தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, July 19, 2006

புலிக் குட்டி

"தாய் 8 அடி பாய்ந்தால்,
குட்டி 16 அடி பாயும்" என்பது பழமொழி.

ஆனால் ஒரு சில தாய் புலிகள் 64 அடி பாய்ந்துவிடுவது குட்டிபுலிகளுக்கு ஆபத்தாக முடிந்துவிடுகிறது. தாய் புலியுடன் குட்டியை ஒப்பிட்டுபார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. நான் இப்பொழுது சொல்லப் போவதும் ஒரு குட்டி புலியை பற்றிதான்.

தாய்புலி சாதித்தளவு அந்த துறையில் யாரும் சாதிக்கவில்லை என்றே நினைக்கிறேன். இன்றும் தாய் புலி ஓய்வு பெறாமல் உழைத்துக் கொண்டு தான் இருக்கிறது. அது இன்னும் சாதிக்க வேண்டியது எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது ஓய்வு பெறுவதிலும் எனக்கு விருப்பமில்லை.

தாய் புலியின் பாசறையிலிருந்து வந்த ஒரு புலி அதிகமாக பேர் வாங்கியது உண்மையே. ஆனால் இன்றைய நிலைமையில் அந்த புலி, குட்டி புலிக்கு போட்டியில்லை என்றே நினைக்கிறேன்.

தாய் புலியின் முதல் வாரிசு அந்த துறையில் வெற்றி பெறாமல் போனது யாருக்கும் வருத்தமில்லை. அடுத்த வாரிசு அந்த துறையில் சாதிக்கும் என்றும் நான் கருதவில்லை. ஆனால் இன்றைய நிலையில் அந்த குட்டி புலி அனைவரும் பாராட்டும் வகையில் ஒரு இடத்தை பெற்றுள்ளது. ஆனால் எனக்கு தெரிந்த வகையில் தாய் புலியின் இடத்தை குட்டி புலியால் பெற முடியாது என்றே நினைக்கிறேன்...

தாய் புலியின் வாரிசுகளில் ஒன்றான பெண் குட்டி புலி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

தாய் புலியோடு ஒப்பிட்டு பார்க்காமல் இருந்தால் குட்டி புலியின் நிலை பாராட்டுக்குரியதே!!!

என்ன இருந்தாலும் யுவன்சங்கர் ராஜா ஒரு நம்பிக்கை நட்சத்திரம் தான்!!!

பின்குறிப்பு:
ஆ.வியில் வித்யா சாகரின் பேட்டியை பார்த்ததில், யுவனை பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் எழுதியது.

10 comments:

விழிப்பு said...

ஏதோ உள்குத்தோட குன்ஸh ஒரு சங்கதி எழுதி இருக்கீங்கனு தெரியுது.

என்னென்னவோ அர்த்தம் தெரியுதே ஐயா.

நாமக்கல் சிபி said...

விழிப்பு அவர்களே,
இதில் உள்குத்து இருந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை :-))

G.Ragavan said...

அது நாந்தான்...நாந்தான்...நாந்தான்... :-)

இந்தக் குட்டிப் புலி ஒன்னும் நாலடி கூடப் பாயவில்லையே. பழைய புலி ஒன்று அரசாண்டு கொண்டிருந்த பெருங்காட்டில் தனக்கென ஒரு பாணியைக் கொண்டு வந்து நிலை நின்ற தாய்ப்புலிக்கு அடுத்த இடம் இன்னொரு புலிக்கு. அந்தப் புலியின் அடிகளைப் பற்றித்தான் குட்டிப் புலி ஓடுகிறது. என்னைப் பொருத்த வரை....குட்டிப் புலி ஒரு அற்புதமான ரீமேக்கர். ஆனால் இன்றைய நிலையில் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் சிறப்பாகவே பாய்கிறது. அதற்காகப் பாராட்ட வேண்டும். அத்தோடு ஈகோ இல்லாமல் நடந்து கொள்வதை நிச்சயமாக வரவேற்க வேண்டும். பழைய பெரிய புலியும் தாய்ப்புலியும் ஈகோ இல்லாமல் நட்போடு பழகுகிறார்கள் அல்லவா...அதை புயலில் தாய்ப்புலி பறக்க விட்டு விட்டது. ஆனால் குட்டிப் புலி பிடித்துக் கொண்டது.

மூத்த குட்டி இசையை விட யார் சவுண்டு இஞ்சினியர் என்ற ஆராய்ச்சியில் இறங்கியதாலும் விழுதாகவே இருந்ததாலும் அப்பொழுது பெரும் இசைப்புயல் வீசியதாலும் முன்னுக்கு வரவில்லை.

மகள் புலிக்குட்டியைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை.

கதிர் said...

வெட்டி!,

ஒருமுறை வீனஸ் வீனசஸ் பெண்ணே பாட்டு கேட்டுப்பாருங்க. எந்த மூட்ல இருந்தாலும் உற்சாகம் தொத்திக்கும். புன்னகை பூவே படம் பேர். யுவன் பெரும்பாலும் சொதப்பறது இல்ல. எப்பவாவது ஒருமுறை செய்வார்.

அன்புடன்
தம்பி

நாமக்கல் சிபி said...

//நாந்தான்...நாந்தான்...நாந்தான்... :-)//
போட்டோவை பார்த்தவுடனே ஒரு சந்தேகம் இருந்தது!!!

//இந்தக் குட்டிப் புலி ஒன்னும் நாலடி கூடப் பாயவில்லையே.//
மத்த குட்டிப் புலிகளோட ஒப்பிட்டு பார்த்தால் இது பாய்ந்தது அதிகம்தான்.


//தாய்ப்புலிக்கு அடுத்த இடம் இன்னொரு புலிக்கு.அந்தப் புலியின் அடிகளைப் பற்றித்தான் குட்டிப் புலி ஓடுகிறது.//
பார்த்தால் (கேட்டால்) அப்படி தெரியவில்லையே!!!

நாமக்கல் சிபி said...

தம்பி,
நீங்க சொல்றது ரொம்ப சரி.

தேவதையை கண்டேன்...எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு.

Unknown said...

குட்டிப்புலி சாது.சூதுவாது அறியாத பிள்ளை.யார் மனதையும் புண்படுத்தும்படி இதுவரை பேசியதில்லை.வாரிசு என்பதை தவிர வேறொன்றும் தகுதி இழப்பு அதற்கு இல்லை.I welcome it whole heartedly

கார்த்திக் ராஜாவைத்தான் சொல்கிறேன்.

நாமக்கல் சிபி said...

//குட்டிப்புலி சாது.சூதுவாது அறியாத பிள்ளை.யார் மனதையும் புண்படுத்தும்படி இதுவரை பேசியதில்லை//
இது முதல் வாரிசைவிட பேர் சொல்லும்படி இருக்கும் வாரிசுக்கே பொருந்தும் என தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

யுவனை தான் சொல்கிறேன்!!!

Unknown said...

//இது முதல் வாரிசைவிட பேர் சொல்லும்படி இருக்கும் வாரிசுக்கே பொருந்தும் என தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.//

பேர் சொல்லும் பிள்ளையைத்தான் சொன்னேன்.சினிமா பிரபலங்கள் பற்றி அதிகம் தெரியாததால் கார்த்திக்ராஜாவில் சற்று குழப்பம் ஏற்பட்டுவிட்டது:-)

நாமக்கல் சிபி said...

//சினிமா பிரபலங்கள் பற்றி அதிகம் தெரியாததால் கார்த்திக்ராஜாவில் சற்று குழப்பம் ஏற்பட்டுவிட்டது:-) //

இதைப் பார்த்தால் ஏதோ உள்குத்து இருப்பதைப் போலத் தெரிகிறதே ;-)