தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, July 05, 2006

கணவனைக் கொல்!!!

சுமதி தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள்.
என் மாமியாருக்கு மனசாட்சியே கிடையாது. நான் தான் தினமும் சமைக்கறன், துணி துவைக்கிறன், பாத்திரம் வெளக்கறன், வீடு சுத்தம் பண்றன். ஆனால் அவள் என்னை மதிக்கிறதே கிடையாது. என்னை அவள் அடிமையாதான் பார்க்கிறாள்.

நேத்து ரஞ்சனி வீட்டுக்கு போயிருந்தேன். அங்க அவ மாமியார் எவ்வளவு பாசமாக எனக்கு காபி, பஜ்ஜி, கேசரி எல்லாம் கொண்டு வந்து வெச்சாங்க. அவுங்க தான் ரொம்ப நல்லவங்க.

இதைப்பற்றி யோசிக்க யோசிக்க சுமதிக்கு கோபம் அதிகமாகி கொண்டே போனது. இந்த பிரச்சனைக்குத் தீர்வு என்ன? என் கணவனுக்கு மனைவியாக இருப்பதினால் தானே அவள் என்னை இவ்வாறு நினைக்கிறாள். என் கணவனைக் கொன்றுவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும். ஆமாம் அது தான் சரியான வழி.

[ரஞ்சனி வீட்டில், ரஞ்சனி அவள் தங்கையிடம்] என் மாமியாரை விட கொடுமைக்காரிய உலகத்திலயேப் பார்க்க முடியாது.
நேத்து நீ வரன்னு நான் செஞ்சி வைத்திருந்த பஜ்ஜி, கேசரி எல்லாம் எடுத்து அந்த பக்கத்து வீட்டு சுமதிக்கு குடுத்துட்டா படுபாவி.

ஒ.கே. கதைய படிச்சிட்டீங்க...
இந்த கதைல சுமதி நினைக்கற மாதிரிதான் நம்ம தமிழ்மணத்துல சில பேர் இந்து மதத்தை அழித்தால் சாதி பிரச்சனைக்கு முடிவு கட்டிடலாம்னு நினைக்கறாங்க.
மத்த மதங்கள் எல்லாம் அனைத்து மக்களையும் சமமாக மதிக்கிற மாதிரியும் அவர்களுக்கு ஒரு எண்ணம்...
இக்கரைக்கு அக்கரை எப்பொழுதும் பச்சையாகத்தான் தெரியும்.
ஆசையே அழிவுக்கு காரணம். எந்த உயிர்க்கும் தீங்கு இழைக்காதேனு சொன்ன புத்தரை வணங்குபவர்கள் தான் இலங்கைல நம் சகோதரர்களின் உயிரை குடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கண்ணத்தில் அடித்தால் மறு கண்ணத்தைக் காட்டுனு சொன்ன ஏசுபிரானை வணங்குபவர்கள் தான் அணுகுண்டை போட்டார்கள். இன்னும் பல உயிர்களை குடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
எந்த இஸ்லாமியன் ஒருவனின் அண்டை வீடு பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறதோ அவன் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவன் இல்லை என்று நபிகள் கூறியுள்ளார். அதன்படி பார்த்தால் பல இஸ்லாம் நாடுகள் இஸ்லாமை சேர்ந்தவை இல்லை. (முக்கியமாக பாகிஸ்தான்.)
அனைத்து மதங்களும் மனிதனை நல்வழிப்படுத்தவே தோன்றின...
ஆனால் மனிதனுடைய பொறாமை, சுயநலம், பேராசை போன்ற குணங்கள் மேலோங்கி அது அவனை மட்டுமன்றி அவன் சார்ந்துள்ள சமுதாயத்தையே சீரழிக்கின்றது.
நம்ம வீடு அழுக்கா இருக்குதுனு பக்கத்து வீட்ல போய் தங்கிக்கறதுதான் புத்திசாலிதனமா? வீடு அழுக்கா இருந்த சுத்தம் பண்ணனும். சதி, பால்ய விவாகம் எல்லாம் ஒழிச்ச மாதிரி இன்னும் இருக்கற மற்ற மூட நம்பிக்கைகளையும் களையனும். அதை விட்டுட்டு இந்து மதம் ஒழிஞ்ச நம்ம வாழ்க்கை முன்னேறிடும்னு சொல்றது புருஷனைக் கொன்னுட்டா மாமியார் கொடுமை ஒழிஞ்சிடும்னு சொல்ற மாதிரி இருக்கு.

24 comments:

Unknown said...

பதிவுக்கு சம்பந்தமில்லாத கதை ஒன்று சொல்கிறேன்.

ஒரு பெரிய மலை ஒன்று இருந்தது.அந்த மலையில் எறும்பு ஒன்று பிறந்தது.திடீரென்று அதற்கு அந்த மலையை பிடிக்காமல் போய் விட்டது."உன்னை ஒழித்துக்கட்டாமல் விடமாட்டேன்" என்று கத்தியது.மலை எதுவும் பேசவில்லை."அத்தனை திமிரா உனக்கு?" என்று சொன்னபடி பாறையை கடிக்க ஆரம்பித்தது.

இதற்கு முன் ஆயிரமாயிரம் எறும்புகள் அப்படி செய்திருக்கின்றன.இன்னும் அப்படி ஆயிரமாயிரம் எறும்புகள் வரும்.

மலை அப்படியே தான் ஆயிரமாயிரம் வருடமாக நின்றுகொண்டிருக்கிறது.அதில் கோடிக்கணக்கான உயிர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.தன்னை குடையும் எறும்புக்கு கூட அதுதான் உணவளிக்கிறது.

நாமக்கல் சிபி said...

//பதிவுக்கு சம்பந்தமில்லாத கதை ஒன்று சொல்கிறேன்.//
நான் சொன்ன கதையவிட அருமையா சொல்லிட்டு பதிவுக்கு சம்பந்தமில்லைனு disclaimer வேறயா?

நாமக்கல் சிபி said...

நீர் வெட்டிப்பயல் இல்லை! கெட்டிப் பயலென்று நினைக்கிறேன்.

நாமக்கல் சிபி said...

வெட்டியா இருக்கறதால உருப்படியா எதாவது செய்யலாம்னுதான் ஆரம்பிச்சன்னு சொல்லிட்டேன்...
அதனால தான் இதெல்லாம்...
போக போக சினிமா மட்டும் தான் இருக்கும்..

நாகை சிவா said...

வெட்டிப்பயலா இருந்தாலும் மேட்டர நல்லா கெட்டியா தான் சொல்லி இருக்க. செல்வன் கதை அருமை.

//சதி, பால்ய விவாகம் எல்லாம் ஒழிச்ச மாதிரி இன்னும் இருக்கற மற்ற மூட நம்பிக்கைகளையும் களையனும்.//
அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் இதை வைத்து அரசியல பண்ண தான் அவங்க லாயக்கு.

நாமக்கல் சிபி said...

நன்றி சிவா.
கண்டிப்பா நிலைமை மாறும்.

நாகை சிவா said...

அந்த நம்பிக்கை எனக்கும் உண்டு

கால்கரி சிவா said...

வெட்டி, நல்லா வெட்டிரீங்களே.. நடத்துங்க

நாமக்கல் சிபி said...

சிவா, ஏதோ தோன்றத எழுதறன் அவ்வளவுதான்...

Hariharan # 03985177737685368452 said...

எனக்குத்தெரிந்து படிப்புக்காகவும், பொருளாதாரத்திற்காகவும் கிரிஸ்தவ மதம் மாறுவோர்தான் அதிகம்.

படிச்சா முன்னேறலாம். எங்க நிஜமா இருக்கற நிலையப் பாருங்க.. நம்ம "கல்விக்கடவுள் சரஸ்வதி" மைனாரிட்டி மற்ற மதக் கல்விநிறுவனங்களில் மே, ஜூன் மாதம் அதிக மகசூல் தரும் பணப்பயிராக ஆக்கியது நமது "அரசியல் பகுத்தறிவால்"தானே?

ஜேப்பியார், காருண்யா மற்றும் பல
கல்விநிறுவனங்கள், 90%ஆசிரியர் பயிற்சி தனியார் நிறுவனங்கள் கிறிஸ்தவ மைனரிட்டி நிறுவனங்களுக்குத் தானே அனுமதிதரப்பட்டுள்ளது நமது பகுத்தறிவு அரசியல் அரசுகளால்.

சின்மயா,ராமகிருஷ்ண,சாரதா மற்றும் இன்ன பிற இந்து நிறுவனங்களுக்கு ஏன் அனுமதி அளிப்பதில்லை நம் பகுத்தறிவு அரசுகள்?

நல்லாபடிச்சு வாழ்க்கையிலே வெளங்கி
வருவதற்கு வாய்ப்புத் தரும் வகையில் காமராஜர் பள்ளிக்கல்விக்குச் செய்தமாதிரி மக்கள் தொகை பெருகிப்போன பின்னும் அதே பத்துக்குள்ளான மருத்துவக்கல்லூரிகள்தான், ஆனால் கல்லூரிகளைப்பெருக்காமல் இட ஒதுக்கீடு, மண்டல் என மக்களைப் பிளக்கும் திரா(வக)விட பகுத்தறிவுகளிடம் "குரங்கு அப்பம்" மாதிரி நொந்து தனிவாழ்வைக் காவு தந்தபின் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று எங்காணும் கடற்கரையில் நடக்கும் "அற்புத சுகமளிக்கும் சுவிசேஷக் கூட்டங்கள்" தான் தமது முடத்தை, செவிட்டுத்தனத்தை,நீக்கும் என்று சரணடைவோர்தானே அதிகம்.

CT said...

Kalakeetinga sir. Arivarasan peru arivu konjam kamiya than irrukum, Alagan peru Alagu kamiya than irrukum. Neenga veti illai....

Selvan kathai arumai.....

//சதி, பால்ய விவாகம் எல்லாம் ஒழிச்ச மாதிரி இன்னும் இருக்கற மற்ற மூட நம்பிக்கைகளையும் களையனும்.//

First one is really worst thing if any state or community is following.From what I know, it is not practised in tamilnadu and in over all india percentage might be in PPM level. Coming to second it is not recommended by religion and as we grow we removed lot of stuffs which were not part of the ideal and practical living .In early days medicine was not so powerful , death rate was very high so it was encouraged to get more children and inturn forced the people to open the zip in the early age...even today you can find lot of americans becoming a mom at the age of 15 , meaning they had sex at the age of 14 and as per evengelist christians abortion is wrong.....

beauty of hinduism is , it is or was not prescribed by an individual , we don't have one book which dictates the doctrine..., most of the material is composed of experiences of different people who adopted a living based on certain principles and ammended those princples.....
so we can ammend as long as we prove it to be right...

Religion should make a persons life better and should help build a better society rather then creating terrorist organisations..

with best
CT

நாமக்கல் சிபி said...

ஹரிஹரன்,
நீங்கள் சொல்வதும் ஒரு காரணம் தான்.
ஆனால் அது விவரம் தெரிந்த மக்களிடம் தான். அந்த சதவிகிதம் மிக குறைவு என்றே நினைக்கிறேன். ஒரு காலத்தில் சமணமும் ,பவுத்தமும் இந்து மதத்தை அழிக்கும் நிலையில் இருந்தது. மகேந்திரவர்ம பல்லவன் சமண மதத்திற்கு மாறினான். அந்த அழிவிலிருந்து இந்து மதத்தை காப்பாற்ற நாவுக்கரசர் தோன்றினார்...
சக்கரம் மீண்டும் சுழன்றி அதே இடத்திற்கு வந்துள்ளது...

CT,
That is the great advantage & disadvantage of Hinduism. Sati and child marraige were abondened by the rules made by British. I dont beleive such changes can be made now. Instead of reducing the caste our politicions are still increasing the problem by making reservations based on Religions...
As Narayana Moorthy rightly said, "we r the only nation, were people are proud to say they are Backward communities"

இலவசக்கொத்தனார் said...

இரண்டு அருமையான கதைகள்.

நாமக்கல் சிபி said...

நன்றி கொத்தனார் அவர்களே,...

இலவசக்கொத்தனார் said...

ஒரு சந்தேகம்.

கணவனை ஏன் கொல்லணும்? மாமியாக்காரியை போட்டுத்தூக்க வேண்டியதுதானே?

நாமக்கல் சிபி said...

என்னுடைய கேள்வியும் அதுதான்...
ஜாதி பிரச்சனைக்கு இந்து மதத்தை ஏன் அழிக்கனும்???
புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!!!

துளசி கோபால் said...

உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.

http://www.desipundit.com/category/tamil/

நாமக்கல் சிபி said...

நன்றி துளசி கோபால்...

Syam said...

இப்பத்தான் உங்க ஆர்கைவ்ஸ் படிச்சிட்டு இருக்கேன்...எப்படிங்க உக்காந்து யோசிப்பீங்களோ :-)

நாமக்கல் சிபி said...

Syam said...
//இப்பத்தான் உங்க ஆர்கைவ்ஸ் படிச்சிட்டு இருக்கேன்...எப்படிங்க உக்காந்து யோசிப்பீங்களோ :-)
//
இதுக்கு எல்லாம் ரொம்ப யோசிக்கலை :-))

இதெல்லாம் வலைப்பூ ஆரம்பித்த புதிதில், கொஞ்சம் வருத்தத்தில் எழுதியது.

Anonymous said...

இந்து மத்துக்கு இஸ்லாமும், கிறித்துவமுமே முதல் /அ/ முக்கிய எதிரி என்று சொல்பவர்களுக்கு சில கேள்விகள்

நாம் சரித்திரத்தில் படிப்பது என்ன ? அவுரங்கசீப் இந்தியாவில் பல பாகங்களை ஆண்டான். பல ஊர்களில் கண்மூடித்தனமாய் மதமாற்றம் செய்தான். அல்லவா ?

நான் சரித்திரத்தை குறை கூறவில்லை. ஒப்புகிறேன். எனினும் இஸ்லாமே இந்துக்களுக்கு முதல் எதிரி, எனும் வாதத்தை மறுக்கிறேன் ஆகவே இந்த கேள்விகள்

1. அவுரங்கசீப் காலத்தில் நடந்த பலாத்கார மத மாற்றத்தை விட இன்று இந்தியாவில் அதிக மதமாற்றம் நடந்துவிடவில்லை... நடக்கவும் இயலாது

அவுரங்கசீப் வாழ்ந்து சுமார் 300 வருடங்களுக்கு பின்னும் .. சமீபத்திய காலம் வரை, இந்தியாவில், இந்து மதம் பெரும்பான்மை மதமாக இருந்தது ... அது எப்படி

அவ்ரங்கசீப் (மாலிக்காபூர்.. சரித்திரத்தில் இடம் பெற்ற ..பெறாத இன்ன பிற இஸ்லாமிய மன்னர்கள் ) காலத்தில் பிழைத்த இந்து மதம் எப்படி (எதனால்) பிழைத்தது ??

அன்று பிழைத்த இந்து மத்துக்கு .. இன்று சுதத்திர இந்தியாவில், இஸ்லாம் [அல்லது கிறித்துவம்] அப்படி என்ன ஊறு விளைவிக்க முடியும் ?

2. இன்று இருப்பதை காட்டிலும், வெள்ளையர் ஆட்சியில், கிறித்துவத்துக்கு, செல்வாக்கும் சலுகையும் அதிகம். எனினும் வெள்ளையரின் முழு ஆட்சியை இந்து மதம் எப்படி தாங்கியது ?

இந்த 200 ~ 250 ஆண்டுகளிக் ஏன் இந்தியர் எல்லோரும் கிறித்துவர் ஆகிவிடவில்லை ? அல்லது இந்து மதம் ஏன் அழிந்துவிடவில்லை ?

கிறித்தவர் ஆண்டபின்னும் 1950களில் இந்துக்கள் எப்படி 80%க்கும் மேல் சதவிகிதம் இருந்தனர் ?

3. கடந்த 10 ஆண்டுகளில், தமிழ் நாட்டில் எத்துனை தமிழ் இந்துக்கள் இன்னபிற மத்ததவரால் கொல்லப் படடு அல்லது தாக்கப் பட்டு இருக்கிறார்கள். இத்தகைய கேஸ்கள் எத்துனை கேஸ்கள் கோர்ட்டில் இருக்கின்றன ?

அதேசமையம் எத்துனை விவாகறத்து [இந்து ஆண் vs இந்து பெண்] கேஸ்கள் கோர்ட்டில் நடக்கின்றன ? கோர்ட்டில் தங்கிஇருக்கின்றன ?

யாருமே மத வெறியால் தாக்கப்பட / கொல்லப்படவில்லை என்று வாதிக்க வரவில்லை. இரண்டு பட்டியல்களையும் [இஸ்லாம் Vs இந்து, மற்றும் இந்து Vs இந்து, ஆகிய இரண்டு பட்டியல்களையும்] இடுங்கள் என்றே கூறுகிறேன்

இஸ்லாம் 1000 வருடம் முன்பு இங்கே வந்தது ... 100 வருடம் முன்பு இதை செய்தது, துருக்கியல் இது நடந்தது, 20 வருடம் முன்பு கிறித்துவம் அதை செய்தது என்று சொல்லி சொல்லி சாகும் வேளையில், நம் வீட்டில், அதாவது இந்துக்களில் வீட்டில், நித்தம் நித்தம் என்ன நடக்கிறது என்று சற்றே சிந்திக்கவும்

இன்று இந்து குழந்தைகளை விட இந்து முதியோரே அனாதைகளாய் நிற்கின்றனர்

- முதியோர் இல்லங்கள் நிறம்பி வழிகின்றன

- மருமகள் விரட்டிவிட்டாள் என்று தெருவில் நிற்போர் ...

- அனாதைகளான அருமை பெற்றோர்,

- அனாதைகளாய் போன நேற்றைய இந்தியா....

இவர்களில் இந்துக்களே அதிகம்
Family courtக்கு ஒரு முறை விஜயம் செய்யுங்கள். இந்து கேஸ்கள் அத்துனை, முஸ்லீம் கேஸ்கள் எத்துனை என்று தெரியும்...

சிந்திப்பீர்...செயல் படுவீர்

நான் எந்த மதத்துக்கும் சப்பை கட்டு கட்ட வரவில்லை. எனக்கு தென்படும் உண்மை நிலையை எழுதுகிறேன்

நான் ஒரு இந்து, அதனால் தான் இதை எழுதுகிறேன்

ஞாயமான, ஆபாசமற்ற வாத்தை எதிர் நோக்கி நிற்கிறேன்

நண்பன்
விநாயக்

G.Ragavan said...

வெட்டி, சாதீய ஒழிப்பு என்பது களையப்பட வேண்டும் என்பதில் எள்ளளவும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கின்றார் போல் தெரியவில்லை. ஆனாலும் இன்னமும் இருக்கிறதே! ஏன்?

புராணங்களின் படி வருணாசிரமப் பிரிவினையோ...அல்லது வேறு ஏதாவது பிரிவினையோ....இருக்கும் வரை வேறுபாடுகள் இருந்து கொண்டேயிருக்கும். அந்த வேறுபாடு உலகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில் இருந்து கொண்டேயிருக்கும். நம்மூரில் அதற்குப் பெயர் சாதி. வேறொரு ஊரில் அதற்குப் பெயர் மொழி. வேறொரு ஊரில் அதற்குப் பெயர் மதம். வேறொரு ஊரில் அதற்குப் பெயர் நிறம். வேறொரு ஊரில் அதற்குப் பெயர் பாலியல் ஈடுபாடு. இது ஏன் வருகிறது என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

பொதுவில் தன்னைப் போல இல்லாதவைகளை நாம் விரும்புவதில்லை. அவ்வளவுதான் விஷயம். இப்படி ஒவ்வொருத்தரும் அடுத்தவரை மதிக்கத் தொடங்கினால்...மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று நினைக்கத் தொடங்கினால்...எல்லா வேறுபாடுகளும் களையப்படும். அப்படி நடக்காதவரை....வெறும் பேச்சுகள் மட்டுமே இருக்கும்.

வெட்டிப்பயல் said...

வினாயக்,
இந்து மதத்திற்கு முதல் எதிரி இஸ்லாமோ, கிருத்துவமோ அல்ல. சாதி பிரிவினைகளும் ஒரு சில மூட பழக்கவழக்கங்களும் தான். அதை களைந்தாலே போதும்.. மனிதனை மனிதனாக மதித்தாலே போதும்.

வெட்டிப்பயல் said...

//பொதுவில் தன்னைப் போல இல்லாதவைகளை நாம் விரும்புவதில்லை. அவ்வளவுதான் விஷயம்.//

ஜி.ரா,
அவ்வளாவுதான் மேட்டர்... அப்பறம் அடுத்தவன் நம்ம முன்னாடி கை கட்டிட்டு நின்னா ஒரு பெருமை, இருமாப்பு. இதெல்லாம் வளர்க்கும் முறையும், அவன் கல்வியும் தான் சரியாக்க வேண்டும்.

எவ்வளவு சீக்கிரம் இந்த சாதிகளை களைய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதை களைய வேண்டும்.

பிறப்பால் உயர்வு தாழ்வு கூடாது என்பது அனைவர் மனதிலும் பதிய வேண்டும்