தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Saturday, September 09, 2006

ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி

நாளையோடு உலக வர்த்தக கட்டிடம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைகிறது.

சென்ற வாரம் WTC சென்ற போது கிளிக்கிய படங்கள் உங்கள் பார்வைக்காகஇன்றைய நிலைமை


தீவிரவாதிகளின் இந்த கொடிய செயல்களால் உயிர் இழந்த அப்பாவி மக்களின் குடும்பத்திற்கு என் கண்ணீர் அஞ்சலி.

11 comments:

செல்வன் said...

பாலாஜி,

அந்த நாள் இன்னும் என் மனதில் நிற்கிறது.சி.என்.எனில் நேரடியாக அதை பார்க்க,பார்க்க மனது அடைந்த வேதனை இன்னும் நினைவில் இருக்கிறது.அவர்கள் குடும்பத்தாருக்கு என் கண்ணீர் அஞ்சலி.

செல்வன் said...

/நாளையோடு உலக வர்த்தக கட்டிடம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைகிறது./

இன்னும் ரெண்டுநாள் இருக்கே பாலாஜி.இன்றைக்கு தேதி 9/9

நாமக்கல் சிபி said...

ஆஸ்ட்ரேலியால இன்னைக்கு 9/10 இல்லையா??? ;)

நாமக்கல் சிபி said...

அந்த இடத்தில் இருந்த வெறுமையை பார்க்கும் போது மனம் வலிக்கத்தான் செய்தது...

வெற்றி said...

வெ.ப,
படங்களுக்கு நன்றி. உலக வர்த்தக மையக் கட்டிடங்களின் உச்சியில் நின்று நான் எடுத்த படங்கள் இன்று வரலாற்றுப் படங்களாகிவிட்டன!
இச் சம்பவம் நடந்த அந்த நாளை நினைத்துப் பார்க்கிறேன். நான் அப்போது பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலகட்டம். இச் சம்பவம் நடந்தநாள் எனக்கு காலை 9 மணிக்கு வகுப்பு. அவசர அவசரமாக வகுப்புக்குச் சென்று பின் வரிசையில் இருந்தேன். பாடம் நடந்து கொண்டிருக்கிறது. என்னுடைய பாகிஸ்தானிய நண்பர் வகுப்புக்கு கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்குப் பின் வகுப்புக்கு வருகிறார். வந்த நண்பரைப் பார்த்து "Hi" எனச் சொல்லிவிட்டு மீண்டும் பேராசிரியர் சொல்லும் விடயத்தைக் கவனிக்கிறேன். நண்பரோ மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். மெல்லிய குரலில் நியூயோர்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையம் அழிக்கப்பட்டதாகச் சொல்லி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். எனக்கோ ஒரு கணம் தலை சுற்றியது. காரணம் எனது சகோதரர் அந்த கட்டிடத்தில் உள்ள பணிமனியில் தான் பணியாற்றிக்கொண்டிருந்தார். உடனடியாக வகுப்பை விட்டு வெளியேறி, என் சகோதரியார் வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது சகோதரர் அயல் நகரத்தில் இருந்ததாகவும் அவர் அன்று பணிமனைக்குச் செல்லவில்லை என்றதும் மனதுக்கு நிம்மதி. பின்னர் Computer Labக்கு ஓடிப்போய் இணையத்தளங்களில் செய்தித் தளங்களில் செய்தியைப் பார்த்து அறிந்தேன்.

5 வருடங்கள் புரண்டோடி விட்டன. ஏதோ இப்போது நடந்தது போல் இருக்கிறது.

நாமக்கல் சிபி said...

வெற்றி,
//எனக்கோ ஒரு கணம் தலை சுற்றியது. காரணம் எனது சகோதரர் அந்த கட்டிடத்தில் உள்ள பணிமனியில் தான் பணியாற்றிக்கொண்டிருந்தார். உடனடியாக வகுப்பை விட்டு வெளியேறி, என் சகோதரியார் வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது சகோதரர் அயல் நகரத்தில் இருந்ததாகவும் அவர் அன்று பணிமனைக்குச் செல்லவில்லை என்றதும் மனதுக்கு நிம்மதி//
இறைவனின் கருணை என்றே சொல்ல வேண்டும்.

அதன் பாதிப்பு இன்றும் தெரிகிறது... சென்ற வாரம் நான் சென்றிருந்த போது பலர் கண்களில் கண்ணீரை பார்க்க முடிந்தது

குமரன் (Kumaran) said...

அந்த நாளில் அந்த நேரத்தில் அமெரிக்காவில் இருந்தவர்கள் எல்லோரும் தாங்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது அவரவர்களுக்கு மிக நன்றாக நினைவில் இருக்கும் என்று எண்ணுகிறேன். அந்த நேரத்தில் நான் அலுவலகத்திற்குக் காரில் சென்று கொண்டிருந்தேன். போகும் வழியில் ஒருவர் கார் கண்ணாடியை கீழிறக்கச் சொல்லி 'டர்ன் ஆன் தி ரேடியோ' என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டே சென்றார். என்ன என்று ரேடியோ கேட்டபோது தான் செய்தியை சொன்னார்கள். அந்த நாளில் கண்ணீருடன் தான் பலரும் அலுவலகத்தில் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

நாமக்கல் சிபி said...

இந்தியாவில் எங்களுக்கு அதன் தாக்கம் அப்போழுது உடனே புரியவில்லை.

அடுத்த நாள் காலையில் பேப்பரில் படிக்கும் போதுதான் அதன் வீரியம் தெரிந்தது.

கார்த்திக் பிரபு said...

நீங்கள் ஒருத்தர் தான் இது பற்றி பதிவு போட்ருக்கீர்களென நினைக்கிறேன்

vnsmanian said...

வணக்கம் பாலாஜி,

செப்டம்பர் 11 என்பது துயரமான நாள்தான் , இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டது , ஏராளமான பொருளிழப்பு-ஈடு செய்ய முடியாத உயிரிழப்பு! எல்லாம் சரிதான் - மறுக்க முடியாத உண்மைதான் .

எப்படி நாணயத்தில் இரண்டு பக்கம் உள்ளதோ ,அப்படியே நியாயத்திற்கும் இரண்டு பக்கம் உள்ளது.பாலாஜி நீங்கள் சொன்னது உண்மையின் ஒரு பக்கம் தான்.நான் மறு பக்கத்தையும் ஆராய ஆசைப்படுகிறேன்.செப் 11 சம்பவத்தை உணர்ச்சிப்பூர்வகமாக பார்ப்பதைத் தவிர்த்து கொஞ்சம் (எனக்குத்தெரிந்த வரையில்) அறிவுப்பூர்வமாக அணுக ஆசைப்படுகிறேன்.

வினை - எதிர்வினை - விளைவு பற்றி யோசிக்க ஆசைப்படுகிறேன்.இந்த பின்னூட்டம் இடுவதால் என்னைப் "போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும்"- கவலை இல்லை.

நிற்க!

பின்லேடன் தீவிரவாதத்தையெல்லாம் மிஞ்சியது, அமெரிக்கத் தீவிரவாதம்.இதற்கு பல உதாரணங்கள் உண்டு .

ஈரான் போர் ,வியட்நாம் போர் -- இப்படி பல நாடுகளை துவம்சம் செய்த பாவத்தின் பலனை அமெரிக்கா செப் 11 அன்று
மொத்தமாக அறுவடை செய்தது.

இன்று பின்லேடன் தீவிரவாதி , அழிவு சக்தி என்று கூக்குரலிடும் இதே அமெரிக்காதான் இந்த பின்லேடனை வளர்த்து விட்டது ;
சோவியத் யூனியனுக்கு எதிராக பின்லேடனுக்கு ஆயுதப்பயிற்சியளித்து , பண உதவி செய்து சோவியத் யூனியனில் உள்ள முஸ்லீம்
நாடுகளில் கலவரம் வரவைத்தது - அமெரிக்க பொறாமை குணம் . தான்தான் உலகத்தில் வல்லரசாக , பெரியண்ணனாக இருக்க
வேண்டுமென்ற பேராசை!

நாம் என்ன விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.அமெரிக்கா விதை விதைத்தால் விளைச்சலை எதிர்பார்க்கலாம்,
ஆனால் அமெரிக்கா விதைத்தது விஷம் . அதன் விளைவுதான் செப்-11.

ஐ.நா என்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒரு டம்மி அமைப்பு.

ஈரானில் அணு ஆயுதங்களைக் கண்டுபிடிக்கிறோம் என்று பல நாட்கள் பல மில்லியன் டாலர்கள் செலவழித்து குண்டு மழை பொழிந்து அமெரிக்கா கண்டுபிடித்தது என்ன?ஒன்றும் இல்லை என போர் முடித்து சொன்னது .வல்லான் வகுத்ததே சட்டம் என ஈரான் மீது குண்டு போட்டதே, அந்த இஸ்லாத்மக்களின் உடல் என்ன இரும்பாலும்,அலுமினியத்தாலும் ஆனதா?அவர்களும் என்ன தவறு செய்த்தார்கள்.உலகில் அமெரிக்கருக்குத்தான் குண்டு போட்டால் வலிக்குமா?

ஈரானில் நல்லாட்சி மலர்வதா அமெரிக்க நோக்கம். ஈரானில் உள்ள எண்ணைக் கிணறுகள் - அதில் வரும் பணம் இதுதான் அமெரிக்க
குறிக்கோள்.அடுத்த நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பினால் (ஒருவேளை !? ) ஆப்பிரிக்க நாடுகளில்
இல்லாத பிரச்சனையா? அங்கே அமெரிக்கமீட்பு( !? ) படை ஏன் போகவில்லை ?

Answer ரொம்ப சிம்பிள் --- ஏன் என்றால் அங்கெல்லாம் எண்ணைய்க் கிணறு-கள் இல்லை! இருந்தால் ஒருவேளை உதவி(!) செய்யப் போயிருக்கும்.

இதுதான் அமெரிக்காவின் மற்றொரு கோர முகம் . உலகத்தில் தீவிரவாத்தை வேருடன் அமெரிக்கா அறுத்தெறியும் என்பதெல்லாம் வெற்றுக் கூச்சல் - சாத்தான் ஓதும் வேதம் .


அன்புடன்,
சிவ சுப்பிரமணியன்.

நாமக்கல் சிபி said...

சிவ சுப்ரமணியன்,
யாராக இருந்தாலும் அப்பாவி மக்களின் உயிர்களை பறித்தால் அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.