமெரிக்க (கிழக்கு) நேரத்துல ஒரு 9 - 10 மணிக்கா போடு. அப்பதான் நிறைய பேர் பார்ப்பாங்க. அப்பறம் முடிஞ்ச அளவு வார நாட்கள்ல போடு. வார இறுதியோ வெள்ளிக்கிழமையோ வேண்டாம்.

வெ: பதிவ தமிழ்மணத்துல போடறதுல இவ்வளவு விஷயமிருக்கா?

மூ.ப: இதெல்லாம் ரொம்ப அடிப்படைப்பா. இதுக்கூடவா தெரியாது?

வெ: எதுவும் தெரியாம அப்பாவியாவே இருந்துட்டேன்.

பின்னூட்டம்

மூ.ப: சரி அதெல்லாம் இருக்கட்டும் வெட்டி. உனக்கு மட்டும் எப்படி பின்னூட்டம் அதிகமா வருது?

வெ: அதெல்லாம் ஒண்ணும் பெரிய விஷயமில்லைங்க. நம்மல மதிச்சி பின்னூட்டமிடறவங்க ஒவ்வொருவருக்கும் மதிச்சு நல்ல நண்பராக நினைச்சு பதில் சொன்னா போதும். பொதுவா முக்கால்வாசி பேர் அவுங்க பின்னூட்டத்துக்கு என்ன பதில் சொல்வாங்கனு வந்து பார்ப்பாங்க. அதனால நம்ம அவுங்களுக்கு சொல்ற பதில் அவுங்களை அடுத்த தடவை வர வைக்கற மாதிரி இருக்கணும். (They should feel comfortable)

மூ.ப: ஓ! இதுல இவ்வளவு விஷயமிருக்கா?

வெ: இது மட்டுமில்லைங்க. நம்ம திட்டி வர பின்னூட்டத்தக்கூட அப்படியே ஜாலியா மாத்திடணும். நம்ம நண்பர் ஒருத்தர் ப்ளாக்ல நான் பார்த்த கமெண்ட்

Anony: Total time waste

Blogger: ஏய் அனானி... என் ப்ளாக்ல வந்து யூஸ் ஃபுல்லா டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு பார்த்த இல்லை. உனக்கு நல்லா வேணும்.

இந்த மாதிரி ஜாலியாக்கனாவே போதும்.

மூ.ப: வெட்டி! இதுதான் நீ பின்னூட்டம் அதிகமா வாங்கர ரகசியமா?

வெ: நான் ஒண்ணும் அதிகமா எல்லாம் வாங்கறதில்லைங்க. நம்மல விட அதிகமா வாங்கறவங்க நிறைய பேர் இருக்கறாங்க. ரசிக்கிற மாதிரி பதிவ கொடுக்கறதும் ஒரு முக்கியமான விஷயம்.

மூ.ப: சரி. தமிழ்மண முகப்புல அதிக நேரம் நம்ம பதிவ எப்படி இருக்க வைக்கணும்னு தெரியுமா?

வெ: அதுவும் ஒரு சின்ன டெக்னிக்தான். ராத்திரி படுக்கும் போது எல்லா பின்னூட்டத்தையும் பப்ளிஷ் பண்ணிடாதீங்க. ஒண்ணு ரெண்டு வெச்சிட்டு காலைல வந்தவுடனே அதை பப்ளிஷ் பண்ணுங்க. அப்பறம் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சி ரிப்ளை பண்ணுங்க. அதுக்காக அனானி கமெண்ட் எல்லாம் போட்டுக்க வேண்டாம். அது ரொம்ப ஆடா இருக்கும்.

மூ.ப: நாங்க எல்லாம் அதிகமா இதுல கான்சண்ட்ரேட் பண்றதில்லை.

வெ: தெரியுதே! அப்பறம் தமிழ்மணம்ல வாசகர் பரிந்துரைல எப்படி கொண்டு வர வைக்கணும்?

மூ.ப: நீயே பதிவ போட்டதுக்கப்பறம் ஒண்ண குத்திக்கோ.

வெ:நானேவா?

மூ.ப: ஆமாம் உன் பதிவு உனக்கே பிடிக்கலைனா வேற எவனுக்கு பிடிக்கும்?

வெ: அதுவும் சரிதான்.

மூ.ப: அப்படியே ஆபிஸ் போனதுக்கப்பறம் கூட ஒண்ணு போட்டோக்கோ. அப்பறம் ஆபிஸ்ல கூட இருக்கறவங்க ரெண்டு பேரை ஆளுக்கு ஒண்ணு குத்த சொல்லு. அவ்வளவுதான் ஈஸியா வந்திடும்.

வெ: அப்படினா நிறைய குத்திடலாமே...

மூ.ப: ஓவர் சீன் உடம்புக்காகாது. மக்கள் "-" குத்தி கொன்னுடுவாங்க. அதனால அளவா ஆடணும். ஓகேவா?

வெ: சரி. அப்பறம் தேன்கூடுல அதிகம் பார்வையிடப்பட்ட பகுதில எப்படி வர வைக்கறது?

மூ.ப: அதுவும் ஒரு டெக்னிக் தான். போட்டவுடனே நீயே ஒரு பத்து தடவை க்ளிக் பண்ணு. அப்பறம் ப்ராஜக்ட்ல இருக்கற 2 பேர் சிஸ்டம்ல போய் உக்கார்ந்து ஒரு 10 தடவை பண்ணு. அவ்ளோதான்...

வெ: ஆஹா. ஊர்ல இருக்கற ஃபிராடுத்தனம் எல்லாம் பண்ணனும் போல இருக்கே!

மூ.ப: இதெல்லாம் ரொம்ப பண்ணா உன்னைய நாரடிச்சிடுவாங்க. நீ கேட்டியேனு சொன்னேன். எப்பவும் அடக்கமா இருந்தாதான் பெருமை.

வெ: அதுவும் உண்மைதான். சரி இந்த பூங்கா, கில்லி பரிந்துரைல எல்லாம் வரது எப்படி?

மூ.ப: பூங்கால வரணும்னா மேலோட்டமில்லாத ஆழமான விமர்சனம் பண்ணனும்

வெ: நாந்தான் தெலுகு படமெல்லாம் பண்றனே. அது வர மாட்டீங்குதே!!!

மூ.ப: வெட்டி? உனக்கு சனி உன் வாயில தான். அவர் சொல்றது ஏகாதிபத்யம், அடக்குமுறை இந்த மாதிரி விஷயங்களை விமர்சிக்கணும்.

வெ: அப்படினா?

மூ.ப: உனக்கு அதெல்லாம் புரியாது.

வெ: சரி, கில்லில?

மூ.ப: பொண்ணுங்களை ஜொள்ளுவிடற மாதிரி இருந்தா வந்திட போகுது... என்னங்க நான் சொல்றது கரெக்ட் தானே?

வெ: ஆமாம் என்னுடைய ஆர்க்குட் அலம்பல் வேற வந்திருந்துச்சு...

மூ.ப: சரி வெட்டி இதையெல்லாம் தேவையான இடத்துல பயன்படுத்தி பெரிய ஆளாகணும். புரியுதா?

வெ: பாக்கலாம்... வண்டி எத்தனை நாள் ஓடுதுனு...


மக்களே!!! நாளை காலை எப்படியும் வலைப்பதிவர் சந்திப்பை பற்றிய பதிவு வரும்... அதுவரை இதுல இருக்கற மேட்டர நல்லா மனப்பாடம் பண்ணிக்கோங்க.

59 comments:

வடுவூர் குமார் said...

வெ..பயல்
இவ்வளவு விஷயம் இருக்கா?
பின்னுட்டத்துக்கு மதிப்பு கொடுத்து 2 வரி எழுதுவது சரி தான்,அதானே அடுத்தவர்களை மதிக்கும் பண்பு?
தொடருங்கள் பாலாஜி.

Anonymous said...

good,

Anonymous said...

ஹ ஹ ஹா!!
you call this a பொழப்பு??? :P

ps: தப்பா நினைச்சிக்காதீங்க தலைவா!! சும்மா தமாசுக்கு!! :D

siva gnanamji(#18100882083107547329) said...

அட! இதுலே இவ்வளவு இருக்கா!
நீங்க வெட்டி இல்ல; வழிகாட்டி........

கதிர் said...

சரியான உள்குத்து பதிவுப்பா!

ஏம்பா வெட்டி,
இம்பூட்டு விஷயம் இருக்கறது ஒண்ணுமே தெரியாதா உனக்கு!

ரொம்ப ஆச்சரியமா இருக்குதே!

கதிர் said...

//Anony: Total time waste

Blogger: ஏய் அனானி... என் ப்ளாக்ல வந்து யூஸ் ஃபுல்லா டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு பார்த்த இல்லை. உனக்கு நல்லா வேணும்.//

சூப்பரப்பு!!!

கதிர் said...

//எதுவும் தெரியாம அப்பாவியாவே இருந்துட்டேன்.//

எலேய் என்ன கொடும இது??

அப்ப நானெல்லாம் இந்த விஷயத்துல பால்வாடிப்பயனா?

கதிர் said...

//கில்லி பரிந்துரைல எல்லாம் வரது எப்படி?//

கில்லியா?

அப்படின்னா?

விளக்கம் ப்ளீஸ் வெட்டி...

நாடோடி said...

அய்யோ.. அய்யோ..

சிறுபிள்ளைதனாமால இருக்கு.

என்ன விளையாட்டு இது.

கதிர் said...

//அதுவும் ஒரு சின்ன டெக்னிக்தான். ராத்திரி படுக்கும் போது எல்லா பின்னூட்டத்தையும் பப்ளிஷ் பண்ணிடாதீங்க. ஒண்ணு ரெண்டு வெச்சிட்டு காலைல வந்தவுடனே அதை பப்ளிஷ் பண்ணுங்க. அப்பறம் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சி ரிப்ளை பண்ணுங்க. அதுக்காக அனானி கமெண்ட் எல்லாம் போட்டுக்க வேண்டாம். அது ரொம்ப ஆடா இருக்கும்.//

இதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும்னு யோசிச்சி பார்த்தேன்...
சிரிப்பு தாங்க முடியலப்பா!

SP.VR. SUBBIAH said...

மூ.ப: நம்ம பதிவைப் பலர் பார்வையிட ஷார்ட் கட் ஒன்னுமில்லையா?

வெட்டி: ஏன் இல்லை. பின்னுட்ட நாயகர்ன்னு ஒருத்தர் இருக்கிறார். அவரை நட்பாக்கிக் கொள்ளுஙகள் உபயோகமாக இருக்கும்

மூ.ப்: அதுவும் சரிதான்.மேலும் ஏதாவது ஒரு யோசனை சொல்லுங்கள்

வெட்டி: மூன்று நாள் பதிவு போடுங்கள். அதற்கு வரும் பின்னூட்டங்களுக்குப் பதில் எழுதுங்கள். வாரத்தில் மீதமுள்ள மூன்று நாட்களில் மற்றவர்களின் பதிவுகலைப் படித்துப் பின்னூட்டமிடுங்கள். பிறகு பாருங்கள்

SP.VR.SUBBIAH

dubukudisciple said...

என்ன வெட்டி!!!
ஏதோ சாப்டது , டான்ஸ் ஆடினது , பாட்டு கேட்டது எல்லாம் போடுவீங்கனு பார்த்தா !!!
சரி சரி!!
இதுவும் புதுசா ப்ளாக் ஆரம்பிக்கரவங்களுக்கு நல்ல உதவியா இருக்கும்!!! நன்றி

Anonymous said...

அப்ப நீங்க சொல்லியிருக்கற அத்தனை விஷயமும் மூத்த பதிவாளர்கள் கொடுத்த வாக்குமூலமா எடுத்துக்கலாமா?

யோவ் 403 நீ பாஸ்டன் போ...
யோவ் 307 நீ சிக்காகோ போ...
யோவ் 407 நீ நாசமா போ....

ஏட்டு நீங்க ரெண்டு பேரும் என் பின்னாடியே வாங்க, follow me...

இந்த போலீஸ்காரன் இருக்குற தமிழ்மணத்தில கயமைக்கு இடமே இருக்ககூடாது...

அத்தனை பேரையும் புடிச்சி வெளிய போடு. எத்தனை நாளைக்குதான் உள்ளவே போடறது. :((

இராம்/Raam said...

வெட்டி,

எங்கூர் பக்கம் இந்த பொதுமாத்து, பொதுமாத்து'ன்னு சொல்லுவாய்ங்கே... அது என்னான்னு ஒனக்கு தெரியுமா மக்கா????

:-)))))))

கதிர் said...

சாப்பாட்டை பத்தி ஒண்ணுமே சொல்லலியே!

மெனு என்னப்பா?

இது இல்லாம இரு வலைப்பதிவர் சந்திப்பா!! அய்யோ நினைச்சு கூட பாக்க முடியலப்பா!

முழுக்க முழுக்க கயமை பண்றது எப்படின்னு மட்டும் கூடிப்பேசி இருக்கீங்க!

கதிர் said...

//எங்கூர் பக்கம் இந்த பொதுமாத்து, பொதுமாத்து'ன்னு சொல்லுவாய்ங்கே... அது என்னான்னு ஒனக்கு தெரியுமா மக்கா????

:-))))))) //

அண்ணே எனக்கு தெரியாதுன்னே!

சொல்லிக்குடுங்களேன்!

Anonymous said...

அப்படி போடு ... போடு ...
அது சரி .. குத்தினா வலிக்காது ...

கதிர் said...

//பின்னுட்ட நாயகர்ன்னு ஒருத்தர் இருக்கிறார். அவரை நட்பாக்கிக் கொள்ளுஙகள் உபயோகமாக இருக்கும்//

வாத்தியாரய்யா நீங்களும் நம்மாளுதானா!

மாணவர்கள் மாணவர்கள்தான்!
வாத்தியார்கள் வாத்தியார்கள்தான்!
:))

வெற்றி said...

வெட்டி,
நல்ல நகைச்சுவையான பதிவு. சில மாதங்களுக்கு முன் நண்பர் இலவசக் கொத்தனார் அவர்கள் அதிக பின்னூட்டம் பெறுவது எப்படி என்று ஒரு பதிவு போட்டிருந்தார். அதை எமது குமரன் கூட மறு பதிவாகப் போட்டிருந்தார். நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு.

Anonymous said...

அல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டனுங்னா...

இனிமேல் நாம தூங்கற முழிச்சிக்கிற நேரம் எல்லாத்தையும் மாத்திக்கணும்!

ஒன் ஸ்மால் கொஸ்டின்
எவ்வளவு கயமை பண்ணாலும் காத்தடிக்காத இடங்கள்ல வாஸ்துப்படி என்ன மாத்தினா சரியா வரும்னு சொன்னீங்கன்னா அதயும் பண்ணிப்புடுவம்ல

Anonymous said...

வெட்டிப்பயல், திராவிடர் கேள்விக்கு அப்புரமா அதிகம் பிரச்சனை இல்லாம ஓட்டிகிட்டிருந்தீங்க.. பூங்காவை இப்படி "காட்டுத்தனமா" விமர்சிச்சி மறுபடி மெயின்ஸ்ட்ரீமுக்கு வாரீங்க போலிருக்கு..

ம்ம்.. பார்த்துப் பண்ணுங்க..

பூங்காவில் வந்த உங்க "மழை" கதை "காட்டுத்தனமா" இருந்ததில்லைன்னு தான் நெனக்கிறேன்..

கப்பி | Kappi said...

:)))

வாங்கிப் போட்டு குத்துங்கோவ்!!! :))

Anonymous said...

என்ன வெட்டி... பல தோசைகள பொறட்டி பொறட்டிப் போட்டிருக்கீங்க...

[கவல படாதீங்க... உங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு எல்லாருக்கும் தெரியும்..]

Anonymous said...

அடுத்த Devils Advocateல்

கவுண்டபெல்: வெட்டி, நீ கடைசிய போட்டுறுக்கியே ஒரு பதிவு, அது உலக மகா உள்குத்து (,வெளிக்குத்து, சைடுகுத்து) சாமீ

வெட்டி (தன்னடக்கதுடன்): வலைப்பதிவு வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா

நாமக்கல் சிபி said...

//Anonymous said...
வெட்டிப்பயல், திராவிடர் கேள்விக்கு அப்புரமா அதிகம் பிரச்சனை இல்லாம ஓட்டிகிட்டிருந்தீங்க.. பூங்காவை இப்படி "காட்டுத்தனமா" விமர்சிச்சி மறுபடி மெயின்ஸ்ட்ரீமுக்கு வாரீங்க போலிருக்கு..
//
நண்பரே,
நான் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. Partiality இல்லாத ஆழமான சிந்தனையுள்ள சமூக பதிவுகளைதான் நான் அப்படி சொன்னேன்.

நான் கலோக்கியலா இருக்கட்டுமேனு பயன்படுத்திய வார்த்தை உங்களை தப்பான அர்த்தம் கொள்ள செய்துவிட்டது. என் தப்புதான்...

சரியான நேரத்தில் மனசுல வெச்சிக்காம எடுத்து சொன்னதுக்கு மிக்க நன்றி!!!

இப்ப மாத்திட்டேன். நான் சொல்ல வந்ததை தெளிவா சொல்லிருக்கனானு பார்த்து சொன்னா சந்தோஷப்படுவேன்.

//ம்ம்.. பார்த்துப் பண்ணுங்க..

பூங்காவில் வந்த உங்க "மழை" கதை "காட்டுத்தனமா" இருந்ததில்லைன்னு தான் நெனக்கிறேன்..//

நான் கதை, பயணக்கட்டுரை அந்த மாதிரி விஷயங்களை சொல்லல. சமீபத்தில் எழுந்த சில பிரச்சனைகளுக்காக அப்படி சொன்னேன்.

அப்பறம் கீழ இருந்த உங்க கமெண்டை கொஞ்சம் எடுத்துட்டேன். ஏன்னா நான் அந்த அர்த்ததில சொல்லல. இந்த விளக்கமே போதும்னு நினைக்கிறேன்...

இவ்வளவு தெளிவா நல்லத எடுத்து சொல்ற நீங்க பேரோடையே கமெண்டை போட்டிருக்கலாம். முதல் முறையா என் ப்ளாக்ல நீங்க போடற பின்னூட்டம்னு நான் சந்தோஷப்பட்டிருப்பேன்...

Boston Bala said...

நாயகன் பாணியில் ஒக்க கேள்வி: இந்தப் பதிவு குறும்பா? குசும்பா? ; )

நாமக்கல் சிபி said...

//வடுவூர் குமார் said...

வெ..பயல்
இவ்வளவு விஷயம் இருக்கா?//
ஆமாங்க குமார்...
நானும் இப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன் :-)

// பின்னுட்டத்துக்கு மதிப்பு கொடுத்து 2 வரி எழுதுவது சரி தான்,அதானே அடுத்தவர்களை மதிக்கும் பண்பு?
தொடருங்கள் பாலாஜி. //
சரியா சொன்னீங்க...
அதை செய்தாலே நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க :-)

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

good, //

Thx a lot friend...

நாமக்கல் சிபி said...

//CVR said...

ஹ ஹ ஹா!!
you call this a பொழப்பு??? :P
//
இதுதாங்க நமக்கு இப்ப பொழப்பாயிடுச்சி :-)

// ps: தப்பா நினைச்சிக்காதீங்க தலைவா!! சும்மா தமாசுக்கு!! :D //
தப்பாவே நினைக்க மாட்டேன் :-)

நாமக்கல் சிபி said...

//sivagnanamji(#16342789) said...

அட! இதுலே இவ்வளவு இருக்கா!
நீங்க வெட்டி இல்ல; வழிகாட்டி........ //

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ;)

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

சரியான உள்குத்து பதிவுப்பா!
//
ஏய் என்னாச்சு உனக்கு???
இதுல எந்த குத்தும் இல்லை...

//
ஏம்பா வெட்டி,
இம்பூட்டு விஷயம் இருக்கறது ஒண்ணுமே தெரியாதா உனக்கு!

ரொம்ப ஆச்சரியமா இருக்குதே! //
ஆமாம்பா... எதுவுமே தெரியாம இத்தனை நாளா இருந்துட்டேன்... தெரிஞ்சிம் நமக்கு எதுவும் பயனில்லை... இப்பவும் டைப் பண்ணவுடனே பதிவ போட்டுடறேன் :-)

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

//Anony: Total time waste

Blogger: ஏய் அனானி... என் ப்ளாக்ல வந்து யூஸ் ஃபுல்லா டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு பார்த்த இல்லை. உனக்கு நல்லா வேணும்.//

சூப்பரப்பு!!! //

:-))

Anonymous said...

சூப்பரப்பு

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

//எதுவும் தெரியாம அப்பாவியாவே இருந்துட்டேன்.//

எலேய் என்ன கொடும இது??

அப்ப நானெல்லாம் இந்த விஷயத்துல பால்வாடிப்பயனா? //
நீயெல்லாம் பெரிய தில்லாலங்கடிப்பா...
வாரத்துக்கு ஒண்ணுனு பொறுமையா நல்ல பதிவா தர... நானெல்லாம் எதையாவது அடிச்சி ஆடிக்கிட்டு இருக்கேன் :-(

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

//கில்லி பரிந்துரைல எல்லாம் வரது எப்படி?//

கில்லியா?

அப்படின்னா?

விளக்கம் ப்ளீஸ் வெட்டி... //

இங்கே போய்
பார்

Anonymous said...

:))
hahaahah

நாமக்கல் சிபி said...

//நாடோடி said...

அய்யோ.. அய்யோ..

சிறுபிள்ளைதனாமால இருக்கு.

என்ன விளையாட்டு இது. //

இதுல என்னங்க மேக்ரோ சிறுபிள்ளை தனம்???

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

//அதுவும் ஒரு சின்ன டெக்னிக்தான். ராத்திரி படுக்கும் போது எல்லா பின்னூட்டத்தையும் பப்ளிஷ் பண்ணிடாதீங்க. ஒண்ணு ரெண்டு வெச்சிட்டு காலைல வந்தவுடனே அதை பப்ளிஷ் பண்ணுங்க. அப்பறம் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சி ரிப்ளை பண்ணுங்க. அதுக்காக அனானி கமெண்ட் எல்லாம் போட்டுக்க வேண்டாம். அது ரொம்ப ஆடா இருக்கும்.//

இதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும்னு யோசிச்சி பார்த்தேன்...
சிரிப்பு தாங்க முடியலப்பா! //


இதுல என்னப்பா சிரிப்பு வேண்டியிருக்கு???

நாமக்கல் சிபி said...

//SP.VR.சுப்பையா said...

மூ.ப: நம்ம பதிவைப் பலர் பார்வையிட ஷார்ட் கட் ஒன்னுமில்லையா?

வெட்டி: ஏன் இல்லை. பின்னுட்ட நாயகர்ன்னு ஒருத்தர் இருக்கிறார். அவரை நட்பாக்கிக் கொள்ளுஙகள் உபயோகமாக இருக்கும்

மூ.ப்: அதுவும் சரிதான்.மேலும் ஏதாவது ஒரு யோசனை சொல்லுங்கள்

வெட்டி: மூன்று நாள் பதிவு போடுங்கள். அதற்கு வரும் பின்னூட்டங்களுக்குப் பதில் எழுதுங்கள். வாரத்தில் மீதமுள்ள மூன்று நாட்களில் மற்றவர்களின் பதிவுகலைப் படித்துப் பின்னூட்டமிடுங்கள். பிறகு பாருங்கள்

SP.VR.SUBBIAH //

வாத்தியாரே,
படம் கிளப்பிட்டீங்க...
இதுதான் நான் பொதுவா எல்லாருக்கும் சொல்றது... இதுல மறந்துட்டேன் :-(

மக்களே நோட் பண்ணிக்கோங்க...

நாமக்கல் சிபி said...

//dubukudisciple said...

என்ன வெட்டி!!!
ஏதோ சாப்டது , டான்ஸ் ஆடினது , பாட்டு கேட்டது எல்லாம் போடுவீங்கனு பார்த்தா !!!
சரி சரி!!
இதுவும் புதுசா ப்ளாக் ஆரம்பிக்கரவங்களுக்கு நல்ல உதவியா இருக்கும்!!! நன்றி //

அதுவும் வருங்க...
இது சின்ன சின்ன டிப்ஸ்... எல்லாருக்கும் பயனுள்ளதா இருக்குமேனு ;)

நாமக்கல் சிபி said...

// போலீஸ்கார் said...

அப்ப நீங்க சொல்லியிருக்கற அத்தனை விஷயமும் மூத்த பதிவாளர்கள் கொடுத்த வாக்குமூலமா எடுத்துக்கலாமா?

யோவ் 403 நீ பாஸ்டன் போ...
யோவ் 307 நீ சிக்காகோ போ...
யோவ் 407 நீ நாசமா போ....
//
போலிஸ்கார் போலிஸ்கார்,
இதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு... நீங்க எதுவும் கண்டுக்க கூடாது :-)

//
ஏட்டு நீங்க ரெண்டு பேரும் என் பின்னாடியே வாங்க, follow me...

இந்த போலீஸ்காரன் இருக்குற தமிழ்மணத்தில கயமைக்கு இடமே இருக்ககூடாது...

அத்தனை பேரையும் புடிச்சி வெளிய போடு. எத்தனை நாளைக்குதான் உள்ளவே போடறது. :(( //
எதுக்கு வெளில போலிஸ்கார்???

நாமக்கல் சிபி said...

//ராம் said...

வெட்டி,

எங்கூர் பக்கம் இந்த பொதுமாத்து, பொதுமாத்து'ன்னு சொல்லுவாய்ங்கே... அது என்னான்னு ஒனக்கு தெரியுமா மக்கா????

:-))))))) //

ஆஹா...
நல்லா கெளப்பறாங்கயா பீதிய...

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

சாப்பாட்டை பத்தி ஒண்ணுமே சொல்லலியே!

மெனு என்னப்பா?
//
அதுக்கு தனிப்பதிவே போடணும்பா... அவ்வளவு ஐட்டம்ஸ்...

//
இது இல்லாம இரு வலைப்பதிவர் சந்திப்பா!! அய்யோ நினைச்சு கூட பாக்க முடியலப்பா!

முழுக்க முழுக்க கயமை பண்றது எப்படின்னு மட்டும் கூடிப்பேசி இருக்கீங்க!
//
இல்லப்பா...
ஏதோ இலக்கியம் அது இதுனு நமக்கு பிரியாத மாதிரி நிறைய பேசினாங்க.. இது நம்ம சைட்ல இருந்து புதுசா வரவங்களுக்கு பயனுள்ள டிப்ஸ் ;)

நாமக்கல் சிபி said...

//சுந்தர் said...

அப்படி போடு ... போடு ...
அது சரி .. குத்தினா வலிக்காது ... //
எங்க குத்தறாங்க? எதை குத்தறாங்கன்றதை பொருத்தது...

இலவசக்கொத்தனார் said...

ஆக மொத்தம் என்னை உங்க சந்திப்பில் மிஸ் பண்ணவே இல்லை! அவ்வளவுதானே? :)))

குமரன் (Kumaran) said...

கற்றதும் பெற்றதும் நல்லா இருக்கு பாலாஜி. ஊரறிந்த இரகசியங்கள் ஆச்சே இதெல்லாம்.

நாமக்கல் சிபி said...

//வெற்றி said...

வெட்டி,
நல்ல நகைச்சுவையான பதிவு. சில மாதங்களுக்கு முன் நண்பர் இலவசக் கொத்தனார் அவர்கள் அதிக பின்னூட்டம் பெறுவது எப்படி என்று ஒரு பதிவு போட்டிருந்தார். அதை எமது குமரன் கூட மறு பதிவாகப் போட்டிருந்தார். நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு. //

மிக்க நன்றி வெற்றி!!!

அது எல்லாம் படிச்சிதான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கோம் ;)

நாமக்கல் சிபி said...

//ராசுக்குட்டி said...

அல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டனுங்னா...

இனிமேல் நாம தூங்கற முழிச்சிக்கிற நேரம் எல்லாத்தையும் மாத்திக்கணும்!
//
வலைப்பதிவர்னா சும்மாவா???
இந்த மாதிரி தியாகம் எல்லாம் பண்ணிதான் ஆகனும் :-)


//
ஒன் ஸ்மால் கொஸ்டின்
எவ்வளவு கயமை பண்ணாலும் காத்தடிக்காத இடங்கள்ல வாஸ்துப்படி என்ன மாத்தினா சரியா வரும்னு சொன்னீங்கன்னா அதயும் பண்ணிப்புடுவம்ல //
அதுக்கு இன்னோன்னு இருக்கு...
அடுத்தவங்க பதிவுல போயி நாம கும்மியடிக்கணும் :-)

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

:)))

வாங்கிப் போட்டு குத்துங்கோவ்!!! :)) //

கப்பி,
இது டார்கெட் பதிவு...
கொஞ்சம் களமிறங்கு சிங்கமே!!!

நாமக்கல் சிபி said...

//ஜி said...

என்ன வெட்டி... பல தோசைகள பொறட்டி பொறட்டிப் போட்டிருக்கீங்க...
//
எல்லாருக்கும் தெரியட்டுமேனுதான் ;)

//
[கவல படாதீங்க... உங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு எல்லாருக்கும் தெரியும்..] //
நம்மல பத்தி ஊருக்கே தெரியும். இருந்தாலும் ஒரு வார்த்தை நாமலே சொல்லிடணுமில்லை ;)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாயகன் பாணியில் ஒக்க கேள்வி://

அதே பாணியில் இன்னும் ஒக்க கேள்வி!
பாலாஜி நீங்க வெட்டியா, சுட்டியா?:-)

//இதுல மூத்த பதிவரென்பது ஒரு ஆள் இல்லை. என்னை தவிர எல்லாருமே மூத்த பதிவர்ங்க தான்//

அப்படிப் போடுங்க அருவாளை!
உண்மை தான்!
நம்ம பாலாஜி மட்டும் தான் பதிவர் மாநாட்டில் காபியை straw வைத்த பாட்டிலில் குடிச்சார்! :-)

நாமக்கல் சிபி said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நாயகன் பாணியில் ஒக்க கேள்வி://

அதே பாணியில் இன்னும் ஒக்க கேள்வி!
பாலாஜி நீங்க வெட்டியா, சுட்டியா?:-)
//
:-))

//
//இதுல மூத்த பதிவரென்பது ஒரு ஆள் இல்லை. என்னை தவிர எல்லாருமே மூத்த பதிவர்ங்க தான்//

அப்படிப் போடுங்க அருவாளை!
உண்மை தான்!
நம்ம பாலாஜி மட்டும் தான் பதிவர் மாநாட்டில் காபியை straw வைத்த பாட்டிலில் குடிச்சார்! :-) //
அய்யோ அந்த அளவுக்கு சின்ன பையன் இல்லைங்கோ ;)

நாமக்கல் சிபி said...

// Vicky said...

அடுத்த Devils Advocateல்

கவுண்டபெல்: வெட்டி, நீ கடைசிய போட்டுறுக்கியே ஒரு பதிவு, அது உலக மகா உள்குத்து (,வெளிக்குத்து, சைடுகுத்து) சாமீ

வெட்டி (தன்னடக்கதுடன்): வலைப்பதிவு வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா //

விக்கி,
நம்ம பதிலையும் நீங்களே சொல்லிட்டதால நோ கமெண்ட்ஸ் ;)

நாமக்கல் சிபி said...

//Boston Bala said...

நாயகன் பாணியில் ஒக்க கேள்வி: இந்தப் பதிவு குறும்பா? குசும்பா? ; ) //

இது அனுபவம் ;)

நாமக்கல் சிபி said...

// சுப்பு said...

சூப்பரப்பு //

மிக்க நன்றி சுப்பு..

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...

ஆக மொத்தம் என்னை உங்க சந்திப்பில் மிஸ் பண்ணவே இல்லை! அவ்வளவுதானே? :))) //

கொத்ஸ்,
என்ன இப்படி சொல்லிட்டீங்க???
நாங்க எல்லாம் மிஞ்சிப்போனா நூறு அடிச்சிருப்போமா? நீங்க சாதாரணமா ஆரம்பிச்சா 400 - 500 தானே :-)

நாமக்கல் சிபி said...

//குமரன் (Kumaran) said...

கற்றதும் பெற்றதும் நல்லா இருக்கு பாலாஜி. ஊரறிந்த இரகசியங்கள் ஆச்சே இதெல்லாம். //

மிக்க நன்றி குமரன்...
ஆனா இது புதுசா வரவங்களுக்காக ;)

Anonymous said...

ப்ளாக்ல இத்தனை விஷயம் இருக்கா?

நாமக்கல் சிபி said...

//:: MyFriend ::. said...

ப்ளாக்ல இத்தனை விஷயம் இருக்கா? //

நான் சொன்னது ரொம்ப கம்மிங்க..
இன்னும் நிறைய இருக்கு :-)