தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, June 27, 2006

என்னை கவர்ந்த கதாப்பாத்திரங்கள்

என்னை கவர்ந்த பாத்திரங்கள்
மஹாபாரதம் - விதுணர்
பொன்னியின் செல்வன் - ஆழ்வார்க்கடியான்
உன்னால் முடியும் தம்பி - தோட்டக்காரர்
வருஷம் 16 - பூர்ணம் விஸ்வனாதன்
காதல் கோட்டை - ராஜிவ்
காதலிக்க நேரமில்லை - பாலைய்யா
தில்லு முல்லு - தேங்காய் சீனுவாசன்
எதிர் நீச்சல் - மேஜர் சுந்தர்ராஜன்
லவ் டுடே - ரகுவரன்
சேது - ஸ்ரீமன்
அண்ணாமலை - ஜனகராஜ்

காரணங்கள்:
மஹாபாரதம் - விதுணர்
தாசி மகன் என்ற காரணத்தால் அவமானப்பட்டாலும், நியாயத்திற்காக குரல் கொடுத்தவர். தன்னுடைய மான, அவமானத்தைப்பற்றிக் கவலைப் படாமல் கடமையாற்றியவர். சிறந்த பக்திமான். போரில் பங்கேற்காதவர். நியாயமான்.
பொன்னியின் செல்வன் - ஆழ்வார்க்கடியான்
எவ்வளவு பிரச்சனையில் சிக்கினாலும் கடமையே கண்ணாக கருதியவன். என் கதாநாயகன் வந்தியத்தேவனை பல இடங்களில் காப்பாற்றியவர்.
உன்னால் முடியும் தம்பி - தோட்டக்காரர்
சமுதயத்துக்கு தன்னால் முடிந்த நன்மையை செய்தவர். உதயமூர்த்திக்கு உந்துதலை உண்டாக்கியவர்.
வருஷம் 16 - பூர்ணம் விஸ்வனாதன்
அவர பாத்தா எனக்கு பாவமாத்தான் இருக்கும்.
காதல் கோட்டை - ராஜிவ்
எங்க பாசமா இருந்தா மச்சினிச்சி போற எடத்துல தப்பா நினைக்கிற மாதிரி ஆகிடும்னு அவள்ட எப்பவும்மே கோவமா பேசறது...
காதலிக்க நேரமில்லை - பாலைய்யா
தில்லு முல்லு - தேங்காய் சீனுவாசன்
இரண்டுமே ஒரே காரணம் தான்... இப்படியும் யாராவது ஏமாறுவாங்களா?
எதிர் நீச்சல் - மேஜர் சுந்தர்ராஜன்
கஷ்டப்படும் ஒரு வேளைக்கார சிறுவனுக்கு வழிக்காட்டியாக இருந்ததற்காக.
லவ் டுடே - ரகுவரன்
அப்பானா இப்படி தான் இருக்கனும்னு எல்லாரும் feel பண்ற மாதிரி கேரக்டர்.
சேது - ஸ்ரீமன்
நண்பனுக்கு ஒன்னுனா துடிக்கறான் பாருங்க... அது தான்.
அண்ணாமலை - ஜனகராஜ்
நண்பனுக்கு நடக்குற அநியாயத்துக்கு அவர் போரடறது. ரஜினி வீட்டை இடிச்சத பாத்து அவர் கலங்கறது...கடைசி வரைக்கும் நண்பனுக்கு துணையாயிருக்கறது...

7 comments:

நாமக்கல் சிபி said...

//அண்ணாமலை - ஜனகராஜ்//

கடவுளே! கடவுளே!

நாமக்கல் சிபி said...

சிபி அவர்களே, உங்களுக்கு என்னை மாட்டிவிடனும்னு அப்படி என்ன ஒரு ஆசை...
நான் பிடிக்கும்னு சொன்ன காரணம்...
நண்பனுக்கு நடக்குற அநியாயத்துக்கு அவர் போரடறது. ரஜினி வீட்டை இடிச்சத பாத்து அவர் கலங்கறது...
கடைசி வரைக்கும் நண்பனுக்கு துணையாயிருக்கறது தான் காரணம்...
போதுமா???

நாமக்கல் சிபி said...

//உங்களுக்கு என்னை மாட்டிவிடனும்னு அப்படி என்ன ஒரு ஆசை...
//

பாருங்க! நீங்க சொல்லியிருக்கும் காரணம் எனக்குத் தெரிடும், உங்களுக்கும் தெரியும்.

நான் இப்படி மாட்டி விட்டு நீங்க இப்படி வெளிப்படையா சொல்லலலனா மத்தவங்களுக்கு தெரியுமா! பார்த்துட்டு அவங்களாவே ஏதாவது ஏடா கூடமா நினைச்சுடுவாங்க இல்லையா!

நாமக்கல் சிபி said...

நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்களே...
மீதி கேரக்டருக்கும் விளக்கம் வேண்டுமா???

நாமக்கல் சிபி said...

//நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்களே...
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

(பயப்படாதீங்க, இது ஆனந்த அழுகாச்சி)

வெட்டிப்பயல் said...

நம்ம சிபி பேச்சை கேட்டு பதிவுகளில் மாற்றம் செய்ய இன்னொரு சந்தோஷ் கிடைச்சிட்டாருப்பா!

(இன்னும் ரெண்டு பேரு அப்புறமா சொல்றேன்னு அவரோட "அழைத்தது ஆறோ" பதிவுல போட்டிருந்தாரு.

ஓருத்தரு யாருன்னு தெரிஞ்சிடுச்சு, இன்னொருத்தர் யாரோ?)

நாமக்கல் சிபி said...

வாங்க பார்த்திபன்,
நல்லத யார் சொன்னாலும் கேட்டுக்க வேண்டியது தான்...
பிடிச்சதுக்கான காரணத்தையும் சொல்லிடலாம் இல்லனு சொன்னாரு...
இன்னைக்கு வெட்டியா இருக்கறதால உடனே போட்டுட்டேன்...