தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, August 30, 2006

பகத்சிங் தீவிரவாதியா???

பகத்சிங், ராஜ குரு, சுக் தேவ் மூவரும் தீவிரவாதிகள் என பத்தாம் வகுப்பு ICSE சிலபஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இதை எதிர்த்து வழக்கு தொடர போவதாக மகாராஷ்ட்டிர அரசு தெரிவித்துள்ளது.

மேலும் விவரமறிய:
http://www.hindustantimes.com/news/181_1747191,000900040001.htm

21 comments:

செல்வன் said...

பகத்சிங் தீவிரவாதியா?அடப்பாவிகளா....முட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா?எந்த கிறுக்கன் இந்த மாதிரி பாடபுத்தகம் எழுதினான்?

நாமக்கல் சிபி said...

மத்திய அரசின் பாட புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.

Vajra said...

//
பகத்சிங் தீவிரவாதியா?அடப்பாவிகளா....முட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா?எந்த கிறுக்கன் இந்த மாதிரி பாடபுத்தகம் எழுதினான்?
//

வேற யாரு...?

ஓசாமா சுதந்திரப் போராட்டத் தியாகி, மதானி மாமனிதர் என்று சொல்லும் அறிவாள் சுத்தி கோஷ்டியின் mouth piece ச(த)ரித்திர விங்ஞானிகள் தான்!!

நாமக்கல் சிபி said...

சங்கர்,
//அறிவாள் சுத்தி கோஷ்டியின் //
நீங்க சொல்ற கம்யுனிஸ்ட் கொள்கையை கொண்டவர்தான் பகத்சிங்.

நாட்டுப்பற்று என்றால் என்னவென்றே தெரியாத எவரோ இந்த புத்தகத்தை எழுதியிருப்பார் போலும். அல்லது இங்கிலாந்து நாட்டில் இருக்கும் வரலாறு புத்தகத்திலிருந்து ctrl-c , ctrl-v செய்திருப்பார்.

எவர் செய்திருந்தாலும் இது கண்டிக்கத்தக்க ஒன்று.

செல்வன் said...

சில வருடங்களுக்கு முன் சீக்கிய குரு கோவிந்த்சிங்கை கொலைகாரன் எனவும் ஜாட்களை கொள்ளைக்காரர்கள் எனவும் புஸ்தகம் எழுதி ஏதோ ஒரு மாநில அரசாங்கம் வாங்கிக் கட்டிக்கொண்டது நினைவுக்கு வருகிறது.

இம்மாதிரி மென்டல்கள் புத்தகம் எழுதி மாணவர்களின் மனதை கெடுப்பதை விட்டு விட்டு,ஏதாவது கட்சிக்கு அறிக்கை எழுதிதரும் வேலையை செய்தால் மாணவர்கள் தப்பி பிழைப்பார்கள்.

G.Ragavan said...

ம்ம்ம்...வருத்தத்திற்குரிய செயல்.

மு.மயூரன் said...

//பகத்சிங் தீவிரவாதியா?அடப்பாவிகளா....முட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா?எந்த கிறுக்கன் இந்த மாதிரி பாட//

ha ha ha ha

செல்வன் நீங்களா? வஜ்ரா வழிமொழிகிறாரா?

நல்ல நகைச்சுவை.


பகத்சிங் ஒரு தீவிர கம்யூனிஸ்ட். தனது கம்யூனிச கொள்கைத்தளத்தில் நின்று காந்தியை எதிர்த்தவர். வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பிரிடிஷ்காரரை எதிர்ப்பதற்கான் அரசியல் தளத்தை நடைமுறைப்படுத்தியவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவை அநியன் சுரண்டக்கூடாது என்பதிலும், இந்தியாவில் அநியத்தலையீடு இருக்கக்கூடாது என்பதிலும் தீவிரமாக இருந்தவர்.

இவ்வளவு போதுமே அவர் தீவிர வாதி (பயங்கரவாதி?) தான் என்பதற்கு?

ஓ அமெரிக்க வால்களே, நீங்கள் ஒன்றைப்பற்றி பேசும் போது கவனம். அது இன்னொன்றைப்பற்றியும் பேசியதாகும்.

நாமக்கல் சிபி said...

//இம்மாதிரி மென்டல்கள் புத்தகம் எழுதி மாணவர்களின் மனதை கெடுப்பதை விட்டு விட்டு,ஏதாவது கட்சிக்கு அறிக்கை எழுதிதரும் வேலையை செய்தால் மாணவர்கள் தப்பி பிழைப்பார்கள். //

சரியாக சொன்னீர்கள் செல்வன். எந்த புத்தகத்திலாவது அவர் சிறைச்சாலையில் நடத்திய 63 நாள் உண்ணாவிரதம் பற்றி எழுதியுள்ளார்களா??? 21 வயதில் அந்த இளைஞன் சாதித்தது சாதாரண விஷயமில்லை.

நாமக்கல் சிபி said...

மயூரன்,
//பகத்சிங் ஒரு தீவிர கம்யூனிஸ்ட். தனது கம்யூனிச கொள்கைத்தளத்தில் நின்று காந்தியை எதிர்த்தவர். வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பிரிடிஷ்காரரை எதிர்ப்பதற்கான் அரசியல் தளத்தை நடைமுறைப்படுத்தியவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவை அநியன் சுரண்டக்கூடாது என்பதிலும், இந்தியாவில் அநியத்தலையீடு இருக்கக்கூடாது என்பதிலும் தீவிரமாக இருந்தவர்.

இவ்வளவு போதுமே அவர் தீவிர வாதி (பயங்கரவாதி?) தான் என்பதற்கு?
//

:-)

Syam said...

இது வெள்ளகாரன் சொன்னா அவன தொரத்துன கடுப்புல சொல்றானு சொல்லலாம்...நம்மளே சொன்னே எப்படி :-)


**************

சார் இன்னும் அப்படியே தான் சதுரம் சதுரமா தெரியுது....

செல்வன் said...

மயூரன்,

பகத்சிங் கம்யூனிஸ்டாக இருந்தால் என்ன,காங்கிரஸ்காரராக இருந்தால் என்ன?அவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி.நாட்டுக்காக உயிரை தந்தவர்.அதனால் தான் அவரை நான் போற்றுகிறேன்.

பகத்சிங்,காந்தி,சுபாஷ் போஸ், இவர்கள் அனைவரும் கொள்கைகளில் வேறுபட்டிருந்தாலும் தேசபக்தர்கள் என்ற வகையில் என் வணக்கத்துக்கும்,மரியாதைக்கும் உரியவர்கள்.அவர்களை யார் இழிவுபடுத்தினாலும் என்னால் பொறுக்க முடியாது.இதில் கம்யூனிசத்தையும்,காங்கிரஸையும் போட்டு குழப்பிக்கொள்ள நான் தயாராக இல்லை.

எந்த கொள்கையையும் விட தேசம் தான் பெரிது.தேச பக்தி தான் பெரிது.

ஜெய் ஹிந்த்

Vajra said...

//
நீங்க சொல்ற கம்யுனிஸ்ட் கொள்கையை கொண்டவர்தான் பகத்சிங்.
//

பகத் சிங் 1947 கம்யூனிஸ்ட். அப்போது கொள்கை நாட்டை வெளிநாட்டவரிடமிருந்து காக்க...

ரஷ்யா, சீனா வின் வால் பிடிக்க அல்ல. கொரியாவில் போய் பகத் சிங் இந்தியா அனுகுண்டு வெடித்தது கேவலமான விஷயம் என்று சொல்வாரா...அப்போது இருந்த கம்யூனிஸ்டுகள் வேறு இப்பொது அப்படிச் சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் வேறு...

சரித்திர புத்தகம் எழுதும் கோமா(ளி)ன்கள்
ரொமிளா தாபர், இர்பன் ஹபீப் மற்றும் அவர்களது அல்லக்கைகள்.

மார்க்ஸ்வாத அரசியல் கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்கள்.

(அருண் ஷூரி எழுதிய eminent historians புத்தகத்தைப் படிக்கவும்)

நாமக்கல் சிபி said...

//எந்த கொள்கையையும் விட தேசம் தான் பெரிது.தேச பக்தி தான் பெரிது.

ஜெய் ஹிந்த்
//

சரியாக சொன்னீர்கள் செல்வன்

நாமக்கல் சிபி said...

//சார் இன்னும் அப்படியே தான் சதுரம் சதுரமா தெரியுது....//

எனக்கு புரியல... அப்பறம் எப்படி படிக்கறீங்க???

திருவடியான் said...

பார்த்துக்கிட்டே இருங்க...

விடுதலைப்போராட்டத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தம் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இந்தியாவின் அப்போதைய முக்கியத் தலைவரும், தமிழர்களின் எதிரியுமான Rajiv Gandhi என்ற கொடுங்கோலனை அழிக்கத் திட்டமிட்டு வெற்றிகரமாக நிறைவேற்றினார். இது அவரின் வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாகும். .... என்று ஈழத்தமிழர்களின் பிள்ளைகளும்......

இந்தியாவில்...

முன்னாள் பிரதமர் RAJIV GANDHI இலங்கையைச் சேர்ந்த தீவிரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கம் கொடுரமான மனித வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் கொன்றனர். இத்திட்டத்தை வகுத்துக் கொடுத்து செயல்படுத்திய அத் தீவிரவாத அமைப்பின் தலைவர் இந்தியாவில் தண்டணையளிக்கப்பட்டு வெகுகாலங்களாக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். ...என்று இந்தியக் குழந்தைகளும் படிக்கப் போகின்றன.

மிதவாதக் கொள்கை மற்றும் தீவிரவாதக் கொள்கை என்று இருவேறு போராட்டங்களைப் பற்றி நாமும் நமது சுதந்திர வரலாற்றில் படித்திருக்கிறோம்.

பகத்சிங் தீவிரவாதக் கொள்கையுடையவராக இருந்தாலும் அவரும் இந்திய விடுதலைக்காகப் போராடியவரே...

ஆகவே இந்த வரலாற்றுப் புத்தகத்தை திருத்தி எழுதிய அறிவுசீவி நிச்சயம் இந்தியனாக இருக்கமாட்டான்..

-L-L-D-a-s-u said...

தமிழ்மணம் வழங்கும் இயங்கு எழுத்துருவை(dynamic font) பயன்படுத்தி இருந்தால் கட்டம் கட்டமாக வருகிறது .

கட்டங்களை ctrl+c செய்து http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm ல் ctrl+V செய்து படிக்கலாம்

நாமக்கல் சிபி said...

திருவடியான்,
//பகத்சிங் தீவிரவாதக் கொள்கையுடையவராக இருந்தாலும் அவரும் இந்திய விடுதலைக்காகப் போராடியவரே...

ஆகவே இந்த வரலாற்றுப் புத்தகத்தை திருத்தி எழுதிய அறிவுசீவி நிச்சயம் இந்தியனாக இருக்கமாட்டான்.. //

சரியாக சொன்னீர்கள்... ஆனால் படிப்பது இந்திய குழந்தைகள்தானே :-(

நாமக்கல் சிபி said...

L-L-D-a-s-u said...
//
தமிழ்மணம் வழங்கும் இயங்கு எழுத்துருவை(dynamic font) பயன்படுத்தி இருந்தால் கட்டம் கட்டமாக வருகிறது .

கட்டங்களை ctrl+c செய்து http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm ல் ctrl+V செய்து படிக்கலாம்//
ஓ இதுதான்ன் விஷயமா... நான் இயங்கு எழுத்துருவைத்தான் பயன்படுத்துகிறேன் :-(

தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி தாஸ்

சென்ஷி said...

Hello Mr. Vettipayyal,

How are you, this is senshe.

unga kathai pirivu padichaene. nalla irukku. macromandaiyan karuthai naanum aamothikkirane. athenna pasangala kavaneekavae mattaengireenga.

senshe

நாமக்கல் சிபி said...

//How are you, this is senshe. //
Hi Senshe,
I am doing fine.

//
unga kathai pirivu padichaene. nalla irukku.//
Thx.

// macromandaiyan karuthai naanum aamothikkirane. athenna pasangala kavaneekavae mattaengireenga
//
தனா பையன் தானே... அவன பத்தி தானே கதையே எழுதியிருக்கேன் ;)
( இது எப்படியிருக்கு ;) )

கால்கரி சிவா said...

மயூரன்.

பகத்சிங் எதிர்த்து போரடியது ஆக்கிரமித்த அந்நிய நாட்டினரை சொந்த நாட்டினரை எதிர்த்து அல்ல.

மேலும் அவர் அப்பாவி மக்களை குண்டு வைத்து அழிக்கவில்லை. அப்பாவி பொதுமக்களுக்கு மத்தியில் குண்டு வைப்பவர்கள் பயங்கரவாதிகள் aka கோழைகள்