தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, July 12, 2006

விடாது கருப்பு அவர்களுக்காக...

விடாது கருப்பு அவர்களே,
தங்களுக்கு நான் கேட்ட கேள்விகளால் தான் வருத்தம் என்றால் அதை நீங்கள் எனக்கு தெரியப்படுத்தி இருக்கலாம். நான் அந்த பதிவை நீக்கி இருப்பேன்.
அதற்காக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக பேசுவது நாகரிகமன்று.

உங்களுக்கு பெரியாரைப் பற்றி நான் ஒரு கேள்வி கேட்டதற்கே இவ்வளவு கோபம் வருகிறது (அதில் நியாயம் இருக்கலாம். ஏனென்றால் அவர் பல ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி இருக்கிறார்). ஆனால் அவர் மக்கள் வணங்குகின்ற சாமி சிலைக்கு செருப்பு மாலை போட்டால் எங்களுக்கு கோபம் வரக்கூடாது. அதுதானே உங்கள் நியாயம்?
(பெரியாரின் செயலுக்கு என்னுடைய பதிவுல Ganesh Prabhu சொன்ன பதில நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய கோபத்தில் இருந்த நியாயத்தைவிட பெரியாரின் கோபத்தில் இருந்த நியாயம் 1000 மடங்கு உயர்ந்தது என்று நான் உணர்ந்து கொண்டேன். ஆனால் அதுக்கு உங்க பதிவு காரணமல்ல. Ganesh Prabhu சொன்ன பதிலே காரணம்)

இன்று கலைஞர் "The Davinci Code" படத்தை தடை செய்ததின் காரணமென்ன?
கிறுத்துவ சகோதரர்கள் மனம் புண்படும் என்ற காரணத்தினால்தான்.
ஒரு படம் அவர்கள் மனதை புண்படுத்தும் என்ற போது, பெரியாருடைய செயல் எத்தனை மனங்களை புண்படுத்தி இருக்கும். இதை நீங்கள் உணரவில்லை.
(இதன் மூலம் கலைஞர் செய்தது தவறு என்று நான் சொல்லவில்லை.)

மேலும் உங்களைப் பொருத்தவரை தமிழ் பேசுபவர்கள்தான் திராவிடர்கள். அப்படி என்றால் திராவிட மொழிகள்னு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு சொல்வது ஏன்?
பிராமணர்கள் தான் ஆரியர்கள் என்றால் வட இந்தியாவில் இன்றளவும் ஒடுக்கப்பட்டுள்ள இனம் என்ன திராவிடமா?
(தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் Forward Classஐ தவிர அவ்வளவாக யாரையும் Software Industryயில் பார்க்க முடியவில்லை. பாவம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் என்ன என்றுக்கூட தெரியவில்லை)

கேள்வி கேட்பதால் நான் ஆரியன் என்று முடிவு கட்டி விடாதீர்கள்.
என்னைப் பொருத்தவரை நாம் அனைவரும் இந்தியர்கள் அவ்வளவே.
(இந்தியன் என்றால் இந்தி பேசுபவன் என்று அர்த்தமில்லை)

என்னுடைய Profileல் என்னைப் பற்றி உண்மையான விளக்கங்களைக் கூறியுள்ளேன்.

இதன் மூலம் நான் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது:
உங்கள்ல யாருக்காவது என்னுடைய கருத்துக்கள்ல வருத்தம் இருந்தால் என்னை திட்டுங்கள். வேறு யாரையும் திட்டாதீர்கள்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

13 comments:

நாகை சிவா said...

//உங்கள்ல யாருக்காவது என்னுடைய கருத்துக்கள்ல வருத்தம் இருந்தால் என்னை திட்டுங்கள். வேறு யாரையும் திட்டாதீர்கள்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று //
:))))

நாமக்கல் சிபி said...

நாகை சிவா,
பராவயில்லை நீங்க திட்டலாம் :-))

நாகை சிவா said...

பாலா/மனோ/வெட்டி!
உங்கள எங்க நான் திட்ட போறேன். கேள்வி எல்லாம் நல்லாவே கேட்குறீங்க. நீங்க சொல்லுர விசயம் எல்லாம் நல்லா இருக்கு. நீங்க எதாவது தவறாக சொன்னால் அதை கண்டிப்பாக சுட்டிக் காட்வேன். அவ்வளவே.
"தூற்றுவோர் தூற்றட்டும்,
போற்றுவோர் போற்றட்டும்"
சொல்லிட்டு நீங்க உங்க வேலையை பாருங்க....

கால்கரி சிவா said...

பாலா என்ற வெட்டியாக இல்லாத பயல் அவர்களே, அனாவசியமாக கருப்பிற்கு பதில் சொல்லி வெட்டியாக போய்விடாதீர்கள்.

அவருடைய வேலை விடாமல் திட்டுவதே

நாமக்கல் சிபி said...

சிவா,
என்னால அவர் மத்தவங்கள திட்ட வேண்டாம்னுதான் இந்த பதிவு.

நாகை சிவா said...

வெட்டிப்பயல்/பாலா!
இது உங்க பதிவுக்கு சம்பந்தம் இல்லாட்டியும், வேற வழி இல்ல -

"போற்றூவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும், கோவி. 'கண்ணனுக்கே'"

நாமக்கல் சிபி said...

வெட்டிப்பயல்னே சொல்லுங்க, பாலானு ஏற்கனவே ஒரு பெரிய தலை எங்க Boston areaல இருக்காரு.
அவர்தான் எனக்கு e-kalappaiயை அறிமுகப்படுத்தினார். ஆனால் அவருக்கு நான் தான் வெட்டினு தெரியாது.

CT said...

"என்னைப் பொருத்தவரை நாம் அனைவரும் இந்தியர்கள் அவ்வளவே "
This is enough. Well Handled. Personally I think it is unnecessary to argue on this topic any more, because it only aggravates the hatred feeling. There are so many things we can discuss on national interest rather than on this.
CT

நாமக்கல் சிபி said...

Thx CT.
Here after, I wont even publish the comments, if it contains any caste name, whether good or bad.

விடாதுகருப்பு said...

ஆகா... அற்புதம், அபாரம்... பின்றீங்க.. அடிச்சு ஆடுங்க!!!

எப்படி இதெல்லாம்...?

ENNAR said...

//கிறுத்துவ சகோதரர்கள் மனம் புண்படும் என்ற காரணத்தினால்தான்.//
கலைஞருக்கு இந்து மதம் தான் பிடிக்காது மற்ற மதங்கள் அல்ல. இந்து மதத்தை திட்டுவார் மற்ற மதத்தைப் போற்றுவார். அதுதான் அண்ணாயிசம், பெரியாரிசம், கலைஞரிசம்

குமரன் (Kumaran) said...

வெட்டிப்பையல். விடாது கறுப்பு அண்ணன் ஏதோ சொன்னாருங்கறதுக்காக நீங்க யாருன்னு சொல்லி இப்படிப் பதிவு போட்டு எதிர்வினை காட்டணுமா? நீங்க உங்களைப் பத்தி சொன்னவுடனே அவர் உங்களைப் பத்தி நினைச்சது மாறிடிச்சா? அது எப்பவும் மாறப்போறதில்லை. அவரும் நான் பார்ப்பனியத்தைத் தான் திட்டுறேன் சொல்லிட்டு பார்ப்பனர்களைத் திட்டிக்கிட்டுத் தான் இருக்க போறார். நானும் ஒரு காலத்துல அவருக்கு பதிலுக்குப் பதில் சொல்லிப் பின்னூட்டம் எல்லாம் போட்டவன் தான். அப்புறம் தான் அது விழலுக்கு இறைத்த நீர்ன்னு தெரிஞ்சு விட்டுட்டேன்.

இப்பப் பாருங்க இந்தப் பதிவு கறுப்பு அண்ணனுக்கு எப்படி இருக்குன்னு? நீங்க பின்றீங்களாம்; அடிச்சு ஆடுங்கன்னு சொல்லிட்டுப் போயிருக்கார். இவர் உங்களைப் புரிஞ்சுக்குவார்ன்னு நெனைக்கிறீங்க? புரிஞ்சாலும் ஒத்துக்க மாட்டார்.

நாமக்கல் சிபி said...

ennar,
மன்னிக்கவும் உங்களுடைய கருத்துல எனக்கு உடன்பாடு இல்லை. தன் வீட்ல அழுக்கு இருக்குனு சொன்னதோட பெரியார் நிக்கல. சுத்தமும் செய்ய முற்பட்டார். அவரோட ஒரு சில கருத்துக்களில் எனக்கு வருத்தம் இருக்கலாம். ஆனால் அவர் காமராஜரை புகழ்ந்த அளவுக்கு காங்கிரஸ்கார்களே புகழவில்லை என்பது என் எண்ணம்.

ராபின் ஹீட்,
நன்றி.

குமரன்,
நன்றி. அவர் என்னை புரிஞ்சிக்க தேவை இல்லை. நல்லா பழகின நண்பர்களுக்குள்ளே கருத்து வேறுபாடுகள் இருக்கும் போது அவருக்கு நான் யாருனே தெரியாது. அவர் என்னை புரிஞ்சிக்கனும் நான் எப்படி எதிர் பார்க்க முடியும்?
எனக்காக அவர் ஒரு சமூகத்தை திட்டினேன் என்று கூறியதால் தான் இந்த பதிவு.