தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, August 10, 2006

தமிழ் சேனல்கள் இணையத்தில்...

நாங்க இன்னும் எவ்வளவு நாள் இங்க இருப்போம்னு தெரியாததால டீவி வாங்கல. சரின்னு படத்தை மட்டும் டவுன்லோட் செய்து பார்த்துக் கொண்டிருந்தோம்.

நேத்து ஏதேச்சையாக இணையத்தில் தேடிக் கொண்டிருக்கும் போது இதைப் பார்த்தோம். இணையத்தில் இந்த தளத்தில் சன் டீவி, கே டீவி, விஜய் டீவி கிடைக்கிறது. (ஓசில இல்லப்பா காசுக்குத்தான் :-( )

சன் டீவியும், கே டீவியும் சேர்ந்து வாங்கினால் $15 , தனியாக ஒரே சேனல் வாங்கினால் $10.

நமது பேண்ட்வித்தைப் (Bandwidth) பொறுத்தே படம் நன்றாக தெரியும். வேண்டுமென்றால் முயற்சித்துப் பார்க்கலாம்.

நாங்க உடனே வாங்கி, தலைவரோட "தாய்வீடு" பார்த்தோம். அப்பறம் புதுபட ட்ரைலர், விளம்பரம் கூட விடாமப் பார்த்தோம். ஆனால் எல்லா விளம்பரமும் பழசாவே இருந்தது :-(.

இந்த ஞாயிற்றுக்கிழமை "டாப் டென் மூவிஸ்" பாக்கனும் :-))

11 comments:

பொன்ஸ்~~Poorna said...

இப்போ வந்து சொல்றீங்களே!!! ரெண்டு நாளைக்காக 10$ கொடுத்தாலும் வேஸ்டு தான்..

செல்வன் said...

இந்த தளத்தில் ஓசியில் புதுபடம் அனைத்தும் பார்க்கலாம்.ஜெயா டிவியும் தெரியும்.

http://kingofking.tk/

கால்கரி சிவா said...

பாலா, தமிழ் சேனல்கள் பார்த்துதானே வள்ர்ந்தோம். அந்த கேவலங்களை மறந்து இங்கு வரும் சில அருமையான சானலகளைப் பாருங்கள்

Anonymous said...

SlingMedia (http://www.slingmedia.com/slingbox/how.php) ஸ்லிங் பாக்ஸ்னு விட்டுருக்காங்க. உங்க வீட்டுல install பண்ணிட்டு எங்க வேண்ணா டீவி பாக்கலாம் (உங்க PC யில).

நாமக்கல் சிபி said...

பொன்ஸ் அக்கா,
நானே நேத்துதான் பார்த்தேன் என்னா பண்றது.

ரெண்டு நாள் உங்களுக்கு மூட்டை முடிச்சி எல்லாம் எடுத்து வைக்கவே சரியா இருக்கும்... சென்னையில் போய் பார்த்துக்கோங்க :-)

$elvan,
மிக்க நன்றி. இதெல்லாம் முன்னாடியே சொல்றதில்லையா? :-)

சிவாண்ணா,
இங்க டீவி இல்லாம ஏதாவது பார்க்க கிடைச்சா போதும்னு தான் பார்க்கிறோம்... அதுவும் இல்லாமல் இப்பதான் ஊரைவிட்டு ரொம்ப தூரம் வந்த மாதிரி ஒரு Feeling இல்லாம இருக்கு...

அனானி,
மிக்க நன்றி... நான் பாத்துட்டு சொல்றேன்...

Syam said...

காசுக்கு தான் இப்போ டிவில பார்த்திட்டு இருக்கோம்...செல்வன்,அனானி சொன்னதயும் ஒரு கை பார்த்துடலாம்...பொன்ஸ் ஊருக்கு போறீங்களா ம்ம்ம்ம்..குடுத்து வெச்சவங்க....

நாமக்கல் சிபி said...

//காசுக்கு தான் இப்போ டிவில பார்த்திட்டு இருக்கோம்//
என்ன இருந்தாலும் டிவில பார்க்கற எஃபக்டே வேற தான்...

அதையே தொடருங்க... :-))

Sivabalan said...

பாலாஜி

அடிக்கடி இந்த KTv Struck ஆகிவிடுகிறது..

எப்படி சரி செய்வது..

ஏதாவது Idea இருந்தா சொல்லுங்க..

நாமக்கல் சிபி said...

சிபா,
இரவு 7-10 மணி வரை அதிகமானவர்கள் பயன்படுத்துவதால் Buffering பிரச்சனை இருக்கிறது. இருந்தாலும் ஒரு வழியாக படம் பார்க்கிறோம்...(இப்ப ப்ரியமானவளே ஓடிட்டிருக்கிறது:) )

Sivabalan said...

பாலாஜி

இளைய தளபதியை பார்க்கலாம்னா அடிக்கடி Struck ஆகுது.. சரி விடுங்க..:)

நாமக்கல் சிபி said...

சிபா,
இங்க நமக்கு நல்லா வருது...
உங்க நெட் ஒர்க் நல்லா இருக்கானு எதுக்கும் பாத்துக்கோங்க...