தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, August 01, 2006

தப்பு பண்ணிட்டேன்!!!

நான் பாட்டுக்கு நான் உண்டு தமிழ்மணமுண்டுனு எல்லா பிளாக்கையும் படிச்சிட்டு இருந்த காலம்...

திடீர்னு மீட்டிங்னு கூப்டாங்க! சரிடா எப்பையும் போறதுதானே இன்னிக்கு மட்டும் என்ன ஆகப் போகுதுனு போனேன். மீட்டிங்ல மேனஜரு இனிமே ஒவ்வொரு வருசத்துக்கும் ஒவ்வொரு சர்டிபிகேசன் பண்ணனுமாம். நம்ம பிராஜக்ட்க்கு ஜாவால பண்ணலாம். யார் யார் பண்றீங்கனு கேட்டாங்க???

கூட இருக்கறவங்க எல்லாம் கையத்தூக்கிட்டானுங்க!!! நமக்குத்தான் எப்பவுமே கூட்டத்தோட கோவிந்தா போட்டுத்தானப் பழக்கம். சரினு நானும் கையை தூக்கிட்டேன்.

முதல்ல ஜீன் 16 புக் பண்ணோம். படிக்க நேரமில்லாததால, அதை அப்படியே ஜுலை- 22க்கு மாத்தினோம். அப்ப பிளாக் எழுத ஆரம்பிச்சதால படிக்க நேரமில்லையா (சும்மா...எதாவது காரணம் சொல்லனுமில்லை அதுக்குத்தான்) அதனால ஆகஸ்ட்-26க்கு மாத்தினோம். இப்ப செப்டம்பருக்கு மாத்தலாம்னு பாத்தா மூணு தடவைக்கு மேல மாத்த முடியாதுனு சொல்லிட்டான் அந்த பயபுல...

நமக்கு ஜாவால எதுவுமே தெரியாது. (நமக்கு C தான் தெய்வம்).
இன்னும் 20 நாள்ல படிச்சி பாஸாவனானு தெரியல...இருந்தாலும் முயற்சி செய்வோம்.

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பதென்னவென்றால், இனி வெட்டிப் பயல் கொஞ்ச நாளைக்கு பிஸி பாய் ஆகிறார்...
(பிளாக் ஆரம்பிச்சே ஒரு மாசம் தான் ஆகுது ஓவரா பேசதடானு யாரோ சொல்ற மாதிரி இருக்கு....இருக்கட்டும் வந்து வெச்சிக்கிறன்)

பிகு:
என்னட தப்பு பண்ணிட்டன்னு தலைப்பு வெச்சிருக்கானேனு பாக்கறீங்களா? வருஷத்துக்கு ஒரு சர்டிபிகேசன்னு சொன்னாங்க!!! நான் எங்க பிராஜக்டுக்கு தேவையான முக்கியமான வேற ஒரு சர்டிபிகேசனை பெங்களூர்ல இருக்கும் போதே பண்ணிட்டுதான் இங்க வந்தேன். எல்லாரும் கைய தூக்கறாங்களேனு நானும் தூக்கிட்டு இப்ப அவஸ்தைப்படறேன் :-((

15 comments:

Udhayakumar said...

//கொஞ்ச நாளைக்கு பிஸி பாய் ஆகிறார்...
//

மத்த வகையில் பிஸி பாய் ஆகாம இருந்தா சரி :-)

இலவசக்கொத்தனார் said...

காதலா காதலா படத்தில் எம்.எஸ்.வி சொல்லற மாதிரி சொல்லுங்க.

முருகா! தப்புப் பண்ணிட்டேம்பா. தப்புப் பண்ணிட்டேன்.

செல்வன் said...

Complete your work and come back with promotion busy boy

All the best

Anonymous said...

Good Luck.

Writing too many items in ( ) is not at all funny. Its rather annoying.

And nobody has time to think why you didnt write or what you are writing so far.

Tamil blogger world is growing exponentially that noone cares for anyone.

Syam said...

வாழ்த்துக்கள்...சென்று சர்டிபிகேசன் வென்று வாங்க... :-)

Syam said...

அனானி காமெண்ட் நீங்களே போட்டுடீங்களா :-)

நாமக்கல் சிபி said...

//மத்த வகையில் பிஸி பாய் ஆகாம இருந்தா சரி :-)//
உதய்,
அதுக்கு எல்லாம் இங்க சான்சே இல்ல :-(

கொத்ஸ்,
சொல்லிட்டாப் போச்சி.

"முருகா! தப்புப் பண்ணிட்டேம்பா. தப்புப் பண்ணிட்டேன்"

$elvan,
Thx for the wishes.

Anony,
Thx for the Wishes.

May be u r right. but still I am really happy that I got some good friends through this blog. More over its not my profession too.

Syam,
நன்றி.

சத்தியாமா அதை நான் போடலீங்கோ...

vaik said...

தப்பான கூட்டனில இருக்கீங்க போல :) all the best.

G.Ragavan said...

:-))))))))))))

என்னுடைய வாழ்த்துகள் வெட்டி. நான் இப்பதான் ஒன்னு முடிச்சேன். அடுத்த மாசம் பெங்களூர் போயி இன்னொன்னு செய்யலாம்னு இருக்கேன். இப்பிடி ஆயிருச்சே நம்ம நெலமை.

(ஒரு ரகசியம் உதய் ஏற்கனவே பதினஞ்சு சர்டிபிகேசன் செஞ்சிருக்காராம். :-) )

நாமக்கல் சிபி said...

வைக்,
வந்த புதுசுல நமக்கு சரியா தெரியல...
ஆனால் அவுங்களும் நம்ம கூட சேர்ந்து 2 தடவை பரிட்சையை தள்ளிப் போட்டுடாங்க :-))

நாமக்கல் சிபி said...

ராகவன்,
மிக்க நன்றி.

//நான் இப்பதான் ஒன்னு முடிச்சேன். அடுத்த மாசம் பெங்களூர் போயி இன்னொன்னு செய்யலாம்னு இருக்கேன். இப்பிடி ஆயிருச்சே நம்ம நெலமை.
//
நீங்க கண்டிப்பா மருதமலை முருகன் அருளால கிளியர் பண்ணிடுவீங்க!!!

//
(ஒரு ரகசியம் உதய் ஏற்கனவே பதினஞ்சு சர்டிபிகேசன் செஞ்சிருக்காராம். :-) )
//
அதனால தான் முதல் ஆளா வந்து பின்னூட்டமிட்டாறா அவர்...
அவருக்கு இருக்கு இருங்க :-))

Gladtomeetin said...

All the best....RETAILkku innum certification roll out aagala!

நாமக்கல் சிபி said...

Even for us its not compulsory...

அதுக்குத்தான் தலைப்பே அப்படி கொடுத்திருக்கேன்

வெற்றி said...

வெட்டிப்பயல்

//மீட்டிங்ல மேனஜரு இனிமே ஒவ்வொரு வருசத்துக்கும் ஒவ்வொரு சர்டிபிகேசன் பண்ணனுமாம். நம்ம பிராஜக்ட்க்கு ஜாவால பண்ணலாம். யார் யார் பண்றீங்கனு கேட்டாங்க???

கூட இருக்கறவங்க எல்லாம் கையத்தூக்கிட்டானுங்க!!! நமக்குத்தான் எப்பவுமே கூட்டத்தோட கோவிந்தா போட்டுத்தானப் பழக்கம். சரினு நானும் கையை தூக்கிட்டேன்.//

ஆகா, யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம். அய்யா, இதே சிக்கல் தான் எனக்கும். இந்த வருடத்தில் இதுவரை 2 பரீட்சைகள் முடித்தாயிற்று. இவ் வருடம் முடிவதற்குள் இன்னும் 2 முடிக்கலாமென நான் உத்தேசித்துள்ளேன். பார்ப்போம்.

நாமக்கல் சிபி said...

//இந்த வருடத்தில் இதுவரை 2 பரீட்சைகள் முடித்தாயிற்று. இவ் வருடம் முடிவதற்குள் இன்னும் 2 முடிக்கலாமென நான் உத்தேசித்துள்ளேன். பார்ப்போம். //
தெய்வமே,
ஒண்ணுக்கே உயிர் போகுது... வருசத்துக்கு நாலா போட்டுத்தாக்குங்கோ!!!