தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, December 18, 2006

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு

CNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் கேட்டால் முதல்வனில் "Q" TVக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படுமென்பதால் சினிமா நடிகர்களை கேள்விகள் கேட்டு ஒரு நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

தமிழில் கதாநாயகர்களை திக்குமுக்காட வைப்பதில் சிறந்தவர் யார் என்று யோசித்ததில் அனைவரின் மனதிலும் உதித்தது கவுண்டரே! அவர் பல படங்களில் பிஸியாக இருந்தாலும் மக்களுக்காக இந்த நிகழ்ச்சியை நடத்த ஒத்துக்கொள்கிறார். இனி...

முதல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிம்பு...

க: வாங்க சிம்பு. உங்க வல்லவன் படம் படுதோல்வி அடைஞ்சதுக்கு என்ன காரணம்?

சி: படுதோல்வியா? யார் சொன்னது? படம் வசூல்ல சந்திரமுகிய முந்திடுச்சுனு எனக்கு ரிப்போர்ட் வந்துட்டு இருக்கு.

க: எங்க? அந்த ரிப்போர்ட்ட இங்க காட்டு பார்ப்போம்.

சி: அதெல்லாம் இப்ப இங்க இல்லை. படத்த ஓட விடாமா தடுக்கறதுக்கு ஒரு சிலர் முயற்சி செஞ்சாலும் படம் பயங்கரமா ஓடுதுனு அகில இந்திய லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு ரசிகர் மன்றத்துல இருந்து எனக்கு தகவல் வந்துருக்கு.

க: எங்க தியேட்டர்ல இருந்து ஓட விடாமா தடுக்கவா? அதென்னடா லிட்டில் சூப்பர் ஸ்டார்? யாரு உனக்கு அந்த பேர கொடுத்தது. (கவுண்டர் அவர் பாணிக்கு செல்கிறார்)

சி: தமிழக மக்கள்... (சொல்லிவிட்டு ஸ்டைலாக லுக் விடுகிறார்)

க: டேய் நானே டக்கால்டி! நீ எனக்கே டகால்டி கொடுக்கறயா? உங்க அப்பா அந்த தாடிக்காரனே படத்துல டைட்டில் கார்ட்ல போட்டா நீ லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆயிடுவீயா? (ஹை பிட்ச்சில் கேட்கிறார்). அப்ப உன் தம்பிய லிட்டில் லிட்டில் சூப்பர் ஸ்டாராடா???

சி: இந்த சிம்புவ பத்தி யாருக்கும் இப்ப புரியாது... போக போகத்தான் இவன் திறமை எல்லாருக்கும் புரியும்.

க: சரி அதல்லாம் இருக்கட்டும். ஏன் அந்த பொண்ணு நயந்தாரா உதட்ட புடிச்சி கடிச்சு வெச்ச?

சி: அது படத்துக்கு தேவைப்பட்டுச்சு. படம் பார்த்தா உங்களுக்கே புரியும்.

க: டேய்! உன்னய கேள்வி கேக்கனும்னு அந்த கொடுமைய வேற பார்த்தனேடா... (அழுகிறார்)
அது ஒரு படம். அதுக்கு இந்த காட்சி ரொம்ப முக்கியம்? ஏன்டா சம்பந்தமே இல்லாம நக்மாக்கூட டூயட் ஆடன எனக்கே நீ டக்கால்ட்டி கொடுக்கப்பாக்கற.

சி: அப்ப உங்களுக்கே அந்த காட்சியோட முக்கியத்துவம் புரிஞ்சிருக்கும்.

க: டேய் சிம்பு மண்டையா, ஏன்டா இந்த ஒன்றையனா படத்த எடுக்க உனக்கு ரெண்டு வருஷமாச்சு?

சி: அது அந்த படத்த பார்த்தா உங்களுக்கே புரியும்...

க: வீனா என்னய டென்ஷனாக்காத. ஒன்னுமே இல்லாத ஒன்றையனா படத்த எடுத்து வெச்சிட்டு எத கேட்டாலும் படத்த பாருங்க புரியும்... படத்த பாருங்க புரியும் சொல்லிக்கிட்டே போகற. அதுல புரிஞ்சிக்க அப்படி என்னடா இருக்கு?

சி: நீங்க யார் சொல்லி இந்த மாதிரி கேள்வியல்லாம் கேக்கறீங்கனு எனக்கு தெரியும். "அவன் அம்பானி பொண்ணை கட்டிக்கிட்டு பெரிய ஆளாகணும்னு பாக்கறான். ஆனா நான் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்"

க: உன்னைய எவன்டா ஆக வேணாம்னு சொன்னா?
ஓ! நீ யாரை மனசுல வெச்சி சொல்றனு ஐ அம் கெட்டிங் யா.
ஏன்டா அவனே ஒரு தீஞ்ச மண்டையன். அவன் நடிக்கற படமே ஃப்ளாப் மேல ஃப்ளாப் ஆகுது. இதுல அவன் உனக்கு போட்டி. உங்க அக்கப்போரு தாங்கமுடியலைடா.

சி: போட்டில யார் முதல்ல போறாங்கன்றது முக்கியமில்லை. யார் கடைசியா முன்னாடி போகறாங்கன்றதுதான் முக்கியம்.

க: டேய்! டேய்!!!
இப்பத்தான உனக்கு சொன்னேன். இதுக்கு மேல இங்க பஞ்ச் டயலாக் பேசன உன் காத புடிச்சி கடிச்சி வெச்சிடுவேன். ஆமா...
அதுசரி... அது என்னடா மன்மதன் படத்துல கடைசியா Film By Simbuனு போட்ட?

சி: ஏன்னா அது என்னோட படம். நான் தான் அதை உண்மையாலுமே டைரக்ட் பண்ணேன்...
20 வயசுல டைரக்ட் பண்ற திறமை இங்க யாருக்கு இருக்கு?

க: அப்பறம் எதுக்குடா எடுத்தவுடனே வேற ஒருத்தன் பேற போட்ட???
அவர் என்ன உங்க பினாமியா?
படம் ஃபிளாப் ஆனா அடுத்தவன் பேற போட வேண்டியது ஹிட்டான உங்க பேர போட வேண்டியது. எதுக்குடா இப்படி ஊர ஏமாத்தி திரியறீங்க?

சி: !@#$%^&

க: அது சரி! ஏன்டா எப்ப பார்த்தாலும் கைய விசுக்கு விசுக்குனு சுத்தி எஃபக்ட்ட கொடுக்கற?

சி: ஏன்னா, நான் லிட்டில் சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டார் மாதிரி இந்த மாதிரி ஸ்டைல் பண்ணனும்.

க: டேய் ஆப்ப சட்டி தலையா, அடத்தவங்க ஸ்டைல காப்பி பண்ணாதீங்கடா. உங்களுக்குனு ஒரு ஸ்டைல உருவாக்குங்க. அப்ப தான் உருப்புடுவீங்க.சரி இதெல்லாம் உனக்கு யார்டா சொல்லி கொடுத்தா.

சி: ஆக்ஷன் தான் இங்க. டைரக்ஷன் அங்க. (சொல்லிவிட்டு ஸ்டைலாக திரும்பி பார்க்க. செட்டிற்குள் ஒரு உருவம் வருகிறது)

க: ஐய்யோ கரடி! டேய் சிம்பு மண்டையா நீ பண்ண அலும்பல நான் கேட்டேனு என்னைய கரடிய விட்டு கொல்ல பாக்கறியா?
டேய் யாராவது அத புடிச்சி கட்டுங்கடா...

சி: சார்! கத்தாதீங்க. அது எங்க அப்பா.

TR:
த்ரீ ரோசஸச முந்திடுச்சிடா டாப் ஸ்டாரு
அந்த தனுச முந்துவாண்டா என் லிட்டில் சூப்பர் ஸ்டாரு

க:இவன் வேற வந்துட்டானா?. டேய் ரெண்டு பேரும் இப்படியே ஓடி போயிடுங்க இல்லைனா நானே உங்க மூஞ்சில ஆசிட் ஊத்திடுவேன்.
மக்களே நல்லா பாத்துக்கோங்க இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாகமாட்டேன். இவனுங்க பண்ற அளும்புக்கெல்லாம் நீங்களே நல்லா கவனிச்சிக்கோங்க...

இந்த வாரம் முழுதும் இந்த தொடர் வரும்... தினம் ஒரு பிரபலங்களுடன்...

56 comments:

அரை பிளேடு said...

படிக்கல.. இனிமேதான்..

இன்னாபா அடுத்தடுத்து குட்துக்னே கீற..

ஆமா நாந்தான் பர்ஸ்ட்டா ???

இலவசக்கொத்தனார் said...

வாரம் முழுசுமா? நடக்கட்டும். பாவம் அடுத்த வாரம் கவுண்டரை வெளிய நடக்க விடாம இருக்க சதி பண்ணற மாதிரி தெரியுது.

:))))

Unknown said...

I am first person....

Unknown said...

Veti super ma.... we are expecting dil maha more...

Arunkumar said...

கலக்கிட்டிங்க போங்க :)
செம காமெடியா எழுதியிருக்கீங்க...

//
க: உன்னைய எவன்டா ஆக வேணாம்னு சொன்னா?
ஓ! நீ யாரை மனசுல வெச்சி சொல்றனு ஐ அம் கெட்டிங் யா.
ஏன்டா அவனே ஒரு தீஞ்ச மண்டையன். அவன் நடிக்கற படமே ஃப்ளாப் மேல ஃப்ளாப் ஆகுது. இதுல அவன் உனக்கு போட்டி. உங்க அக்கப்போரு தாங்கமுடியலைடா.
//

சான்ஸே இல்ல :)

நாமக்கல் சிபி said...

//அரை பிளேடு said...

படிக்கல.. இனிமேதான்..

இன்னாபா அடுத்தடுத்து குட்துக்னே கீற..

ஆமா நாந்தான் பர்ஸ்ட்டா ??? //

படிச்சிட்டு சொல்லுங்க...
ஏதோ நம்மால முடிஞ்சது...

நீங்க தான் :-)

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...

வாரம் முழுசுமா? நடக்கட்டும். பாவம் அடுத்த வாரம் கவுண்டரை வெளிய நடக்க விடாம இருக்க சதி பண்ணற மாதிரி தெரியுது.

:)))) //

வாங்க கொத்ஸ்...

சொல்ல முடியாது... அடுத்த வாரம் அவரை வெச்சி இந்த நிகழ்ச்சி கூட விஜய்ல ஆரம்பிக்கலாம் ;)

நாமக்கல் சிபி said...

//NellaiKanth said...

I am first person.... //

வாங்க நெல்லை காந்த்...

அரை பிளேடு முதல்ல வந்து சீட் பிடிச்சி வெச்சிட்டாரு :-)

Divya said...

வெட்டி, அட்டகாசமா எழுதியிருக்கிறீங்க.........சூப்பர் காமடி, ரசித்து சிரித்தேன்!!

தொடர்ந்து ஒரு பிரபலத்தை நக்கல் பண்ணபோறீங்களா?? ஆர்வத்துடன் காத்திருக்க்கிறோம்,
நட்சத்திரம் பிரகாசமா ஜொலிக்குது.....வாழ்த்துக்கள் வெட்டி!!

அரை பிளேடு said...

நல்லா கீது..

ஒரிஜினல் சிம்பு பேட்டி மாறியே.. சாதாரணமா சிம்பு பேட்டியே காமடி...

அடுத்த படத்துக்கு டைரக்ஷன் ப்ளஸ் ஆக்சன் அப்பிடின்னா சிம்பு சம்பளம் அஞ்சி கோடி... தெரியுமில்ல..

அவரு யாரு நடிப்புல அடுத்த சூப்பர் ஸ்டாரு..

டைரக்ஷன்ல அடுத்த ஷங்கரு...

கவுண்டரு கம்மியா கேள்வி கேட்டு சுருக்கா சிம்புவை உட்டுட்ட மாறி கீதே...

அந்த அதி முக்கியமான கேள்வி மிஸ்ஸிங்...

நயன்தாரா காதல் என்னாச்சு ???

பினாத்தல் சுரேஷ் said...

நல்லா இருக்கு வெட்டி.

நேயர் விருப்பம்:

கவுண்டர் பேட்டிக்கு பரிந்துரைக்கும் நபர்கள்
1. எஸ் ஜே சூர்யா
2. ராம நாராயணன்
3. பேரரசு
4. யாராவது ஒரு ஆர்ட் பிலிம் மேக்கர்
5. ஒரு பின்நவீனத்துவ கவிஞர்.

கப்பி | Kappi said...

:)) கலக்கல்!!

குமரன் (Kumaran) said...

ஆமா எப்பவுமே அஜீத்தைத் தானே ஓட்டுவீங்க? இந்த தடவை சிம்புவை ஓட்டுறீங்க? லூசுப்பொண்ணே ரீசன்டா பாத்தீங்களா? :-)

நல்லா கீதுபா.

Anonymous said...

Super. I thought of few politicians, but you hav egiven explanation at the very beginning. COntinu .it is very interesting

அரை பிளேடு said...

//முதல்வனில் "S" TVக்கு ஏற்பட்ட நிலையே //

முதல்வன்ல வர்றது S டீவி இல்ல....
Q டீவி.....

இந்தியன்லயும் அதே... :))))

கதிர் said...

இப்பதான் கொஞ்ச் கொஞ்சமா வல்லவன் பார்த்த பாதிப்புல இருந்து மீண்டு வந்தேன். அதுக்குள்ள ஞாபகபடுத்திட்டியே வெட்டி!

கவுண்டர் கலக்கல்ஸ் தொடரா!!
வாழ்க கவுண்டர் புகழ்!

என்னோட சாய்ஸ் அடுத்தது கண்டிப்பா பேரரசு இருக்கணும்.

நாமக்கல் சிபி said...

//NellaiKanth said...

Veti super ma.... we are expecting dil maha more... //

மிக்க நன்றி நெல்லைகாந்த்...
தொடர்ந்து படிக்கவும் :-)

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...

கலக்கிட்டிங்க போங்க :)
செம காமெடியா எழுதியிருக்கீங்க...

//
க: உன்னைய எவன்டா ஆக வேணாம்னு சொன்னா?
ஓ! நீ யாரை மனசுல வெச்சி சொல்றனு ஐ அம் கெட்டிங் யா.
ஏன்டா அவனே ஒரு தீஞ்ச மண்டையன். அவன் நடிக்கற படமே ஃப்ளாப் மேல ஃப்ளாப் ஆகுது. இதுல அவன் உனக்கு போட்டி. உங்க அக்கப்போரு தாங்கமுடியலைடா.
//

சான்ஸே இல்ல :) //

மிக்க நன்றி அருண்...

நாமக்கல் சிபி said...

//Divya said...

வெட்டி, அட்டகாசமா எழுதியிருக்கிறீங்க.........சூப்பர் காமடி, ரசித்து சிரித்தேன்!!
//
மிக்க நன்றி திவ்யா...

//
தொடர்ந்து ஒரு பிரபலத்தை நக்கல் பண்ணபோறீங்களா?? ஆர்வத்துடன் காத்திருக்க்கிறோம்,
நட்சத்திரம் பிரகாசமா ஜொலிக்குது.....வாழ்த்துக்கள் வெட்டி!! //
தொடர்ந்து ஒரு பிரபலத்தை இல்லை, தொடர்ந்து ஒரு வாரம் தினம் ஒரு பிரபலம் :-)

நாமக்கல் சிபி said...

//அரை பிளேடு said...

நல்லா கீது..

ஒரிஜினல் சிம்பு பேட்டி மாறியே.. சாதாரணமா சிம்பு பேட்டியே காமடி...

அடுத்த படத்துக்கு டைரக்ஷன் ப்ளஸ் ஆக்சன் அப்பிடின்னா சிம்பு சம்பளம் அஞ்சி கோடி... தெரியுமில்ல..

அவரு யாரு நடிப்புல அடுத்த சூப்பர் ஸ்டாரு..

டைரக்ஷன்ல அடுத்த ஷங்கரு...

கவுண்டரு கம்மியா கேள்வி கேட்டு சுருக்கா சிம்புவை உட்டுட்ட மாறி கீதே...
//
இதுக்கே தாக்கு பிடிக்க முடியலை.. இன்னும் அதிகமா கேள்வி கேட்டா கவுண்டர் டென்ஷனாகிடுவாரு (வயசாயிடுச்சி இல்லை. அதான் விட்டாச்சு)

// அந்த அதி முக்கியமான கேள்வி மிஸ்ஸிங்...

நயன்தாரா காதல் என்னாச்சு ??? //
அதை பத்தி தான் ஊசி ஒரு அட்டகாசமான பதிவு போட்டாரே ;)

நாமக்கல் சிபி said...

//சுரேஷ் (penathal Suresh) said...

நல்லா இருக்கு வெட்டி.

நேயர் விருப்பம்:

கவுண்டர் பேட்டிக்கு பரிந்துரைக்கும் நபர்கள்
1. எஸ் ஜே சூர்யா
2. ராம நாராயணன்
3. பேரரசு
4. யாராவது ஒரு ஆர்ட் பிலிம் மேக்கர்
5. ஒரு பின்நவீனத்துவ கவிஞர். //

மிக்க நன்றி பெனாத்தலாரே!
முதல் மூணுல ஒண்ணு ரெடி :-)

கடைசி ரெண்டு கஷ்டம்.. முயற்சி செய்து பார்க்கிறேன் :-)

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

:)) கலக்கல்!! //

மிக்க நன்றி கப்பி...

நாமக்கல் சிபி said...

//குமரன் (Kumaran) said...

ஆமா எப்பவுமே அஜீத்தைத் தானே ஓட்டுவீங்க? இந்த தடவை சிம்புவை ஓட்டுறீங்க? லூசுப்பொண்ணே ரீசன்டா பாத்தீங்களா? :-)

நல்லா கீதுபா. //

குமரன்,
ஏன் இப்படி குண்டை தூக்கி போடறீங்க. நமக்கு பாகுபாடே கிடையாது. (Gaptain மேல மட்டும் கொஞ்சம் பாசம் அதிகம் :-))

நாமக்கல் சிபி said...

// padippavan said...

Super. I thought of few politicians, but you hav egiven explanation at the very beginning. COntinu .it is very interesting //

Padippavare,
Thx a lot :-)
The problem is I dont know Politics to question them :-))

நாமக்கல் சிபி said...

//அரை பிளேடு said...

//முதல்வனில் "S" TVக்கு ஏற்பட்ட நிலையே //

முதல்வன்ல வர்றது S டீவி இல்ல....
Q டீவி.....

இந்தியன்லயும் அதே... :)))) //

ஆஹா...
சுட்டி காட்டியதற்கு நன்றி...
இதோ மாத்திவிடுகிறேன் :-)

VSK said...

நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பதிவென்பதால், அக்கண்ணோட்டத்தில் இது நன்றாகவே வந்திஉக்கிறது!

இருப்பினும், தனிப்பட்ட சில நிகழ்ச்சிகளில் அவரைக் கவனித்த போது, சிம்பு ஒரு நம்பிக்கையூட்டும், விவரமான இளைஞராகவே தெரிகிறார்.

அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர் என்னும் வகையில் அவரது சில பேச்சுகள் அமைந்திருக்கின்றன.

[படங்களில் அல்ல!]
:))

SP.VR. SUBBIAH said...

அப்படியே கவுண்டர் - வைகைப்புயல் பேட்டிக்கு ஏற்பாடு பண்ணீருங்க
இல்லைன்ன தெய்வ (வலைப் ப்திவர்) குத்தமாப் போயிரும்

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

இப்பதான் கொஞ்ச் கொஞ்சமா வல்லவன் பார்த்த பாதிப்புல இருந்து மீண்டு வந்தேன். அதுக்குள்ள ஞாபகபடுத்திட்டியே வெட்டி!
//
உன்னைய நினைச்சா எனக்கு பாவமா இருக்கு :-)

//
கவுண்டர் கலக்கல்ஸ் தொடரா!!
வாழ்க கவுண்டர் புகழ்!
//
அதுவே யாம் வேண்டுவதும்!!!

// என்னோட சாய்ஸ் அடுத்தது கண்டிப்பா பேரரசு இருக்கணும். //
அவர் இல்லாமலா...
அவர் மேல நான் கொல வெறில இருக்கேன்.. சாரி கவுண்டர் இருக்காரு :-)

நாமக்கல் சிபி said...

//SK said...

நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பதிவென்பதால், அக்கண்ணோட்டத்தில் இது நன்றாகவே வந்திஉக்கிறது!

இருப்பினும், தனிப்பட்ட சில நிகழ்ச்சிகளில் அவரைக் கவனித்த போது, சிம்பு ஒரு நம்பிக்கையூட்டும், விவரமான இளைஞராகவே தெரிகிறார்.

அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர் என்னும் வகையில் அவரது சில பேச்சுகள் அமைந்திருக்கின்றன.

[படங்களில் அல்ல!]
:)) //

Sk ஐயா,
பல இடங்களில் நான் சொல்வது இதுதான்...

திறமைக்கு மேல் தலைகணமும், பேச்சும் இருந்தால் அது ஒருவரை அழித்துவிடும்.

வளரும் கலைஞருக்கு அடக்கம் (நாவடக்கமும்) அவசியம் தேவைப்படுகிறது. அது இல்லாமல் போனால் எவ்வளவு திறமையிருந்தால் அழிவை சந்திக்க வேண்டியிருக்கும்...

நாமக்கல் சிபி said...

//SP.VR.சுப்பையா said...

அப்படியே கவுண்டர் - வைகைப்புயல் பேட்டிக்கு ஏற்பாடு பண்ணீருங்க
இல்லைன்ன தெய்வ (வலைப் ப்திவர்) குத்தமாப் போயிரும் //
வாத்தியாரே,
நான் கவுண்டர் ஃபேன்...
வைகை புயலை கலாய்க்க வேணாமேனு பாக்கறேன்... அதுக்கு முன்னாடி ஊருல கும்ம வேண்டியவங்க நிறைய பேர் இருக்காங்க :-)

Anonymous said...

வெட்டிப்பயல் அவர்களுக்கு,

மிக மிக அருமை. நையாண்டி என்பது ஒரு அருமையான கலை அதை சர்வ சாதாரணமாக கையாலும் திறமை உங்களிடம் கொட்டிக் கிடக்கிறது. வாழ்த்துக்கள்.

- முரளி.

Anonymous said...

//சி: அதெல்லாம் இப்ப இங்க இல்லை. படத்த ஓட விடாமா தடுக்கறதுக்கு ஒரு சிலர் முயற்சி செஞ்சாலும் படம் பயங்கரமா ஓடுதுனு அகில இந்திய லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு ரசிகர் மன்றத்துல இருந்து எனக்கு தகவல் வந்துருக்கு//

vittu kalakareenga ponga! eppadi ippadi ellam eludhareenga! super comedy

appadiya Advanced Xmas and New year wishes!

மு.கார்த்திகேயன் said...

அருமையான கற்பனை பதிவுங்க பாலாஜி..

அப்படியே இந்த பேட்டிக்கு சூடு கொடுக்க அடுத்து அந்த தனுஷை பேட்டி எடுத்த நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்..

வல்லிசிம்ஹன் said...

கவுண்டரைக் காணமுடியலையேன்னு வருத்தமா இருந்தது.
உங்க பதிவுக்கு வந்துட்டாரா:-0

செமையா விளாசிவிட்டாரே.
பிரமாதம்.
இன்னும்நிறைய ஹெட்வெயிட் பார்ட்டியெல்லாம் இருக்குப்பா.
பார்த்துப் போடுங்க.

Anonymous said...

அருமையா இருந்துச்சு இந்த பதிவு...!
ஒரு ஐடியா டா, கவுன்டரும் செந்திலும் எப்ப பார்த்தாலும் அடிச்சிட்டே தான் இருப்பாங்க (டாம் அன்ட் ஜெர்ரி மாதிரி, ஆனால் நம்மை சிரிக்க வைப்பதில் சூரர்களாக விளங்கியவர்கள் ஒரு கட்டத்தில்.!)..

செந்திலுக்கு ஒரு என்ட்ரி கொடு,(அடிபடாத மாதிரி.) அப்புறம் நம்ம கவுன்டரின் சூப்பர் ஃப்ரென்ட் சத்தியராஜை கூட சேத்துக்கோ...ந‌ல்லா இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன்..

Sud Gopal said...

கலக்கல்...

அப்புறம் அது CNN-IBN.பார்த்து சாகரிகா கோஷோட வூட்டுக்காரரு கோவிச்சுக்கப் போறாரு

கைப்புள்ள said...

//இந்த வாரம் முழுதும் இந்த தொடர் வரும்... தினம் ஒரு பிரபலங்களுடன்...//

சிம்புவை நல்லா கேள்வி கேட்டுருக்காரு கவுண்டபெல். சூப்பர். மத்தவங்களை எப்படி கடிச்சி வைக்கிறாருன்னு பாப்போம். தொடருங்க.
:)

Anonymous said...

hai nan ippo than unga blog parthen...nalla velai simbhuvukku badhil karadiya koopitirundheengana nondhu noodles agirupeenga...

nalla karpanaii

நாமக்கல் சிபி said...

//Murali Ramachandran said...

வெட்டிப்பயல் அவர்களுக்கு,

மிக மிக அருமை. நையாண்டி என்பது ஒரு அருமையான கலை அதை சர்வ சாதாரணமாக கையாலும் திறமை உங்களிடம் கொட்டிக் கிடக்கிறது. வாழ்த்துக்கள்.

- முரளி.//

மிக்க நன்றி முரளி...

எல்லாம் தங்களை போன்றோர் கொடுக்கும் உற்சாகமே!!!

நாமக்கல் சிபி said...

//Dreamz said...

//சி: அதெல்லாம் இப்ப இங்க இல்லை. படத்த ஓட விடாமா தடுக்கறதுக்கு ஒரு சிலர் முயற்சி செஞ்சாலும் படம் பயங்கரமா ஓடுதுனு அகில இந்திய லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு ரசிகர் மன்றத்துல இருந்து எனக்கு தகவல் வந்துருக்கு//

vittu kalakareenga ponga! eppadi ippadi ellam eludhareenga! super comedy
//
மிக்க நன்றி ட்ரீம்ஸ்... எல்லாம் உங்களை போன்றவரின் தயவால்தான்.

// appadiya Advanced Xmas and New year wishes!//
தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி said...

//மு.கார்த்திகேயன் said...

அருமையான கற்பனை பதிவுங்க பாலாஜி..

அப்படியே இந்த பேட்டிக்கு சூடு கொடுக்க அடுத்து அந்த தனுஷை பேட்டி எடுத்த நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்..//

மிக்க நன்றி கார்த்தி...
அடுத்த பதிவு அவர்தாங்க :-)

நாமக்கல் சிபி said...

//வல்லிசிம்ஹன் said...

கவுண்டரைக் காணமுடியலையேன்னு வருத்தமா இருந்தது.
உங்க பதிவுக்கு வந்துட்டாரா:-0
//
ஆமாங்க. அதை நிவர்த்தி செய்யவே இந்த பதிவு.

//
செமையா விளாசிவிட்டாரே.
பிரமாதம்.
//
மிக்க நன்றி!!!

// இன்னும்நிறைய ஹெட்வெயிட் பார்ட்டியெல்லாம் இருக்குப்பா.
பார்த்துப் போடுங்க.//
புடிச்சி போட்டுடலாம் :-)

நாமக்கல் சிபி said...

//Anonymous said...

அருமையா இருந்துச்சு இந்த பதிவு...!
ஒரு ஐடியா டா, கவுன்டரும் செந்திலும் எப்ப பார்த்தாலும் அடிச்சிட்டே தான் இருப்பாங்க (டாம் அன்ட் ஜெர்ரி மாதிரி, ஆனால் நம்மை சிரிக்க வைப்பதில் சூரர்களாக விளங்கியவர்கள் ஒரு கட்டத்தில்.!)..
//
ஆமாம். இப்ப கூட அடிக்கடி அதையெல்லாம் ரசித்து பார்ப்பேன்...

//
செந்திலுக்கு ஒரு என்ட்ரி கொடு,(அடிபடாத மாதிரி.) அப்புறம் நம்ம கவுன்டரின் சூப்பர் ஃப்ரென்ட் சத்தியராஜை கூட சேத்துக்கோ...ந‌ல்லா இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன்..//
முயற்சி செய்கிறேன்... கண்டிப்பா செய்வேனானு தெரியல :-)

நாமக்கல் சிபி said...

//சுதர்சன்.கோபால் said...

கலக்கல்...

அப்புறம் அது CNN-IBN.பார்த்து சாகரிகா கோஷோட வூட்டுக்காரரு கோவிச்சுக்கப் போறாரு//

ஓமப்பொடியாரே,
மாத்தியாச்சு... சாரி ஸ்மால் டெக்னிக்கல் ஃபால்ட்

நாமக்கல் சிபி said...

//கைப்புள்ள said...

//இந்த வாரம் முழுதும் இந்த தொடர் வரும்... தினம் ஒரு பிரபலங்களுடன்...//

சிம்புவை நல்லா கேள்வி கேட்டுருக்காரு கவுண்டபெல். சூப்பர். மத்தவங்களை எப்படி கடிச்சி வைக்கிறாருன்னு பாப்போம். தொடருங்க.
:)//

வாங்க தல...
மத்தவங்களுக்கும் ஆப்பு இருக்குது :-)

நாமக்கல் சிபி said...

//one among u said...

hai nan ippo than unga blog parthen...nalla velai simbhuvukku badhil karadiya koopitirundheengana nondhu noodles agirupeenga...

nalla karpanaii//

மிக்க நன்றிங்க...

கரடியெல்லாம் அவுட் ஆஃப் ரேஞ்ச் :-)

Anonymous said...

அவன் படம் ஓடுற மாதிரி தெரியும் ஆனா ஒடாது, என் படம் ஓடாத மாதிரி தெரியும் ஆன சூப்பரா ஓடும்... ஓடும்... ஓடும்...

G.Ragavan said...

இந்த வாரம் முழுக்க கவுண்டர் இந்த வேலையப் பாக்கப் போறாரா! சூப்பர். அவருக்கு அஜிஸ்டெண்டு வேணுமப்பா...செந்தில்ஜியையும் உள்ள கொண்டு வாங்க. அப்பத்தான கலக்கல் பயங்கரமா இருக்கும்.

இந்த பேட்டிகள்ள...பெனாத்தல் சொன்ன ராமநாராயணனை உள்ள இழுத்து விடனும். அப்படியே வைரமுத்து, இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரகுமான்களையும் இழுத்து விடுங்க. இசைன்னா நமக்கு ரொம்பப் பிடிக்குமுங்க.

Anonymous said...

//க: டேய் நானே டக்கால்டி! நீ எனக்கே டகால்டி கொடுக்கறயா? உங்க அப்பா அந்த தாடிக்காரனே படத்துல டைட்டில் கார்ட்ல போட்டா நீ லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆயிடுவீயா? (ஹை பிட்ச்சில் கேட்கிறார்). அப்ப உன் தம்பிய லிட்டில் லிட்டில் சூப்பர் ஸ்டாராடா???

க: டேய்! உன்னய கேள்வி கேக்கனும்னு அந்த கொடுமைய வேற பார்த்தனேடா... (அழுகிறார்)
அது ஒரு படம். அதுக்கு இந்த காட்சி ரொம்ப முக்கியம்? ஏன்டா சம்பந்தமே இல்லாம நக்மாக்கூட டூயட் ஆடன எனக்கே நீ டக்கால்ட்டி கொடுக்கப்பாக்கற.

க: ஐய்யோ கரடி! டேய் சிம்பு மண்டையா நீ பண்ண அலும்பல நான் கேட்டேனு என்னைய கரடிய விட்டு கொல்ல பாக்கறியா?
டேய் யாராவது அத புடிச்சி கட்டுங்கடா...

க:இவன் வேற வந்துட்டானா?. டேய் ரெண்டு பேரும் இப்படியே ஓடி போயிடுங்க இல்லைனா நானே உங்க மூஞ்சில ஆசிட் ஊத்திடுவேன்.
மக்களே நல்லா பாத்துக்கோங்க இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாகமாட்டேன். இவனுங்க பண்ற அளும்புக்கெல்லாம் நீங்களே நல்லா கவனிச்சிக்கோங்க...//

வெட்டி! பட்டய கெளப்புறீங்க... நான் இதை படிக்கும்பொழுது கவுண்டரின் குரல் மற்றும் அவரின் உடல் அசைவுகளோடு கற்பனை செய்துகொண்டே படித்தேன்.. உண்மையிலேயே சிரிப்பு தாங்க முடியவில்லை..

//இந்த வாரம் முழுதும் இந்த தொடர் வரும்... தினம் ஒரு பிரபலங்களுடன்...//
வெட்டி! தொடர்ந்து எழுதுங்கள்.. உங்களுக்கு நகைச்சுவை எளிதாக வருகிறது.. வாழ்த்துக்கள்!!!
இந்தவா...ர....ம் தமிழ்மணத்தில் வெட்டியின் வா...ர...ம்!!! காத்திருக்கிறோம்...

வெங்கட்ராமன் said...

சூப்பரப்பு. .

////
திறமைக்கு மேல் தலைகணமும், பேச்சும் இருந்தால் அது ஒருவரை அழித்துவிடும்.

வளரும் கலைஞருக்கு அடக்கம் (நாவடக்கமும்) அவசியம் தேவைப்படுகிறது. அது இல்லாமல் போனால் எவ்வளவு திறமையிருந்தால் அழிவை சந்திக்க வேண்டியிருக்கும்...
////

இதுக்கும் ஒரு சூப்பரப்பு. .

நாமக்கல் சிபி said...

// Chimp said...

அவன் படம் ஓடுற மாதிரி தெரியும் ஆனா ஒடாது, என் படம் ஓடாத மாதிரி தெரியும் ஆன சூப்பரா ஓடும்... ஓடும்... ஓடும்... //

டேய்,
நீ அடங்கவே மாட்டியா??

- கவுண்டர்

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...

இந்த வாரம் முழுக்க கவுண்டர் இந்த வேலையப் பாக்கப் போறாரா! சூப்பர். அவருக்கு அஜிஸ்டெண்டு வேணுமப்பா...செந்தில்ஜியையும் உள்ள கொண்டு வாங்க. அப்பத்தான கலக்கல் பயங்கரமா இருக்கும்.
//
இன்னைக்கு முடியாது. நாளைக்கு போஸ்ட்டுக்கு முயற்சி செய்யறேன் :-)

//
இந்த பேட்டிகள்ள...பெனாத்தல் சொன்ன ராமநாராயணனை உள்ள இழுத்து விடனும். அப்படியே வைரமுத்து, இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரகுமான்களையும் இழுத்து விடுங்க. இசைன்னா நமக்கு ரொம்பப் பிடிக்குமுங்க. //
ராமநாராயணனை கொண்டு வந்து விடலாம். இசையமைப்பாளர்கள் எல்லாம் வேண்டாம் ஜி.ரா. நம்ம இஷ்டத்துக்கு திட்ட முடியாது ;)

நாமக்கல் சிபி said...

//வெட்டி! தொடர்ந்து எழுதுங்கள்.. உங்களுக்கு நகைச்சுவை எளிதாக வருகிறது.. வாழ்த்துக்கள்!!!
இந்தவா...ர....ம் தமிழ்மணத்தில் வெட்டியின் வா...ர...ம்!!! காத்திருக்கிறோம்...//

கத்துக்குட்டி,
மிக்க நன்றி!!!

நாமக்கல் சிபி said...

//வெங்கட்ராமன் said...

சூப்பரப்பு. .

////
திறமைக்கு மேல் தலைகணமும், பேச்சும் இருந்தால் அது ஒருவரை அழித்துவிடும்.

வளரும் கலைஞருக்கு அடக்கம் (நாவடக்கமும்) அவசியம் தேவைப்படுகிறது. அது இல்லாமல் போனால் எவ்வளவு திறமையிருந்தால் அழிவை சந்திக்க வேண்டியிருக்கும்...
////

இதுக்கும் ஒரு சூப்பரப்பு. . //

வெங்கட்ராமன்,
மிக்க நன்றி!!!

வினையூக்கி said...

நல்லா இருக்கு வெட்டிப்பயல்

நாமக்கல் சிபி said...

//வினையூக்கி said...

நல்லா இருக்கு வெட்டிப்பயல் //

மிக்க நன்றி வினையூக்கி...