தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, September 19, 2006

அதிசய எண்

நேற்று வலையில் வழக்கம் போல் மேய்ந்து கொண்டிருக்கும் போது ஒரு அதிசய எண்ணை பற்றி கேள்விப்பட்டேன். ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பெருமை இருக்கும் ஆனால் இந்த எண்ணை பற்றி படித்தவுடன் அசந்தே போனேன்!!! இதோ உங்களுக்காக

1. இந்தியாவின் கணித மேதை பாஸ்கராச்சார்யா கலியுகத்தின் இத்தனாம் நூற்றாண்டில் வாழ்ந்தார்.

2. டெஸிமஸ் ஜினியஸ் ப்ரூட்டஸ் அல்பினஸ் கொல்லப்பட்ட ஆண்டு (யூ டூ ப்ரூட்டஸ்தான் ;-))

3. க்ளாடியஸ் ரோம பேரரசை ஆண்ட ஆண்டு

4. "அறிவுடைமை" திருக்குறளின் இத்தனாம் அதிகாரம்.
5. மஹாத்மா காந்தி தனது இந்த வயதில், ஐரோப்பிய ஆடைகளை உடுத்துவதையும், பால் அருந்துவதையும் நிறுத்தினார். இந்த வயதிலிருந்து பழங்களை மட்டுமே உண்ண ஆரம்பித்தார்.6. தந்தை பெரியார் தனது இந்த வயதில் திருப்பூரில் நடத்திய காங்கிரஸ் மாநாட்டில் போட்ட தீர்மானம், அனைத்து மக்களும் சாதி வேறுபாடு இன்றி கோவில்களில் நுழைந்து இறைவனை தரிசிக்க வழி செய்தது.

7. அமெரிக்காவில் அடிமை முறையை ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் பிறந்த நாள் (Feb 12), வருடத்தின் எத்தனையாவது நாள்?

8. ரேடியோவை கண்டுபிடித்த மார்கோனி எத்தனையாவது நோபல் பரிசை வாங்கினார்?

9. ஆஸ்திரியாவின் ISD Code என்ன?

10. ஜெரால்டு பீட்டர்சன் எத்தனையாவது விம்பில்டெனில் முதல் பரிசை தட்டி சென்றார்?

11. "மன்னாதி மன்னன்"க்கு முன்பு புரட்சி தலைவர் எத்தனை படங்களில் நடித்திருந்தார்?

12. "பாசமலர்" நடிகர் திலகத்தின் எத்தனையாவது படம்?13. "தில்லு முல்லு" சூப்பர் ஸ்டாரின் எத்தனையாவது தமிழ் படம்?14. "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது" உலக நாயகனின் எத்தனையாவது படம்?

15. ராய்பூரிலிருந்து விசாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் எண்.

16. பொன்னியின் செல்வனில் முதல் பகுதியான "புது வெள்ளம்" பகுதியில் வரும் "பழையாறை" எத்தனையாவது அதிகாரம்?

17. மத்திய ஆப்பிரிக்கா பரப்பளவின் அடிப்படையில் உலகின் எத்தனையாவது பெரிய நாடு?

18. வெனிசுலா மக்கள் தொகையின் அடிப்படையில் உலகின் எத்தனையாவது நாடு?

19. மிக சிறிய சென் ப்ரைம் நம்பர் (Chen Prime Number)

20. ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை.

21. Smallest atomic number of an element that does not posses Stable Isotope

22. இந்த எண் அதன் பேஸ் (Base) 6 ஆக இருக்கும் பொது "111" என்று மாறும்.

23. தற்போதைய அமெரிக்க அதிபர் "ஜார்ஜ் புஷ்", அமெரிக்காவின் எத்தனையாவது அதிபர்?

24. அகரவரிசை படுத்தும் பொழுது "டெக்ஸாஸ்" அமெரிக்காவின் எத்தனையாவது மாநிலம்?

25. மனிந்தர் சிங் இந்திய ஒரு நாள் போட்டிகளின் எத்தனையாவது ஆட்டக்காரர்?

26. டெஸ்ட் போட்டிகளில் இந்தியா கொடுத்த மிக குறைந்த டார்கெட் என்ன (ஒரு இன்னிங்கஸில்)?

27. இங்கிலாந்துக்கெதிராக ஆஸ்திரேலியா எடுத்த மிக குறைந்தபட்ச ரன் (70) உலகின் எத்தனையாவது ஒரு நாள் போட்டி?

28. வைட்டமின் "கே"வை கண்டுபிடித்த எட்வர்ட் அடெல்பெர்ட் டாய்ஸி எந்த ஆண்டு நோபல் பரிசை பெற்றார்?


29. டாக்டர் கலைஞர் தனது இந்த வயதில்தான் முதன்முதலில் "சைதாப்பேட்டை" தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.


30. "சிவகாசி" விஜயின் இத்தனையாவது படம்.31. "வரலாறு" (God Father) அஜித்தின் இத்தனையாவது படம். (இந்த வாரம் வெளியாகும் என்ற நம்பிக்கையில்)

32. சென்னை ஐ.ஐ.டியில் இந்த வருடம் நடைபெறும் பட்டமளிப்பு விழா எத்தனையாவது பட்டமளிப்பு விழா?

33. பாப் பாடகி "மடோன்னா"வின் "ஹங் அப்" என்ற பாடல் எத்தனை நாடுகளில் முதல் இடத்தில் இருந்தது?34. கூன் பசினா அமித்தாபின் எத்தனையாவது படம்? (தமிழில் சூப்பர் ஸ்டார் நடித்த "சிவா")

35. விஸ்கான்ஸின் செல்லும் ஹைவேயின் எண் என்ன?36. சுஸ்மிதா சென் வெற்றி பெற்றது எத்தனையாவது மிஸ் யுனிவர்ஸ் போட்டி?

37. சச்சின் நியுசிலாந்து அணிக்கெதிராக 99ஆம் ஆண்டு சண்டிகரில் எடுத்த 126 அவரது எத்தனையாவது சதம்? (ஒரு நாள் போட்டிகளில் அடித்த சதங்களையும் சேர்த்து)

38. ஜமாய்க்காவை சேர்ந்த லிசா ஹானா எத்தனையாவது உலக அழகி போட்டியில் வென்றார்?

39. விண்கலம் (Space Shuttle) செலுத்துவதற்கு எத்தனை நேரத்திற்கு முன்னிருந்து நேரத்தை கணக்கிட ஆரம்பிப்பார்கள்?

40. டிபிஆர் ஜோசப் தமிழ்மணத்தின் எத்தனையாவது வார நட்சத்திரமாக ஜொலித்தார்?

41.கோபி அவர்களின் "கணங்கள்" தமிழ்மணத்தின் எத்தனையாவது வலைப்பூ?

42. நாற்பத்தி இரண்டிற்கு பின் வரும் எண் எது? ;)

43. உங்களுடைய லிப்ட்காக (ஓட்டிற்காக) தேன்கூடு போட்டியில் காத்திருக்கும் வெட்டிப்பயல் எழுதிய "லிப்ட் ப்ளீஸ்!!!" கதையின் எண்!!!

மறக்காமல் ஓட்டு போட்டுடுங்க!!! அப்படியே 69 (தீயினால் சுட்ட புண்) க்கும் போட்டுடுங்க!!! அந்த நம்பருக்கு நான் எதுவும் விளக்கம் சொல்லல ;)

79 comments:

செல்வன் said...

Balaji

I voted for your two stories in thenkoodu.

You will defenitely get 43 votes for this story:-)))))

Boston Bala said...

வாவ்... இந்தப் பதிவு ரொம்பப் பிடிச்சிருக்கு^43 ;-)

நாமக்கல் சிபி said...

Selvan,
Thx a lot...

Actually I have planned for making this as an Entry for the contest...

but I couldnt finish this by 20th :-(

நாமக்கல் சிபி said...

பாபா,
மிக்க நன்றி...

எல்லாம் நீங்க இருக்கற தைரியத்துலதான் இந்த மாதிரி எல்லாம் எழுத முடியுது ;)

Sivabalan said...

பாலாஜி

நல்ல பதிவு

43 அருமை

நாமக்கல் சிபி said...

Sivabalan said...
//பாலாஜி

நல்ல பதிவு

43 அருமை
//

சிபா,
மிக்க நன்றி!!!

Udhayakumar said...

//வின்ஸ்கான்//

விஸ்கான்ஸின்...

செல்வன் said...

பாஸ்டனார் சொன்ன மாதிரி இது நிஜமாவே சூப்பர் பதிவுதான்.இது போட்டிக்கு போகலைன்னா என்ன?உங்க லிப்ட் கதை நல்லா இருக்கு.கண்டிப்பா அது ஜெயிக்கும்

நாமக்கல் சிபி said...

//Udhayakumar said...
//வின்ஸ்கான்//

விஸ்கான்ஸின்...
//
உதய்,
மிக்க நன்றி!!! மாற்றிவிட்டேன்

எல்லாத்தையும் பேப்பர்ல எழுதி வெச்சி டைப் பண்ணதுல தப்பு வந்துடுச்சு ;)

நாமக்கல் சிபி said...

//செல்வன் said...
பாஸ்டனார் சொன்ன மாதிரி இது நிஜமாவே சூப்பர் பதிவுதான்.இது போட்டிக்கு போகலைன்னா என்ன?உங்க லிப்ட் கதை நல்லா இருக்கு.கண்டிப்பா அது ஜெயிக்கும்
//
மிக்க நன்றி செல்வன்!!!

SP.VR.சுப்பையா said...

Mr.Ceiro said:
The number seven is associated with intuition and having a peculiar magnetism of its own

You add 4 +3 = 7

நாமக்கல் சிபி said...

// SP.VR.SUBBIAH said...
Mr.Ceiro said:
The number seven is associated with intuition and having a peculiar magnetism of its own

You add 4 +3 = 7
//
ஆசிரியரே,
மிக்க நன்றி!!!

புரட்சி தலைவருக்கு கூட 7 தான் ராசியான நம்பர்னு சொல்லுவாங்க!!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அய்யா பாலாஜி...
மெகா தங்க வேட்டை போட்டிக்கு ரொம்பவே உதவியா இருக்கும்பா! :-)
உன் சேவையைப் பாராட்டி 43ஆம் புலிகேசி பட்டத்தை உமக்கே கொடுத்து விடுகிறோம் :-)

இந்த பதிவிற்கு சரியாக 43 பின்னூட்டங்கள் மட்டுமே வரவேண்டும் என்பது 43ஆம் புலிகேசியின் ஆணை!

ராசுக்குட்டி said...

எப்படிய்யா பொறுமையா 43 விஷயத்தை பிடித்தீர்... நல்லா இருந்துச்சு, ரசித்தேன்!

43 க்கு ஓட்டு நிச்சயம்!
69 க்கும் ஒரு பதிவு போட்டாத்தான் ஓட்டு ;-)

நாமக்கல் சிபி said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அய்யா பாலாஜி...
மெகா தங்க வேட்டை போட்டிக்கு ரொம்பவே உதவியா இருக்கும்பா! :-)
உன் சேவையைப் பாராட்டி 43ஆம் புலிகேசி பட்டத்தை உமக்கே கொடுத்து விடுகிறோம் :-)
//
தங்கவேட்டை இன்னும் நடந்துட்டு இருக்கா???

//இந்த பதிவிற்கு சரியாக 43 பின்னூட்டங்கள் மட்டுமே வரவேண்டும் என்பது 43ஆம் புலிகேசியின் ஆணை!
//
எனக்கு பட்டத்த குடுத்துட்டு நீங்க அதே பேர வெச்சி ஆணையிட்டா எப்படி???

நாமக்கல் சிபி said...

//ராசுக்குட்டி said...
எப்படிய்யா பொறுமையா 43 விஷயத்தை பிடித்தீர்... நல்லா இருந்துச்சு, ரசித்தேன்!
//
மிக்க நன்றி!!!
எல்லாம் கோகோ பண்ண விளம்பரத்த பாத்து வந்த ஐடியா தான் ;)
நான் மட்டும் தனியா பண்ணல.. கூட ஒருத்தர் பேர் உதவி பண்ணாரு!!!

//43 க்கு ஓட்டு நிச்சயம்!
69 க்கும் ஒரு பதிவு போட்டாத்தான் ஓட்டு ;-)
//
மிக்க நன்றி...
69க்கு இந்த மாதிரி பதிவு போட்டா உயிரே போயிடும்!!! இப்பவே தூக்கத்துல கனவெல்லாம் 43ஆ வருது :-))
69க்கு ரொம்ப முக்கியமான நம்பர்... நான் சொல்ல தேவையில்ல... உங்களுக்கே புரியும்னு நினைக்கிறேன் ;)

சுதர்சன்.கோபால் said...

இந்த வாட்டி உங்களுக்கு ரெண்டு கள்ள ஓட்டு போடச் சொல்லி கனவில வந்த பாட்டி சொன்னாங்க.

தம்பி said...

இப்பவே கண்ண கட்டுதே!

போட்டாச்சி, போட்டாச்சி!

நாமக்கல் சிபி said...

//சுதர்சன்.கோபால் said...
இந்த வாட்டி உங்களுக்கு ரெண்டு கள்ள ஓட்டு போடச் சொல்லி கனவில வந்த பாட்டி சொன்னாங்க.
//
ஆஹா, பாட்டிக்கு நம்ம மேல எவ்வளவு பாசம்!!!

இருந்தாலும் கள்ள ஓட்டெல்லாம் எதுக்கு நம்ம என்ன கட்சியா நடத்தறோம்? ;)

நல்ல ஓட்டு மட்டும் போடுங்க... பாத்துக்கலாம் :)

அப்பறம் சொல்ல மறந்துட்டேன்...
மிக்க நன்றி!!!

Boston Bala said...

-----69க்கு ரொம்ப முக்கியமான நம்பர்... நான் சொல்ல தேவையில்ல...----

கல்யாணமாவதற்கு முன்பே பசங்க(ளும்!?), குஷ்பு சொன்ன மாதிரி விவரமாகத்தான் இருக்கிறார்கள் ;-))

நாமக்கல் சிபி said...

பாபா,
நான் சொன்னது VAT "69". குஷ்பூவுக்கும், அதுக்கும், கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்???

சதயம் said...

கஷ்டப்பட்டு பேரக் காப்பாத்தீட்டீங்க...

வாழ்த்துக்கள்

கப்பி பய said...

படைப்பு எண் நாப்பத்தி மூணு!
ஒத்துக்கறேன் இது அதிசய எண்ணு!
சிம்பு டீ.ஆரோட சன்னு!
ஆல் த பெஸ்ட்டா என் கண்ணு!

ஏ டண்டணக்கா ஏஏ டணக்குணக்கா!!

பி.டி: டா போட்டதைக் கண்டுக்காதீங்க ;)

நாமக்கல் சிபி said...

//சதயம் said...
கஷ்டப்பட்டு பேரக் காப்பாத்தீட்டீங்க...
//
உண்மைதான்... ஒவ்வொன்னும் கண்டுபிடிக்கறதுக்குள்ள... ஐயோ சாமி...

//
வாழ்த்துக்கள்
//
மிக்க நன்றி

நாமக்கல் சிபி said...

கப்பி பய said...
//
படைப்பு எண் நாப்பத்தி மூணு!
ஒத்துக்கறேன் இது அதிசய எண்ணு!
சிம்பு டீ.ஆரோட சன்னு!
ஆல் த பெஸ்ட்டா என் கண்ணு!

ஏ டண்டணக்கா ஏஏ டணக்குணக்கா!!
//

கவிஞர் கப்பி,
கலக்கிட்டப்போ!!!
நீ ஃபீல்ட்ல இறங்கனா பல டைரக்டர்களும், கவிஞர்களும் ஃபீல்ட்ல இருந்து அவுட் ஆகிடுவாங்க ;)

இராம் said...

பாலாஜி,

கலக்கிட்டேப்பா , கப்பி சொன்ன கவிதையும் சூப்பரூ,

பொற்கொடி said...

பொறுமையின் சிகரமோ? கப்பியோட 'கவித'யோட இதயும் சேர்த்துக்கோங்க..

சூப்பரா போடறப்பா சீனு..
வோட்டு போடாதவனுக்கு கட்டிடுவோம் டின்னு :)

நாமக்கல் சிபி said...

ராம் said...
//
பாலாஜி,

கலக்கிட்டேப்பா
//
மிக்க நன்றி!!!

// கப்பி சொன்ன கவிதையும் சூப்பரூ,//
கவிஞர் கப்பி!!! வாழ்க!!!

நாமக்கல் சிபி said...

//பொற்கொடி said...
பொறுமையின் சிகரமோ?
//
ஏனுங்க நீங்க வேற!!! இத திங்க கிழமை ஆரம்பிச்சேன்.. மூணு நாள் ஆகிடுச்சு முடிக்க!!!

//கப்பியோட 'கவித'யோட இதயும் சேர்த்துக்கோங்க..

சூப்பரா போடறப்பா சீனு..
வோட்டு போடாதவனுக்கு கட்டிடுவோம் டின்னு :)
//
நீங்களும் கவிதையா??? கலக்குங்க!!!

நாட்ல நமக்கு தவிர எல்லாருக்கும் கவித வருது :-(

கப்பி பய said...

//கவிஞர் கப்பி,
கலக்கிட்டப்போ!!!
//
//நாட்ல நமக்கு தவிர எல்லாருக்கும் கவித வருது :-(
//

வெட்டி..இது டி.ஆர் பஞ்ச் டயலாக்யா..அதை கவுஜ ஆக்கியாச்சா?? அட கெரகத்தெ :)))

G.Ragavan said...

:-) வெட்டி ஒரு கெட்டின்னு இப்படி ஒரு பதிவா? இதெல்லாம் தேடித் தேடியே தாவு தீந்து போயிருக்குமே....... ஒரு + போட்டுட்டேன்.

தம்பி said...

பாஸ்டன் இருக்குறாரு வெட்டி
அவரு மனசு ஒரு தங்க கட்டி
கடன் வாங்கினா கட்டணும் வட்டி
தேன்கூட்டுல இருக்குது வோட்டு பொட்டி
தம்பிக்கும், வெட்டிக்கும் ஓட்டு போடறவங்க ரொம்ப சுட்டி.
இதுதாண்டா பின்னூட்ட விளம்பர தட்டி!

வழக்கம்போல "டா" க்கு மன்னிக்கவும்.

கவுத உதவி கப்பி

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...
//கவிஞர் கப்பி,
கலக்கிட்டப்போ!!!
//
//நாட்ல நமக்கு தவிர எல்லாருக்கும் கவித வருது :-(
//

வெட்டி..இது டி.ஆர் பஞ்ச் டயலாக்யா..அதை கவுஜ ஆக்கியாச்சா?? அட கெரகத்தெ :)))
//
நம்ம அறிவுக்கு இதுதாம்பா கவித!!!
என்னயக் கேட்ட திருக்குறளே கவிததான்னு சொல்லுவன்...

ரைமிங்கா வந்தா அதுதான் கவித... ஓகேவா?

நாங்க எல்லாம் பாமர மக்கள் :-(

நாமக்கல் சிபி said...

// G.Ragavan said...
:-) வெட்டி ஒரு கெட்டின்னு இப்படி ஒரு பதிவா? இதெல்லாம் தேடித் தேடியே தாவு தீந்து போயிருக்குமே//

ஆமாங்க!!! இதுல ஒரு கொடும என்னனா நேத்து எல்லாத்தையும் டைப் பண்ணி பப்ளிஷ் பண்ணலாம்னு பாத்தா Blogger Downtimeஆம். டைப் பண்ணது எல்லாம் போச்சு. ஒன்ற மணி நேரம் வேலை.

சரி சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் மாதிரி திரும்ப பண்ணேன்...

இதுல 10க்கு மேல டேடா கண்டு பிடிச்சு கொடுத்தது நம்ம கப்பி...

//....... ஒரு + போட்டுட்டேன். //
ஓட்டு போட சொன்னா என்ன பண்றீங்க???

நாமக்கல் சிபி said...

தம்பி said...
//பாஸ்டன் இருக்குறாரு வெட்டி
அவரு மனசு ஒரு தங்க கட்டி
கடன் வாங்கினா கட்டணும் வட்டி
தேன்கூட்டுல இருக்குது வோட்டு பொட்டி
தம்பிக்கும், வெட்டிக்கும் ஓட்டு போடறவங்க ரொம்ப சுட்டி.
இதுதாண்டா பின்னூட்ட விளம்பர தட்டி!

வழக்கம்போல "டா" க்கு மன்னிக்கவும்.

கவுத உதவி கப்பி
//
தம்பி,
ஒரு கல்லுல எத்தன மாங்க அடிப்ப???

நீ ஒரு கவிஞன்னு நிருபிச்சிட்ட!!!
ஓட்டு போட சொல்லி அறிவுரை!!!
அப்படியே நமக்கும் போட சொல்லி ஒரு விளம்பரம் ;)
கடைசியா கப்பிக்கு ஒரு நன்றி!!!

முடியலடா சாமீ!!!

நம்மல புகழ்ந்து வேற சொல்லிட்ட அதனால பாகிஸ்தானுக்கு ஒரு ஓட்டு குத்திடறேன்... நான் 25ம் தேதி தான் ஓட்டு போடுவேன்... இன்னும் பாதி படிக்கல :-(

தம்பி said...

//நீ ஒரு கவிஞன்னு நிருபிச்சிட்ட!!!//

நெசமாவா?

நாயர்!

அடிபுலியா ஒரு சாயா போடு!

நாமக்கல் சிபி said...

//தம்பி said...
//நீ ஒரு கவிஞன்னு நிருபிச்சிட்ட!!!//

நெசமாவா?

நாயர்!

அடிபுலியா ஒரு சாயா போடு!
//
நான் சொல்றத வெச்சியெல்லாம் அப்படி நம்பாத ;)

"ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
நீயும் நானும் ஃபிரெண்டு" னு அஞ்சாப்பு படிக்கும் போது என் ஃபிரெண்டு சொன்னததான் நான் பெரிய கவிதையா இன்னும் நெனைச்சிக்கிட்டு இருக்கேன்...

நம்ம கவுஜ அறிவு அவ்வளவுதான் :-(

கப்பி பய said...

//கவுத உதவி கப்பி//

ஏன் இந்த கொலை வெறி???

கப்பி பய said...

//இதுல 10க்கு மேல டேடா கண்டு பிடிச்சு கொடுத்தது நம்ம கப்பி...
//

ஹி ஹி..

சொல்லியாச்சா? திருப்தியா? :D

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...
//இதுல 10க்கு மேல டேடா கண்டு பிடிச்சு கொடுத்தது நம்ம கப்பி...
//

ஹி ஹி..

சொல்லியாச்சா? திருப்தியா? :D
//
பதிவுலயே சொல்லி இருப்பேன்...

நீதான் ரொம்ப கூச்சப்படற!!! நான் என்ன பண்றது???

29க்கு கூட டேட்டா இருக்கு நீ மட்டும் கண்ண காட்டு இன்னைக்கு நைட்டு ஒரு பதிவு இருக்கும் ;)

கப்பி பய said...

//29க்கு கூட டேட்டா இருக்கு நீ மட்டும் கண்ண காட்டு இன்னைக்கு நைட்டு ஒரு பதிவு இருக்கும் ;)
//

29 ஆப்பெல்லாம் சேர்த்து மொத்தமா வாங்க முடியாது :))

ஆனா இந்த பாசத்துக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்ய போறேன்..
இதே பாசத்தோட மக்கள் வோட்டு போட்டுடுவாங்க! :)

தம்பி said...

//29க்கு கூட டேட்டா இருக்கு நீ மட்டும் கண்ண காட்டு இன்னைக்கு நைட்டு ஒரு பதிவு இருக்கும் ;)//

யோவ் என்னயா நடக்குது இங்க...?

இது கூட்டு சதி வேற இருக்கா! கிளி ஜோசியம் லெவலுக்கு எறங்கி பலன் சொல்லிருவீங்க போலருக்கு!

ஆனது ஆகிப்போச்சி, அப்படியே 57 ம் நம்பருக்கு பாத்து அனுப்பிருங்க கண்ணுகளா!

சின்னபுள்ள said...

here 43

நாமக்கல் சிபி said...

//29 ஆப்பெல்லாம் சேர்த்து மொத்தமா வாங்க முடியாது :))//

ஆப்புக்கெல்லாம் கவலப்படாத!!! ஒட்டு மொத்தமா ஹோல் சேல்ல நம்ம கைப்பு வாங்கிக்குவாரு ;)

//இதே பாசத்தோட மக்கள் வோட்டு போட்டுடுவாங்க! :) //
கவலப்படாத!!!

"நிற்க நிற்க லாரி நிற்க
லிப்ட் கொடுப்பான் இவன்"க்கே கண்டிப்பா ஓட்டு உண்டு

சின்னபுள்ள said...

ஹய்யா போட்டமுல கரீட்டா..

நாமக்கல் சிபி said...

//சின்னபுள்ள said...
here 43
//
சின்னபுள்ள கலக்கிட்டீங்க!!!

மிக்க நன்றி

நாமக்கல் சிபி said...

// தம்பி said...
//29க்கு கூட டேட்டா இருக்கு நீ மட்டும் கண்ண காட்டு இன்னைக்கு நைட்டு ஒரு பதிவு இருக்கும் ;)//

யோவ் என்னயா நடக்குது இங்க...?

இது கூட்டு சதி வேற இருக்கா! கிளி ஜோசியம் லெவலுக்கு எறங்கி பலன் சொல்லிருவீங்க போலருக்கு!
//
இதுல என்னப்பா சதி???
நான் முதல்ல கப்பியோட "லிப்ட்... ஸ்கிரிப்ட்.. ஆக்ட்" பிடிச்சிருக்கு அதனால அதுக்கு இந்த மாதிரி விளம்பரம் பண்ணறேன்னு சொன்னேன்... அவர் வேண்டாம்னு சொல்லிட்டாரு...

சரி ஐடியாவை எதுக்கு வீணாக்கிட்டுனு என்னோட 43க்கு யூஸ் பண்ணிக்கிட்டேன் ;)

//
ஆனது ஆகிப்போச்சி, அப்படியே 57 ம் நம்பருக்கு பாத்து அனுப்பிருங்க கண்ணுகளா!
//
இப்பவே கண்ண கட்டிடுச்சு... பாத்து சொல்றேன் ;)

Dubukku said...

vote pottachu thala

நாமக்கல் சிபி said...

//Dubukku said...
vote pottachu thala
//
மிக்க நன்றி தலைவா!!!
என்ன இருந்தாலும் நாங்க உங்க சிஷ்யப்பிள்ளைகள்!!!

கார்த்திக் பிரபு said...

adhu sari enga thedineenga ..epppadi indha vivaramlam kidachadhu..

jeya tv la 'idhey naal andru ' nu oru program poduvaanga ..adhu madhiri iruku..valthukal.nanum vote potuttane

நாமக்கல் சிபி said...

// கார்த்திக் பிரபு said...
adhu sari enga thedineenga ..epppadi indha vivaramlam kidachadhu..
//
ஒன்றா...ரெண்டா website...
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா???

//jeya tv la 'idhey naal andru ' nu oru program poduvaanga ..adhu madhiri iruku..valthukal.nanum vote potuttane
//
மிக்க நன்றி!!!
உனக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்!!!

நாமக்கல் சிபி said...

இது உங்களுடைய 43வது பதிவா?

(அதென்ன பின்னூட்டங்களின் எண்ணிக்கை 43ஐத் தாண்டிடுச்சே! 43வது பின்னூட்டம் போட அன்பர் யாரோ?)

நாமக்கல் சிபி said...

சின்னப்புள்ள தான் 43வது பின்னூட்டமிட்ட அன்பரா?

அவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிவுல அதையும் சேர்த்துடுங்க வெட்டிப்பயலாரே!

இராம் said...

//வெட்டி..இது டி.ஆர் பஞ்ச் டயலாக்யா..அதை கவுஜ ஆக்கியாச்சா?? அட கெரகத்தெ :))) //

ஏலேய் கப்பி அதச் சொன்னது நானு, என்னானா நீ எழுதினே கவுஜ நல்லா இருக்குனு, ஆனா அது டி.ஆர் டயலாக்கா...


யாரு இந்தா பத்து வருசமா சேவ் பண்ணதே முகத்தோட இருப்பாரே, அப்புறம் அடுத்த ஷங்கரின் அப்பாவை பத்திச் சொல்லீறியா என்னா.... சாரிப்பா அவரைப் பத்தி எனக்கும் ஒன்னுமே தெரியாது.

நாமக்கல் சிபி said...

//நாமக்கல் சிபி @15516963 said...
இது உங்களுடைய 43வது பதிவா?
//
இது என்ன இப்படி கேட்டுட்டீங்க???
43 தேன்கூடுல நம்ம கதைக்கான நம்பர்...
சீக்கிரம் ஓட்டு போடுங்க... இன்னும் 1மணி நேரம் தான் இருக்கு

நாமக்கல் சிபி said...

//நாமக்கல் சிபி @15516963 said...
சின்னப்புள்ள தான் 43வது பின்னூட்டமிட்ட அன்பரா?

அவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிவுல அதையும் சேர்த்துடுங்க வெட்டிப்பயலாரே! //
தளபதி சொல்லிட்டீங்க இல்ல... சீக்கிரம் மாத்திடலாம் :)

தம்பி said...

வெட்டி ஓட்டு போட்டாச்சா?
இன்னிக்கு தேதி 25!!

நாமக்கல் சிபி said...

// தம்பி said...
வெட்டி ஓட்டு போட்டாச்சா?
இன்னிக்கு தேதி 25!!
//
நேத்தே போட்டாச்சு!!!
மொத்தமா ஒரு 20 படைப்புகளுக்கு போட்ருக்கேன்!!!
பாக்கலாம்... நம்ம ஓட்டு போட்டது எதுனா ஜெயிக்குதானு ;)

Syam said...

43 ல இத்தன மேட்டர் இருக்கா...எனக்கு தெரிஞ்சதெல்லாம் 45 தான் அதுல என்ன விஷேசம்னு உங்களுக்கு எல்லாம் சொல்லி தான் தெரியனுமா என்ன :-)

நாமக்கல் சிபி said...

//Syam said...
43 ல இத்தன மேட்டர் இருக்கா...எனக்கு தெரிஞ்சதெல்லாம் 45 தான் அதுல என்ன விஷேசம்னு உங்களுக்கு எல்லாம் சொல்லி தான் தெரியனுமா என்ன :-)
//

நமக்கும் இந்த விஷயமெல்லாம் தெரியாமத்தான் இருந்துச்சு... எல்லாம் இந்த கதைக்காக தேடனதுதான் :-)

நமக்கு பள்ளிக்கூடத்துல படிக்கிற வரைக்கும் தெரிஞ்ச நம்பர் 35. காலேஜ்ல 50 :-)

Syam said...

//காலேஜ்ல 50//

இப்ப எல்லாம் 50 ஆக்கிட்டாங்களா...சொல்ல்ல்ல்லலலலவேவேவே இல்ல்ல்ல்ல்லலலல.....நல்ல வேளை 45 இருக்கும் போதே நான் முடிச்சிட்டேன்...இல்லனா தல வந்துதான் பாஸ் பண்ண வெச்சு இருக்கனும் :-)

Syam said...

//காலேஜ்ல 50//

இப்ப எல்லாம் 50 ஆக்கிட்டாங்களா...சொல்ல்ல்ல்லலலலவேவேவே இல்ல்ல்ல்ல்லலலல.....நல்ல வேளை 45 இருக்கும் போதே நான் முடிச்சிட்டேன்...இல்லனா தல வந்துதான் பாஸ் பண்ண வெச்சு இருக்கனும் :-)

நாமக்கல் சிபி said...

//Syam said...
//காலேஜ்ல 50//

இப்ப எல்லாம் 50 ஆக்கிட்டாங்களா...சொல்ல்ல்ல்லலலலவேவேவே இல்ல்ல்ல்ல்லலலல.....நல்ல வேளை 45 இருக்கும் போதே நான் முடிச்சிட்டேன்...இல்லனா தல வந்துதான் பாஸ் பண்ண வெச்சு இருக்கனும் :-)
//
இதுல 20 மார்க் இன்டர்னல் வேற... அத வெச்சிக்கிட்டு ரவுஸ் உடுவானுங்க பாருங்க!!! அஸைன்மெண்ட் பண்ணனுமாம்! இன்டர்னல் பரிட்சை எழுதனுமாம்... இதெல்லாம் கூட பரவால... காலேஜுக்கு வரனுமாம்!!!
அம்மா சாமி... இவனுங்க ரவுசு தாங்க முடியாது!!!

நாங்க எல்லாம் தல தயவுலதான் பாஸ் பண்ணி வந்தோம் ;)

Syam said...

//இதுல 20 மார்க் இன்டர்னல் வேற//

அப்போ 30 எடுத்தா போதுமா...எங்க பேட்சுக்கு அந்த குடுப்பினையும் இல்லாம போச்சு...சொதப்பல் சிகரமான பாரதியார் யூனிவர்சிட்டியின் தயவு :-)

Syam said...

//அஸைன்மெண்ட் பண்ணனுமாம்! இன்டர்னல் பரிட்சை எழுதனுமாம்... இதெல்லாம் கூட பரவால... காலேஜுக்கு வரனுமாம்!!!//

இண்டர்னல் இல்லாத்துனால எங்களுக்கு இந்த பிரச்சனை இல்ல...அதுக்கு thanks to same bharathiar university :-)

நாமக்கல் சிபி said...

//அப்போ 30 எடுத்தா போதுமா...எங்க பேட்சுக்கு அந்த குடுப்பினையும் இல்லாம போச்சு...சொதப்பல் சிகரமான பாரதியார் யூனிவர்சிட்டியின் தயவு :-) //
30 எல்லாம் இல்ல 80க்கு 35 கண்டிப்பா எடுக்கனும்.

அப்பறம் 20க்கு உங்களுக்கு யாரு 20 போடுவாங்க... அதெல்லாம் சோப்பு போடற பசங்களுக்குத்தான்...

நமக்கெல்லாம் எப்பவுமே இண்டர்னல்ல ஆப்புதான் :-(

நாமக்கல் சிபி said...

//Syam said...
//அஸைன்மெண்ட் பண்ணனுமாம்! இன்டர்னல் பரிட்சை எழுதனுமாம்... இதெல்லாம் கூட பரவால... காலேஜுக்கு வரனுமாம்!!!//

இண்டர்னல் இல்லாத்துனால எங்களுக்கு இந்த பிரச்சனை இல்ல...அதுக்கு thanks to same bharathiar university :-)
//
ச்சே!!! இண்டர்னல் இல்லன செம ஜாலி... காலேஜிக்கே வர தேவையில்ல...

இதுக்காக ஒவ்வொரு செமஸ்டரும் அட்டண்டர் ஒருத்தருக்கு அட்டண்டன்ஸ் கரெக்ட் பண்ண குவோட்டர் வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ண வேண்டியதா போச்சு!!!

Syam said...

//30 எல்லாம் இல்ல 80க்கு 35 கண்டிப்பா எடுக்கனும்//

அதுவா விசயம் எங்களுக்கு 75 கு 34 எடுத்தா தான் 100 க்கு 45 வரும்...அதுக்கு பட்ட கஷ்டம் இருக்கே முன் பிறவி வரைக்கும் தெரிஞ்சது :-)

Syam said...

//ச்சே!!! இண்டர்னல் இல்லன செம ஜாலி... காலேஜிக்கே வர தேவையில்ல... //

நாங்க அப்படி எல்லாம் இல்ல... ரெகுலர் அட்டெண்டன்ஸ் to ரம்மி காலேஜ் :-)

நாமக்கல் சிபி said...

//Syam said...
//30 எல்லாம் இல்ல 80க்கு 35 கண்டிப்பா எடுக்கனும்//

அதுவா விசயம் எங்களுக்கு 75 கு 34 எடுத்தா தான் 100 க்கு 45 வரும்...அதுக்கு பட்ட கஷ்டம் இருக்கே முன் பிறவி வரைக்கும் தெரிஞ்சது :-)
//
ஆஹா!!! 80க்கு 35 பரவாயில்ல போலிருக்கே!!!

இதுல ஒரு கொடும என்னனா! இண்டர்னல்ல 14 போட்டுட்டானுங்னா 36 எடுக்கனும். முப்பது எடுத்தாக்கூட ஒரு வழியா 35 போட்டுடுவானுங்க... அந்த 1 மார்க்ல கப் வெக்கறவங்கத்தான் அதிகம் :-(

நாமக்கல் சிபி said...

//Syam said...
//ச்சே!!! இண்டர்னல் இல்லன செம ஜாலி... காலேஜிக்கே வர தேவையில்ல... //

நாங்க அப்படி எல்லாம் இல்ல... ரெகுலர் அட்டெண்டன்ஸ் to ரம்மி காலேஜ் :-)
//
நாங்க ஹாஸ்டல்ல உக்காந்து விளையாடுவோம் ;)

கடல போடறவனுங்கத்தான் காலேஜ் ரெகுலறா வருவானுங்க ;)

Syam said...

//கடல போடறவனுங்கத்தான் காலேஜ் ரெகுலறா வருவானுங்க//

அந்த ஒரு மேட்டர்ல தான் நம்மல ஓரம் கட்டி வெச்சுடுவாங்கனு அப்போ அப்போ காலேஜ் போய் கடலை சாகுபடி பண்ணிட்டு வருமோம்...தினமும் ஒரு காலேஜ்...Nirmala,GRD,SNR,PSG Tech,Krishnammal,CIT,PSG Arts இது போக எப்பவாவது time இருந்தா எங்க காலேஜ் TCE (ஒரு உருப்படியான பிகர் கிடையாது...இருந்த சில சேச்சிகளும் எங்கள கண்டுக்கல)

தம்பி said...

//மொத்தமா ஒரு 20 படைப்புகளுக்கு போட்ருக்கேன்!!!
பாக்கலாம்... நம்ம ஓட்டு போட்டது எதுனா ஜெயிக்குதானு ;)//

அப்ப எல்லாமே மொக்கையா??

என்ன சொல்ல வர்றிங்க வெட்டி! உங்க ரசனை மேல உங்களுக்கே நம்பிக்கையில்லையா!

நாமக்கல் சிபி said...

//Syam said...
//கடல போடறவனுங்கத்தான் காலேஜ் ரெகுலறா வருவானுங்க//

அந்த ஒரு மேட்டர்ல தான் நம்மல ஓரம் கட்டி வெச்சுடுவாங்கனு அப்போ அப்போ காலேஜ் போய் கடலை சாகுபடி பண்ணிட்டு வருமோம்...தினமும் ஒரு காலேஜ்...Nirmala,GRD,SNR,PSG Tech,Krishnammal,CIT,PSG Arts இது போக எப்பவாவது time இருந்தா எங்க காலேஜ் TCE (ஒரு உருப்படியான பிகர் கிடையாது...இருந்த சில சேச்சிகளும் எங்கள கண்டுக்கல)
//
தலைவா,
ஒரு காலேஜையும் விட்டு வைக்கலியா நீங்க???

தமிழ்நாடு காலேஜா நீங்க??? நான் ஒரு தடவை வந்திருக்கேன்... சிம்போஸியத்துக்கு :-)

நாமக்கல் சிபி said...

// தம்பி said...
//மொத்தமா ஒரு 20 படைப்புகளுக்கு போட்ருக்கேன்!!!
பாக்கலாம்... நம்ம ஓட்டு போட்டது எதுனா ஜெயிக்குதானு ;)//

அப்ப எல்லாமே மொக்கையா??

என்ன சொல்ல வர்றிங்க வெட்டி! உங்க ரசனை மேல உங்களுக்கே நம்பிக்கையில்லையா!
//
நமக்கு பிடிக்கறது எல்லாம் மத்தவங்களுக்கும் பிடிக்கனும்னு இல்லையே ;)

பாகிஸ்தானிக்கு கூட ஒரு ஓட்டு போட்டேன்... நம்ம ரசனைய என்னனு சொல்லற??? ;)

Syam said...

//நமக்கு பிடிக்கறது எல்லாம் மத்தவங்களுக்கும் பிடிக்கனும்னு இல்லையே//

நமக்கு புடிக்கறது எல்லாம் மத்தவங்களுக்கும் புடிக்கலாம்் அப்படிங்கறது நம்பிக்கை...
நமக்கு புடிக்கறது எல்லாம் மத்தவங்களுக்கும் புடிக்கும் அப்படிங்கறது தலக்கனம்...

சாரி...இப்போதான் ப்ரவீன் போஸ்ட் படிச்சிட்டு வந்தேன் அந்த எபெக்ட் :-)்

KARTHIKRAMAS said...

:-) +

நாமக்கல் சிபி said...

//Syam said...
//நமக்கு பிடிக்கறது எல்லாம் மத்தவங்களுக்கும் பிடிக்கனும்னு இல்லையே//

நமக்கு புடிக்கறது எல்லாம் மத்தவங்களுக்கும் புடிக்கலாம்் அப்படிங்கறது நம்பிக்கை...
நமக்கு புடிக்கறது எல்லாம் மத்தவங்களுக்கும் புடிக்கும் அப்படிங்கறது தலக்கனம்...

சாரி...இப்போதான் ப்ரவீன் போஸ்ட் படிச்சிட்டு வந்தேன் அந்த எபெக்ட் :-)்
//
தன்னம்பிக்கைக்கும் தல கனத்துக்கும் நூடுல்ஸ் அளவுதான் வித்தியாசம்... சாரி நூல் அளவுதான் வித்தியாசம்னு சொல்ல வரீங்களா?

அப்படியே கேப்டன் போஸ்ட் நிறையா இருக்கும் படிச்சு பாருங்க ;)

நாமக்கல் சிபி said...

// KARTHIKRAMAS said...
:-) +
//
மிக்க நன்றி!!!

ஓட்டு போட்டீங்களா???