தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Saturday, November 04, 2006

ஸ்ரீ ஸ்ரீயும் நானும்!!!

ஒரு வழியாக படித்து முடித்து வேலை தேடி பெங்களூர் வந்தேன்... ஒரு ஆறு மாதம் பட்ட கஷ்டத்தில் ஒன்றிற்கு இரண்டு கம்பெனியில் வேலை கிடைத்தது.

ஒரு கம்பெனியில் மும்பையில் வேலை. மற்றோன்று பூங்கா (தற்போது டிராபிக் ஜாம்) நகரத்தில்.
நமக்கு ஹிந்தி மாலும் நஹி...
அதனால பெங்களூர்ல இருக்கற வேலைல சேர்ந்தேன்.

எங்க கம்பெனி பக்கத்துலயே நண்பர்களுடன் தங்க ஆரம்பித்தேன். கொஞ்ச நாள்ல பக்கத்து ரூம்ல 2 மளையாளி பசங்க வந்து ரூமெடுத்தாங்க.அதுல ஒருத்தன் நம்ம அந்நியன் ஸ்டைல நீட்டா முடி வெச்சிருந்தான்...அவன் பெயர் அஜய்.
எங்களுக்கு பார்த்த அன்னைக்கே கொஞ்சம் பயம்...

அப்பறம் ஒரு ரெண்டு நாள் கழிச்சி கைல 4-5 புக் எடுத்துட்டு எங்க ரூம்க்கு வந்தான்.உங்களுக்கு இவங்க எல்லாம் தெரியுமானு அந்த புக்கை காட்டினான். என்னன்னு பார்த்தா நம்ம பாரதியார், வ.ஊ.சி, விவேகானதர், காந்தி, குரு கோவிந்த் சிங் இந்த மாதிரி எல்லாரும் தெரிஞ்சவங்கதான்.

எங்களுக்கேவானு சொல்லிட்டு இவுங்க எல்லாம் நம்ம ஆளுங்கதான்... பக்கத்து ரூம்லதான் தங்கியிருந்தாங்க இப்பதான் வெளிய போயிருக்காங்கனு கொஞ்சம் நக்கல் அடிச்சோம்.
பையன் கொஞ்சம் டென்ஷனாகிட்டான்... அப்பறம் சமாதனப்படுத்தினோம்

அவந்தான் அந்த சைக்காலஜி கேள்வியெல்லாம் கேட்டவன்... அடிக்கடி அவன் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமம் போவான். அவரை பத்தி ரொம்ப பெருமையா பேசுவான்...நாங்களும் கேட்டுக்குவோம்.

அவரை பத்தி அவன் சொன்ன விஷயத்துல எனக்கு பிடிச்சியிருந்தது அந்த மூச்சு பயிற்சி சுதர்சனக்கிரியா தான்.அதுவும் இல்லாமல் அவர் தான் கடவுளின் அவதாரம்னு சொல்லிகிட்டதில்லைனு கேள்விப்பட்டேன்.(அந்த மாதிரி யாராவது சொன்னா நான் பதிலுக்கு எப்பவும்.. இல்லை இல்லை...நாசர்தான் அவதாரம்னு நக்கலடிப்பேன்)

அந்த சமயத்தில் ஒரு நாள் அவர் பெங்களூர் ஆசிரமத்திற்கு வருகிறார், நீங்களும் வரீங்களா அவரை பார்க்கலாம்னு சொன்னான்.எங்க ரூம்ல ஒருத்தவனுக்கு இதில் நம்பிக்கை அதிகம்.. அதுவும் இல்லாம நாள பின்ன அவரை கடவுளாக்கிட்டா நம்மளும் கடவுள பாத்திருக்கோம்னு பந்தா பண்ணலாமினு நானும் கூட போனேன்.

பெங்களூரிலிருந்து கனகபுரா போகிற வழியில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் சில கோடிகளை விழுங்கி அந்த அறிகுறியே தெரியாமல் அமைதியாக அமைந்திருந்தது ஆசிரமம்.

அதில் புதிதாக கட்டியிருந்த மண்டபம் தாமரை வடிவிலிருந்தது. சில ஆயிரக்கனக்கானோர் அமர்ந்து தியானம் செய்யலாம்.அங்கே அமர்ந்து தியானம் செய்தால் மனதை ஒருமுகப்படுத்த வசதியாக இருக்கும் என்றான். அதை ஏனோ நான் முயற்சி செய்து பார்க்கவில்லை. ஆனால் அங்கே ஒரு அமைதி நிலவியதாகவே தோன்றியது.

நாங்கள் (4 பேர், அஜயையும் சேர்த்து) சரியாக 10 மணிக்கெல்லாம் ஆசிரமத்திலிருந்தோம். ரவி சங்கர் சரியாக 12 மணிக்கு வந்தார்.அஜய் அவரிடம் எந்த கேள்வி வேண்டுமென்றாலும் கேள் அதற்கு அவர் பதில் சொல்வார் என்றான்.

எனக்கு பல கேள்விகள் இருந்தன. இந்து மதம் பற்றியும், உருவ வழிப்பாடு பற்றியும், ஒரு கடவுளை விட மற்றவர் பெரியவர் என்ற குழு பிரச்சனைகளும், அசுரர்களுக்கு சிவன் எதுக்கு வரம் கொடுக்கனும் அதை திருமால் எதற்கு அழிக்க வேண்டும், இன்னும் பல...

ஆனால் என் கூட இருந்த நண்பனுக்கு ஒரே கேள்வி... எல்லாரையும் ஒரு ஸ்ரீ சொல்லி தான சொல்றாங்க உங்களை மட்டும் ஏன் 2 "ஸ்ரீ" (ஸ்ரீ ஸ்ரீ) சொல்லி கூப்படறாங்கனு.நான் யோசிச்சி பார்க்கும் போது என் கேள்விய விட அவன் கேள்விதான் ஞாயமா இருந்துச்சு...

ஸ்ரீ ஸ்ரீ வெள்ளை உடை அணிந்து எளிமையாக இருந்தார். அவர் வந்தவுடன் அவரை நம் மக்கள் சுற்றி கொண்டனர்.அவரை அனைவரும் தொட்டு வணங்கினார்கள். (என்னால் ஏற்று கொள்ள முடியாத ஒன்று)

இதைவிட கொடுமை அவரை தொட்டால் ஏதோ சக்தியும், பெரும் அமைதியும் கிடைப்பதை போல் முகத்தில் ஒரு உணர்ச்சியை காட்டினார்கள். என் கூட இருக்குற பையனும் அவரை தொட்டு அதே மாதிரி உணர்ச்சியை முகத்தில் காட்டி கொண்டிருந்தான்.ஏதோ அவன் உடம்பில் சக்தி பாய்வதை போல்.

இப்ப எனக்கு உண்மையாலுமே சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. ஒரு வேளை நாம்தான் அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டு கொண்டிருக்கோமோனு கூட்டத்தோட சென்று நானும் அவர் கையை தொட்டேன்...என்ன ஆச்சர்யம்... என் உடம்பிலும் சக்தி பாய்ந்தது...

அப்படினு நான் சொல்லுவன்னு எதிர்பார்த்திங்களா?ஒரு மண்ணுமில்லை... எல்லாம் ஓவர் ஆக்ஷன் பண்றானுங்கனு புரிந்துவிட்டது.

சிம்பு நயந்தாராவை கசக்கின மாதிரி அந்த கூட்டம் ஸ்ரீ ஸ்ரீயை நசுக்கி கொண்டிருந்தது. எனக்கு பார்க்கவே பாவமாக இருந்தது.பிறகு பக்தர் கூட்டம் வந்து அவரை காப்பாற்றியது தனிக்கதை. பிறகு மதியம் 1 மணிக்கு ஆசிரமத்தில் நன்றாக சாப்பிட்டோம்.

3 மணிக்கு அவருடைய சொற்பொழிவு. அதில்தான் இந்த கேள்விகளெல்லாம் கேட்க வேண்டுமென்றிருந்தேன்.கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன் கடும் வெயில் இருந்தது. கூட்டம் ஆரம்பித்து சில நிமிடங்களில் தூரல் போட்டு பூமியை இதமாக்கியது.ஒரு மாசமா இல்லாத மழை அன்று வந்தது ஆச்சர்யமாகவே இருந்தது.

ஸ்ரீ ஸ்ரீயின் குரல் இனிமையாக இருந்தது. தமிழ், கன்னடம் அவருக்கு தெரிந்திருந்தது. ரொம்ப சாத்வீகமா பேசினார். (திருச்சிக்காரர்தான்)

இறைவனை வெளியே தேடாதே என்று சொன்னார்... இன்னும் பல... சரியாக ஞாபகமில்லை. யாரும் அவரை எந்த கேள்வியும் கேட்கவில்லை... என்னையும் சேர்த்து

அங்கே நான் பார்த்தவரை உணர்ந்தது. ரவி சங்கர் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவுமே நம்மை போலவே தான் இருந்தார். அவரை சுற்றி கொள்ளும் நம் மக்கள் நடந்து கொண்ட விதம்தான் கேவலமாக இருந்தது.

அவர் சொல்லி கொடுக்கும் மூச்சு பயிற்சி அருமையான ஒன்று. அதற்காக அவரை கடவுளாக்குவது முட்டாள் தனத்தின் உச்சம்...

53 comments:

Boston Bala said...

இயல்பா... அருமையா எழுதியிருக்கீங்க!

பல இடங்களில் மனம் விட்டு சிரிக்க வைத்தாலும், மேலோட்டமில்லாத எதார்த்தமான பார்வை.

நன்றி.

நாமக்கல் சிபி said...

நன்றி பாபா...
எனக்கு எந்த இடத்திலும் அவர் மேல் வெறுப்பு வரவில்லை. அதே சமயம் பெரிய பக்தியும் வரவில்லை...

நம்மை பொன்ற ஒரு மனிதர் இதை போல் மக்களிடம் மாட்டினால் என்ன ஆவார் என்று அன்றுதான் பார்த்தேன்...

எனக்கு பிடித்திருந்த ஒரு விஷயம் இதை போல் அவர்கள் செய்யும் போது அவருக்கு கோபம் வரவில்லை. நான் அந்த இடத்தில் இருந்தால் எனக்கு கோபம் வந்திருக்கும்...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாசர்தான் அவதாரம்னு நக்கலடிப்பேன்//
நாசர் ஒரு அவதாரம் தான்! ஆனா
கமல் தசா அவதாரம்!
பாலாஜி தெரிஞ்சுக்குங்க!

//சிம்பு நயந்தாராவை கசக்கின மாதிரி அந்த கூட்டம் ஸ்ரீ ஸ்ரீயை நசுக்கி கொண்டிருந்தது//
:-)))

////ரவி சங்கர் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவுமே நம்மை போலவே தான் இருந்தார்//
அடப் போங்க பாலாஜி; என்னைய ஓவரா புகழாதீங்க! கூச்சமா இருக்குப்பா! :-))

Arunkumar said...

அவரு கடவுளோட அவதாரம் இல்லை-னு சொல்றதால மத்தவங்கள விட அவர் மேல கொஞ்சம் மரியாதை உண்டு.

ஆனால் இதுவரை அவரைப் பார்க்க சந்தர்ப்பம் வரவில்லை.

ramachandranusha(உஷா) said...

அங்கே நான் பார்த்தவரை உணர்ந்தது. ரவி சங்கர் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவுமே நம்மை போலவே தான் இருந்தார். அவரை சுற்றி கொள்ளும் நம் மக்கள் நடந்து கொண்ட விதம்தான் கேவலமாக இருந்தது.//

வெட்டி, கோடிகள் குவியும்பொழுது, மேலே விழுதலை புன்னகையுடன் தாங்கிக்கொள்ளும் தியாகத்தைக்கூடவா செய்ய
முடியாது :-)))))))))

Anonymous said...

ரொம்ப யதார்த்தமா எழுதியிருக்கீங்க...

//அவர் சொல்லி கொடுக்கும் மூச்சு பயிற்சி அருமையான ஒன்று//

நிஜம்தான்...அந்த மூச்சு பயிற்சி மிக அருமையானது...நான் தான் என் சோம்பேறித்தனத்தால தொடராம விட்டுடேன் ........

கால்கரி சிவா said...

//வெட்டி, கோடிகள் குவியும்பொழுது, மேலே விழுதலை புன்னகையுடன் தாங்கிக்கொள்ளும் தியாகத்தைக்கூடவா செய்ய
முடியாது :-)))))))))
//

கோடிகள் மட்டும் கண்களில் தெரிவதேன். அந்த கோடிகளால் திருந்திய கேடிகளின் எண்ணிக்கையை மறப்பதேன்.

Anonymous said...

dear vettipaiyal,

idhu romba over.karuthu sudhandhiram irukkungarathukkaka yenna veumnalum yeludhakoodathu.adhilum thani manitha vimarsanam sariyillai.idha oru allosanaiya eduthukavum.yenna Art of living la crore numbers of members irkkanga.avangala ellam muttal akkathinga.andha organisation yenna madhiri nalla visayangal yellam pannuthoonu www.artofliving.org la poye parunga.USA senat la irundhu sri sri ku samathana noble prize kudukka recommand panni irukanga.so konjam yosichu yeludhunga.

குமரன் (Kumaran) said...

//நமக்கு ஹிந்தி மாலும் நஹி...//

பாலாஜி. +1ல் பள்ளியிலிருந்து மும்பைக்குச் சுற்றுலா சென்றிருந்த போது இப்படித்தான் ஒரு முறை 'இந்தி மாலும் நஹி'ன்னு சொன்னப்ப அந்த ஆள் 'அதை இந்தியில சொல்ற? அப்ப உனக்கு இந்தி தெரியும் தானே'ன்னு மடக்கினான். :-)

நீங்க அந்த இரவிசங்கர்கிட்ட கேட்க நினைச்சதை நம்ம வலைப்பூ இரவிசங்கர்கிட்ட கேக்கலாமே?! ஓ. இராகவன்கிட்ட கேட்டீங்களோ? :-)

நாமக்கல் சிபி said...

//நாசர் ஒரு அவதாரம் தான்! ஆனா
கமல் தசா அவதாரம்!
பாலாஜி தெரிஞ்சுக்குங்க!//
ஆஹா... கலக்கறீங்களே!!!
இனிமே இதையே சொல்லலாம்...

//அடப் போங்க பாலாஜி; என்னைய ஓவரா புகழாதீங்க! கூச்சமா இருக்குப்பா! :-))//
இதுக்கெல்லாம் கூச்சப்பட்டா ஆகுமா???
இன்னும் நிறைய சொல்லலாமே உங்க பெருமைய ;-)

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...
அவரு கடவுளோட அவதாரம் இல்லை-னு சொல்றதால மத்தவங்கள விட அவர் மேல கொஞ்சம் மரியாதை உண்டு.

ஆனால் இதுவரை அவரைப் பார்க்க சந்தர்ப்பம் வரவில்லை.
//
அந்த காரணத்திற்காகத்தான் எனக்கும் அவர் மேல மரியாதை இருக்கு. அப்பறம் சுதர்சனக்கிரியா மூச்சு பயிற்சி போனவங்க எல்லாரும் அது ரொம்ப நல்லாயிருக்கு கண்டிப்பா அந்த வகுப்புக்கு போனு சொல்லுவாங்க.

இதுவரைக்கும் எனக்கு தெரிஞ்சி ஒருத்தவங்க கூட வேணாம் காசு வேஸ்ட்னு சொன்னதில்லை.

நாமக்கல் சிபி said...

//வெட்டி, கோடிகள் குவியும்பொழுது, மேலே விழுதலை புன்னகையுடன் தாங்கிக்கொள்ளும் தியாகத்தைக்கூடவா செய்ய
முடியாது :-))))))))) //
உஷா,
அவர் கடவுளை காட்றேன்னு காசு வாங்கறதில்லை. அவரோட வாழும் கலை பயிற்சி அட்டெண்ட் பண்ணவங்களுக்கு தெரியும்...

மேனேஜ்மெண்ட் தலைவர்கள் கூட அதுல கலந்துக்கறாங்க. இன்போஸிஸ், டி.சி.எஸ்ல கூட வகுப்புகள நடந்தது.
அனாவசியமா டென்ஷனாகற சாப்ட்வேர் இஞ்சினியர்களுக்கு அந்த வகுப்பு ஒரு வரப்பிரசாதம்...

ஆனா இதுக்காக நான் அவரை கடவுள்னு சொல்ல மாட்டேன்...

நாமக்கல் சிபி said...

//Sundari said...
ரொம்ப யதார்த்தமா எழுதியிருக்கீங்க...

//அவர் சொல்லி கொடுக்கும் மூச்சு பயிற்சி அருமையான ஒன்று//

நிஜம்தான்...அந்த மூச்சு பயிற்சி மிக அருமையானது...நான் தான் என் சோம்பேறித்தனத்தால தொடராம விட்டுடேன் ........
//
மிக்க நன்றி சுந்தரி...

போக போக நீங்க செய்ய ஆரம்பிப்பீங்கனு நம்பறேன்...

அந்த அளவுக்கு டென்ஷன் குடுப்பாங்க ;)

நாமக்கல் சிபி said...

//கோடிகள் மட்டும் கண்களில் தெரிவதேன். அந்த கோடிகளால் திருந்திய கேடிகளின் எண்ணிக்கையை மறப்பதேன்.//
மிகவும் சரியான பதில்...

சுதர்சனக்கிரியா பழகின யாராவது சொன்னா இன்னும் சிறப்பா இருக்கும்...

நான் ஆசிரமத்திலே மூன்று நாள் தங்கி கற்று கொள்ளலாம் என்று முடிவெடுத்து விடுப்பு கிடைக்காமல் தவற விட்டேன்...

நாமக்கல் சிபி said...

//surekamanoj said...
dear vettipaiyal,

idhu romba over.karuthu sudhandhiram irukkungarathukkaka yenna veumnalum yeludhakoodathu.adhilum thani manitha vimarsanam sariyillai.idha oru allosanaiya eduthukavum.yenna Art of living la crore numbers of members irkkanga.avangala ellam muttal akkathinga.andha organisation yenna madhiri nalla visayangal yellam pannuthoonu www.artofliving.org la poye parunga.USA senat la irundhu sri sri ku samathana noble prize kudukka recommand panni irukanga.so konjam yosichu yeludhunga.
//
மனோஜ்,
தலைப்பை மட்டும் படித்துவிட்டு எழுத வேண்டாம்.

நான் எந்த இடத்திலும் ரவிசங்கரை பற்றி தவறாக எழுதவில்லை... நம் மக்கள் நடந்த கொண்டவிதத்தை தான் எழுதினேன்...

அவர் கடவுளின் அவதாரம் என்று நாமே அவரை சொல்ல வைத்துவிடுவோமோ என்ற பயமும் ஒரு காரணம்...

நல்லவன நல்லவனா இருக்கவிடுங்கப்பா...

நாமக்கல் சிபி said...

//குமரன் (Kumaran) said...
//நமக்கு ஹிந்தி மாலும் நஹி...//

பாலாஜி. +1ல் பள்ளியிலிருந்து மும்பைக்குச் சுற்றுலா சென்றிருந்த போது இப்படித்தான் ஒரு முறை 'இந்தி மாலும் நஹி'ன்னு சொன்னப்ப அந்த ஆள் 'அதை இந்தியில சொல்ற? அப்ப உனக்கு இந்தி தெரியும் தானே'ன்னு மடக்கினான். :-)
//
இதைத்தவிர வேறொன்றும் அறியேன் பராபரமேனு சொல்ல வேண்டியதுதான் ;)

//
நீங்க அந்த இரவிசங்கர்கிட்ட கேட்க நினைச்சதை நம்ம வலைப்பூ இரவிசங்கர்கிட்ட கேக்கலாமே?! ஓ. இராகவன்கிட்ட கேட்டீங்களோ? :-)
//
அந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை தானாக தெரிய ஆரம்பித்துவிட்டது...

குமரன் உங்களுக்கு தெரியாததில்லை... உலகத்தில் உள்ள எல்லா கேள்விகளுக்கும் விடை நம் உள்ளேயே உள்ளது. சரியாக சிந்தித்தால் விடை கிடைக்கும்...

கெகுலே Benzene Structure (c6h6) கண்டுபிடித்ததெல்லாம் கூட இப்படித்தான் :-)
...........

சைவசெம்மல் கிட்ட கேட்ட கண்டிப்பா எளிமையா எனக்கும் புரியற மாதிரி சொல்லுவார்னுதான் அவரிடம் கேட்டு கொண்டிருக்கிறேன் :)

மதுமிதா said...

நன்றி பாலாஜி

மற்றது எப்படியோ 'சுதர்சன க்ரியா' பத்தி சொல்லியே ஆகணும்.

1994 ல் அந்த பயிற்சி கற்ற பின்பு சும்மா மனசெல்லாம் துடைத்து வைத்த மாதிரி...

இதெல்லாம் வெளியே சொல்லக்கூடாதுங்க, வெட்டி.
உணரணும்.

ம் என்ன சொல்ல போங்க
யாரைப்பாத்தாலும் (நல்லா கவனிங்க)
அன்பு மழை ஆற்றலுடன் பொழிய
அதிலிருந்து வெளியே வரவே இன்னொரு பயிற்சி இன்னும் செய்திட்டிருக்க வேண்டியிருக்கு.

சரி விடுங்க
இனிப்பு நல்லா இருக்குன்னா, இனிப்பு
நல்லா இருக்காமே சொல்றாங்கன்னு சொல்லிட்டிருந்தா ஆச்சா?
இனிப்பு இனிப்பு தான்.
சாப்பிட்டாதான் தெரியும்.

சுற்றி உள்ள அடிப்பொடிகள் தான் அவரைக் காப்பாத்தணும்.

/// நான் ஆசிரமத்திலே மூன்று நாள் தங்கி கற்று கொள்ளலாம் என்று முடிவெடுத்து விடுப்பு கிடைக்காமல் தவற விட்டேன்///

இன்னொருமுறை தவற விடாதீங்க

கதிர் said...

சோதனை :)))

கால்கரி சிவா said...

ஸ்ரீஸ்ரீ ஒரு சுவாச அல்லது யோகா பயிற்சி ஆசிரியர். அவர் மதத்தலைவர் அல்லர். ஆனால் கடவுள்தான். ஏனென்றால் அத்வைதத்தில் எல்லாரும் கடவுளே. அவர் கடவுள் நானும் கடவுள் நீங்களும் கடவுள்.

அவருக்கு கோடிகளை நிச்சயமாக தரலாம். அதில் தப்பே இல்லை.

அரசியலில் நுழைந்த ரவுடிகள் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து பகுத்தறிவு பகலவன் பட்டம் வைத்துக் கொண்டு கோடிகளில் திளைக்கும் போது, மூச்சுப் பயிற்ச்சியை கற்றுத் தந்து கோடிகள் சம்பாதிப்பது தப்பே இல்லை.

ஏழை நாட்டினரின் உழைப்பையும் மேலை நாட்டினரின் அறிவையும் வைத்துக் கொண்டு கோடிகளில் பணம் சம்பாதித்து அதை தீவிரவாதங்களுக்கு துணை புரிய கொடுக்கும் கேடிகள் சம்பாதிக்கும் கோடிகளை விட இவர் சம்பாதிக்கும் கோடிகள் நேர்மையானவை.

கோடிகளில் மேலை நாட்டு மக்களின் வரிபணத்தை எடுத்து கீழ்நாடுகளில் ஆன்மா அறுவடை செய்யும் வியாபாரிகளின் கோடிகளை விட இவர் சம்பாதிக்கும் கோடிகள் இனிமையானவை

Udhayakumar said...

//அந்த காரணத்திற்காகத்தான் எனக்கும் அவர் மேல மரியாதை இருக்கு. அப்பறம் சுதர்சனக்கிரியா மூச்சு பயிற்சி போனவங்க எல்லாரும் அது ரொம்ப நல்லாயிருக்கு கண்டிப்பா அந்த வகுப்புக்கு போனு சொல்லுவாங்க.

இதுவரைக்கும் எனக்கு தெரிஞ்சி ஒருத்தவங்க கூட வேணாம் காசு வேஸ்ட்னு சொன்னதில்லை.//

நான் இதை வழி மொழிகிறேன். ஆனால் என்னால் இதை தொடர்ந்து பண்ண முடியாம போயிடுச்சு...

Anonymous said...

ரொம்ப நல்லா இருந்தது. யதார்த்தமும், எண்ண ஓட்டமும். அப்பாடா, ஒரு நல்ல பதிவு படிச்ச திருப்தி இன்னைக்கு! :) நல்லா எழுதிறீங்க நிஜங்களைப் பற்றி.

நாமக்கல் சிபி said...

//1994 ல் அந்த பயிற்சி கற்ற பின்பு சும்மா மனசெல்லாம் துடைத்து வைத்த மாதிரி...//
என் நெருங்கிய நண்பன் இதை அட்டெண்ட் பண்ணி இதையேதாங்க சொன்னான். டென்ஷனே இல்லாம வாழ்க்கைய வாழ்வதற்கும் இது உதவும் என்று சொன்னான்...

//இதெல்லாம் வெளியே சொல்லக்கூடாதுங்க, வெட்டி.
உணரணும்.//
சரியா சொன்னீங்க...

PKS பாணில சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது...

//இன்னொருமுறை தவற விடாதீங்க //
கண்டிப்பா தவற விடமாட்டேங்க...

நாமக்கல் சிபி said...

//தம்பி said...
சோதனை :))) //

சோதனைகளை கடந்தால் சாதனை...

நாமக்கல் சிபி said...

//ஸ்ரீஸ்ரீ ஒரு சுவாச அல்லது யோகா பயிற்சி ஆசிரியர். அவர் மதத்தலைவர் அல்லர். ஆனால் கடவுள்தான். ஏனென்றால் அத்வைதத்தில் எல்லாரும் கடவுளே. அவர் கடவுள் நானும் கடவுள் நீங்களும் கடவுள்.//

சிவா,
நீங்க சொல்ற கடவுளுக்கும் நம்ம மக்கள் அவரிடம் நடந்து கொண்டதற்கும் வித்யாசமிருந்தது...

ஏற்கனவே கெட்ட சாமியாருங்களால இந்து மதத்திற்கு கெட்ட பெயர் வரும் சமயத்தில் நாம் மேலும் ஒருவரை உருவாக்க வேண்டாமே!!!

நாமக்கல் சிபி said...

//ரொம்ப நல்லா இருந்தது. யதார்த்தமும், எண்ண ஓட்டமும். அப்பாடா, ஒரு நல்ல பதிவு படிச்ச திருப்தி இன்னைக்கு! :) நல்லா எழுதிறீங்க நிஜங்களைப் பற்றி.//
மிக்க நன்றி மதுரா...

நாடோடி said...

//ஏற்கனவே கெட்ட சாமியாருங்களால இந்து மதத்திற்கு கெட்ட பெயர் வரும் சமயத்தில் நாம் மேலும் ஒருவரை உருவாக்க வேண்டாமே!!!//
மனிதனை மனிதனாக பார்த்தால் பல பிரச்சனைகள் தீரும். தேவை கடவுள் அல்ல, மனிதநேயம்.

மணியன் said...

சுதர்சன்கிரியா செய்பவர்களில் நானும் ஒருவன். மிக நல்ல பயிற்சி. உடலுக்கும் மனதிற்கும் நலம் சேர்க்கும் பயிற்சி.

ஸ்ரீஸ்ரீயைப் பொறுத்தவரை இந்த அருமையான யோகா பயிற்சியை marketing செய்யும் சிறந்த அமைப்பை ஏற்படுத்தியவர். அவதாரம் போன்ற ஒரு பிம்பம் ஏற்படுதல் தன் வணிக நோக்கத்திற்கு உதவி புரிவதால் தான் அவதாரம் இல்லை என்று சொல்லிக் கொண்டே தன் சீடர்கள் மூலம் பிரம்மாண்டத்தை ஏற்படுத்துபவர். அவர் தன் பிம்ப வளர்ச்சிக்காக ஏற்படுத்தியுள்ள சமூக நல திட்டங்கள் ஆங்கே நெற்பயிருக்கும் பொசிகிறது.

G.Ragavan said...

// குமரன் (Kumaran) said...
நீங்க அந்த இரவிசங்கர்கிட்ட கேட்க நினைச்சதை நம்ம வலைப்பூ இரவிசங்கர்கிட்ட கேக்கலாமே?! ஓ. இராகவன்கிட்ட கேட்டீங்களோ? :-) //

என்னைய வம்புல மாட்டி விடுறதுல அவ்வளவு சந்தோசம். :-)

// //
நீங்க அந்த இரவிசங்கர்கிட்ட கேட்க நினைச்சதை நம்ம வலைப்பூ இரவிசங்கர்கிட்ட கேக்கலாமே?! ஓ. இராகவன்கிட்ட கேட்டீங்களோ? :-)
//
அந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை தானாக தெரிய ஆரம்பித்துவிட்டது...

குமரன் உங்களுக்கு தெரியாததில்லை... உலகத்தில் உள்ள எல்லா கேள்விகளுக்கும் விடை நம் உள்ளேயே உள்ளது. சரியாக சிந்தித்தால் விடை கிடைக்கும்... //

பாத்தீங்களா குமரன். அவருக்கே எல்லாம் தெரிய ஆரமிச்சிருச்சாம். அப்ப வெட்டியானந்தாவாயிட்டாருன்னு நெனைக்கிறேன்.

வெட்டி, ஆம்ஸ்டர்டாமிலிருந்து பிளைட் பிடித்து இந்தியா வந்து கொண்டிருந்தேன். 2000ல். அப்பொழுது பக்கத்து சீட்டில் ஒரு ஜெர்மன் பெண். 20-22 இருக்கும். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அந்தப் பெண் அவருடைய குருவைப் பார்க்க இந்தியாவுக்குப் போகிறதாகச் சொன்னார்.

யாரந்த குரு என்று கேட்டேன். ரவிஷங்கர் என்று சொன்னார். ஓகோ சிதார் படிக்கிற பெண் போலன்னு..இசையில ஆர்வமுண்டா...பண்டிட் ரவிஷங்கர் பெரிய இசைமேதைன்னு எடுத்து விட்டேன்.

அப்புறம்தான் தெரிஞ்சது அவங்க சொல்ற ரவிசங்கர் வேறன்னு. எனக்கு அவரு யாருன்னே தெரியலை. சாரி...நான் கேள்விப்பட்டதில்லைன்னு சொன்னேன். என்னைய ஒரு மாதிரி பாத்ததோட சரி. எங்கிட்டப் பேசவேயில்லை. :-(

இந்த ட்ரெயினிங் போக மாட்டேன்னு ஆபீஸ்ல சொல்லீட்டேன். சாப்பாட்டுல கை வெக்கிறாங்களாம்.

வல்லிசிம்ஹன் said...

எப்போதும் இவர் ப்ரோக்ராம் சன்சார் டி வியிவில் பார்க்கும்போது

கொஞ்சம் யோசனையாக இருக்கும்.
இத்தனை மக்களும் பின்பற்றும் இயக்கம் கட்டாயம் ஏதாவது நன்மை செய்து இருக்கிறது,.
அது கண்கூடாகத் தெரிகிறது.
சுதர்சனக் கிரியாவுக்கு நல்ல பலன் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள்.

Siva said...

Hi,
sorry for writing in English...
Few years before when I was a student , Shri Ravishankar gave some intro speech in our Guindy College ground. Infact it was too good, he was simple his logic was simple, but the same time I have seen their devotees were issuing some pamphlets asking them to join some course , some materials for reading, not surprisingly worth of few thousand rupees. It is very clear that ,it also a way of doing business, may be spiritual business, some times it is need for restless people those who are ready to spend money in search of peace...

நாமக்கல் சிபி said...

//மனிதனை மனிதனாக பார்த்தால் பல பிரச்சனைகள் தீரும். தேவை கடவுள் அல்ல, மனிதநேயம்.//
சரியா சொன்னீங்க நாடோடி :-)

நாமக்கல் சிபி said...

//மணியன் said...

சுதர்சன்கிரியா செய்பவர்களில் நானும் ஒருவன். மிக நல்ல பயிற்சி. உடலுக்கும் மனதிற்கும் நலம் சேர்க்கும் பயிற்சி.

ஸ்ரீஸ்ரீயைப் பொறுத்தவரை இந்த அருமையான யோகா பயிற்சியை marketing செய்யும் சிறந்த அமைப்பை ஏற்படுத்தியவர். அவதாரம் போன்ற ஒரு பிம்பம் ஏற்படுதல் தன் வணிக நோக்கத்திற்கு உதவி புரிவதால் தான் அவதாரம் இல்லை என்று சொல்லிக் கொண்டே தன் சீடர்கள் மூலம் பிரம்மாண்டத்தை ஏற்படுத்துபவர். அவர் தன் பிம்ப வளர்ச்சிக்காக ஏற்படுத்தியுள்ள சமூக நல திட்டங்கள் ஆங்கே நெற்பயிருக்கும் பொசிகிறது. //

எனக்கு இதை பற்றி எதுவும் தெரியாததால் நோ கமெண்ட்ஸ்...

பேங்களூர்ல சுதர்ஸனகிரியா கோர்ஸ் -1500 ரூபாய்:-)

நாமக்கல் சிபி said...

//என்னைய வம்புல மாட்டி விடுறதுல அவ்வளவு சந்தோசம். :-)//
ஜிரா,
ஆற்று நீரை ஒரு குடம் வற்றவா செய்துவிடும் ;)

//பாத்தீங்களா குமரன். அவருக்கே எல்லாம் தெரிய ஆரமிச்சிருச்சாம். அப்ப வெட்டியானந்தாவாயிட்டாருன்னு நெனைக்கிறேன்.//
எல்லாமே தெரியும்னு சொல்லல ஜிரா, நாம் ஒரு விஷயத்தில் மிக ஆர்வமாக இருக்கும் போது அது நம்மை தானாகவே வந்தடையும் :-)

//இந்த ட்ரெயினிங் போக மாட்டேன்னு ஆபீஸ்ல சொல்லீட்டேன். சாப்பாட்டுல கை வெக்கிறாங்களாம்.//
சாப்பாட கண்ட்ரோல் பண்ணலனா மனச கண்ட்ரோல் பண்ண முடியாதுங்க...

பூமிக்கடில விளையற பொருட்களை சாப்பிடக்கூடாது :-)

(உ.கிழங்கு, கேரட், பீட் ரூட்..)

ரவி said...

////அவர் சொல்லி கொடுக்கும் மூச்சு பயிற்சி அருமையான ஒன்று. அதற்காக அவரை கடவுளாக்குவது முட்டாள் தனத்தின் உச்சம்...///

நல்லா சுர்ர்ருனு சொன்னீங்க..

கால்கரி சிவா said...

//ஏற்கனவே கெட்ட சாமியாருங்களால இந்து மதத்திற்கு கெட்ட பெயர் வரும் சமயத்தில் நாம் மேலும் ஒருவரை உருவாக்க வேண்டாமே!!!//

இவர் சாமியார் இல்லை இவர் இந்துமதத்தின் தலைவரும் இல்லை.

இவருடைய சுவாசப் பயிற்சி வகுப்பில் அருகில் இருப்பவரை தழுவி "நான் உன்னில் இருப்பவன்" என்று சொல்லசொல்வார்கள். அதுதான் மையக் கருத்து.

அதைவிட்டு அவருடைய ஆசிரமத்தின் மதிப்பையும் அவருடைய வருமானத்தையும் அவரின் சீடர்களின் நடத்தையும் மட்டும் பார்த்து மட்டும் பார்த்து விமர்சனங்கள் செய்வது சரியில்லை என்பது என் தாழ்மையானக் கருத்து

Syam said...

ரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க...அதிலும்

//அவரை அனைவரும் தொட்டு வணங்கினார்கள். (என்னால் ஏற்று கொள்ள முடியாத ஒன்று)//

என்னாலயும் தான்..அதிலும் இந்த மேல் மருவத்தூர்ல இருக்காரே ஒருத்தர்...வேணாம்பா நான் ஒன்னும் சொல்லல... :-)

மதுமிதா said...

///பேங்களூர்ல சுதர்ஸனகிரியா கோர்ஸ் -1500 ரூபாய்:-)///

ஏங்க வெட்டி
நாங்க அட்டெண்ட் செய்தப்போ
150 ரூபாய் நாங்க குடுத்தோம்.

பெங்களூர்ல இப்ப அவங்க 1500 குடுக்கிறாங்களா:-)

நாமக்கல் சிபி said...

//வல்லிசிம்ஹன் said...

எப்போதும் இவர் ப்ரோக்ராம் சன்சார் டி வியிவில் பார்க்கும்போது

கொஞ்சம் யோசனையாக இருக்கும்.
இத்தனை மக்களும் பின்பற்றும் இயக்கம் கட்டாயம் ஏதாவது நன்மை செய்து இருக்கிறது,.
அது கண்கூடாகத் தெரிகிறது.
சுதர்சனக் கிரியாவுக்கு நல்ல பலன் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். //

ஆம்... எனக்கு தெரிந்த நிறைய பேர் இந்த வகுப்பிற்கு சென்று வந்த பின் பெரிய மாற்றத்தை உணர்வதாக சொன்னார்கள்...

நாமக்கல் சிபி said...

//Kattuvasi said...

Hi,
sorry for writing in English...
Few years before when I was a student , Shri Ravishankar gave some intro speech in our Guindy College ground. Infact it was too good, he was simple his logic was simple, but the same time I have seen their devotees were issuing some pamphlets asking them to join some course , some materials for reading, not surprisingly worth of few thousand rupees. It is very clear that ,it also a way of doing business, may be spiritual business, some times it is need for restless people those who are ready to spend money in search of peace... //

Kattuvasi,
you are right...
Without peace you cannot move forward in life... so it helps in attaining your goal too :-)

நாமக்கல் சிபி said...

//செந்தழல் ரவி said...

////அவர் சொல்லி கொடுக்கும் மூச்சு பயிற்சி அருமையான ஒன்று. அதற்காக அவரை கடவுளாக்குவது முட்டாள் தனத்தின் உச்சம்...///

நல்லா சுர்ர்ருனு சொன்னீங்க.. //
மிக்க நன்றி ரவி...

நாமக்கல் சிபி said...

//இவருடைய சுவாசப் பயிற்சி வகுப்பில் அருகில் இருப்பவரை தழுவி "நான் உன்னில் இருப்பவன்" என்று சொல்லசொல்வார்கள். அதுதான் மையக் கருத்து.

அதைவிட்டு அவருடைய ஆசிரமத்தின் மதிப்பையும் அவருடைய வருமானத்தையும் அவரின் சீடர்களின் நடத்தையும் மட்டும் பார்த்து மட்டும் பார்த்து விமர்சனங்கள் செய்வது சரியில்லை என்பது என் தாழ்மையானக் கருத்து//

அவருடைய சுவாச பயிற்சியை பற்றியும் எனக்கு தெரிந்த அளவு சொல்லியுள்ளேன்.

நான் கண்ணால் கண்டதை மட்டுமே சொன்னேன்... எல்லோரும் கடவுள் என்று அங்கே இருந்த மக்கள் உணந்திருந்தால் அவரை கண்டு அப்படி நடந்து கொண்டிருக்கமாட்டார்கள் என்பது என் தாழ்ந்த கருத்து...

உங்கள் மனம் புண்படும்படி எழுதியிருந்தால் மன்னிக்கவும்...

நாமக்கல் சிபி said...

//Syam said...

ரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க...அதிலும்

//அவரை அனைவரும் தொட்டு வணங்கினார்கள். (என்னால் ஏற்று கொள்ள முடியாத ஒன்று)//

என்னாலயும் தான்..அதிலும் இந்த மேல் மருவத்தூர்ல இருக்காரே ஒருத்தர்...வேணாம்பா நான் ஒன்னும் சொல்லல... :-) //

அவரை பத்தியெல்லாம் எழுதனா நாம அரசியல் பண்ற மாதிரி ஆகிடும்... அதனால ஒதுங்கிக்குவோம் ;)

நாமக்கல் சிபி said...

//
ஏங்க வெட்டி
நாங்க அட்டெண்ட் செய்தப்போ
150 ரூபாய் நாங்க குடுத்தோம்.

பெங்களூர்ல இப்ப அவங்க 1500 குடுக்கிறாங்களா:-)//

12 வருஷம் ஆச்சு இல்லைங்களா?

1500 கொஞ்சம் அதிகமா தெரியல...

கால்கரி சிவா said...

//உங்கள் மனம் புண்படும்படி எழுதியிருந்தால் மன்னிக்கவும்...

10:57 PM
//

இதனால் எல்லாம் என் மனம் புண்படாது பாலாஜி.

நம்ம கொஞ்சம் வெள்ளையா சட்டை போட்டு போனாலே வணங்கும் நம்மூர் மக்கள் இந்த மாதிரி வாத்தியார்களை கடவுள் ரேஞ்சுக்கு வணங்குவார்கள். இந்த வாத்தியார்கள் வாய்கிழிய சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.

தவறு மக்களுடையதே. விமர்சனங்கள் இந்த ம(மா)க்களை நோக்கி இருக்க வேண்டுமே தவிர வாத்தியரை நோக்கி அல்ல என்பதே என் கருத்து

நாமக்கல் சிபி said...

//தவறு மக்களுடையதே. விமர்சனங்கள் இந்த ம(மா)க்களை நோக்கி இருக்க வேண்டுமே தவிர வாத்தியரை நோக்கி அல்ல என்பதே என் கருத்து//

என்னுடைய விமர்சனமும் மக்கள் மீதுதான்...

Unknown said...

பாலாஜி

ரவிசங்கரை பற்றி படித்துள்ளேன். இவர் போல நிறைய சாமியார்கள் உள்ளனர். அவர்களிடம் நிறைய சொத்துக்கள் இருப்பதும் உண்மை.

அந்த சொத்துக்களை என்ன செய்கின்றனர் என்பதை வைத்துத்தான் அவர்கள் நல்லவர்களா இல்லையா என சொல்ல முடியும். அவர்களுக்கு பின் அவை அனைத்தும் அவர்கள் மாமன், மச்சான் என போனால் அவர்கள் போலி சாமியார்கள். அறக்கட்டளை மூலம் மக்களுக்கு போனால் அவர்கள் நல்லவர்கள்.

இதுதான் என் லாஜிக்.

மற்றபடி சாமியார்கள் காசு வைத்திருப்பதில் தப்பில்லை. நல்ல காரியம் செய்ய காசு தேவைப்படுகிறது. கோயில் கட்ட, இலவச ஆஸ்பத்திரி கட்ட என அந்த காசு செலவு செய்யப்பட்டால் தப்பில்லை. அப்படி செய்யப்படுகிறதா இல்லையா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.

ஆனால் இன்றைய சாமியார்கள் யாரும் கடவுள்களல்ல.அடுத்து வரவிருக்கும் அவதாரம் கல்கி அவதாரம் தான்:-)

கதிர் said...

ரெண்டு நாலைக்கு முன்னாடி பூரி ஜெகன்னாதர் ஆலயத்தில நடந்து தள்ளு முள்ளுல 8 பேர் அநியாய்மா இறந்துட்டாங்க!

மக்களின் இந்த கண்மூடித்தனமான பக்தியை என்னன்னு சொல்றதுன்னு தெரியல!

படிச்சவுடனே மனசு கஷ்டமாயிடுச்சி!

Anonymous said...

எளிமையாக, அழகா ஒரு நிகழ்வ கண் முன்னாடி நிறுத்திடீங்க வெட்டி. ரொம்ப நல்லா இருந்துச்சு!!

இருந்தாலும் இது கொஞ்சம் ஓவருங்கோ!! ;-)
//சிம்பு நயந்தாராவை கசக்கின மாதிரி அந்த கூட்டம் ஸ்ரீ ஸ்ரீயை நசுக்கி//

அடடா நான் அப்படி சொல்ல வரலை, இன்னும் படம் பார்க்கலைனு சொல்ல வந்தேனுங்க :)

-விநய்*

நாமக்கல் சிபி said...

//பாலாஜி

ரவிசங்கரை பற்றி படித்துள்ளேன். இவர் போல நிறைய சாமியார்கள் உள்ளனர். அவர்களிடம் நிறைய சொத்துக்கள் இருப்பதும் உண்மை.

அந்த சொத்துக்களை என்ன செய்கின்றனர் என்பதை வைத்துத்தான் அவர்கள் நல்லவர்களா இல்லையா என சொல்ல முடியும். அவர்களுக்கு பின் அவை அனைத்தும் அவர்கள் மாமன், மச்சான் என போனால் அவர்கள் போலி சாமியார்கள். அறக்கட்டளை மூலம் மக்களுக்கு போனால் அவர்கள் நல்லவர்கள்.

இதுதான் என் லாஜிக்.

மற்றபடி சாமியார்கள் காசு வைத்திருப்பதில் தப்பில்லை. நல்ல காரியம் செய்ய காசு தேவைப்படுகிறது. கோயில் கட்ட, இலவச ஆஸ்பத்திரி கட்ட என அந்த காசு செலவு செய்யப்பட்டால் தப்பில்லை. அப்படி செய்யப்படுகிறதா இல்லையா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.//

நீங்க சொல்றது சரிதான் செல்வன்...

நாமக்கல் சிபி said...

//ஆனால் இன்றைய சாமியார்கள் யாரும் கடவுள்களல்ல.அடுத்து வரவிருக்கும் அவதாரம் கல்கி அவதாரம் தான்:-) //

:-))

நாமக்கல் சிபி said...

//தம்பி said...
ரெண்டு நாலைக்கு முன்னாடி பூரி ஜெகன்னாதர் ஆலயத்தில நடந்து தள்ளு முள்ளுல 8 பேர் அநியாய்மா இறந்துட்டாங்க!

மக்களின் இந்த கண்மூடித்தனமான பக்தியை என்னன்னு சொல்றதுன்னு தெரியல!

படிச்சவுடனே மனசு கஷ்டமாயிடுச்சி!//
தம்பி,
நம்ம மெகா ஸ்டார் சிரஞ்சீவியோட ஸ்டாலின் படத்திற்கும் முதல் நாள் கூட்ட நெரிசலில் நால்வர் பலியானதாக கேள்விப்பட்டேன்...

எப்பத்தான் மாறப்போறாங்கனு தெரியலை...

நாமக்கல் சிபி said...

//எளிமையாக, அழகா ஒரு நிகழ்வ கண் முன்னாடி நிறுத்திடீங்க வெட்டி. ரொம்ப நல்லா இருந்துச்சு!!
//
மிக்க நன்றி விநய்!!!

//
இருந்தாலும் இது கொஞ்சம் ஓவருங்கோ!! ;-)
//சிம்பு நயந்தாராவை கசக்கின மாதிரி அந்த கூட்டம் ஸ்ரீ ஸ்ரீயை நசுக்கி//

அடடா நான் அப்படி சொல்ல வரலை, இன்னும் படம் பார்க்கலைனு சொல்ல வந்தேனுங்க :)

-விநய்*//
:-))

Anonymous said...

Sudharsan kriya is excellent i participated in october 2009
thaks gurujii sri sri