தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, July 31, 2006

கவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்-2!!!

கவுண்டரும் செந்திலும் சின்சியராக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
வெளியே சத்தம் கேட்கிறது...

"பழைய கம்ப்யூட்டர், லேப்-டாப்புக்கு ஸ்ட்ராபெரி பழம்...
பழைய கம்ப்யூட்டர், லேப்-டாப்புக்கு ஸ்ட்ராபெரி பழம்..."

கவுண்டர் டென்ஷனாகி வெளியே வருகிறார். செந்திலும் யாருக்கும் தெரியாமல் வெளியே வருகிறார்.

கவுண்டர் பழம் விற்பவனிடம்:
டேய் என்னட இது?

ப.வி: பழைய கம்ப்யூட்டர், லேப்-டாப்புக்கு ஸ்ட்ராபெரி பழம்னே...

கவுண்டர்: அது என்னட டெய்லி எங்க கம்பனி முன்னாடியே நின்னுட்டு சத்தம் போட்டுட்டு இருக்க?

ப.வி: என்னை ஏன்னே திட்டறீங்க??? நான் வியாபாரின்னே...

கவுண்ட்ஸ்: ஆமாம் இவர் பெரிய கப்பல் வியாபாரி...

செந்தில்: அண்ணன் நான் ஸ்ட்ராபெரி சாப்பிட்டதே இல்லைனே.

கவுண்ட்ஸ்: ஸ்ட்ராபெரி சாப்பிடறதுக்கு உள்ள இருக்கிற காஸ்ட்லி கம்ப்யூட்டர போடலாம்ன்ர??? டெய் லீடு மண்டையா ஒளுங்க உள்ள போயி வேலைய பாரு... இல்ல கீ-போர்டாலே மண்டைய ஒடைச்சிடுவன்..உள்ள போ

கவுண்ட்ஸ் பழ வியாபாரியிடம்: டேய் சீஸ் பர்கர் மண்டையா, இனிமே இந்த பக்கம் உன்னை பார்த்தேன்...அவ்வளவுதான்..ஓடிப் போ நாயே!!!

பழ வியாபாரி இடத்தை காலி செய்கிறார்.

**********************************

காட்சி 2:

கவுண்டர் பிராஜக்ட் டெவலப்மெண்ட் முடித்து ஆன்- சைட்டிற்கு டெஸ்டிங்குக்கு அனுப்பியிருக்கிறார்கள். பிராடக்ட்டில் 2 பக் (bug) இருப்பதாக ஆன்- சைட்டில் இருந்து மெயில் வந்திருக்கிறது. விளக்கமாக சொல்ல போன் செய்யுமாறு சொல்லியுள்ளார்கள்.

கவுண்ட்ஸ்: டெய் லீட்ஸ், இங்க வா

செந்தில்: என்னன்னே கூப்பிட்டீங்களா?

கவுண்ட்ஸ்: ஆன்- சைட்டிக்கு போன் பண்ணி அது என்ன 2 bugன்னு கேட்டு நம்ம என்விரான்மெட்ல இருக்கானு டெஸ்ட் பண்ணி பாரு...
(Testing Environment and Development Environment are different)

செந்தில்: சரிண்ணே!!!

செந்தில் ஆன்- சைட்டிக்கு போன் பண்ணி கேட்டுவிட்டு, ஒரு bugஐ மட்டும் டெஸ்ட் செய்துவிட்டு, புதிதாக சேர்ந்திருக்கும் ஒரு டெவலப்பரை (பொண்ணுதான் இதெல்லாம் கூடவா சொல்லுவாங்க???) கூப்பிட்டு காபி டே சென்று கடலை போட்டுவிட்டு, பிசா ஹட்டில் மதிய உணவை முடித்துவிட்டு, Forumல் (Bangalore Shopping mall) சுற்றிவிட்டு லேட்டாக வருகிறார்.

கவுண்ட்ஸ்: டேய் லீட்ஸ், என்ன டெஸ்ட் பண்ணிட்டியா?

செந்தில்: பண்ணிட்டண்ணே!!!

கவுண்ட்ஸ்: எங்க காட்டு நான் பாக்கறேன்.

செந்தில் ஒரே ஒரு bugஐ மட்டும் டெஸ்ட் பண்ணி காட்டுகிறார்.

கவுண்ட்ஸ்: சரி அந்த இன்னொரு பக் எங்க?

செந்தில்: அந்த இன்னொன்னு தானே இது!!!

கவுண்ட்ஸ்: டேய்!!! நான் உன்ன என்ன பண்ண சொன்னன்.

செந்தில்: bug டெஸ்ட் பண்ண சொன்னிங்க

கவுண்ட்ஸ்: எத்தனை?

செந்தில்: ரெண்டு

கவுண்ட்ஸ்: ஒண்ணு இங்க இருக்கு அந்த இன்னொரு பக் எங்க???

செந்தில்: அந்த இன்னொன்னு தானே இது!!!

கவுண்டர் டென்ஷனாகி கத்துகிறார்...

டீம் மெட்டான ஜுனியர் பாலைய்யா மற்றும் வெள்ளை சுப்பையா வருகிறார்கள்.

ஜு.பா: ஏன்ன அவனை திட்டறீங்க.... என்ன இருந்தாலும் அவன் நம்ம டீம்மு

கவுண்ட்ஸ்: ஆமாம் பெரிய இந்தியன் கிரிக்கெட் டீம்மு... 2 bugஅ டெஸ்ட் பண்ணுடானா, 1 மட்டும் பண்ணிட்டு அந்த இன்னொண்ணு எங்கடானா, என்ன சொல்றான் பாரு..

ஜு.பா: இதுக்கு போயி இவ்வளவு டென்ஷன் ஆயிட்டு!!! பொறுமையா கேட்டா சொல்றான்...

ஜு.பா செந்திலிடம்: தம்பி, அண்ணன் உன்கிட்ட என்ன சொன்னாரு?

செந்தில்: பக் டெஸ்ட் பண்ண சொன்னாரு?

ஜு.பா: எத்தனை?

செந்தில்: ரெண்டு

ஜு.பா: ஒண்ணு இங்க இருக்கு... அந்த இன்னொரு பக் எங்க???

செந்தில்: அந்த இன்னொன்னு தாங்க இது!!!

கவுண்ட்ஸ் மேலும் டென்ஷனாகி கத்துகிறார்.

கோ.சரளா: என்ன இங்க சண்டை??? என்ன இங்க சண்டை???

வெ.சுப்பையா: ஒண்ணும் இல்லக்கா!!! அண்ணன் நம்ம லீட்ஸ்ட 2 பக் டெஸ்ட் பண்ண சொல்லியிருக்காரு!!! 1 மட்டும் டெஸ்ட் பண்ணிட்டு , இன்னொரு பக் எங்கனு கேட்டா அதுவும் இதுதான்னு சொல்றாரு...

கோ.சரளா: த!!! அவர் உன்கிட்ட என்ன சொன்னாரு?

செந்தில்: பக் டெஸ்ட் பண்ண சொன்னாரு?

கோ.சரளா: எத்தனை?

செந்தில்: ரெண்டு

கோ.சரளா: ஒண்ணு த இங்க இருக்கு... அந்த இன்னொரு பக் எங்க???

செந்தில்: அந்த இன்னொன்னு தாம்மா இது!!!

கவுண்ட்ஸ் மேலும் டென்ஷனாகி கத்துகிறார். எல்லோரும் அவரை அடுக்குகிறார்கள்.

கோ.சரளா: ஒரு பக்குக்கு இவ்வளவு பிரச்சனையா?

கவுண்ட்ஸ்: என்ன bugக்க பத்தி அவ்வளவு சாதரணமா பேசிட்ட? ஒரு பக்காள கொலம்பியா விண்கலமே வெடிச்சி போச்சி. அது hardware bug, இது software bug. ஆனால் பிரச்சனை எல்லாம் ஒண்ணுதான்.
சரி விடுங்க நானே கேக்கறன்...

கவுண்டர் பொறுமையாக செந்திலிடம்:
டேய் நான் உன்கிட்ட என்ன பண்ண சொன்னன்?

செந்தில்: Bug டெஸ்ட் பண்ண சொன்னீங்க!!!

கவுண்டர்: ஆன்- சைட்டிக்கு போன் பண்ணியா?

செந்தில்: பண்ணனே!!!

கவுண்டர்: எத்தனை பக் சொன்னான்?

செந்தில்: ரெண்டு

கவுண்டர்: ஒண்ணு தோ இங்க இருக்கு... அந்த இன்னொரு பக் எங்க???

செந்தில்: அந்த இன்னொண்ணு தான்யா இது!!!

கவுண்டர்: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...........

செந்தில் எஸ்கேப் ஆகி ஓடி விடுகிறார்....

33 comments:

பாலசந்தர் கணேசன். said...

எதிர்பார்த்த வரிகள். ஆனாலும் சுவையாகத்தான் இருக்கிறது. மேலும் பதிவுகளை இந்த வரிசையில் காண ஆவலாக உள்ளேன்.

நாமக்கல் சிபி said...

பாலசந்தர் கணேசன்,
மிக்க நன்றி. எனக்கு இதில் அவ்வளவாக அனுபவம் இல்லை. இது என் முதல் முயற்சி. போக போக பார்க்கலாம்.

Unknown said...

நன்றாக இருக்கிறது பாலாஜி.ஏதேனும் ட்விஸ்ட் கொண்டு வாருங்கள்.இன்னும் நன்றாக இருக்கும்.

Anonymous said...

யக்கோவ் என்ன இப்படி திடீர்ன்னு கண்டனம்னு சொல்லிபுட்டே

பாலாஜி..சரளாக்கா கிடக்குது.நீ கவலைப்படாதே.அண்ணன் நான் இருக்கேன்

இப்படிக்கு
செந்தில்

Anonymous said...

அந்த முள்ளம் பண்ணீ மண்டையன் செந்தில் இங்க வந்தானா பாலாஜி?

கவுண்டர்

Anonymous said...

புதுசா சேந்த பொண்ணு தான் கோவை சரளாவா ?

கைப்புள்ள said...

நல்லாருக்குங்கோவ்.

நாமக்கல் சிபி said...

சரளாக்கா,
போட்டு தாக்கிருக்கீங்க!!!
இதுல மூணு பேர் பேருலையும் நீங்கதான் போட்டிருக்கிங்கனு நான் சொல்லாமலயே எல்லாரும் கண்டுபிடிச்சிடுவாங்கனாலும், சொல்ல வேண்டியது நம்ம கடமை :-))

நாமக்கல் சிபி said...

செல்வன்,
நன்றி. அடுத்த முறை கொஞ்சம் நல்லா யோசிச்சி பண்றன்.

கைப்புள்ள,
தொடர்ந்து ஆதரவு தருவதற்கு நன்றி

நாமக்கல் சிபி said...

அனானி,
புது பொன்னு சரளாக்கா இல்லை :-))

கதிர் said...

//செந்தில் ஆன்- சைட்டிக்கு போன் பண்ணி கேட்டுவிட்டு, ஒரு bugஐ மட்டும் டெஸ்ட் செய்துவிட்டு, புதிதாக சேர்ந்திருக்கும் ஒரு டெவலப்பரை (பொண்ணுதான் இதெல்லாம் கூடவா சொல்லுவாங்க???) கூப்பிட்டு காபி டே சென்று கடலை போட்டுவிட்டு, பிசா ஹட்டில் மதிய உணவை முடித்துவிட்டு, Forumல் (Bangalore Shopping mall) சுற்றிவிட்டு லேட்டாக வருகிறார்.//

யோவ் வெட்டி நீதானே செந்திலு?

நாமக்கல் சிபி said...

////செந்தில் ஆன்- சைட்டிக்கு போன் பண்ணி கேட்டுவிட்டு, ஒரு bugஐ மட்டும் டெஸ்ட் செய்துவிட்டு, புதிதாக சேர்ந்திருக்கும் ஒரு டெவலப்பரை (பொண்ணுதான் இதெல்லாம் கூடவா சொல்லுவாங்க???) கூப்பிட்டு காபி டே சென்று கடலை போட்டுவிட்டு, பிசா ஹட்டில் மதிய உணவை முடித்துவிட்டு, Forumல் (Bangalore Shopping mall) சுற்றிவிட்டு லேட்டாக வருகிறார்.//

யோவ் வெட்டி நீதானே செந்திலு?//

தம்பி,
சத்தியாமா அது நான் இல்லிங்கோ :-))
அந்த அளவுக்கு நமக்கு திறமையில்லீங்கோ :-((

நாகை சிவா said...

வெட்டி, அந்த ஸ்டராபெரி மேட்டர சட்டுனு முடித்து விட்டீர்கள்.
நன்றாக பண்ணி உள்ளீர்கள்
வாழ்த்துக்கள்

நாமக்கல் சிபி said...

//வெட்டி, அந்த ஸ்டராபெரி மேட்டர சட்டுனு முடித்து விட்டீர்கள்.//
ஸ்ட்ராபெரிக்கு பதிலாக i-pod போட்டு பெருசா எழுதலாம்னு யோசித்தேன். ஆனால் நேரம் இல்லை. ஆபிஸில் உட்கார்ந்து இவ்வளவு எழுதவதற்குள்ளே போதும் போதும் என்றாகிவிட்டது. டீம்-மேட்டுக்கு ஏற்கனவே காதில் புகை.

2 நாளாக வீட்டில் இன்டர் நெட் பிரச்சனை. இன்று சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.

G.Ragavan said...

நல்ல முயற்சி வெட்டி. சரி...இதெல்லாம் பதிவோட முடியிறதுதான....உண்மையிலேயே???????????????????

நாமக்கல் சிபி said...

ராகவன்,
//இதெல்லாம் பதிவோட முடியிறதுதான....உண்மையிலேயே??????????????????? //
நாம எல்லாம் எப்படி பக் டெஸ்ட் பண்ணோம்னு சொல்லனும்னா 2 பதிவோட முடியுமா என்ன????

இருந்தாலும் இதெல்லாம் இப்படி பப்ளிக்ல கேக்க கூடாது சொல்லிட்டேன் :-))

கப்பி | Kappi said...

நல்லா இருக்கு வெட்டி..

//இருந்தாலும் இதெல்லாம் இப்படி பப்ளிக்ல கேக்க கூடாது சொல்லிட்டேன் :-))//

கேட்டாலும் நீங்க சொல்லப்படாது :)

நாமக்கல் சிபி said...

கப்பி,
//நல்லா இருக்கு வெட்டி..//
மிக்க நன்றி.

//கேட்டாலும் நீங்க சொல்லப்படாது :)
//
கண்டிப்பா சொல்லமாட்டோம்ல...

Syam said...

கலக்கலுங்கோவ்... :-)

Anonymous said...

கலக்கீட்டீங்க...சரி நீங்களாவது சொல்லுங்க அந்த இன்னொரு பக் எங்கே-ன்னு? ;)

Unknown said...

This post of yours is featured in VVS parinthurai

ILA (a) இளா said...

சூப்பர் சாமி. சங்கத்துல இந்த பதிவு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
CHECK OUT http://vavaasangam.blogspot.com

நாமக்கல் சிபி said...

சங்கத்து சிங்கங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

குமரன் (Kumaran) said...

:-)))))

நாமக்கல் சிபி said...

syam,
மிக்க நன்றி.

பாலாஜி-பாரி,
//கலக்கீட்டீங்க...//
நன்றி.

//சரி நீங்களாவது சொல்லுங்க அந்த இன்னொரு பக் எங்கே-ன்னு? ;)
//
எத்தனை தடவைப்பா சொல்றது...
அந்த என்னொரு பக் தான் இது ;)

குமரன்,
அட்டெண்டன்ஸ் போட்டாச்சி

கார்த்திக் பிரபு said...

ada neeenga eludhiya indha padhivu thaaan ippo tamil nadu software company mailgalin moolam parimaarikolla padugiradhu..kallakungal..valthukkal

நாமக்கல் சிபி said...

ஓ!!! அப்படியா? மிக்க மகிழ்ச்சி...
அப்படியே நமக்கும் அதை பார்வேர்ட் செய்யறது ;)

ரங்கா - Ranga said...

இப்பதாங்க உங்க வலைப்பக்கம் முதல் முறையா வந்திருக்கேன். ரொம்ப இயல்பா அழகா எழுதியிருக்கீங்க. தொடர்ந்து எழுதுங்க - சந்தோஷமா இருக்கும்.

ரங்கா.

நாமக்கல் சிபி said...

ரங்கா - Ranga said...
//இப்பதாங்க உங்க வலைப்பக்கம் முதல் முறையா வந்திருக்கேன். ரொம்ப இயல்பா அழகா எழுதியிருக்கீங்க.
//மிக்க நன்றி

// தொடர்ந்து எழுதுங்க - சந்தோஷமா இருக்கும்.
//
உண்மைதான் எழுதும் போது சந்தோஷமா இருக்கு. அதைவிட இந்த மாதிரி நாலு பேர் சொல்லும் பொது இன்னும் சந்தோஷம் அதிகமா இருக்கு

Anonymous said...

கலக்கீட்டீங்க... கலக்கீட்டே இருக்கிங்க...

this is my second visit...

ரொம்ப நாளா miss பண்ணிட்டோமேன்னு ஒரே feelinga இருக்கு வெட்டி...:-)

நாமக்கல் சிபி said...

//ஜெயந்தி said...

கலக்கீட்டீங்க... கலக்கீட்டே இருக்கிங்க...

this is my second visit...

ரொம்ப நாளா miss பண்ணிட்டோமேன்னு ஒரே feelinga இருக்கு வெட்டி...:-)//

மிக்க நன்றி ஜெயந்தி...

ஃபீலே பண்ணாதீங்க... உக்கார்ந்து ரெண்டு நாள்ல எல்லாத்தையும் படிச்சிடுங்க ;)

Sridhar V said...

சும்மா பொழுது போகாம பழச மேய்ஞ்சிட்டே இங்க வந்துட்டேன். நல்லா இருக்கு.

பின்னூட்ட பக்கத்தில் உங்க பெயருக்கு பதில் 'நாமக்கல் சிபி'ன்னு வருதே... ஏதாவது குரு தட்சிணை மாதிரி அவருக்கு டெடிகேட் பண்றேன்னு சிம்பாலிக்கா சொல்றீங்களா? :-))

ஏதாவது டெம்ப்ளேட் பிரச்னையோ? கொஞ்சம் கவணிங்களேன்...

Unknown said...

Nice post

unga blog la subscribe panrathu eppadi?

mail id
vivekisravel@gmail.com