தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, December 20, 2006

ஏழைப்பெண் மகாலட்சுமி கல்விக்கு உதவுங்களேன் - மீள்பதிவு

மேலும் சில தகவல்களுடன்...
செந்தழல் ரவி அவர்களின் பதிவை மீண்டும் ஒரு முறை இங்கே பதிப்பிக்கிறேன்...

இதுவரை எந்த பதிவை எழுதுவதற்க்கு முன் யோசித்ததில்லை...அதிகபட்சமாக
பத்து நிமிடத்தில் கடகடவென டைப்செய்வதுதான்...ஆனால் இதனை எழுதுமுன் தினறல்...பெரிய யோசனை...எப்போது பப்ளிஷ் செய்யலாம்....இதனை வலைப்பூவினர் வரவேற்ப்பார்களா ? வெற்றிகரமாக செய்ய முடியுமா ?

ஏற்கனவே என்றென்றும் அன்புடன் பாலா நிறைவாக செய்தாரே !! நம்மாலும்
முடியும் - என்ற உந்துதல் ஏற்பட - முதலில் ஒரு பதிவரிடம் சொன்னபோது அவர் மிகச்சிறந்த வழிகாட்டுதலை தந்தார்...இவ்வளவு பீடிகை வேண்டாம் இல்லையா...விஷயத்துக்கு
வந்துவிடுகிறேன்...!!!

சமீபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு நன்பரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது கடந்த வாரம் - கல்விக்காக பணம் கட்டமுடியாததால் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மாணவியை பற்றி கூறினார்...இதயம் கனத்துப்போனது...இதனை நம் வலைப்பூவினரிடம் கூறி
தேவையான நிதியை திரட்டி அந்த மாணவியின் கல்விக்கண் திறந்தாலென்ன என்ற எண்ணம் உதயமானது...!! அதை செயல்படுத்துமுகத்தான் இந்த பதிவு...

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி கிராமத்தை சேர்ந்த இந்த மாணவியின் பெயர் ஆர்.மகாலட்சுமி..தந்தையார் பெயர் ராமன்..படித்தது எம்.எஸ்.ஸி / காந்திகிராமம் கல்லூரியில்...எம்.எஸ்.ஸி அப்ளைடு பயாலஜி பிரிவில் பட்டம் பெற்றுள்ள இவரது மதிப்பெண் ( 1978 / 2750 ). இப்போது பி.எட்: ஆர்.வி.எஸ் எஞ்சினீயரிங் கல்லூரியில் படிக்கும் போது தான் இந்த நிகழ்வு அந்த பெண்ணுக்கு...தந்தையார் கடைகளில் எண்ணையை வாங்கி வீடுவீடாக விற்கும் பணியை செய்து சொற்ப வருமானம் பெறுகிறார்...ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர்..தம்பி படிக்காததால் ஒரு மெக்கானிக் ஒர்க் ஷாப்பில் வேலைசெய்கிறார்...தங்கை ஐ.டி.ஐ படிக்கிறாராம்... இவள் முன்னுக்கு வந்தால்தான் குடும்பம் வாழமுடியும் என்னும் நிலை....மிகுந்த ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது கல்விக்கண் திறந்தால் வாழுமே ஒரு குடும்பம்...

இந்த சமயத்தில் நம் உள்ளத்தில் எழும் சாதாரண கேள்விகள் என்ன ? இந்த பெண் உண்மையிலேயே உதவியை பெற தகுதி உள்ளவரா ? நாம் கொடுக்கும் நிதியை இவர் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்த மாட்டார் என்பது என்ன நிச்சயம் ? இந்த விவரங்களை சரிபார்த்தது யார் ? மாணவியின் மதிப்பெண் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டனவா ? இந்த மாணவிக்காக நாம் அளிக்கும் நிதி சரியாக கல்லூரி கட்டணத்தை செலுத்த பயன்படுத்தப்படுமா ? என்பன போன்றவையே...

வலையுலகின் மூத்த பதிவரும் நம் அனைவரின் மதிப்புக்கும் அன்புக்கும் உரியவருமாகிய பதிவர் ஞானவெட்டியானை அவரது இல்லத்தில் நேற்று மாலை மாணவி மகாலட்சுமி சந்தித்தார்...அய்யா அவர்கள், மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்ததோடல்லாமல் முழு இதயத்தோடு இந்த மாணவிக்கு நாம் உதவி செய்யவேண்டும் என்று கூறி இருக்கிறார்.....

இப்போது நமது திட்டம் என்ன ? ஞானவெட்டியான் அய்யா அவர்கள் முகவரிக்கு வங்கி வரைவோலையை / காசோலையை அனுப்பிவிட்டால் அவர் அதை தொகுத்து கல்லூரியிலேயே கட்டிவிடுவதாக கூறி இருக்கிறார்...அவரது விவரங்கள் (N.JAYACHANDRAN - a/c @ SBI - NEHRUJI NAGAR.)

அவரது மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்
njaanam@gmail.com
0451-2436844

வங்கி கணக்கு

N.JAYACHANDRAN
SBI Account No: 10261284116
NEHRUJI NAGAR
DINDUKKAL

அனுப்பியபிறகு தனக்கு ஒரு மடல் அனுப்புமாறு ஞானவெட்டியான் கேட்டுள்ளார்..அவரது மின்னஞ்சல் மீண்டும் njaanam@gmail.com

ஐசிஐசியை வங்கி கணக்கு தேவையுள்ளது என்று தெரிந்துள்ளதால் என் ஐசிஐசிஐ வங்கி கணக்கையும் தருகிறேன்...

ICICI A/C : 625301514495
Branch : Kumar Park Branch
Name : Ravindran A

எனக்கு ஒரு மடலும் அனுப்பி தகவலை தெரிவித்துவிட்டால் நன்றாக இருக்கும்...
zyravi@yahoo.com


உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும்...!!!

பின்னூட்டத்தில் வினவிய நன்பருக்காக - மாணவியின் மொத்த தேவைப்பாடு ரூ அறுபது ஆயிரம் !!!! வேறு ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும்...மேலும் சில பின்னூட்டங்களை பார்த்ததும் தமிழர் நெஞ்சில் ஈரம் இன்னும் வற்றிவிடவில்லை என்பதை அறிந்தேன்...நெஞ்சு நெகிழ்கிறது..

25 comments:

நாமக்கல் சிபி said...

நண்பர்களே "புது வெள்ளம்" ஒரு நாள் முழுதும் முகப்பிலிருக்க வேண்டுமென்ற ஆசையில் கவுண்டரின் லொள்ளு பதிவை இன்று தவிர்த்தேன்.

ஆனால் அதைவிட ஒரு சிறந்த பணிக்கு ரவி அவர்கள் பணித்ததால் இந்த பதிவு...

Divya said...

வெட்டி, ஒரு பெண்ணின் கல்விக்காக உதவி செய்ய ஞாவவெட்டியான், ரவி மற்றும் நீங்கள் எடுக்கும் இந்த முயற்ச்சியினை பாராட்டுகிறேன்,

\"முகவரிக்கு வங்கி வரைவோலையை / காசோலையை \"

வரைவோலை என்றால் என்ன??

நாமக்கல் சிபி said...

//Divya said...

வெட்டி, ஒரு பெண்ணின் கல்விக்காக உதவி செய்ய ஞாவவெட்டியான், ரவி மற்றும் நீங்கள் எடுக்கும் இந்த முயற்ச்சியினை பாராட்டுகிறேன், //

திவ்யா,
இது அவரின் பணிக்கு என்னாலான சின்ன உதவி.

//\"முகவரிக்கு வங்கி வரைவோலையை / காசோலையை \"

வரைவோலை என்றால் என்ன??//
வரைவோலை - DD - Demand Draft
காசோலை - Cheque

அப்படினு நினைக்கிறேன்...

சுப்பு said...

காகோலை - Demand Draft
இது பணத்துக்கு ஈடானது ஆகவே உடனே பணம் கிடைக்கும்

வரைவோலை - Cheque இது உங்களது கணக்கிலிருந்து எடுத்த பின் தான் பணம் பட்டுவாடா செய்யப்படும்

Syam said...

//வரைவோலை - DD - Demand Draft
காசோலை - Cheque

அப்படினு நினைக்கிறேன்... //

நினைக்க எல்லாம் வேண்டாம் வெட்டி, அது சரிதான்...

Syam said...

நல்ல முயற்ச்சி...என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்கிறேன்...ஏற்கனவே ஏன்றென்றும் அன்புடன் பாலாக்கு குடுத்த வாக்குறுதிய இன்னும் செய்யல...ஏதோ ஒரு வேலை வந்து மறக்க வெச்சுடுது....கண்டிப்பா ரெண்டும் உடனே பண்ணனும்...

SK said...

What is the requirement?

This info. is missing!

நாமக்கல் சிபி said...

SK ஐயா,
ஞானவெட்டியான் ஐயாவிற்கு இந்த மெயில் ஐடிக்கு அனுப்பினால் தகவல் கிடைக்குமென்று நினைக்கிறேன்...

njaanam@gmail.com

Anonymous said...

//வரைவோலை என்றால் என்ன??//
வரைவோலை - DD - Demand Draft
காசோலை - Cheque

அப்படினு நினைக்கிறேன்...
//

Cheque-க்குக் காசோலை சரி.

Demand Draft-க்கு வங்கிப் பணவிடை என்று கணக்குப் பதிவியலில் சொல்லித் தந்தார்கள்.

வரைவோலை என்பது எதற்கு என்று நினைவில்லை. Pay Order-க்காக இருக்கலாம். ஆனால் DD வங்கிப்பணவிடை என்பது உறுதியாகத் தெரியும்!

வெற்றி said...

வெட்டி,
தகவலுக்கு நன்றி. நான் ஞானவெடியான் ஐயாவோடு தொடர்பு கொள்கிறேன்.

Priya said...

உருப்படியான முயற்சிங்க..

செந்தழல் ரவி said...

ஒரு சிறிய பின்னூட்ட கயமை...பதிவை சற்றே அப்டேட் செய்துள்ளேன்...அன்புடன் நீங்களும் பார்த்துக்கொள்ளவும்...

Hariharan # 26491540 said...

மகாலட்சுமிக்கு கல்விக்காக தேவைப்படும் பணம் ரூ 60,000/- என செந்தழல் ரவியின் பதிவில் படித்தேன்.

கல்விக்கான இந்த கூட்டு முயற்சியில் எனது பங்களிப்பை திரு.ஞானவெட்டியான் ஐயாவின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கிறேன்!

படிப்பார்வம் உள்ளவர்க்கு கல்விக்கு உதவ சந்தர்ப்பம் அளித்ததற்கு நன்றி!

ஞானவெட்டியான் said...

அன்பு SK,
ஹரிகரன் கூறியபடி,"மகாலட்சுமிக்கு கல்விக்காக தேவைப்படும் பணம் ரூ 60,000/- என செந்தழல் ரவியின் பதிவில் படித்தேன்."

இயன்ற அளவு உதவி செய்யலாம்.

இராம் said...

கட்டாயம் உதவி செய்யணும் பாலாஜி.

நான் ஞானவெட்டியான் ஐயா'வே தொடர்பு கொள்கிறேன்.

பதிவிற்கு நன்றி

ச.சங்கர் said...

நல்ல ஒரு பணியை கையிலெடுத்த ஞானவெட்டியான்,செந்தழல் ரவி மற்றும் "வெட்டிப்பயல் " பாலாஜி அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்...எனது பங்களிப்பை ஞானவெட்டியான் அவர்களது வங்கிக் கணக்கில் நாளை சேர்ப்பித்து விடுகிறேன்

Anonymous said...

கீழ் காணும் பதிவை படித்தீர்களா?
http://pinathal.blogspot.com/2006/12/blog-post_22.html

செந்தழல் ரவி said...

அன்புடன் சங்கர்...நன்றியடையவானாகிறான் ரவி உங்களுக்கு...

Arunkumar said...

பாராட்டப்பட வேண்டிய முயற்சி வெட்டி. நான் ஐயாவை தொடர்பு கோள்கிறேன்.

நாமக்கல் சிபி said...

இதில் ரவி அவர்களுடைய ICICI Bank AC no அப்டேட் செய்துள்ளேன்...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பொன்ஸ் பதிவில் இருந்து, முத்தாய்ப்பாக!

-> படிப்பு வாசனையற்ற குடும்பத்திலிருந்து வருபவர்
-> பாதி கட்டணம் ஏற்கனவே கடன்வாங்கிக் கட்டியவர்
-> பாதி வருடத்தை இந்தப் படிப்பில் ஏற்கனவே செலவழித்தவர்

என்பது போன்ற விவரங்களை எண்ணிப் பார்க்கும் போது, மற்ற விஷயங்கள் அடிபட்டுப் போவதாகவே நம்புகிறேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!
ஞானம் ஐயா, செந்தழல் ரவி மற்றும் பாலாஜி ஆகியோருக்கு வாழ்த்தும் நன்றியும்!

ஞானம் ஐயாவை இன்று தொடர்பு கொள்கிறேன்! ICICI என்பதால் இன்னும் எளிது!

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

ஏழையின் கண்ணீரை துடைக்க முயன்ற உங்களின் முயற்சிக்கு நன்றி!

சேதுக்கரசி said...

நல்ல காரியத்துக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

Friends of Children (FoC) is a group of individuals who have an urge to contribute their share to society.

The main objective of FoC is to sponsor deserving students for higher education (above Class 10), guide them and assist them to earn their own living.

We try to ensure that not only the best student is supported, but also a committed and talented student is encouraged as well.


At present, FoC is sponsoring 85 students in Pune for academic year 2006-07. (60 Students in Pune and 25 students from the villages near Narayangaon). The approximate expense for these students is expected to be around 5.0 Lakh.

FoC Students Picture

FoC has raised & spent over Rs 10.0 lakhs for Educational purposes of over 200 Students in last 3 years.

FoC raises funds on a regular basis. We encourage our friends to form a group of 5 to 10 persons and donate as little as Rs 100 per month (100 x 12 x 5= Rs 6000 per year) which is sufficient for the yearly educational expenses for one student. FoC is registered as a Society under Maharashtra Charity Commission (Mh/115/2004/Pune).

This mail is only for information, If possible anyone can do the same in their own city.
Thanks
FoC Team
www.focpune.blogspot.com