தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, October 22, 2006

டான்!!!

ஹிந்தி புரியாது என்ற காரணத்தால் பல முறை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தும் பல நல்ல திரைப்படங்களை தவறவிட்டதுண்டு. ஆனால் இங்கே திரையிடப்படும் படங்கள் சப்-டைட்டிலுடன் இருப்பதால் துணிந்து சென்றேன்.அமித்தாபின் டான் பார்த்ததில்லை என்றாலும் தலைவரின் பில்லா பார்த்திருந்ததால் கதை ஏற்கனவே தெரிந்திருந்தது.

படம் முழுதும் மலேசியாவில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய இளைஞர்களை கவரும் விதமாக படம் படு ஸ்டைலாக இருக்கிறது. பாடல்களும் அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. ஷாருக்கின் ஸ்டையிலும் அருமை. (அமிதாப்போடு தயவு செய்து ஒப்பிட்டு பார்க்காதீர்கள்)

டானாக வரும் ஷாருக் அந்த பாத்திரத்தின் பெயரை ஓரளவு காப்பாற்றும் விதமாகவே நடித்திருக்கிறார் (கொஞ்சம் வயசான மாதிரி தெரிகிறார்). விஜயாக நடித்திருக்கும் ஷாருக் ஆள் மாறட்டத்திற்கு சுலபமாக ஒத்துக் கொள்வதைப் போல தெரிகிறது. பிறகு வழக்கம் போல் அவர் டானாக மாறி பட்டையை கிளப்புவது மசாலா பட ரசிகர்களுக்கு சாதாரண விஷயம்.ப்ரியங்க சோப்ரா அந்த பாத்திரத்திற்கு அமர்க்களமாக பொருந்துகிறார். அவருக்கு ஒரு சில ஸ்டண்ட் காட்சிகளே வடிவமைத்திருக்கிறார்கள் என்றாலும் அந்த காட்சியில் அசர வைக்கிறார். டிசிபி டிசில்வா பாத்திரத்தில் நடித்திருக்கும் பொம்மன் இரானிக்கு பதில் அமிதாப்பை போட்டு சில மாற்றங்களை செய்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்குமென்றே தொன்றியது.

பழைய படத்திற்கு அருமையாக பாலிஷ் போட்டிருக்கிறார்கள். பழைய படத்தை ரீ-மேக் செய்யும் போது அப்படியே காப்பி அடிப்பது தவறு... காலத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றி இருக்க வேண்டும் என்று சொல்லலாமென காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். படத்தில் சில மாற்றங்கள் நம்மை அசர வைக்கிறது.

படத்தின் வசனங்கள் கூர்மை. அதில் முக்கியமாக "டானை பிடிப்பது கஷ்டமல்ல... இயலாத காரியம்"

கண்டிப்பாக பார்க்கலாம். பக்கா மசாலா!!!

48 comments:

Unknown said...

பாலாஜி

உங்கள் விமர்சனம் நல்லா இருக்கு

ஆனா தலைவரின் பில்லாவை பார்த்த கண்ணால் அந்த இடத்தில் ஷாருக்கை வைத்து எப்படி பார்க்க முடியும்?:-))

இன்னும் பில்லா கண்ணுக்குள் நிற்கிறது.

நாமக்கல் சிபி said...

செல்வன்,
மிக்க நன்றி!!!

தலைவர் ஸ்டையிலை ஷாருக்கிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஷாருக்கிற்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது... எனக்கு அதுவும் பிடிக்கும் ;-)

பில்லாவை இன்னும் அருமையாக எடுத்திருக்கலாம். தலைவரை 50% கூட சரியாக பயன்படுத்தவில்லை என்பது என் எண்ணம்... பாட்ஷா மாதிரி வருமா???

Boston Bala said...

---அமிதாப்போடு தயவு செய்து ஒப்பிட்டு பார்க்காதீர்கள்---

ஷாருக்கோடு ஹிந்தி சினிமாவைத் தொடங்கிய என்னைப் போன்றோர்களுக்கு 'ஷாருக்குக்கு நிகர் ஷாருக்கே' ; )

---டிசில்வா பாத்திரத்தில் நடித்திருக்கும் பொம்மன் இரானிக்கு பதில் அமிதாப்பை---

எனகு மணிவண்ணனின் நகைச்சுவை ரொம்பப் பிடிக்கும். ஆனால், 90-களின் இறுதியில் எல்லாப் படங்களிலும் தலையைக் காட்டி காமெடிக்கு பதில் கழுத்தறுப்பாக மாறி (பின் குறைத்து)க் கொண்டார்.

அமிதாப், இன்னும் நிறுத்தாமல், தேவையில்லாத கதாபாத்திரம் எல்லாம் ஏற்று வருகிறார் என்பது என்னுடைய வருத்தம். நல்ல வேளை. இந்தப் படத்தை ரட்சித்து விட்டார் : )

---அவர் டானாக மாறி பட்டையை கிளப்புவது ---

வில்லனாக ஷாரூக் பல படங்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். 'ராம் ஜானே' படத்தில் கண்ணாரப் பார்க்கலாம்.

ஹிந்திப் படங்களின் ரஜினி கலந்த கமல்ஹாசன் அவர் என்பதோடு புராணத்தை நிறைவு செய்கிறேன்.

விமர்சனத்துக்கு நன்றி :)

நாமக்கல் சிபி said...

பாபா,
நீங்களும் ஷாருக் ஃபேனா???
கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டிய படம்.

நான் ஏன் அமிதாப்பை சொன்னேன் என்று நீங்கள் படம் பார்த்து சரியா என்று சொல்லவும்.

வடுவூர் குமார் said...

பாலாஜி
நான் அமிதாப் நடித்த அந்த டான் தான் பார்த்தேன்.அதுவும் 1976 சமீபத்தில் என்று நினைவு.

நாமக்கல் சிபி said...

வடுவூர் குமார்,
இந்த பாடம் பார்த்து நீங்க சொல்லுங்க... எப்படினு?

//அதுவும் 1976 சமீபத்தில் என்று நினைவு//
சமீபத்தில்??? :-))

Sud Gopal said...

"ஏ மேரா தில் ப்யார் கா தீவானா" கரீனா தொடங்கி,ப்ரியங்கா,இஷா என்று தொடரும் ஹீரோயினிகளைப் பற்றி ஒன்றுமே குறிப்பிடாத இந்தப் பதிவைப் புறக்கணிக்கிறோம்.

இதனைக் கண்டிக்கும் வகையில் இந்த வாரயிறுதியில் ப்ரியங்கா சோப்ராவின் மராத்தான் எங்களது இடத்தில் நடைபெறும் என்பதன்யும் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம்.

இவண்,
"ப்ளஃப்மாஸ்டர்"பி.சோ. ரஜிகர் மன்றம்,
பாக்மனே டெக்பார்க்,
பெங்களூரு டௌண்டவுன்

Sud Gopal said...

படத்தோட மீஜிக் பத்தியும் ஏதாவது சொல்லியிருக்கலாம்.

நாமக்கல் சிபி said...

//இதனைக் கண்டிக்கும் வகையில் இந்த வாரயிறுதியில் ப்ரியங்கா சோப்ராவின் மராத்தான் எங்களது இடத்தில் நடைபெறும் என்பதன்யும் தெரியப்படுத்திக் கொள்ளுகிறோம்//


//ப்ரியங்க சோப்ரா அந்த பாத்திரத்திற்கு அமர்க்களமாக பொருந்துகிறார். அவருக்கு ஒரு சில ஸ்டண்ட் காட்சிகளே வடிவமைத்திருக்கிறார்கள் என்றாலும் அந்த காட்சியில் அசர வைக்கிறார்//

சுதர்சன்,
பதிவ சரியா படிக்கலையா???

கரீனா கொஞ்சம் வயசான மாதிரி தெரிகிறார். அதை வெளிப்படையா சொல்ல வேணாமேனுதான் விட்டுட்டேன்.

இஷா கோபிகர் கேப்டனுக்கு ஜோடியா நடிச்சிட்டு ஷாருக்குக்கு ஜோடியா நடிச்சது கொஞ்சம் ஃபீலிங்காதான் இருந்தது. இவருக்கும் பெருசா ஒண்ணும் ரோல் இல்லை.

படத்தின் பின்னனி இசை அருமை. மே ஹூன் டான் பாடல் அருமை. ரி-மிக்ஸ் பாடல்கள் பழைய பாடல்கள் அளவு கவரவில்லை...

அபுல் கலாம் ஆசாத் said...

அன்புடையீர்,

டான் குறித்த எனது எண்ணங்களை தயைகூர்ந்து இந்தச் சுட்டிக்குச் சென்று படிக்கவேண்டுகிறேன்.

http://ennam.blogspot.com/2006/09/don.html

இன்னும் படம் பார்க்கவில்லை.

நன்றிகள்

அன்புடன்
ஆசாத்

அபுல் கலாம் ஆசாத் said...

மன்னிக்கவேண்டுகிறேன்.

டான் தொடர்பாக இங்கேயும் எழுதியுள்ளேன்.

http://www.tamiloviam.com/unicode/09140606.asp

அன்புடன்
ஆசாத்

நாமக்கல் சிபி said...

ஆசாத்,
தங்கள் படைப்பை படித்தேன்...
நீங்கள் சொல்லி இருப்பது சரியே!!!

சீக்கிரம் பார்த்து சொல்லுங்க, படம் எப்படினு ;)

Porkodi (பொற்கொடி) said...

unga thooral kadai ipo thAn padichen, kalakal vetti.. eppo paaru ipdiye solla vekringa :) but mudivu konjam sandoshama irundurkalamo..

கதிர் said...

"டான்" படம் பாத்துட்டு "டான்னு" ஒரு பதிவ போட்டாச்சா? தலைவர்களின் குட்டிக்கதையை போல கொஞ்சமாக எழுதி புண்ணியத்தை தேடிக்கொண்ட வெட்டியாரே!
ஏதோ தமிழ் படமெல்லாம் ரிலீஸ் ஆகியிருக்காம், அத பாக்க நேரமிருக்கா? இருந்தா பாருங்கய்யா தமிழ மறந்திட போறிங்க!

நாமக்கல் சிபி said...

//பொற்கொடி said...
unga thooral kadai ipo thAn padichen, kalakal vetti.. eppo paaru ipdiye solla vekringa :) but mudivu konjam sandoshama irundurkalamo..
//
மிக்க நன்றி பொற்கொடி!!!
நீங்க இப்படி சொல்றதுதான் எனக்கும் சந்தோஷம்.

அடுத்து ரொம்ப சந்தோஷமான கதை ரெடியா இருக்கு. இன்னும் 1-2 வாரம் போகட்டும். அதுக்கு அடுத்த சாப்ட்வேர் லவ் ஸ்டோரி எழுத ரொம்ப நாளாகும்.

நாமக்கல் சிபி said...

//தம்பி said...
"டான்" படம் பாத்துட்டு "டான்னு" ஒரு பதிவ போட்டாச்சா? //
இல்லப்பா பாத்து ரெண்டு நாள் கழித்துதான் போட்டேன் ;)

//
தலைவர்களின் குட்டிக்கதையை போல கொஞ்சமாக எழுதி புண்ணியத்தை தேடிக்கொண்ட வெட்டியாரே!
//
ஏற்கனவே தெரிந்த கதை தானே.. அதனால் தான் ;)

//
ஏதோ தமிழ் படமெல்லாம் ரிலீஸ் ஆகியிருக்காம், அத பாக்க நேரமிருக்கா? இருந்தா பாருங்கய்யா தமிழ மறந்திட போறிங்க!
//
தம்பி,
நல்ல படம் ஏதாவது இங்க ரிலிஸான போய் பார்க்கலாம். வே.வி பார்த்தேன். பயங்கர ஏமாற்றம்.
இப்ப வந்திருக்கும் படங்களும் எதுவும் சரியில்லை என்றே தகவல் வருகிறது. நான் என்ன செய்யட்டும்???

சிவாஜி வரட்டும்... கண்டிப்பாக முதல் நாள் பார்த்துவிடலாம் ;)

ILA (a) இளா said...

DON-Well Done

நாமக்கல் சிபி said...

// ILA(a)இளா said...
DON-Well Done
//
Well Said, ILA

கப்பி | Kappi said...

//கண்டிப்பாக பார்க்கலாம். பக்கா மசாலா!!!//

பார்க்கலாம்... ;)

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...
//கண்டிப்பாக பார்க்கலாம். பக்கா மசாலா!!!//

பார்க்கலாம்... ;)
//
பார்த்துட்டு சொல்லுப்பா...

ஏற்கனவே பொம்மரில்லுக்கு இப்படித்தான் சொன்ன... இன்னும் பாக்கலை போல இருக்கு

பெத்தராயுடு said...

//நான் அமிதாப் நடித்த அந்த டான் தான் பார்த்தேன்.அதுவும் 1976 சமீபத்தில் என்று நினைவு.//

அது சமீபத்தில் 1976 இல்லீங்கோ.. 1976 சமீபத்தில் ;-}

நாமக்கல் சிபி said...

//பெத்த ராயுடு said...
//நான் அமிதாப் நடித்த அந்த டான் தான் பார்த்தேன்.அதுவும் 1976 சமீபத்தில் என்று நினைவு.//

அது சமீபத்தில் 1976 இல்லீங்கோ.. 1976 சமீபத்தில் ;-}
//
ஆஹா... கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கயா...

கடைசியாக...
அது "1976 சமீபத்தில்" இல்லை... படம் ரிலிஸானது 1978ல் :-)

பழூர் கார்த்தி said...

படத்திற்கு புனே டைம்ஸில் 2.5/5 மார்க் கொடுத்துள்ளார்கள், ரீமேக் படுசப்பையாக உள்ளதென்றும், அருமையான பழைய படங்களை ரீமேக் செய்கிறேனென்று சொதப்ப வேண்டாமென்றும் விமர்சித்துள்ளார்கள்.... உங்கள் விமர்சனமோ ஆஹோ, ஓஹோவென்றும், பக்கா மசாலா என்றும் சொல்கிறது, என்ன பண்ணலாம் உங்களை... :-)))

****

பார்ப்போம், படம் செட் மேக்ஸிலோ, லோக்கல் கேபிளிலோ இன்னும் ஓரிரண்டு மாதங்களில் வந்துவிடும் :-))

****

இதே மாதிரி பில்லாவை தமிழில் ரீமேக் செய்தால், அதற்கு தற்போதைய ஹீரோக்களில்(ரஜினியை தவிர) எவர் பொருந்துவார் ??

Unknown said...

//"டானை பிடிப்பது கஷ்டமல்ல... இயலாத காரியம்"//

Vetti, Your review differs with the review in CNN IBN..

They used the same dialogue to describe sharukhs DON... but with a slight change

They say.. Its not difficult to watch this movie.. but its impossible..

Howeva after reading ur review I think Don is worth a watch :)

நாமக்கல் சிபி said...

//சோம்பேறி பையன் said...
படத்திற்கு புனே டைம்ஸில் 2.5/5 மார்க் கொடுத்துள்ளார்கள், ரீமேக் படுசப்பையாக உள்ளதென்றும், அருமையான பழைய படங்களை ரீமேக் செய்கிறேனென்று சொதப்ப வேண்டாமென்றும் விமர்சித்துள்ளார்கள்.... உங்கள் விமர்சனமோ ஆஹோ, ஓஹோவென்றும், பக்கா மசாலா என்றும் சொல்கிறது, என்ன பண்ணலாம் உங்களை... :-)))
//
ஏனுங்க இன்னும் 20 வருஷம் கழிச்சி யாராவது பாட்ஷா ரீ-மேக் பண்ணா நாம என்ன சொல்லுவோம்.
படம் எவ்வளவு நல்லா இருந்தாலும் கேவலமா இருக்குனுதான் சொல்லுவோம்.
இவுங்க சொல்றதுன் அந்த மாதிரிதான்.

நான் தெளிவாக சொல்லிவிட்டேன் "அமிதாப்போடு தயவு செய்து ஒப்பிட்டு பார்க்காதீர்கள்"
நீங்க பாத்துட்டு சொல்லுங்க படம் எப்படினு. என்னை பொருத்தவரை படம் அருமை. கலெக்ஷன் ரெக்கார்டை இன்னும் ஒரு வாரம் கழித்து பாருங்கள். நீங்களும் நிச்சயம் ஒத்துக்கொள்வீர்கள்.

பில்லா??? நல்ல டைரக்டர் கிடைச்சா விஷால் முயற்சி பண்ணலாம். விஜய், அஜித், சூர்யா, விக்ரம், மாதவன் யாரும் பொருந்தர மாதிரி தெரியல :-(

நாமக்கல் சிபி said...

//தேவ் | Dev said...
//"டானை பிடிப்பது கஷ்டமல்ல... இயலாத காரியம்"//

Vetti, Your review differs with the review in CNN IBN..

They used the same dialogue to describe sharukhs DON... but with a slight change

They say.. Its not difficult to watch this movie.. but its impossible..

Howeva after reading ur review I think Don is worth a watch :)
//
Dev,
There are lot of mixed reviews.

this film is for the younger generation people who were not there when Don was released.
so they have to watch the movie and give comments. Not the same old people who still beleive "Amitabh is the only Super star" ...

After seeing the new Don, I watched songs from old Don and I still think Shahrukh's Don rocks...
Amitabh was looking too good... but still this is worth a watch.
Also I am sure, the collection record will speak for the people who still claims this movie is utter crap...

Anonymous said...

You have proved to be fit for your title :-)

Rediff 1: 2/5 Stars
2: 1.5/5 Stars

CNN IBN: 1/5 Stars (Watch the video)

Worst part you said is "VV is disappointing and DON is a good masala"

-Valavan from PUNE
[enna pannurathu.. ikkarakku akkara pacchai :-)]

நாமக்கல் சிபி said...

Valavan from PUNE,
//You have proved to be fit for your title :-)
//
Thx a lot...

I personally felt VV was disappointing since I expected a lot from the trio Kamal - Gowtham Menon - Haris...

also romance scenes between Kamal and Jyothika was not lively compared to Surya-jyothika pair in Khaka Khaka. I couldnt restrict myself from comparing VV with Khaka-Khaka .

Violence was more in VV and also the forensic part was pathetic. For more reviews on VV, u can read Boston Bala's review and velikandanathar's review...

Nothing more to say abt VV...

Let's come to DON

http://specials.rediff.com/movies/2006/oct/23box.htm

says that
----------------------------
With two major big starcast films, Don and Jaan-e-Mann, releasing and Diwali and Eid festivals coinciding, one expected fireworks at box office. But no such thing happened. While Don managed a better opening response, its reports are far from satifactory.

Don

Cast: Shah Rukh Khan, Priyanka Chopra, Kareena Kapoor, Isha Koppiker, Arjun Rampal, Boman Irani.
Director: Farhan Akhtar.

Great performances, good music.

Cannot match the original Don, starring Amitabh Bachchan.

--------------------
(this is what I have mentioned)

(Please dont expect reviews like Madhan's thiraipaarvai from me...
Taste differs :-) )

நாகை சிவா said...

டான், படம் இன்னும் பாக்கல, சீக்கிரமே பாத்துட்டு கதை சொல்லுறேனு ஒரு பிகருக்கு வாக்கு கொடுத்து இருக்கேன். அது ஷாருக் ரசிகையாம். ஷாருக் பேர் சொல்லி நமக்கு பொழப்பு ஒடிக்கிட்டு இருக்க. நம் மக்கள் யாரும் சிடி கொடுத்தா பாக்கனும். வேற வழி இல்ல கதை சொல்லனும்ல. :(

நாமக்கல் சிபி said...

புலி,
Desitorrents ல வந்துடுச்சு.. சீக்கிரம் டவுன்லோட் பண்ணிக்கோ!!!

படத்துக்கு முக்கியமே பின்னனி இசைதான்... திருட்டு வி.சி.டில பாக்கறதுக்கு பேசாம பாக்காம இருந்துக்கலாம்...

புலி, மேல சொன்னது உனக்கு இல்லை. அது நம்ம ஊருல இருக்கறவங்களுக்கு...
நீ வாக்கு கொடுத்துட்ட இல்லை. அதனால கண்டிப்பா பாரு... ஓகேவா?

Boston Bala said...

---ஏனுங்க இன்னும் 20 வருஷம் கழிச்சி யாராவது பாட்ஷா ரீ-மேக் பண்ணா நாம என்ன சொல்லுவோம்.
படம் எவ்வளவு நல்லா இருந்தாலும் கேவலமா இருக்குனுதான் சொல்லுவோம்.---

: )

முன்பு ஒர் இழையில் ரீ-மேக் படங்கள் குறித்து பேசினோமே... அதே கதை!?

சும்மா ஒரு பாட்டு கேட்போம்:

முதலாம் சந்திப்பில் நான் அறிமுகம் ஆனானே
இரண்டாம் ரீமேக்கில் என் இரக்கம் இழந்தேனே
மூன்றாம் மொழிபெயர்ப்பில் முகத்தை மறைத்தேனே
நான்காம் டப்பிங்கில் டப்பாக்குள் போக வேண்டினேன்


கொடுமை வந்தது... கொடுமை வந்தது... கொடுமை வந்ததடா!
இன்னும் கோடி கோடி கதைப்பஞ்சம் திரைக்குப் பின்னே இருக்குதடா!

நாமக்கல் சிபி said...

//முன்பு ஒர் இழையில் ரீ-மேக் படங்கள் குறித்து பேசினோமே... அதே கதை!?//

அதே அதே!!! பாட்டு பட்டைய கிளப்புது :-)

ரீ-மேக் படங்கள், முந்தைய படங்கள் பார்க்காதவர்களுக்கு... பழசோடு ஒப்பிட்டு பார்த்தால் எதுவும் பிடிக்காது.

வேண்டுமென்றால் பழைய ஃபிளாப் படங்களை எடுத்து கொஞ்சம் கதை மாற்றி ஹிட்டாக்க முயற்சி செய்யலாம்... யாருக்கு தைரியம் வரும் ;)

----------

எங்க காலேஜ்ல நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி...

ஆச்சி மெஸ்:

நான்: அண்ணா இட்லி சூப்பரா இருக்குனா... இன்னும் 2 வைங்க

என் நண்பன்: ஏன்டா நேத்து அண்ணபூர்ணால சாப்பிட்ட இட்லி நல்லா இல்லைனு சொன்ன...

நான்: டேய் அந்த இட்லி அண்ணபூர்ணாவோட ஸ்டாண்டர்டுக்கு இல்லை. (எப்பவும் மல்லிகை பூ மாதிரி இருக்கும்.. ஆனால் அன்று சுமாராக இருந்தது)அதனால நல்லா இல்லைனு சொன்னேன். இங்க எப்பவும் இருக்குறத விட இன்னைக்கு கொஞ்சம் நல்லா இருக்கு அதனால நல்லா இருக்குனு சொல்றேன் :-)

அதனால அண்ணபூர்ணாவைவிட ஆச்சி மெஸ் இட்லி அருமைனு நான் சொல்றதா யாராவது நினைச்சா நான் என்ன பண்ண???

Syam said...

என்னங்க இது இப்போல்லாம் அடிக்கடி சினிமா விமர்சனம் வருது... :-)

நாமக்கல் சிபி said...

//Syam said...
என்னங்க இது இப்போல்லாம் அடிக்கடி சினிமா விமர்சனம் வருது... :-)
//
சரி நம்மளும் தீபாவளிக்கு என்ன பண்ணோம்னு எழுத வேணாம.. அதுக்குத்தான் இது ;)

இன்னும் ரெண்டு படம் பாக்கி இருக்கு. அது முடிச்சிட்டு நிறுத்திடலாம் ;)

மு.கார்த்திகேயன் said...

நல்ல பதிவு வெட்டிபயலே.. எனக்கு தெரியாத விஷயம் பில்லா ஹின்தி படத்தின் தழுவல் என்பது..

யார் வந்தாலும் ரஜினி அளவுக்கு அந்த பாத்திரதிற்கு பொருந்துமா என்பது மிகப் பெரும் கேள்வி.. அது வேண்டாத வேலையாகக்கூட இருக்கலாம்..

Anonymous said...

//
//You have proved to be fit for your title :-)
//
Thx a lot...
//
Hey! dont take it personally... i was just kidding...

//
I couldnt restrict myself from comparing VV with Khaka-Khaka .
//
Yeah! its true... thatz the same pblm here.. people here just started comparing DON with old DON as well as Farhan Akthar's previous hit 'Dil Chata Hai' both way it fails...

//
With two major big starcast films, Don and Jaan-e-Mann, releasing and Diwali and Eid festivals coinciding, one expected fireworks at box office. But no such thing happened. While Don managed a better opening response, its reports are far from satifactory.
//
Its not like Tamil industry... there is no relationship between a good movie and a hit movie... still we need to wait and see the actual collection result... (who bothers!)...

Thanks
Valavan

நாமக்கல் சிபி said...

// Karthikeyan Muthurajan said...
நல்ல பதிவு வெட்டிபயலே.. எனக்கு தெரியாத விஷயம் பில்லா ஹின்தி படத்தின் தழுவல் என்பது..
//
இந்த மாதிரி நிறைய படங்கள் இருக்குது கார்த்திகேயன்...
www.rajinifans.com ல பார்த்தால் தெரியும் :-)

//
யார் வந்தாலும் ரஜினி அளவுக்கு அந்த பாத்திரதிற்கு பொருந்துமா என்பது மிகப் பெரும் கேள்வி.. அது வேண்டாத வேலையாகக்கூட இருக்கலாம்..
//
சரியாக சொன்னீர்கள். இனி ரீ-மேக் செய்து பெயரை கெடுத்து கொள்வதை விட கருவை மட்டும் வழக்கம் போல் காப்பி அடித்து படங்களை எடுக்கலாம் ;)

நாமக்கல் சிபி said...

//Hey! dont take it personally... i was just kidding...
//
np. everyone calls me like that only :-)

//Yeah! its true... thatz the same pblm here.. people here just started comparing DON with old DON as well as Farhan Akthar's previous hit 'Dil Chata Hai' both way it fails...
//
U r right... but this review is not for them... it's for people like me who havent seen Amithabh's DON :-)

//Its not like Tamil industry... there is no relationship between a good movie and a hit movie... still we need to wait and see the actual collection result... (who bothers!)...//
Even Tamil Industry follows the same. There is no relationship between a good and hit movie. Anbe Sivam is a very good movie but its not a hit :-(

Anonymous said...

ஜானேமண் படம் பார்த்தீர்களா? விமர்சனம் எதிர்பார்க்கலாமா?

Anonymous said...

//
U r right... but this review is not for them... it's for people like me who havent seen Amithabh's DON :-)
//
And for them who dont know HINDI! :-)

Thatz what i mentioned
"ikkarakku akkara pacchai"
[ Last week one of my collegues('Hindikaran' as we call), just returned from the US rushed me and asking downloaded 'Gajini' songs. He said he stayed with some Telugu guys there and saw the film. "I had seen that awesome movie 9 times!!!" he added. :-)]

//
Even Tamil Industry follows the same. There is no relationship between a good and hit movie. Anbe Sivam is a very good movie but its not a hit :-(
//
This is one way.. which could be tolerated... here it works the other way... a worst ('bakwas' as they call) movie could be a big hit movie :-))


Thanks
Valavan

நாமக்கல் சிபி said...

//Anonymous said...
ஜானேமண் படம் பார்த்தீர்களா? விமர்சனம் எதிர்பார்க்கலாமா?
//
இல்லைங்க இன்னும் பாக்கல...
நான் அதிகமா இந்தி படம் பாக்கறதில்லை. இது ஷாருக் படம்னுதான் போய் பாத்தேன்...

நாமக்கல் சிபி said...

//And for them who dont know HINDI! :-)//
I dont think so.. since we have lot of hindi speaking people here who really enjoyed the movie...

May be the movie may not be good as per your standard but its going to be a hit and without people watching it cannot be a hit :-)

Also, I dont think its going to be a hit because of Non-Hindi speaking people like me :-)

//Thatz what i mentioned
"ikkarakku akkara pacchai"
[ Last week one of my collegues('Hindikaran' as we call), just returned from the US rushed me and asking downloaded 'Gajini' songs. He said he stayed with some Telugu guys there and saw the film. "I had seen that awesome movie 9 times!!!" he added. :-)]
//
I beleive the songs from Gajini are too good... When I was in Blore, "Sutrum Vizhi sudare" was my ring tone (MP3):-)

Also I have seen the love sequences more than 20 - 30 times :-) (though I didnt like the climax)

//This is one way.. which could be tolerated... here it works the other way... a worst ('bakwas' as they call) movie could be a big hit movie :-))
//
Do u think Sivakasi or Thirupachi better than Anniyan or Gajini...
I beleive they Claimed Thirupachi as a great hit compared to Anniyan or Gajini... (courtesy : SUN TV)

G.Ragavan said...

படத்துல வெத்தலையப் போட்டேண்டி பாட்டும் மை நேம் இஸ் பில்லா பாட்டும் இருக்கா?

எல்.ஆர்.ஈஸ்வரி பாடுன...நினைத்தாலே இனிக்கும் சுகங்கள் ஷிக்கு ஷிக்கு ஷிக்குன்னு ஒரு பாட்டு வருமே...அது இருக்கா?

பில்லா பாத்துட்டு அமிதாப் நடிச்ச டானே நல்லாயிருக்கலையே...ஷாருக்கான் நடிச்சத என்ன சொல்ல! சரி...நேரம் கெடச்சா பாக்கலாம்னு நெனைக்கிறேன்.

நாகை சிவா said...

//புலி, மேல சொன்னது உனக்கு இல்லை. அது நம்ம ஊருல இருக்கறவங்களுக்கு...
நீ வாக்கு கொடுத்துட்ட இல்லை. அதனால கண்டிப்பா பாரு... ஓகேவா? //

அது எனக்கும் தெரியும். ஊரில் இருக்கும் போது எந்த மட்டமா படமா இருந்தாலும் தியேட்டர் தான்.
இப்ப வேற வழி.....

சொன்ன சொல்ல கண்டிப்பா காப்பாத்திடுவேன், நீ கவலைய விடு

நாமக்கல் சிபி said...

// G.Ragavan said...
படத்துல வெத்தலையப் போட்டேண்டி பாட்டும் மை நேம் இஸ் பில்லா பாட்டும் இருக்கா?

எல்.ஆர்.ஈஸ்வரி பாடுன...நினைத்தாலே இனிக்கும் சுகங்கள் ஷிக்கு ஷிக்கு ஷிக்குன்னு ஒரு பாட்டு வருமே...அது இருக்கா?
//
வெத்தலைய போட்டேண்டிதான் பயங்கர பாப்புளரான பாட்டு... "காய் கே பானு பனராஸ்"னு வரும். புது டான்லையும் இந்த பாட்டு இருக்கு.

நினைத்தாலே இனிக்கும் பாட்டும் நல்ல ஃபேமஸான பாட்டுதான் "ஏ மேரா தில்"னு வரும். புது படத்துல இந்த பாட்டுக்கு கரினா வராங்க...

மை நேம் இஸ் பில்லாவும் இருக்கு... ஆனா அந்த அளவுக்கு இல்லை ;)


//பில்லா பாத்துட்டு அமிதாப் நடிச்ச டானே நல்லாயிருக்கலையே...ஷாருக்கான் நடிச்சத என்ன சொல்ல! சரி...நேரம் கெடச்சா பாக்கலாம்னு நெனைக்கிறேன். //
இது உங்களுக்கு பிடிக்கறதுக்கு வாய்ப்பு குறைவு... உங்களை பார்த்தா ரொம்ப அமைதியா தெரியுது... போட்டோவை வைத்து சொல்றேன் ;)

நாமக்கல் சிபி said...

//அது எனக்கும் தெரியும். ஊரில் இருக்கும் போது எந்த மட்டமா படமா இருந்தாலும் தியேட்டர் தான்.
இப்ப வேற வழி.....
//
நமக்கும் அதே!!!
இத்தனைக்கும் ஒரு சில படங்கள் எல்லாம் தொடர்ந்து 3 நாள் கூட போயிருக்கேன் ;)
(அலைபாயுதே, குஷி, அந்நியன், சந்திரமுகி எல்லாம்)

//சொன்ன சொல்ல கண்டிப்பா காப்பாத்திடுவேன், நீ கவலைய விடு//
அது :-)

G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
// G.Ragavan said...
படத்துல வெத்தலையப் போட்டேண்டி பாட்டும் மை நேம் இஸ் பில்லா பாட்டும் இருக்கா?

எல்.ஆர்.ஈஸ்வரி பாடுன...நினைத்தாலே இனிக்கும் சுகங்கள் ஷிக்கு ஷிக்கு ஷிக்குன்னு ஒரு பாட்டு வருமே...அது இருக்கா?
//
வெத்தலைய போட்டேண்டிதான் பயங்கர பாப்புளரான பாட்டு... "காய் கே பானு பனராஸ்"னு வரும். புது டான்லையும் இந்த பாட்டு இருக்கு. ////

இருக்கா.......ம்ம்ம்ம்....அடி மாமா மக ரதியே ஏஞ் சீனிச்சக்கரக் கிளியே....விறுவிறுப்பு இருந்தாச் சரி

// நினைத்தாலே இனிக்கும் பாட்டும் நல்ல ஃபேமஸான பாட்டுதான் "ஏ மேரா தில்"னு வரும். புது படத்துல இந்த பாட்டுக்கு கரினா வராங்க...

மை நேம் இஸ் பில்லாவும் இருக்கு... ஆனா அந்த அளவுக்கு இல்லை ;) //

அந்தப் பாட்டுகள்ளாம் காலத்தை வென்ற இசைக்காவியங்கள்....ஷிக்கு ஷிக்கு ஷிக்கு ஷிக்கெல்லாம் அப்படியே சதக் சதக்குன்னு கத்தி மாதிரி எறங்கும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்தியில ஜுக்கா ஜூக்கா ஜூக்கான்னு முயற்சி செஞ்சாங்க.

// //பில்லா பாத்துட்டு அமிதாப் நடிச்ச டானே நல்லாயிருக்கலையே...ஷாருக்கான் நடிச்சத என்ன சொல்ல! சரி...நேரம் கெடச்சா பாக்கலாம்னு நெனைக்கிறேன். //
இது உங்களுக்கு பிடிக்கறதுக்கு வாய்ப்பு குறைவு... உங்களை பார்த்தா ரொம்ப அமைதியா தெரியுது... போட்டோவை வைத்து சொல்றேன் ;) ////

என்னப்பா அப்படி எடை போட்டுட்ட.......நம்ம டேஸ்ட்டே தனி டேஸ்ட்டுதான்.

நாமக்கல் சிபி said...

//என்னப்பா அப்படி எடை போட்டுட்ட.......நம்ம டேஸ்ட்டே தனி டேஸ்ட்டுதான்.//
படம் பாத்துட்டு சொல்லுங்க...
உங்க பதிவு, போட்டோவெல்லாம் பார்த்தா நான் கெஸ் பண்ணது சரியா இருக்கும்னு நினைக்கிறேன் ;)