தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Saturday, July 22, 2006

விரதம்!!!

பொதுவா எல்லார் வீட்டுலயும் வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விரதமிருப்பார்கள். அதன் பலன் முழுதாக கிடைக்க என்ன செய்யனும்னு நான் 10வது படிக்கும் போது எங்க ஆரோக்கியசாமி வாத்தியார் சொன்னாரு.
எனக்கு அது மிகவும் திருப்தியாக இருந்தது. முடிந்தால் நீங்களும் கடைப்பிடிக்கலாம்...

நாம் உணவு உண்ணாது இருக்கும் வேளையில், அந்த ஒரு வேளைக்கு நம் குடும்பத்திற்கு உணவுக்கென்று எவ்வளவு செலவாகுமோ, அதை ஏழை எளியோரின் பசியைப் போக்க உதவ வேண்டும். இதுவே உண்மையான விரதத்திற்கான பலனைத் தரும். நம் மனமும் திருப்தி அடையும். கடவுளை உண்மையில் தரிசித்த மகிழ்ச்சி தரும்.

உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் கடைப்பிடிக்களாமே???

16 comments:

ILA(a)இளா said...

நல்ல விளக்கமுங்க, இனிமே இதை கடைபிடிக்க முடியுமான்னு பார்க்கிறோம்

நாமக்கல் சிபி said...

நன்றி இளா.
ஒரு முறை செய்து பாருங்கள். மனம் உண்மையில் திருப்தி அடையும். நம் விருதமும் இறைவனை சென்றடையும்

ILA(a)இளா said...

ஒரு 7 வருஷமாக சனிக்கிழமை, ஒரு பொழுது இருக்கிறேன். சனிக்கிழமை கவிச்சையும் சாப்பிடுறது இல்லீங்க. அந்த பழக்கம்தான் விரதம் பதிவு பார்த்தவுடன் ஓடோடி வந்தேன் படிக்க. பொது சேவை செய்யறதை வெளியில சொல்லிக்க கூடாதுங்க

நாமக்கல் சிபி said...

//ஒரு 7 வருஷமாக சனிக்கிழமை, ஒரு பொழுது இருக்கிறேன். சனிக்கிழமை கவிச்சையும் சாப்பிடுறது இல்லீங்க//
நானும் அதே!!! ஆனால் வருஷம் 24.

// பொது சேவை செய்யறதை வெளியில சொல்லிக்க கூடாதுங்க//
இங்க தான் நாம எல்லாம் தப்பு பண்றோம். நம்ம செய்யற நல்ல விஷயத்தை வெளியே சொன்னால் அதை மற்றவர்களும் செய்தால் நமக்கு சந்தோஷம் தானே!!!
நம்மைப் பற்றி அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்று நினைப்பதைவிட, நல்ல விஷயத்தை பரப்புவோம்.

நாமக்கல் சிபி said...

// பொது சேவை செய்யறதை வெளியில சொல்லிக்க கூடாதுங்க //
இன்னைக்கு ராகவனோட பதிவப் பாருங்க!!! http://gragavan.blogspot.com/2006/07/blog-post_21.html

Hariharan # 26491540 said...

கண்டிப்பாக உணவருந்தாமல் இருக்கும் விரதத்தின் போது பசி என்பது யாது? என்பது அறியப்படுகிறது. அது தினந்தோறும் பசிப்பிணியே வாழ்க்கைமுறையாக அமைந்து விட்டவர்களுக்கு உதவும் மனப்பாங்கினை, குறைந்தபட்சம் இளகிய மனதோடு அணுகும் மனத்தைத் தரும்.

உதவி செய்ததை பகட்டு விளம்பரம் என்பதாக வெளியில் தண்டோரா போடுவது வேண்டுமானால் தவறு.

ஆனால் பொதுவான தனிநபர் தனித்து நல்லது செய்யும் விஷயங்கள் வெளியே அறியத்தருவது கோவில் உண்டியலில் மட்டும் காணிக்கை போட்டு அரசியல் வாதிகளுக்கு மட்டும் நல்லது செய்வதைத் தடுத்து உண்மையில் உதவி வேண்டுவோரைத் தேடி அறிந்து நேரடியாக உதவும் நல்ல 'ட்ரெண்ட்'க்கு வழிவகுக்கும்.

நாமக்கல் சிபி said...

இளா,
நீங்க எந்த அர்த்தத்தில் சொன்னிங்கன்னு புரிஞ்சிக்காம சொல்லிட்டன். இப்ப சரியானு பாருங்க!!!

ILA(a)இளா said...
This comment has been removed by a blog administrator.
நாமக்கல் சிபி said...

ஹரிஹரன்,
தங்கள் கருத்துக்கு நன்றி.

இளா,

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவ
பெயர்விளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல்.

தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். தொடர்ந்து செய்யுங்கள்.

நாகை சிவா said...

வெட்டி!
விருதம் என்பதை விரதம் என்று மாற்றவும்.

நீங்க சொல்லும் மேட்டரு ரொம்ப சரி. நான் நீங்க சொல்வது போல செய்யாமல் வேறு மாதிரி செய்து வருகின்றோம். எங்களை பார்த்து எங்கள் சொந்தங்களில் சிலரும் அது போல செய்ய ஆரம்பித்து உள்ளார்கள்.
நல்ல பதிவு.
தேவும் சில நாட்களுக்கு முன்பு இது போல் ஒரு நல்ல பதிவை போட்டு இருந்தார்.

செல்வன் said...

விரதம் எல்லாம் இருந்ததே இல்லை பாலாஜி.சின்ன வயசோடு சரி.ஒரு வேளை சாப்பிடவில்லை என்றாலும் வயிறு விடுவதில்லை:-)

ஏழைகளுக்கு உதவி கட்டாயம் செய்யவேண்டியது.செய்துகொண்டுதான் இருக்கிறேன்.எத்தனை செய்தாலும் 'போதும்' என்று சொல்லமுடியாத காரியம் அது

நாமக்கல் சிபி said...

//விருதம் என்பதை விரதம் என்று மாற்றவும்.//
done. நன்றி.

//நீங்க சொல்லும் மேட்டரு ரொம்ப சரி. நான் நீங்க சொல்வது போல செய்யாமல் வேறு மாதிரி செய்து வருகின்றோம். எங்களை பார்த்து எங்கள் சொந்தங்களில் சிலரும் அது போல செய்ய ஆரம்பித்து உள்ளார்கள்.
//
அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் நாங்களும் செய்ய மாட்டோமா?

நாமக்கல் சிபி said...

//ஏழைகளுக்கு உதவி கட்டாயம் செய்யவேண்டியது.செய்துகொண்டுதான் இருக்கிறேன்.எத்தனை செய்தாலும் 'போதும்' என்று சொல்லமுடியாத காரியம் அது
//
சரியாக சொன்னீர்கள் $elvan.

துளசி கோபால் said...

நாங்களும் நினைவு தெரிந்த நாளில் இருந்தே சனிக்கிழமை ஒரு பொழுதுதான்.

இப்பெல்லாம் வயசாயிட்டதாலே கொஞ்சம் கஷ்டமாப் போயிருது.

ஒரு வேலையில்= ஒரு வேளையில்
விருதம்= விரதம்
( நான் 'எழுத்துப்பிழை' இல்லை)

நாமக்கல் சிபி said...

//நாங்களும் நினைவு தெரிந்த நாளில் இருந்தே சனிக்கிழமை ஒரு பொழுதுதான்//

துளசியக்கா, அப்படீனா நீங்க 2 வேளைக்கான உணவை இல்லாதவர்களுக்கு கொடுக்கலாம்.

//இப்பெல்லாம் வயசாயிட்டதாலே கொஞ்சம் கஷ்டமாப் போயிருது.
//
முடியவில்லை என்றால் 1 வேளை மட்டும் இருக்கவும்.

//ஒரு வேலையில்= ஒரு வேளையில்
விருதம்= விரதம்
//
done

தமிழ்ப்பிரியன் said...

நல்ல விசயம் சொல்லி இருக்கீங்க Mr.வெ

கடைப்பிடிப்போம்...
கைக்கொடுப்போம்..