தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Saturday, July 08, 2006

இட ஒதுக்கீடு - ஒரு பார்வை

சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சோழ நாட்டில் ஆனந்தபுரம் என்ற ஊர் இருந்தது. பெயரில் தான் ஆனந்தம் இருந்ததே தவிர மக்களின் வாழ்வில் அது இல்லை. 10 வருடமாகவே கடும் பஞ்சம் அந்த ஊர் மக்களை வாட்டி வதைத்தது. மக்கள் அனைவரும் கிழங்கையே தின்று வந்தனர்.
இதை அறிந்ததும் மன்னன் மிகவும் வருத்தப்பட்டான். அவனுடைய உணவுக்கூடத்திலோ மக்கள் அனைவரது பசியையும் தீர்க்குமளவுக்கு உணவு இல்லை.
சரி!!! இருக்கும் உணவை அனுப்பினால் முடிந்த அளவு பசியைத்தீர்க்கலாமே என்று இருக்கும் உணவை ஒரு மாட்டு வண்டியில் அனுப்பினார்.
முதலில் வருகின்றவர்களுக்கே உணவு என்ற நிலையானது.
1000 மக்கள் இருக்கும் அந்த ஊரில் முதலில் வரும் 100 பேருக்கே உணவு என்ற நிலையானது.
உணவு கிடைத்தவர்கள் நன்றாக சாப்பிட்டனர்.
முதல் நாள் வந்த 100 பேரும் அடுத்த நாள் மற்றவர்களை விட வேகமாக வர அவர்கள் சாப்பிட்ட உணவு உதவியது. இதுவே தினமும் நிகழ்ந்தது.
இது தான் இன்றைய இட ஒதுக்கீட்டின் நிலை.

இந்த இட ஒதுக்கீட்டை இரு தலைமுறைகள் பயன்படுத்திக் கொண்டது. இதற்கு மேல் இதே முறையில் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தினால் அது இதுவரை பயன்படுத்திய கூட்டத்தையே சென்றடையும்.
உதாரணத்திற்கு நான் என்னையே சொல்லலாம். நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்காக ஒதுக்கிய இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி பொறியியல் படித்தேன். நான் பொருளாதாறத்தல், பெற்றோரின் கல்வி முதலியவற்றால் பிற்படுத்தப்பட்டவன்தான்.
ஆனால் நான் இப்பொழுது ஒரு நல்ல வேலையில் இருக்கிறேன். எனக்கு அடுத்த சந்ததியினர் பிற்படுத்தப்பட்டவரா? அது எப்படி நியாயமாகும்? எப்படியும் நல்ல பள்ளியில் நகரத்தில் படிக்கும் என் வாரிசுகள், கிராமத்தில் சத்துணவுக்காவே பள்ளிக்கு வரும் வசதியற்ற பிள்ளைகளுக்கு கொடுக்கும் சளுகைளை பறிக்க போட்டிக்கு நிற்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பிறப்பாலே அந்த உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இது என்னைப் போலவே சலுகைகளைப் பெற்று முன்னேறிய அனைவருக்கும் பொருந்தும். எனவே சலுகைக்கான தகுதி (Qualification, Criteria) மாற்ற வேண்டும்.
பெற்றோரின் கல்வி, பொருளாதாரம் முதலியவற்றைக் கொண்டே இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
பெற்றோர்களில் ஒருவறேனும் கல்லூரி படிப்பு பெற்றிருக்கும் குழந்தைகளுக்கு இட ஒதுக்கிடு மறுக்கப்பட வேண்டும். படிக்காதவர்களின் பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் படித்தால் மட்டுமே சலுகைகள் பெற வேண்டும்.
ஆகவே ஒரு தலைமுறைக்கு மேல் யாராலும் சலுகைகளைப் பெற முடியாது. படித்தவர்களின் பிள்ளைகள் ஓபன் கோட்டாவில் தான் வர வேண்டும்.
அதேப் போல் இட ஒதுக்கீடு என்று சீட்டு மட்டும் கொடுத்தால் வசதியற்றவர்கள் எப்படி படிப்பார்கள்? அதனால் அவர்களுடைய கல்லூரி (college + hostel) முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும்.
கலர் டீவியும், கம்ப்யூட்டரும் தருவோம் என்ற இரு அரசுகளும் சொல்லும் பொழுது, இதுவும் முடியும் என்றே நம்புகிறேன்.
இட ஒதுக்கீடின் சதவிகிதமும் 5 வருடத்திற்கு ஒரு முறை 10% குறைந்துக் கொண்டே வர வேண்டும். ஆக இன்னும் 35 வருடத்திற்கு பிறகு இட ஒதுக்கீடே தேவையில்லை என்ற நிலை வர வேண்டும்.
அதாவது பிற்படுத்தப்பட்டோர்/ தாழ்த்தப்பட்டோர் இல்லை என்ற நிலை வர வேண்டும்.

அறிவைக் கொடு போதும்..... என்னைவிட எவனும் உயர்ந்தவனும் இல்லை!!! தாழ்ந்தவனும் இல்லை.

கல்வி இருந்தால் ஏகலைவனும் அர்ச்சுனனுக்கு நிகராணவனே!!!

44 comments:

Anonymous said...

இதுக்கு வர கூடிய பின்னூட்டம் தமிழ்மண அறிவு ஜீவி சிங்சக் கூட்டத்திடம் இருந்து.

1. கிரீமி லேயர பத்தி எங்களுக்கும் தெரியும் அத சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே சொல்லியாச்சு, ஆனா அத அமல் படுத்தினா எங்க பேரபசங்க ஜிங்கி தான் அடிக்கனம் அதனால வாசுவ மூடிக்குனு பார்பனர எதிர்க்க முடியுமா பாரு இல்ல ஒரமா ஒதுங்கி நில்லு நாங்க ஜல்லி அடிச்சுக்கறோம். நாங்க இல்லாதவங்களுக்கு தான் பேசறோம் ஏன்னா அப்ப தான் பா.ம.க மாதிரி அவங்க பேற சொல்லி நாங்க நல்லா திங்க முடியும்.

ஒரு பயனடைஞ்ச குஞ்சாவது யோவ் எங்க பசங்க வரைக்கும் போதும் அப்புறம் நாங்க ஒரு 5 வருசம் ஒதுங்கிகறோம்னு சொல்லும்னு எதிர் பாக்கரீங்க... (அதாவது 2 தலைமுறை)ஹூம்.

பயனடைஞ்ச குஞ்சுங்க பசங்கல ஒழுங்கா வலத்து, நல்லத சொல்லி குடுக்கும்னு எதிர் பாக்கரீங்க.....ஹூம்

2. நீ பாப்பான்/பாப்பான் அடிவருடி அப்படிங்கறத காமிச்சிட்டியே

மற்றவை கணினி திரையில் காண்க.

அரசியலுக்கு அப்பால் சிந்திக்க தெரிந்த தமிழன் (யாருப்பா அது போய் சான்றிதழ் வாங்கிட்டு வானு சொல்றது, சான்றிதழ் தரதுக்கு சுய தம்பட்டம் மட்டும் போதாது சுய சிந்தனை வேண்டும்)

ENNAR said...

ஆமாம் உண்மைதான் அடைந்தவன் அடைந்து கொண்டேயிருப்பான்

நாமக்கல் சிபி said...

ஐயா அனானி,
மிக்க நன்றி.
//நீ பாப்பான்/பாப்பான் அடிவருடி அப்படிங்கறத காமிச்சிட்டியே//
நான் ரெண்டுமே இல்ல. அறிவைக் கொடுத்ததுக்கு அப்பறம் நாங்க யாரையும் விட குறைந்தவர்கள் இல்லைனு சொல்கிறேன்.
நான் என்னைப் போல் பின் தங்கியவர்களுக்காகத்தான் பேசுகிறேன். கல்வி இருந்தால் ஏகலைவனும் அர்ச்சுனனுக்கு நிகராணவன் என்று சொல்கிறேன்.
என் நாட்டில் தாழ்த்தப்பட்டோர் என்ற இனமே இருக்க கூடாது என்று நினைக்கிறேன்...
அனைவரும் சமம் என்ற நிலை வேண்டும் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

ஏகலைவனை பத்தி சொல்லியாச்சா...அடுத்து யார்....அரவாணனா....பாத்து...இதுக்கெல்லாம் சனங்க காப்பி ரைட் எடுத்து வச்சுருக்காங்க.....ஜாதிக் கொடுமையால முன்னேர முடியாம...பேராசிரியர் மனோகரன்..என்ன செஞ்சுட்டார் பாருங்க....என்னான்னு தெரியலையா...சொ.சங்கரபாந்தி கிட்ட கேளுங்க எல்லாம் சொல்லுவார்...அவர்...இவரை பத்தி எழுதுன நேரம்...யாருக்கு நேரம் சரியில்லையின்னு தெரியலை :))

நாமக்கல் சிபி said...

அனானி,
//பேராசிரியர் மனோகரன்..என்ன செஞ்சுட்டார் பாருங்க....என்னான்னு தெரியலையா...சொ.சங்கரபாந்தி கிட்ட கேளுங்க எல்லாம் சொல்லுவார்//
நீங்க யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. லிங்க் இருந்தால் குடுங்கள் படித்துப் பார்க்கிறேன்.

அரவாணனைப் பற்றி நான் பேச மாட்டேன். அரவாணன், அபிமன்யு, கடோத்கஜன், பாண்டவ குமாரர்கள் இவர்கள் அனைவரும் நியாயமற்ற முறையில் கொல்லப்பட்டு இருக்கலாம். ஆனால் இவர்கள் எல்லாம் பாண்டவர்களின் புத்திரர்கள்.

நான் பேசுவது கல்வியைப்பற்றி அதற்கும் இவர்கள் யாருக்கும் சம்பந்தம் இல்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அனைவரும் பிறப்பால் ஒரே இனத்தை சேர்ந்தவர்களே...
இன்றைய நிலையில் இட ஒதுக்கீடு கண்டிப்பாக வேண்டும். ஆனால் அதன் மூலம் பிந்தங்கிய வகுப்புக்கள் முன்னேறிய வகுப்புகளாக மாற வேண்டும்.

Sivabalan said...

//இன்றைய நிலையில் இட ஒதுக்கீடு கண்டிப்பாக வேண்டும். ஆனால் அதன் மூலம் பிந்தங்கிய வகுப்புக்கள் முன்னேறிய வகுப்புகளாக மாற வேண்டும். //


இந்த கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

ஓகை said...

ஒவ்வொரு பதிவிலும் என் மதிப்பில் உயர்ந்துகொண்டே போகும் நீங்கள் வெட்டிப்பயலில்லை, கெட்டிப்புயல். இட ஒதுக்கீட்டால் நானும் பயனடைந்திருக்கிறேன். ஆனால் இன்று இட ஒதுக்கீடு பயன்படுவது ஏற்கனவே பயனடைந்தவர்களுக்குத்தான். சமூகச் சமநிலை வரவேண்டுமென்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம் அதற்கான தீர்வை நோக்கி செல்லவில்லை.

நாமக்கல் சிபி said...

நன்றி ஓகை.
இட ஒதுக்கீட்டு முறையை இவர்கள் மாற்றவில்லை என்றாலும் எனக்கு அடுத்த சந்ததியினரை நான் இட ஒதுக்கீட்டை பயன்படுத்த அனுமதிக்கமாட்டேன்.
அனைத்து வசதிகளையும் பெற்ற பிள்ளைகள் வசதியற்ற கிராமபுறத்தில் படிக்கும் பிள்ளைகளின் சலுகைகளைப் பறிப்பது பாவம் என்றே நான் நினைக்கிறேன்.

ஓகை said...

உங்கள் உறுதியும் சமூக அக்கரையும் மிகவும் பாராட்டுக்கு உரியது. நானும் பின்பற்றலாம். யோசிக்கிறேன். ஒரு சந்தேகம் வருகிறது. நாம் விட்டுக்கொடுக்கும் இந்த அரசுச் சலுகையினால் உண்மையில் பயனுறப்போவது யார் எனறு எப்படி உறுதி செய்வது? இப்போதுள்ள நிலையில் அது ஏற்கனவே பயனடைந்திருக்கும் இன்னொருவருக்குச் செல்லும் நிலைதான் இருக்கிறது. இது போன்ற ஒரு காரணத்திற்காகவே நான் குடும்பப் பங்கீட்டு அட்டை வாங்கவில்லை. இந்த அட்டை பல வகையிலும் இன்று பயன்பட்டாலும் என்னிடம் இன்றளவும் அந்த அட்டை கிடையாது. உங்கள் கருத்து நிச்சயம் சிந்திக்கத் தக்கது.

நாமக்கல் சிபி said...

எல்லோரும் தெருவுல குப்பைக் கொட்றாங்க நான் கொட்டினால் என்ன? இந்த எண்ணம் தான் நம் அனைவரிடமும் மேலோங்கியுள்ளது. இந்த மாதிரி விஷயங்களுக்காக தான் இந்து மதம் பாவம்,புண்ணியம் என்று எல்லாம் சொல்லியுள்ளது.
அவரவர் மனசுக்கு அவர்களே நீதிபதி.

ஓகை said...

பாத்திரம் அறிந்து பிச்சையிடச் சொன்னதும் நம் பெரியவர்கள்தானே!
இட ஒதுக்கீட்டால் பலனடைந்தவர்கள் அனைவரும் பின்பற்றத் தக்கதுதான் உங்கள் யோசனை. நன்றி.

Anonymous said...

//////பேராசிரியர் மனோகரன்..என்ன செஞ்சுட்டார் பாருங்க....என்னான்னு தெரியலையா...சொ.சங்கரபாந்தி கிட்ட கேளுங்க எல்லாம் சொல்லுவார்//
நீங்க யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. லிங்க் இருந்தால் குடுங்கள் படித்துப் பார்க்கிறேன்.///////
கீழே குடுத்திருக்கும் எல்லா லின்க்குகளையும் படித்துக் கடந்தேறுக...

http://chinthanais.blogspot.com/2006/07/blog-post_05.html
http://santhipu.blogspot.com/2006/04/5.html
http://chinthanais.blogspot.com/2006/07/2.html

////அரவாணனைப் பற்றி நான் பேச மாட்டேன். அரவாணன், அபிமன்யு, கடோத்கஜன், பாண்டவ குமாரர்கள் /////

இப்படி generalise பண்ணிட்டா எப்படிங்கோ...அதுலையே grade இருக்குதுங்களாம்....any doubt.........குழலி ...வலைப்பதிவு பக்கம் போய் பாருங்க...அரவாணை தூக்கிப் பிடிக்கணும்..அபிமன்யுவை பொடனியில் அடிக்கணும் அப்படீன்றாங்க
/////நான் பேசுவது கல்வியைப்பற்றி அதற்கும் இவர்கள் யாருக்கும் சம்பந்தம் இல்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அனைவரும் பிறப்பால் ஒரே இனத்தை சேர்ந்தவர்களே...
இன்றைய நிலையில் இட ஒதுக்கீடு கண்டிப்பாக வேண்டும். ஆனால் அதன் மூலம் பிந்தங்கிய வகுப்புக்கள் முன்னேறிய வகுப்புகளாக மாற வேண்டும். //////

நல்லாதான் சொல்றீங்க...நடந்தா சரி...ஆனா நடக்க விடமாட்டாங்களே....
ஏன்னா அதுலெயே இவங்க குடும்பம் முதல்ல முன்னேரணும்...அப்புறம் சொந்தக்காரங்க...அப்புறம் சொந்த ஜாதி(இதுல உட்பிரிவையும் சேத்துக்குங்க) அப்புறம் தனக்கு ஓட்டுப் போடுர ஜாதி அப்படி லேயர்...லேயரா பிரிச்சு முன்னேத்துராங்க....any doubt...contact...கருணாநிதி...ராமதாஸ் & Co...இதுல இப்பத்தான் குடும்பம் வரைக்கும் வந்திருக்கு...மீதியெல்லாம் வந்துரும்...All the bset...இத குத்திக்காட்டினா கோவம் வந்துரும்...அட இவங்களுக்கில்லைங்க...இவங்க தொ.அ.பொ...களுக்கும் அ..வ...க்களுக்கும்....

http://chinthanais.blogspot.com/2006/07/blog-post_05.html
http://santhipu.blogspot.com/2006/04/5.html
http://chinthanais.blogspot.com/2006/07/2.html

நாமக்கல் சிபி said...

ஓகை, உங்க மனசுக்கு எது சரின்னு தோனுதோ அதையே செய்ங்க...
அரசு இந்த விஷயத்தில் மாற்றம் கொண்டு வரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை :-(
படித்தவர்கள் தான் மக்களிடம் விஷயத்தை எடுத்து சொல்ல வேண்டும்.

நாமக்கல் சிபி said...

அனானி,
தனிப்பட்ட மனிதனை முன்னிறுத்தி ஒரு திட்டத்தை தவறாக உறுவகப்படுத்துவது தவறு. அவர் செய்த தவறிற்கு அவர் பலனை அனுபவிப்பார்.

//இப்படி generalise பண்ணிட்டா எப்படிங்கோ...அதுலையே grade இருக்குதுங்களாம்....any doubt.........குழலி ...வலைப்பதிவு பக்கம் போய் பாருங்க...அரவாணை தூக்கிப் பிடிக்கணும்..அபிமன்யுவை பொடனியில் அடிக்கணும் அப்படீன்றாங்க//
அவர் சொன்ன எடுத்துக்காட்டுல தப்பு இருக்கலாம் ஆனால் அவரோட கருத்து ஒடுக்கப்பட்ட இனத்திற்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்பதே.

இங்க இருக்கிற யாரும் தங்கள் பிள்ளைகள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.

Anonymous said...

/////அனானி,
தனிப்பட்ட மனிதனை முன்னிறுத்தி ஒரு திட்டத்தை தவறாக உறுவகப்படுத்துவது தவறு. அவர் செய்த தவறிற்கு அவர் பலனை அனுபவிப்பார்.//////

இதையேதான் நானும் சொல்கிறேன்...தனிமனிதனின் தவறுகளை(இருந்தால்) அவன் ஜாதியுடன் இணைப்பது...தவறு.... இது மேல் ஜாதிக்கும் பொருந்தும்தானே... உதாரணம்...தேவையே இல்லை... வலைத்தளம் முழுவதும் இறைந்து கிடக்கிறது........

/////அவர் சொன்ன எடுத்துக்காட்டுல தப்பு இருக்கலாம் ஆனால் அவரோட கருத்து ஒடுக்கப்பட்ட இனத்திற்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்பதே.////

இல்லை...உதாரணங்களில் தப்பில்லை...அப்படி அவர் தெரிந்தேதான் எழுதுகிறார்.... கீழுள்ளவர்களை தூண்டிவிட்டு தனக்கு ஆதாயம் தேடும் middile layer சாமர்த்தியம் இது...உண்மையில் ஒடுக்கப்பட்டவருக்காய் ஒலிக்கும் குரல் இல்லை....

/////இங்க இருக்கிற யாரும் தங்கள் பிள்ளைகள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. /////

வெளியில் ஒருக்காலும் சொல்ல மாட்டார்கள்..பிள்ளைகளின் certificate-ல் மட்டும் ஜாதியை பத்திரப்படுத்திக் கொண்டு ஆதாயம் பெறுவார்கள்

நாமக்கல் சிபி said...

//இதையேதான் நானும் சொல்கிறேன்...தனிமனிதனின் தவறுகளை(இருந்தால்) அவன் ஜாதியுடன் இணைப்பது...தவறு.... இது மேல் ஜாதிக்கும் பொருந்தும்தானே... உதாரணம்...தேவையே இல்லை... வலைத்தளம் முழுவதும் இறைந்து கிடக்கிறது........//

இது அனைவருக்கும் பொருந்தும். சோ அவர்கள் தப்பு செய்தால், பார்ப்பனர்களை குறை கூறுவதும் தவறுதான்.

//இல்லை...உதாரணங்களில் தப்பில்லை...அப்படி அவர் தெரிந்தேதான் எழுதுகிறார்.... கீழுள்ளவர்களை தூண்டிவிட்டு தனக்கு ஆதாயம் தேடும் middile layer சாமர்த்தியம் இது...உண்மையில் ஒடுக்கப்பட்டவருக்காய் ஒலிக்கும் குரல் இல்லை.... //
இதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.

Anonymous said...

////இதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்./////

எனக்கு பதில் தேவையில்லை... கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு ?:))
மற்றபடி உங்கள் பதிவு பற்றி எனது கருத்து

"இட ஒதுக்கீடு" என்பது economical upliftment-ற்காக மட்டுமல்ல...social upliftment ..என்பதே அதன் முழு நோக்கம்...படித்து விட்டால் மட்டும் ஒருவனுக்கு சமூக அந்தஸ்து வந்து விடாது...அந்த மாற்றங்கள் வர நாளாகும்...To drive the inferiority complex within...also(நன்கு படித்த ,பணவசதியுள்ள பிற்படுத்தப் பட்டோர் கூட அடுத்தவர் வீட்டில் தயங்கித் தயங்கி நுழைவதை நான் பார்த்திருக்கிறேன்....இது ""வெள்ளைக்காரன் சொன்னால் சரியாக இருக்கும்""" என்பது போன்ற 200 வருடங்களில் நமது அடிமைத்தனம் நமக்கு ஏற்படுத்தியுள்ள மன ரீதியான தாக்கம் போன்றது) இது முற்றிலும் அடிபடும் வரை சமூக ரீதியிலான இட ஒதுக்கீடு தேவைதான்...

அதே சமயம் அது உண்மையிலேயே ஒடுக்கப்பட்டவரை சென்றடைகிறதா என்பதே கேள்விக்குறி.....

இல்லை என்பது நிதர்சனம்....

மேல் சாதிக்காரனை குற்றம் சொல்லிக் கொண்டு அதே நேரத்தில் தனக்கு கீழுள்ள சாதிக்காரன் கீழே தனக்கு சேவகம் செய்ய வேண்டும் என்பதாக பரிமாணம் எடுத்துக் கொண்டிருக்கும் அதை வழி நடத்திக் கொண்டிருக்கும் "நியோ ஜாதீயம்" தான் இந்த 40 ஆண்டுகளில் நடந்தேறி யுள்ளது இந்த மத்திய தட்டு இடை தரகர்களால்.....இவர்கள் ஒதுக்கீடு என்றால் தாழ்த்தப் பட்டவர் வரிசையில் போய் நிற்பர்...அதே சமயம் தமது கடைகளில் அவர்களுக்காய் அலுமினிய டம்ளர் செயின் போட்டு கட்டி வைத்திருப்பர்...

நல்ல நடுநிலைமை ஜாதி ஒழிப்பாளர்கள் ..வாழ்க சனநாயகம்..

இதை (இவர்களை) ஒழித்தால்தான் உண்மையில் பிற்படுத்தப் பட்டவருக்கு மறுவாழ்வு...சாரி...வாழ்வே....

நன்றி...வணக்கம்

Unknown said...

வெட்டிப்பயல்,

ஏழைகளுக்கான படிப்பு செலவை அரசு ஏற்கவேண்டும் என்ற உங்கள் கோரிக்கையை மனபூர்வமாக ஏற்கிறேன்.அரசு உதவும் என்பதை விட நாம் செய்யவேண்டிய காரியம் இது.நான் என்னால் இயன்றவரை இதற்கா சில முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறேன்.

கல்வியை ஏழைகளுக்கு அதுவும் முக்கியமாக பெண்களுக்கு போர்க்கால அடிப்படையில் அளிப்பது அவசியம்.கல்வி என்றால் வெறும் பள்ளிப்படிப்பு மட்டுமல்ல.கல்லூரி உயர் படிப்பு வரை அளிக்கப்படுதல் அவசியம்.கல்லாத ஒவ்வொரு தலைமுறையும் நம் நாட்டை பின்னோக்கி தான் கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

அரசு இதை செய்ய முடியாது.பொது மக்கள் செய்யவேண்டிய காரியம் இது

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவ
பெயர்விளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல்.

நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர்,
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்,
அதுவு மற்றவர் வாய்ச்சொல் தாரீர்,
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்,
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்,
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்.

நாமக்கல் சிபி said...

நன்றி செல்வன்.
நானும் என்னால் முயன்றதை செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அனைவருக்கும் உதவ முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.
அரசிற்கு வருமானம் பத்தவில்லை என்றால் straight 30% tax பிடித்துக்கொள்ளலாம்.

Unknown said...

அனைவருக்கும் உதவ முடியவில்லை என்றாலும் ஒரு ஏழை சிறுவனுக்கு/சிறுமிக்கு உதவினால் அந்த தலைமுறையே தழைத்து விடும் வெட்டிபயல்(இப்படி பெயரை வைத்துக்கொண்டிருந்தால் பேர் சொன்னாலே திட்டுவது போலவே இருக்கே:-)))

ஒவ்வொரு வசதி படைத்தவரும் ஒரு ஏழை சிறுவனை/சிறுமியின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டால் இரண்டே தலைமுறையில் இந்தியாவில் ஏழ்மை அழிந்துவிடும்.

(இதை சொல்லலமா வேண்டாமா என தெரியவில்லை.சும்மா வெறும் பேச்சுக்கு உபதேசம் செய்கிறேன் என யாரும் நினைக்கக்கூடாது என்பதற்காக சொல்கிறேன்.நான் இதை வெறுமனே சொல்ல மட்டும் செய்யவில்லை.என் சொந்த வாழ்விலும் கடைபிடிக்கிறேன்.)

Unknown said...

//அரசிற்கு வருமானம் பத்தவில்லை என்றால் straight 30% tax பிடித்துக்கொள்ளலாம்.//

காசு இல்லாமல் இல்லை.கல்விக்கு செலவு செய்யும் காசு 95% ஆசிரியர் சம்பளத்துக்கே சரியாய் போகிறதாம்.

20,000 சம்பளம் வாங்கும் ஆசிரியரை தூக்கி விட்டு 3000 சம்பளம் தந்தால் எத்தனையோ இளைஞர்கள் வாழ்வு ஒளிபெறுமே?ஆசிரியர் பணி சேவைபணிதானே?அதற்கு எதற்கு இத்தனை சம்பளமும் அலவன்சும்?இது போக டியூஷன் காசு வேறு

நாமக்கல் சிபி said...

(இப்படி பெயரை வைத்துக்கொண்டிருந்தால் பேர் சொன்னாலே திட்டுவது போலவே இருக்கே:-)))
உங்களுக்கு என் பெயர் தெரியுமே :-))

//இதை சொல்லலமா வேண்டாமா என தெரியவில்லை//
தாராளமாக சொல்லலாம். நல்ல விஷயங்களை வெளியில் சொல்வதால் தப்பு இல்லை.

கால்கரி சிவா said...

வெட்டிபையர், அனானிமஸ் சார், செல்வர் நீங்கள் மூவரும் மிக உயர்ந்தவர்கள். தொடரட்டும் உங்கள் பணி.

சேவை என்ற தீ எங்கும் பரவட்டும். அதிக வரிகள் கொடுத்து அரசியவ்வாதிகளை பணக்காரர் ஆக்குவதை விட நாமே உதவி நம் அருகில் உள்ளவரை உயர்த்துவோம்.

திராவிட/ஆரிய பாம்புகளால் ஒன்றும் ஆக போவதில்லை.

வெட்டியார் வெட்டி அல்ல.

Unknown said...

அட..அப்ப அதுதானா உங்க பேரு?Then I guessed it correctly..hurraah

ஆனாலும் அதை நீங்க சொல்லாதவரை நான் சொல்லமாட்டேன்.It's your privacy related issue.

நாமக்கல் சிபி said...

//20,000 சம்பளம் வாங்கும் ஆசிரியரை தூக்கி விட்டு 3000 சம்பளம் தந்தால் எத்தனையோ இளைஞர்கள் வாழ்வு ஒளிபெறுமே?ஆசிரியர் பணி சேவைபணிதானே?அதற்கு எதற்கு இத்தனை சம்பளமும் அலவன்சும்?இது போக டியூஷன் காசு வேறு //

20,000 சம்பளம் கொடுக்கும் போதே, அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு வர மாட்றாங்க!!! 3000 குடுத்தா வருவாங்களா???

Unknown said...

//20,000 சம்பளம் கொடுக்கும் போதே, அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு வர மாட்றாங்க!!! 3000 குடுத்தா வருவாங்களா??? //

டாஸ்மாக்கில் 2000 சம்பளத்துக்கு 12 மணிநேரமும்,800 சம்பளத்துக்கு சாலைபணியாளராவும் நிறைய படித்த இளைஞர்கள் வேலை செய்கிரார்கள் வெட்டிப்பயல்.

An engineer(B.E) works in a tasmac shop in kovai.

நாமக்கல் சிபி said...

சிவா மிக்க நன்றி. நானும் இப்பொழுது அந்த முடிவுக்கு தான் வந்துள்ளேன்.
செல்வன் அவர்கள் சொல்வது போல் அனைத்து நல்ல விஷயங்களுக்கும் அரசை எதிர் பார்த்தால் அது தப்பு.

செல்வன், என் பேரை சொல்லாததற்கு எதுவும் பெரிய காரணம் எல்லாம் இல்லை. ஒரு பயம் தான். இத்தனை சூரியன்கள் இருக்கும் இடத்தில் இந்த விட்டில் பூச்சிக்கு வெளிச்சம் எதற்கு என்பதால்தான்.

Unknown said...

சில கருத்துக்கள் ஒத்துக்கொள்ளும் படி இருந்தாலும்...சில மாற்றங்கள் வருவது கடினம்..எ.கா(படித்தவர்களின் பிள்ளைகள் ஓபன் கோட்டாவில் தான் வர வேண்டும்.)...இது ஒத்துக்கொள்ள யாரும் முன் வர மாட்டார்கள்..காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதைப் போல...அனானி சொல்லும் சில கருத்துக்களும்..to be considered things.!

முடிவில் இதுவும் அரசயில்!

-தமிழ்ப்பிரியன்

நாமக்கல் சிபி said...

//டாஸ்மாக்கில் 2000 சம்பளத்துக்கு 12 மணிநேரமும்,800 சம்பளத்துக்கு சாலைபணியாளராவும் நிறைய படித்த இளைஞர்கள் வேலை செய்கிரார்கள் வெட்டிப்பயல்.

An engineer(B.E) works in a tasmac shop in kovai.//

அப்படியென்றால் படிப்பு மட்டுமே மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்ற என் நம்பிக்கையில் தவறுள்ளது என்றே தோனுகிறது...

Unknown said...

//அப்படியென்றால் படிப்பு மட்டுமே மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்ற என் நம்பிக்கையில் தவறுள்ளது என்றே தோனுகிறது... //

Education is the most important,but not the only criteria for development.

He who has it has a great advantage in life.But those who are in an advantage can also lose.

That's life:-))

நாமக்கல் சிபி said...

தமிழ்ப்பிரியன் அவர்களே உங்கள் கருத்துக்கு நன்றி.
//சில மாற்றங்கள் வருவது கடினம்..எ.கா(படித்தவர்களின் பிள்ளைகள் ஓபன் கோட்டாவில் தான் வர வேண்டும்.)...இது ஒத்துக்கொள்ள யாரும் முன் வர மாட்டார்கள்//
இன்றும் இடஒதுக்கீட்டிற்கு தமிழ் நாட்டை தவிர மற்ற இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகிறது.
மக்களுக்கு நல்லது போய் சேர வேண்டுமானால் பல போராட்டங்களை சந்தித்துதானாக வேண்டும்.

நாமக்கல் சிபி said...

//Education is the most important,but not the only criteria for development.

He who has it has a great advantage in life.But those who are in an advantage can also lose.
//
தன்னம்பிக்கையை தருகின்ற கல்வி கிடைத்தால் போதும் என்று நான் நினைக்கிறேன்.
ஆனால் நம் கல்வி முறை வாழ்வியல் முறைகளை சொல்லித் தரவில்லை. இதைப் பற்றி இன்னொறு பதிவிடலாம் என்றிருக்கிறேன்...

இலவசக்கொத்தனார் said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள் வெ.ப.

நாமக்கல் சிபி said...

நன்றி கொத்தனாரே!!!

குமரன் (Kumaran) said...

வெட்டிப்பையல். என் கருத்துகளைக் கூறும் முன்னரே இதனைச் சொல்லிவிடுகிறேன். நான் இடஒதிக்கீட்டிற்கு எதிரானவன் இல்லை. இடஒதுக்கீட்டின் பயனைப் பெற்று முன்னேறி வந்தவனே நானும். ஆனால் இடஒதுக்கீட்டின் நோக்கம் உண்மையாகவே நடப்பில் நிறைவேறுகிறதா என்பதில் உங்களைப் போன்ற ஐயம் எனக்கு என்றுமே உண்டு. அதற்கு என்ன தீர்வு என்று தெரியாததாலேயே இட ஒதுக்கீடு பற்றி ஆதரவாகவோ எதிர்த்தோ வந்தப் பதிவுகளில் இதுவரை நான் கருத்து சொல்லவில்லை. இரண்டு பக்க வாதங்களிலும் உண்மைகள் இருப்பதால் ஒரேயடியாக இட ஒதுக்கீட்டை எதிர்க்கவோ ஒரேயடியாக ஆதரிக்கவோ இயலவில்லை. நீங்களும் ஏறக்குறைய அதே நிலையில் இருப்பதாகவே இந்தப் பதிவினைப் பார்க்கும் போது உணர்கிறேன்.

மிக நல்ல உவமைக்கதையைச் சொல்லி உங்கள் கருத்தினை எடுத்துவைத்திருக்கிறீர்கள். அதற்கு ஒரு உருப்படியான தீர்வையும் கொடுத்திருக்கிறீர்கள். ஓரிரு தலைமுறையில் இடஒதுக்கீட்டின் பயனைப் பெற்றவர்கள் தங்கள் மனச்சாட்சியின் படி அவற்றை மீண்டும் பெறாமல் இடஒதுக்கீட்டின் பயனைப் பெறாத தங்கள் தூரத்து உறவினர்களுக்கு அந்த பயன்கள் சென்றடையுமாறு உதவி செய்தாலே போதும். இட ஒதுக்கீட்டின் நோக்கம் விரைவில் நிறைவேறும்.

அடுத்து அனானிமஸ் அண்ணாச்சி சொன்ன கருத்துகள். அவை ஏற்கனவே சிவத்தவர் பதிவில் படித்தவை போல் இருக்கிறதே?! :-) தமிழன் என்பதற்குச் சான்றிதழ் பெறுவது, கைப்புண்ணுக்குக் கண்ணாடி.... :-) ஒரு வேளை சிவத்தவர் தான் அனானிமஸோ? இல்லை அவர் கருத்துகளால் நிறைக்கப்பட்டவரோ? :-)

அடுத்து செல்வன் அவர்களின் கருத்துகள் - அரசு கட்டாயம் செய்ய முடியும்; ஆனால் அரசினை நடத்தும் அரசியல்வாதிகள் அவ்வாறு நிகழ கட்டாயம் விடமாட்டார்கள். நம் நாட்டின் நிலைமை அப்படி இருக்கிறது. அதனால் நம் நாட்டின் தலைவிதி அப்படி என்று நொந்து கொண்டு ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவதில் பொருள் இல்லை. பலரும் இதனையே செய்கின்றனர். நம்மால் முடிந்த அளவு நம்மைச் சுற்றி இருக்கும் சமூகத்திற்கு ஆன உதவிகளைச் செய்து கொண்டே வரவேண்டும். மீனைக்கொடுக்காதே; மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்று சொல்வார்களே - அது போன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். செல்வன் அவர் அளவிலும் நீங்கள் உங்கள் அளவிலும் செய்வதாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள். இதே நோக்கத்தில் தற்போது இந்தியத் திருநாட்டில் நடக்கும் 'இந்தியக் கனவு' இயக்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இதே எண்ணத்தால் ஊக்குவிக்கப்பட்டு எண்ணற்ற படித்த நல்ல வேலையில் இருக்கும் இளைஞர்கள் தங்கள் உடன்பிறவா சகோதர சகோதரிகளுக்கு கைகொடுக்கத் தொடங்கிவிட்டனர். வெறும் பேச்சு பேசும் நண்பர்கள் அவர்களைப் போல் செயலில் இறங்கினால் நம் நாட்டிற்கு மிக பெரும் நனமையாக இருக்கும்.

இதுவரை 'இந்தியக் கனவு' இயக்கத்தைப் பற்றி அறியாதவர்கள் அந்த இயக்கத்தைப் பற்றிய என் வலைப்பூவைப் பார்க்க வேண்டுகிறேன்.

http://abtdreamindia2020.blogspot.com/

'இந்தியக் கனவு' இயக்கத்தைப் பற்றிச் சொல்வது அந்த இயக்கத்திற்கு ஆள் பிடிப்பதற்காகவோ நன்கொடை பெறுவதற்காகவோ இல்லை. அந்த எண்ணங்கள் எல்லா இளைஞர்கள் நடுவிலும் பரவி எல்லோரும் தங்கள் பங்கினை ஆற்ற முன் வரவேண்டும் என்பதற்காகவே. அப்படிச் செய்பவர்கள் இந்த இயக்கத்தில் இருக்க வேண்டிய கட்டாயமே இல்லை. செயல்களே முக்கியம். பெயர்கள் அல்ல.

குமரன் (Kumaran) said...

//அட..அப்ப அதுதானா உங்க பேரு?Then I guessed it correctly..hurraah
//

எனக்கும் தெரியுமே பையல்ஜி. செல்வன் சொன்ன போது நானும் படித்தேனே. பின்னர் அவர் பதிவுக்குச் சென்று சரிபார்த்தும் விட்டேனே. :-)

நாமக்கல் சிபி said...

குமரன் தங்கள் கருத்திற்கு நன்றி.
நீங்க குடுத்த லிங்க்கை படித்துவிட்டு நான் எனது கருத்தைக் கூறுகிறேன்.

நாமக்கல் சிபி said...

//'இந்தியக் கனவு' இயக்கத்தைப் பற்றிச் சொல்வது அந்த இயக்கத்திற்கு ஆள் பிடிப்பதற்காகவோ நன்கொடை பெறுவதற்காகவோ இல்லை//

இந்த மாதிரி நல்ல இயக்கத்திற்கு ஆள் பிடிப்பதோ, நன்கொடை பெறுவதோ தவறாகவே எனக்கு தோன்றவில்லை. என்னால் முடிந்த உதவியை நான் கண்டிப்பாக செய்கிறேன் குமரன்.

நான் பிளாக் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு சில வலைப்பூவில் என் பெயரில் தான் பின்னூட்டமிட்டேன். அதுவும் இல்லாமல் என் பெயரில் நான் இருக்கும் ஊரிலே ஒரு சிறந்த வலைப்பதிவாளர் இருப்பதால் அவர் பெயரை கெடுக்க வேண்டாமே என்று வெட்டிப் பயலானேன். அவர் அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவிற்கு நல்ல வலைப்பதிவாளனானால் என் பெயரிலே பதிவிடுவேன்.

வஜ்ரா said...

//
எனவே சலுகைக்கான தகுதி (Qualification, Criteria) மாற்ற வேண்டும்.
பெற்றோரின் கல்வி, பொருளாதாரம் முதலியவற்றைக் கொண்டே இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
பெற்றோர்களில் ஒருவறேனும் கல்லூரி படிப்பு பெற்றிருக்கும் குழந்தைகளுக்கு இட ஒதுக்கிடு மறுக்கப்பட வேண்டும். படிக்காதவர்களின் பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் படித்தால் மட்டுமே சலுகைகள் பெற வேண்டும்.
ஆகவே ஒரு தலைமுறைக்கு மேல் யாராலும் சலுகைகளைப் பெற முடியா
//

இது போல் செய்வது. Reservation அல்ல. Affirmative action.

இதை வைத்து ஏகப்பட்ட விவாதங்கள் நடந்தேறிவிட்டன. தமிழ் மணப் பதிவுகளில் தனிமனித, ஜாதிக் காழ்ப்புணர்ச்சி தவிர உருப்படியாக யாரும் பதித்ததாகத் தெரியவில்லை. இட ஒதுக்கீடு என்பது நிரந்தரத் தீர்வு அல்ல.

உங்களுக்கு பல பட்டங்கள் கிடைக்கும்....பெற்றுக்கொண்டு ஆடி மாதத்தில் மாஞ்சா தடவிய கயிறு கட்டி மொட்டைமாடியில் பரக்க விடவும்.

..
அதாவது பிற்படுத்தப்பட்டோர்/ தாழ்த்தப்பட்டோர் இல்லை என்ற நிலை வர வேண்டும்.
..

அது நீங்கள் சொல்வது போல் வந்து தொலைத்துவிட்டால் இங்கே பல பேருக்கு வேலையில்லாமல் போய் விடும்...

அப்புறம் எதை வைத்து Revolution செய்வது? !!

Revolution என்றால் "சுற்றுதல்" என்ற அர்தத்தில் பல பேர் காதில் "பூ" சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்...என்று நினைக்கிறேன்...

அதற்கு "சமுதாயப் புர்ச்சி" என்று வேறு பெயர்!!


..
அறிவைக் கொடு போதும்..... என்னைவிட எவனும் உயர்ந்தவனும் இல்லை!!! தாழ்ந்தவனும் இல்லை.

கல்வி இருந்தால் ஏகலைவனும் அர்ச்சுனனுக்கு நிகராணவனே!!!
..

i completely agree.

பாஸ்டன் பாலா அவர்கள் இந்த affirmative action பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார். தேடினீர்கள் என்றால் கிடைக்கும்.

நாமக்கல் சிபி said...

நன்றி வஜ்ரா.

enRenRum-anbudan.BALA said...

வெட்டிப்பயல்,
மிக நல்ல ஒரு பதிவு ! பாராட்டுக்கள் !

இதில் இடம் பெற்றிருக்கும் பின்னூட்ட கருத்துக்களும் அருமை !

செல்வனுக்கும், நண்பர் அனானிமஸ்ஸுக்கும் ஸ்பெஷல் பாராட்டுக்கள் !

அதுவும் அனானியின் கருத்துக்களும், அவற்றைக் கூறிய விதவும் பாராட்டுக்குரியவை.

என்றென்றும் அன்புடன்
பாலா

நாமக்கல் சிபி said...

மிக்க நன்றி, பாலா.

புருனோ Bruno said...

தொடர்புடைய கருத்துக்கள்

http://payanangal.blogspot.com/2008/06/500.html

உள்ளன

Anonymous said...

உங்கள் தமிழ் வெறியை பார்த்தல் நீங்களே ஒரு ‘தமிழனா’ என சந்தேகம் வருது.
இல்லையென்றால் நீங்களும் தமிழ்நாட்டுக்கு குடிவந்த தெலுங்கா இந்திக்காரரா?

தமிழ் OBC பட்டியல் இடி பெரும் ‘தமிழ்ர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.

கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
OBC முஸ்லிம்கள் - இந்தி

நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!

சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!

தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.

வந்ததா? இல்லை.

இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.

அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.

உத்தப்புரத்தில் பாப்பான் வந்தானா ? இல்லை
அம்பேத்கர் சட்டக்கல்லூரியில்? இல்லை..
கீரிப்பட்டியில் ? இல்லை

ஏன்? எப்படி? தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு அரசியல் வாதிகளுக்குத்தான் தெரியணும்...