தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, July 24, 2006

அறிவியலும் ஆன்மீகமும்

ஒரு சில அறிவியல் விதிகள் எனக்கு ஆன்மீக சிந்தனைகளையே தூண்டிவிட்டன. உங்களுக்கு தெரிந்ததையும் சொல்லுங்கள்.

"For Every Action, there is an Equal and Opposite Reaction"
நீ செய்யும் ஒவ்வொரு நல்ல செயல்களும் தீய செயல்களும் அதே அளவு உனக்கு திரும்பி கிடைக்கிறது.

நான் பத்தாவது படிக்கும் போது ஆங்கில ஆசிரியர் சொன்னது.
"தம்பிகளா, உலகம் உருண்டை. நீ வீசுகின்ற ஒவ்வொரு கல்லும் உன்னையே திருப்பித் தாக்கும். அதனால மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் நடந்து கொள்ளுங்கள்."

"Energy Can Neither be created nor be destroyed but its converted to one form to another"
ஆன்மா உருவாவதுமில்லை, அழிக்கப்படுவதுமில்லை. அது பல உடல்களைப் பெற்று ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுகிறது"

6 comments:

செல்வன் said...

//Energy Can Neither be created nor be destroyed but its converted to one form to another//

எனெர்ஜி எனும் இடத்தில் சக்தி என்பதை போட்டு படித்து பாருங்கள் பாலாஜி.

ஆதிபராசக்தி என்றால் எங்கும் நிறைந்த தோற்றமும்,அழிவும் இல்லாத சக்தி என்று பொருள்.இந்த விதி சொல்வதும் அதைத்தான்

நாமக்கல் சிபி said...

//எனெர்ஜி எனும் இடத்தில் சக்தி என்பதை போட்டு படித்து பாருங்கள்
//

ஆமாம் $elvan, இதற்கான விளக்கம் இன்னும் அழகாகிவிட்டது.
நம் உடம்பிற்குள் ஓடும் சக்தி தான் "ஆதிபராசக்தி" என்று எங்கோ படித்த நியாபகம்.

குமரன் (Kumaran) said...

பாலாஜி. இப்படி நிறைய சொல்லலாம்.

நாமக்கல் சிபி said...

//இப்படி நிறைய சொல்லலாம். //

குமரன் தங்களுக்கு தெரிந்ததை சொன்னால் உதவியாக இருக்கும்.

G.Ragavan said...

ம்ம்ம்....குமரன் சொல்ற மாதிரி நெறைய இருக்கு. ஆனாலும் நீ எடுத்துச் சொன்ன விஷயம் பொருத்தம். (நீன்னு சொல்லலாமா? நீங்கன்னு சொல்லனுமா?)

நாமக்கல் சிபி said...

//ஆனாலும் நீ எடுத்துச் சொன்ன விஷயம் பொருத்தம். //

மிக்க நன்றி. உங்களுக்கு தெரிந்ததையும் சொல்லலாம்...

//நீன்னு சொல்லலாமா? நீங்கன்னு சொல்லனுமா?//
"நீ"ன்னே சொல்லங்க. (உங்கள விட நான் சின்ன பையன் தான் :-)) )